Monday, April 23, 2012

29-உலகநாட்டுத்தலைவர்களின் மறுமுகங்கள்


                      29- உலகநாட்டுத்தலைவர்களின்  மறுமுகங்கள்
         
             
 தமிழகத்திலிருந்து  கேரளத்திற்கு கடவுளை(அய்யப்பன்) காண ஆண்டுதோறும் தொடர்வண்டி,பேருந்து,சிற்றுந்து,மகிழுந்து மற்றும் விமானம் மூலம் லட்சக்கணக்கில் செல்கின்றனர். சாதாரணமாக செல்வதில்லை ; 40அல்லது 48 நாட்கள் விரதமிருந்து, கடும் தவமிருந்து (இப்படி செய்வதால் அதுவும் ஆண்டுதோறும் செய்வதால் செல்வம் பெருகுமாம் ,துன்பங்கள் தீருமாம்) ஊர் உறவை கூட்டி ஆயிரக்கணக்கில் செலவு செய்து படையல் போட்டு அய்யப்பனை போய்கண்டுவிட்டு திரும்பிவந்து  பேசி பெருமை பட்டுக்கொள்வது தமிழகத்தில் பரவிவரும் கலாச்சாரமாகவே மாறிவிட்டது .

இதில் சில பேர் திரும்பும் வழியில் விபத்தில் மரணம் அடைந்து விடுகின்றனர்.இது ஏன் இப்படி நிகழ்கிறது என யாரும் சிந்திப்பதில்லை இதை பற்றியெல்லாம்,இந்த பாதிப்பையெல்லாம் ஆண்டுதோறும் செல்லும் அல்லது செல்ல துடிக்கும் புதிய வர்களும் சிந்திப்பதில்லை அல்லது இவர்கள் சிந்தனைக்கு கல்விக்கூடங்களோ அல்லது அரசோ உதவுவது இல்லை.
சமீபத்தில்(14.01.2012) சென்னை அருகே உள்ள கிராமத்தில் ஒருவர் முதன் முதலாக விரதமிருந்து ஒருவர் கும்பலோடு கும்பலாக அய்யப்பனை காணச்சென்றார்.ஏதோ இவருடைய  நெருங்கிய உறவினரை காணச்செல்வது போல.ஜோதிகாண செல்கின்றனர்.மலைவாழ் இனங்களை போகி கொளுத்த ச்செய்து (அன்றயதினம் தமிழ்நாட்டில் போகி) அதையெல்லாம் மறந்து அல்லது மறக்கச்செய்ய தமிழ்நாட்டில் வாழ் கேரள மக்கள் தமிழனை மூளை சலவைச்செய்து துப்புகெட்ட தமிழனைகேரளத்துக்கு அழைத்துச்செல்கின்றனர்.  

போனவர் அங்கே தேநீர் அருந்த ஒரு தேநீர் கடைக்கு சென்றார். அந்த கடைக்காரர்,‘உனக்கெல்லாம் தேநீர் ஒரு கேடா உன்னை எவன்டா வரச்சொன்னது நாயே. உனக்கெல்லாம் தேநீர் தர முடியாது’ என வெந்நீரை அவன் மேல் ஊற்றி வலி தாங்க முடியாமல் இறந்தே போனார்.அவருக்கு ஒரு மனைவியும் இரண்டு குழந்தையும் உள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிட்டது. இந்த குடும்பத்தின் நாளைய கெதியென்ன? ஆன்மீக வாதிகளின் பொய்பிரச்சாரம் இது என இன்னும் புரியாமல் மேலும் பல மக்கள் இன்றும் போய்க்கொண்டுள்ளனர் .இதற்கு எல்லாம் யார் பொறுப்பு?

