18-பலசாலிகளின் மறு முகங்கள்
இளவயதில் கல்வி,ஆசிரியர்களிடம் பெற்ற
பயிற்சி,பெற்றோர்களின் வழிகாட்டுதல் ,நண்பர்களின் பழக்கம் இவைகளை பொறுத்து ஒரு
மாணவன் உருவாகிறான். ஒவ்வொரு மாணவனும்
நாட்டின் எதிர்காலச் செல்வங்கள்.உலகின் பெரும்பாலான நாடுகளில் வசிக்கும் மக்கள்
பல தரப்பட்ட கலாச்சாரங்களை மேற்கொண்டாலும் தங்கள் நாட்டுக்கு தலைவனாக வருபவன்
சிறந்த பண்பாளனாகவும், பேச்சாளனாகவும் எழுத்தாளனாகவும் எல்லாவற்றிற்கும் மேலாக ஏக
பத்தினி விரதனாகவும் விளங்கவேண்டும் என்பது அந்தந்த நாட்டு மக்களின் அவா.
சமீபத்தில் இத்தாலி நாட்டு அதிபர் பதவி
இறங்கி உள்ளார் .என்ன காரணம் தெரியுமா?
தான்பதவி விலகப்போகிறோம் என தெரிந்தும்
அன்றிரவு கூட விபச்சாரி வீட்டுக்கு சென்றிருக்கின்றார்.வீட்டில் மனைவி இருந்தும்
இவருக்கு ஏன் இந்த புத்தி?சில ஆண்டுகளாக ராஜஸ்தான் மாநில முன்னணி அரசியல்
வாதிகளும்,மந்திரிகளும் (எல்லாம் 60-70 வயதை கடந்தவர்கள்) 35 வயது செவிலியருடன்
உடலுறவுடன் உல்லாசமாக பொழுதை கழித்தற்கு ஆதாரங்களுடன் செய்திகளை ஒளி பரப்பியபின்
பதவி விலகி உள்ளனர்.
இந்த பழக்கம் உள்ளவர் நாட்டுக்கு தலைவனாக
இருக்க தகுதி கூடாது என்பது அந்த நாட்டு மக்கள் குரல் கொடுத்தனர்.(man is not
infallible) இது பழ மொழி ஆனால் இது குடி மக்களுக்கு ,நாட்டின் தலைவனுக்கு அல்ல.
அதைபோல அரசிலில் நுழையும் முன் நல்லவன்
நேர்மையானவன் என நினைத்து தான் மக்கள் தன் நாட்டுக்கு தலைவனாக தேர்ந்தெடுக்கின்றனர்.
ஒருசில நாடுகளில் குறுக்கு வழியில்
அதாவது ராணுவ தளபதியாக இருக்கும் போது நாட்டுக்கு தலைவன் தான், தான் என அறிவிப்பு செய்வதை அந்த நாட்டு
மக்களும் தலையெழுத்து என எண்ணி சகித்து கொள்வர். பாகிஸ்தான், எகிப்து,லிபியா,போன்ற
இஸ்லாமிய நாடுகளில் இது நடக்கிறது .சில ஆண்டுகளில் மக்கள் புரட்சி வெள்ளம்
பெருக்கெடுக்கும் போது அந்த தலைவனுக்கு அசிங்கமான மரணம் ஏற்படுகிறது . சமீபத்தில்
42 ஆண்டு காலம் லிபியாவின் தலைவராக இருந்த கர்னல் கடாபி மக்கள் புரட்சியால் அவர்
கேவலமான மரணத்தை சந்திக்க நேர்ந்தது.
இன்னும் ஒருசில நாடுகளில் அதிக லஞ்சம்
பெற்று நாட்டின் பொருளாதாரத்தையே சீரழிக்கும் அளவுக்கு இருந்த ஒரு சில தலைவர்களை அந்நாட்டு மக்களே பதவி
இறக்கம் செய்துள்ளனர்.
அதில் சில ஆண்டுகளுக்கு முன் பிலிபைன்ஸ்
நாட்டு அதிபர் லஞ்சம் மூலம் குவித்த பணத்தை ஆடம்பர பங்களா, ஆடை, ஆபரணம் என மக்கள்
பணத்தை அனுபவித்ததை அந்நாட்டு மக்கள் பொருக்க முடியாமல் அதிபரை பதவி இறக்கம் செய்தனர். அதுபோலவே எகிப்து மற்றும்
லிபியா நாட்டு மக்களும் செயல்பட்டனர் .
சில வருடங்களுக்கு முன் நமது மாநிலத்தின்
தற்போதய முதல்வர் (செல்வி ஜெயலலிதா)ஆடம்பரம்,பகட்டு போன்ற செயல்களால் பதவி
இழந்தவர்தான்.வயதான காரணத்தாலும் யாரையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர இயலாத
கலைஞர் கருணாநிதி அவரை சுற்றி இருப்பவர்கள் அதிக அளவு சொத்து சேர்த்து மக்களின்
வெறுப்பை தேடிக்கொண்டது மட்டுமில்லாமல்,இலங்கை த்தமிழர்களை காப்பாற்றுவது போல்
செய்த பாசாங்கும் வெளுத்துவிட்டது.
பல
சாலிகள் தெரிந்தே தவறிழைப்பார்கள் ,மூளை பலம் உள்ளவர்கள்(தந்திரசாலிகள்)
இடைத்தரகர்களின் உதவியுடன் தவறிழைப்பார்கள்.ஒருநாட்டில் இந்த இரு
இனங்களையும் சகித்துக்கொள்ளும் மனப்பக்குவம் உழைப்பாளிகளுக்கும் உடல் மற்றும் மன பலவீனர்களுக்கும்
உண்டு.
உலகம் இன்று இப்படித்தான் இயங்குகிறது.
ஒரு சிறந்த அரசாங்கத்தின் நிர்வாகம்
என்பது மூன்றடுக்கு நிர்வாகம்(Three tier administration)
1-கண்டிப்பான நிர்வாக த்தலைமை
2-விஸ்வாசமான-தேசாபிமான துணை நிலை
அமைச்சகம்
3- துறை ரீதியான நேர்மையான
உள்கட்டமைப்புகள்
அதாவது
1நேர்மையான ராணுவத்தலைமை
2நேர்மையான- திறமையான உள் துறை அமைச்சகம்
3-தன்னாட்சி பெற்ற நேர்மையான நாட்டின்
பொதுக்கணக்கு தலைமை
தனியார்
நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும் பணிகள் எதுவாக இருந்தாலும் அரசாங்கத்திற்கு
வர வேண்டிய லாபம் தனியார் நிறுவனங்களின் நிர்வாக செலவு போக ஒரு குறிப்பிட்ட
ஊக்கத்தொகையினை வெளிப்படையாக தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்து இதை
பொதுக்கணக்கு குழுவின் பரிந்துறை பெற்றே தனியர்வசம் பணிகளை ஒப்படைக்க வேண்டும்.
இதில் எங்கும் சமரசம்(Compromise) இருக்க க்கூடாது.
அதன்பின்பும் ஒதுக்கீடு செய்யப்பட்ட,
முடிக்கப்பட்ட பணிகளை தணிக்கை
செய்யப்படவேண்டும்.
இப்படியெல்லாம் 2-G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டீல்
ஒதுக்கீடு செய்யும்போது பின்னாளில் ஒரு மிகப்பெரிய புயல் வீசும் என
சம்பந்தப்பட்டவர்கள் அமைச்சர் ராசாவை யாரும் எச்சரிக்கவே இல்லை.
எந்த ஒரு அரசுத்துறையானாலும் அதன்
செயல்பாடுகளை ஆண்டுதோறும் தணிக்கை த்தடைகளை(Audit objections) வெளியிடுவது
வழக்கமானது ஒன்றுதான்.ஒரு துறையின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செலவினங்கள்
செய்யப்பட்டுள்ளதா? அவையெல்லாம் துறைத்தலைமையின் முறையான ஒப்புதல் பெறப்பட்டு
செலவிடப்பட்டதா? அல்லது அவசர நிலை காரணமாக செலவு செய்யப்பட்டு பின் துறை
த்தலைமையிடம் பின்னேர்ப்பு ஒப்புதல் பெறப்பட்டதா?(Post approval)
இவையல்லாம் தலைமை தணிக்கை கணக்கு
அதிகாரிகளின் தலையாய கடமை.
ஒரு துறையின் தணிக்கை செய்யப்பட்ட
கணக்கினை பத்திரிக்கை போன்ற ஊடகங்களில் வெளியிடலாம் . ஆனால் அதற்கு முன் தணிக்கை
தடைகளை ஒரு துறையின் தலைமையிடம் விளக்கம்
பெறாமலே ஊடகத்தின் மூலம் வெளியிடும் பழக்கத்தை தேசதுரோக குற்றமாக நினைக்க வேண்டும்.
நடப்பது கூட்டணி கட்சிகளின் ஆட்சி. எனவே
தவறு செய்யும் கூட்டணி கட்சிகளை நேரடியாக கண்டிப்பது நாகரீக மாகாது என கணக்குபோட்ட
ஆளும் தலைமயிடம், தணிக்கை தடைகளை ஊடகத்தில் அம்பல படுத்திவிட்டது.
கட்டவிழ்த்து விடப்பட்ட தணிக்கை தடைகள்,
ஆட்டை க்கடித்து,மாட்டை க்கடித்து பின்
மனிதனை கடிக்கும் பைத்தியம் பிடித்த நாயைப்போல் ஆகிட்டது.
மூன்றடுக்கு நிர்வாகத்தின் இரண்டாவது
அமைப்பான துணை நிலை அமைச்சகம் தணிக்கை தடைகளை சம்பந்தப்பட்டவரிடம் விளக்கம் பெற்று
அந்த விளக்கத்தினை ஏற்று நியாயப்படுத்தியிருக்க(Ratification) வேண்டும். அல்லது
பிரதம மந்திரியின் ஆலோசனை க்குழு(PM’s Advisory panel) இதற்கு வழிகாட்டியிருக்க
வேண்டும்.
2- G ஸ்பெக்ட்ரம் இதுக்கீடு என்பது
முற்றிலும் அது சம்பந்தப்பட்ட அமைச்சகமும், நிதி துறையும், பிரதம அமைச்சரின்
அதிகாரத்துக்கு உட்பட்டதாகும் .தணிக்கை தடைகள் வெளிவந்தவுடன் சம்ந்தப்பட்ட துறை த்தலைமை
அதனை நியாயப்படுத்தி ஆணை வெளிடப்பட்டிருந்தால் இது ஒரு ஊழலாக உருவெடுத்திருக்காது.
அதுவும் நட்டங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்பது தணிக்கை துறையின் யூக கணக்கு.
அவ்வளவே.
குறைந்த பட்ச லாப நோக்கில் சாதாரண பொது
மக்கள் பயன்பாட்டிற்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தனியர் துறைக்கு வழங்கப்படவேண்டும்
என்பது அமைச்சரவையில் போடப்பட்ட
தீர்மானத்தின் விளைவே.
எனவே அமைச்சரவை உறுப்பினர்களுக்கு
சம்பந்தப்படாத திருமதி கனிமொழி பெயரை இழுத்தது தேவையற்றது.
கலைஞர் தொலைக்காட்சிக்கு கனிமொழி மூலம்
200 கோடி கிடைத்தது எப்படி? என அளவுக்கு மீறிய வருவாய் வந்தது எப்படி?எனும்
கோணத்தில் தனியாக திருமதி கனிமொழி மீதோ அல்லது கலைஞர் தொலைகாட்சி நிர்வாக
குழுவினர் மீதோ வழக்கு போட்டிருக்கலாம் .அதைவிடுத்து திருமதி கனிமொழியை 2-G
ஸ்பெக்ட்ரத்தில் சேர்த்தது தவறு. அரசியல் பிழை,பழிவாங்கல். திருமதி கனிமொழியின்
தூண்டுதல் பேரில் அமைச்சர் ராஜா செயல்பட்டார் என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு.
2-G ஸ்பெக்ட்ரத்தில் கூட்டணி கட்சியின்
தி.மு.க அமைச்சரான திரு ராசாவின் செயல்பாட்டில் தலையிடுவது நாகரீகமாகாது என அமைதி
காத்த
நேர்மையான அமைச்சர் திரு சிதம்பரத்தின்
முடிவுக்கு அவருடைய தலைமைகளான கட்சியின் தலைமையான திருமதி சோனியாவும் நாட்டின்
அதிபரான திரு மன்மோகன் சிங்கும் எந்த அளவுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர் என்பது
அவர்களின் திருமுகங்களின் மறு முகங்களை இனி திரு சிதம்பரம் தான் காண்பார்.
No comments:
Post a Comment