Sunday, April 22, 2012

.19-மருத்துவ மற்றும் மருந்துகடை முதலாளிகளின் மறுமுகம்


             19- மருத்துவ மற்றும் மருந்துகடை முதலாளிகளின்  மறுமுகம்                                    

மனிதன் அவன் சுயமாக முடிவெடுத்து எதையும் செய்துவிடக்கூடாது. அப்படி ஒவ்வொரு மனிதனையும் சுயமாக செயல்பட வைத்தால் கட்டுபாடற்ற மனித சமூகமாக மாறிவிடும்.வளர்ந்துவரும் மனித சமுதாயம் பல துறைகளில் மாற்றங்களை கொண்டுவந்தது.அதில்
1-மருத்துவத்துறை
2-பொறியியல்துறை
3-சட்டத்துறை
ஒவ்வொரு மாணவனும் 18 வயது முடிவதற்குள் மேலே கூறப்பட்ட மூன்று துறைகளிலும் ஆழ்ந்த அறிவை ப்பெறும் அளவுக்கு நமது பள்ளிப்பாடதிட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்.

ஆனால், தற்பொழுள்ள பாடத்திட்டங்கள் எதுவும் 17 வயதிற்கு பிறகுதான் மேலே குறிப்பிடப்பட்ட மூன்று துறைகளையும் தனித்தனியாக பிரித்து கல்வியை வியாபாபார ப்பொருளாக்கிஅரசாங்கம் தனியாருக்கு தாரைவார்த்து விட்டது.
மருத்துவத்துறையில் பட்டம் பெற்று விட்டால் பணம் கொழிக்கலாம் எனும் போக்கு தற்கால பெற்றோர்களுக்கு அதிகமாகிவிட்டது.
நாட்டில் ஆங்கிலேயரின் வருகைக்குப்பின் அலோபதி(ஆங்கில) மருத்துவம் நமது நாட்டில் பிரபலமாகிவிட்டது. காரணம் உடனடி வலி நிவாரணிகளை கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்ததுதான்.

நமது நாட்டின் பழங்கால மருத்துவமான சித்தா மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவமுறை முடங்கிப்போய்விட்டன .காரணம் அவைகளின் நிதானமான செயல்பாடுதான்.
சித்த மருத்துவம் என்பது இந்திய பூர்வ குடி மக்களான திராவிடர்களின் மருத்துவமுறை.ஆயூர்வேதிக் என்பது ஆரியர்களின் மருத்துவ முறை.
இரண்டுவகை மருத்துவத்திற்கும் அடிப்படை குறிப்புகள் (Formula) உருவாக்கப்பட வில்லை. இதனாலேயே ஆங்கில மருத்துவ முறையுடன் போட்டியிட முடியவில்லை.

எனவே ஆங்கில மருத்துவபடிப்புகளான (M.B.B.S,M.D,M.S) நாட்டில் பிரபலமாகிவிட்டன.இந்த பட்டத்தை பெற்றவர்கள் சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டனர்.இதனாலேயே
இந்த மருத்தவ பட்டங்களை பெறுவதற்கு பெரும் பணக்காரர்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி உயர்நிலை படிப்பில் முதல் தர வரிசை ப்பெறாதமாணவர்கள் கூட குறுக்கு வழியான லஞ்சத்தை கொடுத்து மருத்துவ படிப்பில் சேர்(ந்)த்து விடுகின்றனர்.

இப்டிப்பட்ட மாணவர்கள் மருத்துவ கல்லுரி வகுப்பில் பாடங்களை கவனிப்பது இல்லை.புரிந்தால் தானே கவனிக்க முடியும்.
இவர்களெல்லாம் முதல் முயற்சியிலேயே(first attempt)மருத்துவ தேர்வுகளை முடிப்பார்கள் என சொல்ல முடியாது.
                                        
இப்பொழுதெல்லாம் மருத்துவம் பார்க்க ஒரு சட்டபூர்வமான மருத்துவ சான்றிதழ் இருந்தாலே போதும். மருத்துவ பயிற்சி செய்யலாம் (medical practitioner)
நகர்புறங்களில் ஒரு M.B.B.S போர்டு இருந்தாலே போதும் அவரைத்தேடி மருந்து கம்பனிகளின் மருந்து பிரதிநிதிகள்(medical representatives) வித விதமான மருந்துகளை அறிமுக படுத்துவர். அதைவைத்தே நோயாளிகளிடம் விளையாடலாம் (trial and error method) முறையில் தொழிலில் புலமை பெறலாம். மனிதாபிமானத்தையும் மனசாட்சியும் வைத்து மருத்துவம் பார்ப்பவர்கள் சொற்ப அளவே நாட்டில் உள்ளனர்.

மருத்துவத்துறையை நிறைய சீர்திருத்தம் செய்ய வேண்டியுள்ளது.இதற்கெல்லாம் தைரியமான மக்கள் செல்வாக்குள்ள நாட்டுத்தலைவர் தேவை.
மருத்துவர் ,ஒரு நோயாளியை அனுமதிக்கும் முன் நோயாளி உடலின்  கழிவுபொருளான 1-சிறு நீர்,2- மலம்,3-எச்சில் மற்றும் 4-ரத்தம் போன்ற வற்றை தகுந்த மருத்துவ ஆய்வுக்கூடத்தில் ஆய்வு செய்த பின்னரே வைத்தியம் பார்க்க துவங்க வேண்டும்.

ஆனால் ஆய்வு கூடங்களை நிர்வகிப்பதும் எச்சங்களை பகுப்பாய்வு  செய்வதும் ஒரு சாதாரண 10 ம் வகுப்பு அல்லது +2 முடித்தவர்கள்தான்.இவர்கள் முறையாக பயிற்சி முடித்திருந்தாலும் இவர்களில் எத்தனைபேருக்கு நுண்தொலைநோக்கு(microsqope) கருவி கொண்டு பார்க்கும் உயிரினங்களை இது 1-அமிபாவா?,அல்லது 2-பாக்ட்ரியாவா?,அல்லது 3-வைரசா? என உருவம் காண எப்படி புலமை பெற்றனர் என்று யாருக்கு தெரியும்? இதுவெல்லாம்  மருத்துவரின் கண்காணிப்பில் நடக்க வேண்டும் .ஆனால் நடைமுறையில் இதுவெல்லாம் சாத்தியம் இல்லை

நகர் புறங்களில் மருத்துவர் ஒரு இடத்தில் க்ளினிக் வைத்துருப்பார்,ஆய்வு கூடம் வேறொரு இடத்தில் இருக்கும். நோயாளி இங்கும் அங்கும் அலையவேண்டும்.
நடைமுறையில் உள்ள இந்த அவலங்களை உடனடியாக ஒழிக்க வேண்டும்.
ஒவ்வொரு க்ளினிக்குள்ளும் ஆய்வு கூடம் இருக்க வேண்டும்; அதற்கு மருத்துவரே முழு பொறுப்பு ஏற்கும் படி சட்டம் போடவேண்டும் மருத்துவரே ஆய்வு செய்யவேண்டும்  அல்லது அவருடைய நேரடி பார்வையில் ஆய்வு கூடம் இயங்க வேண்டும் என கண்டிப்பான ஆணை இயற்ற வேண்டும்.அப்பொழுதுதான் நோயாளிக்கு தகுந்த பாதுகாப்பான மருத்துவம் கிடைக்கும் . செய்யுமா இந்த அரசு?

இப்பொழுதெல்லாம் எச்சங்களை ஆய்வு செய்யப்படுவதை தவிர்க்கப்படுகிறது.காரணம் உடலில் நோய் உற்பத்தியாகி முற்றிய நிலையில் தான் எச்சங்களை ஆய்வு செய்யப்பட்டு பின் நிவாரண சிகிச்சை செய்யப்பட்டு வந்தது.
                                                
சில நேரங்களில் உயிரை காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது. ஆனால் இதனை தவிர்க்க உடல் உறுப்புகளை உள்ளது உள்ளபடியே படம்பிடித்து உடலுறுப்பு இருக்கவேண்டிய அளவு அல்லது அளவின் மாற்றங்களால் உடலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு என்ன என C.T SCAN மூலம் யூகிக்கலாம் அல்லது கண்டறியலாம். இந்த ஸ்கேன் கருவியை வெளிநாடுகளில் இருந்து தருவிக்கின்றனர்.இது பல லட்ச ரூபாய் பெறுமானம் உள்ளது. எனவே இதில் முதலீடு செய்த பல பணக்கார மருத்துவர்கள். அல்லது கருப்பு பண முதலாளிகள் குறைந்த பட்ச வட்டியாவது வரவேண்டும் என்கிற எண்ணத்தில் நோயாளிகளிடம் பணம் பெறும் உத்திகளை பார்க்கும்போது உண்மையிலேயே மனதை பாதிப்படையச்செய்கிறது.

இந்த ஸ்கேன் மையத்தை நடத்துபவருக்கும் மருத்துவருக்கும் ஒரு ரகசிய உடன்பாடு உண்டு . ஒருசாதாரண தலைவலி காய்ச்சல் என வரும் நோயாளி அவர் கொஞ்சம் வசதியான நோயராக இருந்தால் , ‘பெரிய வியாதியாக இருந்தாலும் இருக்கும், எதற்கும் இந்த இடத்தில் இருக்கும் ஸ்கேன் மையத்திற்கு சென்று ஒரு ஸ்கேன் எடுத்துவா’என மருத்துவர் ஒரு சீட்டு எழுதி கொடுப்பார். அவ்வாரே ஸ்கேன் எடுத்துவந்த நோயாளியிடம்,’ஒன்றும் இல்லை எதற்கும் நம் சந்தேகத்தை தீர்த்துக்கொள்வது நல்லது’ என பணம் விரயமான நோயாளியை சமாதானம் செய்துவிட்டு நோய் போக மருந்து எழுதிக்கொடுப்பார் மருத்துவர்.

இன்னும் சில மன சாட்சியே இல்லாத மருத்துவர் M.R.I. SCAN என அதிநவீன ஸ்கேன் கருவி உள்ளது. இதன் மதிப்பு சில கோடிகள் என்கின்றனர்.சில கருப்புபண முதலாளிகள் சென்னையில் 5 அல்லது 6 இடங்களில் இந்த மாதிரியான ஸ்கேன் மையங்களை வைத்துக்கொண்டு சில மருத்துவர்களுடன் கமிஷன் உடன்பாடு செய்துகொண்டு செல்படுகின்றனர்.சில நோயாளிகளுக்கு இது மிகவும் உதவியாக உள்ளது.ஆனால் பல நோயாளிகளுக்கு இது வீண் செலவு .(எனக்கே இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது)  

அப்பாவி நோயாளிகளின் வாழ்க்கையில் விளையாடுவது காலம்காலமாக நடக்கிறது. எப்பொழுது மருத்துவத்துறையில் எல்லா இன மக்களும் பங்குபெறலாம்,அது படிப்பானாலும் ,மருத்துவரானாலும், எந்த ஜாதி எந்த மதமானாலும் அந்ததந்த இன மாணவர்களுக்கு (பின் தங்கிய,மிகவும் பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயம்) வாய்ப்பு  ஏற்படுகிறதோ,அப்பொழுதுதான் மருத்துவம் மலிவாக எல்லாருக்குமே பயன்படும்.                           

அரசாங்கமே தகுதி உள்ளவர்களுக்கு தகுந்த பயிற்சி கொடுத்து,படிக்கும் போதே  கிராமபுற மக்களோடு பழகி அதே கிராமத்தில் மருத்துவ பழகுனர்(medical practitioner) உரிமம் பெற அரசு ஆவன செய்யவேண்டும்.

ஒவ்வொரு வட்டத் தலைமயகத்திலும் 50 மாணவர்கள் கொண்ட ,தகுந்த உள் கட்டமைப்புடன் கூடிய மருத்துவ கல்லூரிகளை அரசாங்கமே நடத்த முன் வர வேண்டும்.
                                   
அப்பொழுதுதான் நோயாளிகள்,காலையில் மருத்துவம் பெற மருத்துவ மனைக்கு சென்றால் மாலையில் வீடு திரும்பும் அவல நிலை இருக்காது.
நோயாளிகள் நோயுடன் கால்கடுக்க நிற்க முடியாமல் மேலும் நோயாளி ஆகி இன்றளவும் சீரழிந்து வருகின்றனர். இதை கவனிக்குமா இந்த அரசு?
மனித குலத்தை நோய் தாக்குவது காலம்காலமாக நடக்கும் நிகழ்ச்சிதான்.கற்கால மனிதர்களும் பிற்கால மனிதர்களும் இது கடவுள் கொடுத்த வரம் ,அவரவர்களின் கர்ம வினையின் பயன் என விதியை காரணம் காட்டினர்.

19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் மருத்துவத்துறை அசுர வளர்ச்சி பெற்றது.இந்தியா போன்ற அருவ வழிபாட்டில் அதிகம் ஈடுபாடுள்ள கிழக்காசிய நாடுகள் அம்மை போன்ற கொள்ளை நோய்க்கு தெய்வ குற்றம் என சொல்லி பரிகார பூஜை செய்து உயிர்களை பலி வாங்கினர். அம்மை நோய்தடுப்பு மருந்து கண்டுபிடித்த மேலை நாட்டு அறிவியலாளர்(எட்வர்ட் ஜென்னர்) மனித குலத்தின் மிகப்பெரிய வரப்பிரசாதம். மனித குலத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் நோய்கள் இரண்டு அதில்1- புற்று நோய் அடுத்தது 2-எய்ட்ஸ். மற்ற நோய்களெல்லாம் சமாளிக்க கூடியவை.
படைக்கப்பட்ட உயிரினங்களுக்கு  பராமரிப்பு பணி செய்பவர்கள் தான்  மருத்துவ இயலாளாளர்கள்.

ஆனால் எத்தனை மருத்துவர்கள் தங்கள் உடலை பராமரித்துக் கொள்கிறார்கள் ?உடலியல் அறிவு (body science) தெரியாத மருத்துவர்கள் இன்றும் ஏராளமானோர் இருக்கின்றனர்.மனிதனின் பொறுப்பற்ற கவனக்குறைவான செயல்களுக்கெல்லாம் கடவுள் விட்ட வழி,விதி என வாழும் சுய சிந்தனை அற்ற மக்களை இன்றும் நாம் ஏராளமானவரை பார்க்கின்றோம். எனக்கு தெரிந்த சில மருத்துவர்கள் சக்கரை வியாதியாலும், இதயத்தை திறந்து அடைப்புகளை சரிசெய்து(open heart bye pass surgery)கொண்டு வாழ்கின்றனர் என்பது ஒரு திறந்த ரகசியம்.

இவர்கள் செல்வ செழிப்பான குழந்தை பருவ உணவு முறைகளால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்;  வாலிப பருவத்திற்கு பின்னரும் இதே உணவுமுறை தொடர்வதனால் (intake foods contain excessive sugar and fat) வாயையும் வயிற்றையும் கட்டுபடுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.மருத்துவம் படிக்கும்போதே நோயாளிகளுக்கு பயன்படும் வலி நிவாரணிகளை பயன்படுத்தி சீரழிந்த மருத்துவர்கள் ஏராளமானோர் உண்டு.

இன்னும் ஒருசிலர் மது ,புகையிலை,மற்றும் ப்ரவுன் சுகர் போன்ற மனதை கொள்ளை கொள்ளும் சுய இன்பம் துய்க்கும்   மருத்துவர்களை அடையாளம் கண்டு தகுதி நீக்கம் செய்ய வேண்டும். செய்யுமா இந்த அரசு?    

எந்த மருத்துவரும் தன்னை நாடிவரும் நோயாளிகளுக்கு உணவு முறை கட்டுபாடுகளை அறிவுறுத்துவதில்லை. அறிவுறுத்தினால் தனக்கு நோயாளிகள் வருகை குறைந்து விடும், இதனால் வருமானம் தடைபடும்,என்கிற கவலைதான்.
                                          
‘நீ எதை வேண்டுமானாலும் சாப்பிடு,நான் பாத்துக்கிறேன்’ என அவரை மேலும் நோயாளியாக்கி பணம் பிடுங்கும் பணியைத்தான் மருத்துவர்கள் பார்க்கின்றனர்.
                                    
சமுக சிந்தனையுடனும் பரந்த மனப்பான்மையுடனும் யாரும் மருத்துவம் பார்க்க முன் வருவதில்லை. 100 க்கு 99 சதவிகித மருத்துவர்கள் தனக்கு மனிதாபிமானம் உள்ளது என நடிப்பது கூட இல்லை. மனிதாபிமானம் அற்ற  தொழில்களில்   மருத்துவத்துறையும்  ஒன்று.
                                           
மருந்து கடை வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் பணக்காரர்களே(குறிப்பாக மார்வாரிகளும் நாய்டுகளும்) மருந்து அட்டைகளில் பதியப்படும் அதிக பட்ச விலை குறியீடு (M.R.P) என்பது மருந்தின் உற்பத்தி செலவைவிட, ரூ. 30%-லிருந்து 50% கூட்டி மருந்து கடைக்காரர்கள் லாபம்  பெற வேண்டும் எனும் நோக்கில் குறிப்பிடப்பட்டதாகும்.
                                
இவர்கள் எந்த வித காரணங்களுக்காகவும் ஒரு ரூபாய் கூட மருந்து வாங்கும் ஏழைகளைப் பார்த்து குறைக்க மனம் வராது. மருந்து வாங்க வந்த பணத்தில் ஒரு ரூபாய் குறைந்தால் கூட ஏற்க மனமில்லாமல் நோயாளிகளை விரட்டிவிடுவார்கள்.

இவர்கள் இப்படி சேர்த்த பணத்தை திருப்பதி உண்டியலில் பணம் போடுவதும், வள்ளல் என சொல்லிக்கொண்டு பள்ளி நிறுவனங்கள் நடத்துகிறேன் என சொல்லி ஒவ்வொரு சீட்டுக்கும் ஆயிரக்கணக்கில் பணம் கொள்ளை அடிப்பதையும் எந்த அரசாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. காரணம் இவர்களிடம் தேர்தல் செலவுக்கு சில ஆயிரங்களை கட்சிகள் கைநீட்டி வாங்குவதால் தான்.

மருந்து அட்டைகளில் பதியப்படும் விலைக்கும் மருந்தின் அடக்கவிலை குறியீட்டையும் கவனிக்கும் பொறுப்பு யாருக்கு உள்ளது?இதை பத்திரிக்கைகளில் வெளியிட்டு மக்களுக்கு தெரியபடுத்தலாமே? ஏன் செய்ய வில்லை இந்த அரசு?

எப்படி ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டுமோ அதாவது பொய்,களவு,போதை,புகையிலை,கோபம் போன்ற மனித குலத்தின் பஞ்சமா பாதக செயல்களிலிருந்து விடுபட்டு அல்லது அதை தொடுவதே

பாவம் என மாணவர்களுக்கு சொல்லித்தரும் ஆசிரியரைப்போல் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.ஆனால்   
அப்படியெல்லாம் இன்று இருப்பதாக யாரையும் நாம் காண முடிவதில்லை.

போலிமருந்து மற்றும் அதன் விலைகளை தானே நிர்னயம் செய்து அதில் ஒரு ரூபாய்கூட குறைக்க மனமில்லா  மருந்து கடை முதலாளிகளையும் போதைக்கு அடிமையான மருத்துவர்களின் பெயர்களையும்  பத்திரிக்கைகளில் வெளியிட்டு அவர்களின்     திருமுகங்களின் மறு முகங்களையும்  மக்கள் அறியச்செய்யலாமே ?                                       

                                



No comments: