Monday, April 23, 2012

26-கூட்டுக்கொள்ளை கொள்கை அரசியல்வாதிகளின் மறுமுகங்கள்


          26-  கூட்டுக்கொள்ளை கொள்கை அரசியல்வாதியின் மறுமுகங்கள்
           
வரலாற்று நூல்களை புரட்டும் போது ஒரு சில மன்னர்களின் காலம் பொற்காலம் என படித்திருப்போம்.
பொற்காலம் என்றால் என்ன? மக்கள் நலனில் ,அதாவது அவர்களின் உடல் ஆரோக்யம்,கல்வி, பாதுகாப்பு,உணவு,உறைவிடம் மற்றும் உடை போன்ற மக்கள் தேவைகளில் தன்னிறைவு அடைதல். இதுதான் பொற்கால ஆட்சி.இந்த மாதிரியான ஆட்சியெல்லாம் இந்த நவீன உலகத்தில் காணமுடியாது.

இப்பொழுதெல்லாம் தகவல் தொழில் நுட்பம் பெறுகிவிட்டதால் உலகத்ததொடர்புகளின்,முனைகள்(contact.points)நெருங்கிவிட்டன. உலகம் சுருங்கி நம் அருகே வந்துவிட்டது போன்றதொருதோற்றம். இதனால் ஒரு நாட்டு நடப்புகளை இன்னொரு நாடு நொடிக்கு நொடி தெரிந்து கொள்ள முடிகிறது. இதனால் பரந்து கிடக்கும் உலகின் பல நாடுகளில் வாழும் நம் சொந்தங்களை அடிக்கடி கைபேசியில் தொடர்பு கொள்ள முடிகிறது.

மேலும் ஒரு நாட்டில் ஊழல் லஞ்ச லாவண்ய ஆட்சி நடக்கிறது எனில் நாமும் ஏன் மாறக்கூடாது என்கிற எண்ணம் அடுத்த நாட்டு ஆட்சியாளருக்கு  ஏற்படுகிறது.ஒரு நாட்டில் ஜனநாயக ஆட்சி முறை என சொல்லிக்கொண்டு ஆட்சியாளர்கள் தங்கள்  வாரிசுகளை ஆட்சியில் தலையிட அனுமதி தந்தால்  அடுத்த நாட்டு ஆட்சியாளருக்கும் தங்கள் வாரிசுகளை ஆட்சியில் நுழைத்தால் என்ன? என்கிற  எண்ணம் மேலோங்குகிறது. இதனால் நாட்டில் ஊழல்,லஞ்சம்,சிபாரிசு என தலைவிரித்தாடுகிறது. இதனால் ஆடசியாளர்கள்மேல் மக்களுக்கு வெறுப்பு உண்டாகிறது.

உலகின் முதல் தகவல் தொடர்பு சாதனம் உள்நாடு மற்றும் பன்னாட்டு அஞ்சல் சேவை. இது 16-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஏற்பட்டது. அது முதல் ஒரு நாட்டு நடப்புகள் இன்னொரு நாட்டுக்கு தெரிய ஆரம்பித்தது.அப்பொழுதே உலக நாடுகளில் பொற்கால ஆட்சி என்பது சாதாரண மக்களுக்கு வெறும் கனவாகிப்போனது.

இப்படி ஒரு தேசத்தலைவர்களை, இப்பொழுதெல்லாம் அதாவது பொற்கால ஆட்சியை உருவாக்கியவர்களை, உலக மக்கள், கம்யூனிச நாடுகளில் தான் நாம் பார்க்க முடிகிறது.
1-     முதல் கம்யூனிசத்த தந்தை என போற்றப்படுவர்19-ம் நூற்றாண்டில் தோன்றிய முதலாளித்துவ ஜெர்மன் நாட்டின்  காரல் மார்க்சு எனும் யூத இனத்தைச் சார்ந்தவர்.இவர் உருவாக்கிய பொது உடமைக் கொள்கையில் உலகின் மிகப்பெரிய வல்லரசுகளான ரஷ்யா மற்றும் சீன நாடுகள் தோன்றின.அதை அடுத்து க்யூபா,செக்கோசுலோவாகியா,வடக்கு கொரியா போன்ற சிறு நாடுகள்,மற்றும் நமது நாட்டில் மேற்கு வங்கம்,கேரளா,திரிபுரா  போன்ற மாநிலங்கள் தோன்றின

2-  முதல் சோவியத் கூட்டாட்சி தலைவரான லெனின்                             
3-சீனா,வல்லரசுவின் மா.சே. துங்
4-க்யூபா, நாட்டின்  பிடல் காஸ்ட்ரோ
5-சமீபத்தில் காலமான வட கொரிய நாட்டின் கிம் ஜாங் இல்
வட கொரிய நாட்டின் தலைவரான கிம் ஜாங் இல் இறந்த போது அந்நாட்டு மக்கள் கண்ணிர் வடிப்பதை பார்க்கும் போது, உலக மக்களாகிய நாம் அவர்களோடு சேர்ந்து நாமும் கண்ணீர் வடிக்க தோன்றுகிறது.மக்கள் தலைவன் எனில் இப்படி இருக்க வேண்டும் என்பதற்கு கிம் ஜாங் இல் ஓர் உதாரணத் தலைவன்.
இதுதான்,இப்டித்தான்  அவன்  ஆண்ட  காலத்தில் மக்கள் பொற்கால ஆட்சியை அனுவித்தனர் என்பது புலனாகிறது.

ஒரு நாட்டு மன்னன் அல்லது தலைவன் எப்படி நாட்டை ஆள வேண்டும் எனில்  தனக்கென்று ஒரு மனைவி அல்லது மகன் அல்லது மகள் அல்லது அப்பா,அம்மா,அல்லது அண்ணன்,அண்ணி .அக்கா,மாமா,தங்கை,மச்சான்  அல்லது தம்பி, தம்பி மனைவி யாவரும் எந்த உறவு முறையும் ஆட்சியில் தலையிடக்கூடாது. இதுதான் ஒரு நாட்டின் பொற்கால ஆட்சி.

நமது நாட்டில் இப்பொழுதுதான் லஞ்ச ஒழிப்பைப் பற்றி பேசப்படுகிறது.இது ஒரு நல்ல ஆரோக்கியமான மக்கள் சிந்தனைதான்.ஆனால் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் லஞ்சத்தை ஒழிப்பது என்பது நாய் வாலை நீட்டுவது போல் ஆகிவிடும். ஆன்மீக கலாச்சாரத்தில் (அருவ வழிபாடு முறை-spiritual worship) ஈடுபாடு உள்ள மனிதர்கள் நிறைந்த நாட்டில் நேர்மையை எதிர்பார்க்க முடியாது,நியாயத்தை எதிர் பார்க்க முடியாது, தர்ம சிந்தனை எடுபடாது. ஏற்ற தாழ்வுள்ள சமுதாயமாகவே (lopsided society) காணப்படும்.

தன்னம்பிக்கை, சுயதொழில்,சமச்சீர் கல்வி,பொருளியம்(pragmatism)-இதுபோன்ற கம்யூனிச வாத அரசால் மட்டுமே லஞ்சத்தை ஒழிக்க முடியும்-நேர்மையான சமுதாயத்தை உருவாக்க முடியும்.

உலகில் மக்களிடையே சமத்துவம் எல்லா நிலைகளிலும் நிலவவேண்டுமானால் மக்களை அந்நிலைக்கு பழக்கப்படுத்த வேண்டும்.குழந்தை பருவத்திலிருந்தும்,பள்ளிக் கல்வியிலிருந்தும் மக்களை பழக்கப்படுத்த வேண்டும் அதற்கு ஆட்சியாளர்கள் தயாராக வேண்டும்.ஆரம்ப பள்ளி பாடத்திட்டத்தினை உலக முழுக்க  குழந்தைகளை ஒரே குணமுள்ளவர்களாக மற்ற வழிவகைசெய்யும் வித த்தில் ஒரே பாடத்திட்டத்தினை உலக நாடுகள் ஒன்று கூடி முடிவெடுக்க வேண்டும்.இனவேறுபாடுகளை களைய இதுதான் சிறந்த வழி.

குழந்தைகள் மனதில் விடா முயற்சி, தன்னம்பிக்கை,ஈகை குணம்,சிறப்பான எதிர்கால வாழ்க்கையை குழந்தைகள் மனதில் பதியவைத்தல்,உலகில் அனைத்து தரப்பு மாணவர்களையும் இணையதளத்தின் மூலம் எண்ணப்பரிமாற்றங்கள் ஏற்பட அனைத்து நாடுகளும் இணைந்து செயல்படவேண்டும்.
உலகில் இருக்கும் அனைத்து மதங்களும் அறவழி சிந்தனைகளை வலிறுத்துகின்றன. இன்று இந்தியாவில் அன்னா அசாரேவை விட்டால் யாறுமே அறவழியில் போராட அல்லது அறவழி சிந்தனை ச்சார்ந்த வாழ்க்கையை வலியுறுத்த ஆளே இல்லை என தோன்றுகிறது.

அப்படித்தான் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ஊழலை எதிர்த்து ஒரு சட்ட முன்வடிவை பெரும்பாலும் எல்லா கட்சி உறுப்பினர்களும் எதாவது ஒரு சாக்குப்போக்கு சொல்லி எதிர்த்தனர். நமக்கு ஒரு கையாலாகாத பிரதமர் அமைந்துவிட்டார் அவரால் ஒரு நியாயமான பொதுவான சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.குறைந்த பட்சம் ஊழல் எதிர்ப்பு சட்டத்துக்கு ஆதரவு அளிக்காத மன்ற உறுப்பினர்களின் முகத்திரையை கிழிக்கும் முகத்தான் ஊடகங்களை பயன் படுத்தியிருக்க வேண்டும்.மன்ற உறுப்பினர்களின் திருமுகங்களின் மறு முகங்களை மக்கள் காணச்செய்யலாம்.                 


                                          
               


No comments: