24-சிதம்பரத்தின்
மறுமுகம்
மனிதன் சுயநலமிக்கவன். பத்துபேர்
கூடிபேசும்போது அதில் ஒருவன் பொது நலன் பற்றிபேசுவான். மற்ற 9பேர் அவனை தலைவனாக்கி
விடுவார்கள்.இப்படிதான் பன்னெடுங்காலமாக நடந்துவருகிறது. பத்தில் ஒருவனுக்கு சுயநலம் இல்லை என பொருளில்லை. மனதில் சுயநலத்தை
மறைத்து வைத்திருப்பான்.
சுயநலம் பலவகைப்படும்
1-அவன்-மட்டும் மகிழ்ச்சியாக வாழவேண்டும்
–இது
துறவற
வாழ்க்கை(சன்யாசம்)
(சில நாட்களில் அவன் வேஷம் கலைந்து விடும்-
பிரபலமான சாமியார்கள் வாழ்க்கையே இவைகளுக்கு உதாரணம்)
2-அவன்-,அவனுடைய சொந்தங்கள் மகிழ்ச்சியாக
வாழவேண்டும்-இது குடும்பத்தன்
3-அவன் -இனம் வாழவேண்டும்(இது -கும்பல்
குணம்)-ஹிட்லர்-போன்றோர்
4-அவன்-மொத்த மனித இனத்துக்காகவும்
வாழவேண்டும் –அமெரிக்க
நாட்டுக்கு ஜனாதிபதியாக வருபவர்கள் இப்படி கூறிக்கொள்கின்றனர் ஆனால்,சில நாட்களில்
அவர்களின் ஒருதலையான போக்கு வெளிப்படுகிறது.தூய்மையான நடுநிலை த்தலைவனை இதுவரை
உலகில் காணமுடியவில்லை
உலகில்
பல குழுக்கள் உருவாகின.ஒரு குழு இன்னொரு
குழுவை அங்கீகரிக்கவில்லை. இதுதான் கும்பல் குணம்.வெளிமனித நேயத்தை கும்பல் குணத்தால் ப்படுத்த முடியாது. கும்பல் குணம் வன்முறை
குணமுள்ளது.அதனிடம் மனித நேயத்தை எதிர்ப்பார்க்க முடியாது.இது கடந்த கால வரலாறு.
உலகெங்கும் இந்த குழு ஒற்றுமை தான் தலை
தூக்கி இருக்கின்றது.
பல மொழி மற்றும் பல இனம் பல மதங்கள்
கொண்ட நாட்டில் நடு நிலைத்தவறா ஆட்சியாளரும் நேர்மையான அதிகாரிகளும் இருந்தாலொழிய
நாட்டில் அமைதி ஏற்படாது.
ஜனநாயக
நாட்டில் அதிகாரிகள் ஆண்டுக்கு ஒரு முறை இடமாற்றம் செய்யப்படவேண்டும் என்பது சட்ட
விதி.ஆனால் அது ஏட்டளவில் தான் உள்ளது. ஆட்சி மாறும்போதெல்லாம் அதிகாரிகள்,
ஆட்சியாளர்களின் எண்ணங்களை புரிந்து
அவர்கள் ஆசாபாசங்களையும் பலவீனங்களையும் உணர்ந்து சுயலாபம் அடைவதில் குறியாக
இருக்கும் அதிகாரிகளை அகற்ற அல்லது தண்டிக்க சரியான அமைப்பு இல்லை.
இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து
மாநிலங்களையும் சம நோக்குடன் பாவிக்கும் மனப்பான்மை தலைமை ஆட்சியாளருக்கு இல்லாமல்
போய்விடுகிறது .இந்நிலை நீங்கவேண்டுமானால் பிரதம அலுவலகத்தில் அனைத்து மாநில
பிரதிநிதித்துவம் வேண்டும்.
பிரதமரின் அந்தரங்க செயலாளரை ஆண்டுக்கு
ஒரு முறை மாநில வாரியாக முக்கியத்துவம் கொடுத்து மாற்ற நிலையான சட்ட அமைப்பு
வேண்டும்.
ஒருநாட்டுக்கு தலைவனாகும் தகுதி என்னென்ன
என்பது
1-நன்கு படித்த –தினமும் படிக்கும் குணமுள்ளவன்,நாட்டு
மற்றும் உலக விவரங்களை தெரிந்தவன்
2-நல்ல குடும்பத்தலைவன் தகுதி-அதாவது தன்
பிள்ளைகளை நன்கு படிக்கவைத்து சிறந்த பண்புகளை பெற்றவர்கள். அப்பாவின் ஆட்சியில்
குறுக்கிடாத குணங்களையுடைய பிள்ளைகளைபெற்ற குடும்பத்தலைவன்
3-விறுப்பு வெறுப்பு அற்ற நடுநிலையாளன்
4-சுயமாக முடிவெடுக்கும் தைரியமானவன்
5-தன்னை எதிரியாக நினைப்பவரையும் நட்பு
கொள்ளும் மனோபாவம்
6-தன் அலுவலக பணியாளரையும் மேலே
குறிப்பிடப்பட்ட குணங்களை கொண்டவர்களாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது.- ஒரு
நாட்டுத்தலைவனுக்கு இது மிகவும் இருக்கவேண்டிய குணம்.
இப்படிப்பட்ட பண்புள்ளம்கொண்ட தலைவர்கள்
பள்ளியிலும் கல்லுரியிலும் பின் அறம்சார்ந்த அரசியல் கட்சியிலும் உருவாகின்றனர்.
கம்யுனிசக் கட்சியில் இதைப்போன்றதொரு அமைப்பு உள்ளது. ஆனால் இந்தியக் கம்யுனிசத்
ததைவர்கள் 99% போலியான த்தலைவர்களாகவே உள்ளனர். இதற்கெல்லாம் காரணம் இல்லாமல்
இல்லை.
இந்தியாவில் பெரும்பாலான தலைவர்கள்
தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்து அதன்மூலம் கம்யுனிச சங்கத்தில் சேர்ந்து
வைற்றுப்பிழைப்புக்காக உழைத்து பின் பணி/பதவி மூப்பு அடிப்படையில் கடசியின்
உயர்பதவிக்கு வருகின்றனர்.உண்மையான கம்யுனிசக் கொள்கையில் பற்றுள்ளவன்
பொருளியல்வாதியாக(pragmatist) இருப்பான். பொருளியல் வாதி கோயிலுக்கு சென்று
நேரத்தை வீண்டிக்க மாட்டான்.தன் பிள்ளைகளையும் அதைப்போன்றே வளர்ப்பான்.
ஆனால் இங்குள்ள இந்திய கம்யுனிஸ்ட்டுகள்
கோயிலுக்கு செல்வதுமில்லாமல் அங்கு வழங்ப்படும் திருநீரையும் குங்குமத்தையும்
சந்தணம் மற்றும் நாமத்தை போட்டுக்கொள்கின்றனர். இவைகளை நெற்றியில் இட்டுக்கொண்டு
‘நான் கடவுளுடைய ஆள்’என்று காட்டிக்கொள்வதில் பெருமையடைகின்றான்.உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுகிறான்.
இந்தியாவில் கேரளாவில் கம்யுனிச கட்சி துணையுடன் ஆட்சி நடக்கின்றது
.தமிழகத்திற்கு தண்ணீர் தேக்கி வைத்து விடுவதில் கேரள மக்களுக்கு பொறாமை
குணம்(கும்பல் குணம்)வளர்ந்து விட்டது. மாநிலத்தை வழிநடத்தும் ஆட்சியாளர்களே
மக்களை திசைதிருப்பி மட்டமான ரசனையுடைய மக்களாக மாற்றிவிட்டனர்.
இந்தியாவின் தலைமைப்பொறுப்பில் இருக்கும்
திருமதி சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு அந்தரங்க செயலாளர்கள்
பெரும்பான்மையானவர்கள் கேரளத்துக்காரர்களே. முக்கிய பொறுப்புகளுக்கு அதிகம்
படிப்பறிவு மட்டுமல்ல தங்கள் மண்ணுக்கே உரிய தந்திர புத்தியால் உயர்பதவியில்
ஒட்டிக்கொண்டு ஒருதலைப் பட்சமான தலைமைக்கு ஒத்து ஊதுகின்றனர். (இந்நிலை
மாறவேண்டும் என்பதைதான் இந்த கட்டுரையின்
முற்பகுதியில் பிரதமரின் அலுவலக ஊழியர் நியமனத்தில் மாநில வாரியான
பிரதிநிதித்துவம் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது)இந்நிலையில் தமிழகத்திற்கு
எப்படி நியாயம் கிடைக்கும்?
இந்தியாவின்
தலைமை நீதிபதியாக இருந்தவர் திரு கிருஷ்னய்யர்.இவர் தமிழகத்தில் வளர்ந்து
உயர்பதவி அனுபவித்தவர்.அந்த விசுவாசத்தைவிட அவர் மண்ணின் விசுவாசம் அதிகம் என்பதை
சமிபத்தில் அவர் கேரள முலமைச்சரோடு கைகோர்த்து அந்த மண்ணைச்சார்ந்வர் என்பதை கண்பித்தது
மட்டுமில்லை.மற்ற மாநிலத்துக்காரர் தன்னை ஒருதலை பட்சமானவர் என
நினைத்தாலும் பரவாயில்லை என தனது மண்சார்ந்த விசுவாசத்திற்கு பலம் கூட்டியுள்ளார்.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தான்
பிறந்த மண்ணுக்கே போராடுவதில் நியாயம் காண்கின்றார்,,தங்களை தேசிய இனம் என
கூறிக்கொள்ளும் பாலக்காட்டு அய்யர்.
தமிழகத்தில் பத்திரிக்கை நடத்தும் தொழில்
செய்பவர்கள் பெறும்பான்மை இவர் இனத்தை சார்ந்தவர்களே . கிருஷ்னய்யரின்
ஒருதலைப்பட்சமான போக்குக்கு ஒரு பத்திரிக்கையும் பெரிதாக ஒரு கண்டனம் கூட
தெரிவிக்க வில்லை.
ஆனால் நமது செட்டியார் அவர்கள், அதான்
மத்திய அமைச்சர் திரு சிதம்பரம் (இவரை தமிழன் என்று சொல்வதில் நாம்
வெட்கபடவேண்டியுள்ளது-இவரும் முன்னாள் குடியரசு தலைவர் திரு வெங்கட்ராமனை போல்
தமிழினத்துக்கு பயன்படாத ஒரு போலி தேசியவாதிகள்) முதல்நாள் தைரியமா கேரளத்தை
கண்டித்தவர் அடுத்தநாள் நான் தவறாக பேசிவிட்டேன் என, கேவலம் பதவி பறிபோய்விடுமோ என
பயந்து பின்வாங்கிய செட்டியாரின் திருமுகத்தின் மறுமுகத்தை தமிழக மக்கள் தான்காணவேண்டும்.
No comments:
Post a Comment