கேரளாவில் பெரும்பாலும் கம்யூனிசவாதிகள்,அதாவது கடவுள் நம்பிக்கை அற்றவர்கள்.ஆனால் ஆன்மீக வாதிகள் கூறுவதை அப்படியே எளிதில் நம்பும் குணமுடையவர்கள் தமிழர்கள். எனவே தான் தமிழ் நாட்டில் பக்தி இலக்கியங்கள் அதிகம் உருவாகின. அதுவும் போட்டி போட்டுக்கொண்டு சைவ திருமுறைகள் மற்றும் வைணவ புராணங்கள் ஏராளமாக உருவாகின.

ஒருவன் கோயிலுக்கு போவதும் அங்கே கடவுளுக்கு நேர்த்திக்கடனை செலுத்துவதும் காலம் காலமாக பெரும்பாலான மக்கள் கடைபிடிக்கப்படும் ஒரு ஆன்மீக செயல் .அவன் குலம் தழைக்கவும் வளம்몮பெருகவும்  நம்பிக்கையூட்டி மக்களை  அய்யோக்கியர்கள் பழக்கப்படுத்திவிட்டனர் அவன் உழைப்பின் மூலம் உள்ள சேமிப்பை அய்யோக்கியர்கள் அடைய கண்டுபிடித்த எளிய வழி.   பக்தனுக்கு இறைவனை வணங்கத்தான் தெரியும் அவன் உயிர் போனதுக்கு கடவுள் ஏன் பொருப்பேற்க வில்லை. இதை யாரும் கேட்கவில்லை அல்லது சிந்திக்க வில்லை.கடவுளுடைய முகவர்கள்(agents of gods=பூசாரிகள் அல்லது அர்ச்சகர்கள்)  இதற்கு ஏன் பதிலளிக்க வில்லை.
                                   
இனியாவது மக்களை அவரவர் வீடுகளில் பூசை அறைகளை அமைத்து அது சைவக் கடவுளாகட்டும் அல்லது வைணவக்(அசைவ கடவுள்?) கடவுளாகட்டும் அல்லது கிறித்துவ கடவுளான கர்த்தராகட்டும் அல்லது இஸ்லாமிய கடவுளான அல்லாவாகட்டும் அனைத்து வகையான மத மக்களையும் அவரவர் வீடுகளில் கடவுளை அல்லது இறைவனை அல்லது கர்த்தர்  அல்லது அல்லாவை வணங்கப்பழகிவிட்டால் மனித சமுதாயம் அமைதியான ஆன்மீவழியில் செல்லும்.உலகின் பெரும்பான்மையான மக்கள் ஆன்மீகத்தைதானே விரும்புகின்றனர்.அப்படி செய்தால் கோயில்களில் குண்டு வெடிக்காது.

அனைத்துவகையான மதம் தொடர்பான வழி பாட்டு தலங்கள் யாவையும் இழுத்து மூட வேண்டும். அவைகள் யாவையும் நினைவுச் சின்னங்களாகவும்,சுற்றுலா இடமாகவும் மாற்ற வழிவகைசெய்யும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இதற்காக உலகத்தலைவர்களெல்லாம் ஒன்று கூடி முடிவெடுக்க வேண்டும். பூனைக்கு யார் மணி கட்டுவது?

‘கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்’ என பகவத் கீதையும்,

‘என் சமூகம் உனக்கு முன்பே செல்லும்’ என கிறித்துவ மதமும்,

‘இறைவன் எங்கும் வியாபித்துள்ளார்’ என இஸ்லாமிய மதமும்,
கடவுள் எங்கும் உள்ளார் எல்லாஉயிரினத்தையும் ஆட்கொண்டுள்ளார் என  
மக்களிடையே பரப்பியகொள்கைகள் யாவும் பொய்யா?

பக்தி மார்கத்திலும் ஒரு பகுத்தறிவாதத்தை புகுத்தியிருந்தால் இப்பொழுது உலகெங்கும் பரவியிருக்கும் மத அமைதியின்மை மத பூசல்கள் தோன்றியிருக்காது.
இடைத்தரகர்களின் பிழைப்புக்கு ஆன்மீகம் ஒரு வழித்தடமாகிவிட்டது.

தேசியம் ,தேச ஒற்றுமை இவையெல்லாம் தேசிய கட்சிகளுக்கு அலங்கார மேடைப்பேச்சாக இருக்கும்.

கேரளம் இந்தியாவில் தான் உள்ளது தமிழர்கள் கேரளத்திற்கு சென்று கடவுளை வழிபடுவதை அங்கு உள்ள கேரள மக்கள் ஏன் தடுக்கின்றனர் அல்லது அடிக்கின்றனர் அல்லது கொல்லுகின்றனர்;         

இதை கண்டிக்கவோ அல்லது தண்டிக்கவோ இந்திய அரசுக்கு அதிகாரம் இல்லை அல்லது அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்த  மன மில்லை. இங்குள்ளவர்கள் தேச ஒற்றுமை பற்றி ஏன் மேடை போட்டு வாய்கிழியபேசவேண்டும்? 
எதையும் எளிதில் நம்பும் அடிமை இனமான தமிழர்கள்  நாதியற்று போய்விட்டார்கள். இதையெல்லாம் பார்த்து நாம் கண்ணீர் வடிக்கும் பேதையாகிவிட்டோம். அநீதியை எதிர்த்து(struggle against indignation) போராடும் வீரர்களாவது எப்போது ?.

இதற்கெல்லாம் விடிவு என்ன ?முடிவுதான் என்ன? உலகத்தின் ஒட்டுமொத்த சமுதாயமும் அதன் தலைவர்களும் ஒன்றுகூட வேண்டும். எதற்கெல்லாமோ ஒன்று கூடும் உலகத்தலைவர்கள் சமூக மற்றும் சமய ஒற்றுமைக்கு ஒன்று கூடினால் என்னவாம் ?
அறிவியல் வளர்ச்சியடையாத காலங்களில் அருவ வழிபாடும் உருவ வழிபாடும் கலந்த பல்வேறு சாதி சமயங்கள் உருவாகின. உலகில் தனித்தனியே நாடு மற்றும்  வித விதமான ஆட்சிமுறைகள் உருவாகின. அதன் வரலாறுகள் நாம் அறிந்ததே. ஆனால் தற்போது மத வேறு பாடுகள் அதிகரித்து, உலகில் தற்கொலை படைகள் அமைத்து ஒரு மத வழிபாட்டு தலங்களை மற்ற மதவழி பாட்டு தல உரிமையாளர்கள் குண்டு போட்டு அழித்துகொள்கின்றனர். இதனால் அப்பாவி உயிர்கள் பலியாகின்றன.

இந்த வன்முறை மற்றும் கருவருக்கும் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டுமானால் உலக நாட்டு தலைவர்கள் ஒன்று கூட வேண்டும். உலக அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் இழுத்து மூட வேண்டும்.அத்தனை வழிபாட்டு தலங்களையும் நினைவுச் சின்னங்களாக மாற்ற வேண்டும்.சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும்.அப்படியொறு தீர்மானம் நிறைவேற்றி அனைத்து நாடுகளிலும் சட்ட மாக்க வேண்டும். உலகில் எந்த மதத்திற்கும் பொது வழிபாட்டு தலம் இருக்கக் கூடாது. கடவுளுக்கு ஏன் உண்டியல்? கடவுளைக்காண கோயிலுக்குச் செல்லும் பக்தர்களிடம் அர்ச்சகர் ஏன் தட்டு ஏந்த வேண்டும் ? இதையெல்லாம் தடைசெய்யப்படவேண்டும்.கடவுள் எங்கும் இருப்பது அல்லது வியாபித்திருப்பது உண்மையானால் அவரவர் வீட்டிலேயே அறைகள் அமைத்து கடவுளை,இறைவனை,தெய்வத்தை அல்லது தேவனை அல்லது அல்லது அல்லாவை அல்லது புத்தரை அல்லது மகாவீரரை யாரை வேண்டுமானாலும் வழிபடலாம்.

அத்தகைய உலகத்தலைவர்களின் திரு முகங்களின் மறு முகங்களை நாம் காண்பதெப்போது ?      



                                       

No comments: