4-
செல்வந்தர்களின் மறுமுகங்கள்
ஒரு
நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது தனிமனித வருவாயை பெருக்க அந்த நாட்டு அரசும்
தனிமனிதனும் இணைந்து செயல்படும் திட்டங்களை தீட்டபடுவதாகும்.
உலகில்
தற்போது இரு வேறு அரசுகள் இயங்குகின்றன. 1-மக்கள் போக்கில் எந்தவித மாற்றங்களையும்
ஏற்படுத்தாமல்,அந்த மக்களின் உழைப்புக்கும் கேளிக்கைக்கும் வசதிகள் துய்ப்பதற்கும்
மறைமுக மற்றும் நேர்முக வரிகளை தீட்டி நாட்டின் பொருளாதார வளர்ச்சியை
மேம்படுத்துவது.வசதிபடைத்த தனி மனிதனை முதலாளி ஆக்கி அவன்கீழ் தொழிலாளர்களை அவனுடைய
தொழிற் சாலையின் சட்ட திட்டங்களுக்கு உட்படுத்தி அரசுக்கு வரி செலுத்த வைப்பது.
ஒருநாட்டின்
பொருளாதார வளர்ச்சியை ஏன் மேம்படுத்த வேண்டும்?
இயற்கை மாற்றங்களாலும்,சீற்றங்களாலும் பொதுமக்களுக்கு பொருளாதார சீரழிவு ஏற்படும்.
சனநாயக
மற்றும் முதலாளித்துவ நாடுகளில் இப்படித்தான் நடைபெறுகிறது.
இதற்கு
அமெரிக்கா,மற்றும் இந்தியா போன்ற நாடுகளை உதாரணமாக காட்டலாம்.
மற்றொன்று
கம்யூனிச அரசு. அரசாங்கமும் மக்களும் இணைந்து தொழில் துவங்குவது. வரவையும்
இழப்பீட்டையும் சமமாக்கிக்கொள்வது. இரஷ்யாவை இதற்கு உதாரணமாக காட்டலாம் . வேறு சில
கம்யூனிச நாடுகளில் முழுக்க முழுக்க அசாங்கமே தொழிலை ஏற்று நடத்துவது . அரசாங்கமே
தொழில் தகராரை தீர்த்துக்கொள்ளும். இதற்கு சீனாவை உதாரணமாக காட்டலாம்.
இதுபேன்ற
அரசுகளுக்கு மக்களின் கல்வி மற்றும் பொருளாதாரம் பற்றிய கவலையே அதிகமாக இருக்கும்.
முதலாளித்துவ
நாடுகளில் உள்ள அரசியல் வாதிகள் பெரும்பாலும் சுய நல வாதிகளே.
மேலை
நாடுகளில் உள்ள மக்களின் மனப்போக்கும் ,நம் நாட்டு மக்களின் மனப் போக்கும்
வெவ்வேறானவை.
சொத்து
சேர்ப்பது இந்தியர்களின் குணம். பணத்தை பதுக்கிவைப்பதும் வீடு, நிலம் போன்றவற்றில்
முதலீடு செய்வதும் இந்தியர்களின் ரத்தத்தில் ஊறிய குணம்.
மேலை
நாட்டு மக்களின் பொருளீட்டும் குணம் வேறு மாதிரியானது. உபரியான பணத்தை பங்கு
மார்கெட்டில் முதலீடு செய்வதும்,வாடகை குடியிருப்பு மற்றும் விடுதிகளில் தங்குவது
பேன்ற உல்லாச வாழ்கையைத்தான் விரும்புகின்றனர்.இறக்கும் வரை மகிழ்ச்சியாக
வாழவேண்டும் என்பதுதான் அவர்கள் குறிக்கோள்.
நம்மவர்கள்
குறிக்கோளோ தலைமுறைக்கும் சொத்துசேர்ப்பது மகாபாரதம் மற்றும் இராமாயண கதைகளை உண்மை
சம்பவம் என்று நம்பிய –நம்பும்
நம் மக்கள் முற்பிறவி மற்றும் மறுபிறவியில் நம்பிக்கையை ஊட்டி உழைக்கும் மக்களின்
மூட நம்பிக்கையை மூல தனமாக்கி ஒரு இனமே உழைக்காமல் தங்கள் வாழ்க்கையை
வளமாக்கிக் கொண்டிருக்கிறது. இன்றளவும் இது நீடிக்கிறது என்துதான் கொடுமை.
அளவுக்கு
மீறி சொத்து சேர்ப்பதும் ஒரு மூட நம்பிக்கை என்பது நம் உழைக்கும் மக்களுக்கு கூட
இது நாள் வரை புரிந்த பாடில்லை.
மேலை
நாட்டு பல்கலை கழகங்களில் படித்தும் அம்மக்கள் கலாச்சாரத்தோடும் ஒன்றிவிட்ட நம்
பிரதமர்,ஒரு மிகப்பெரிய பொருளாதார மேதை.பல ஆண்டுகள் பன்னாட்டு அவையில் பொருளாதார
வல்லுநர் என பாராட்டு பெற்றவர்.
மேலைநாட்டு
மக்களின் பொருளாதார பழக்கத்தை நம்நாட்டில் பரப்ப நினைத்தார். அதன் விளைவாக நம்
நாட்டு பெரும் பணக்காரர்களையும் அந்நியநாட்டு பணக்காரர்களையும் ஒன்றிணைத்து நிதி
நிறுவணங்களை உருவாக்கினார். பொது மக்களின் உழைத்து சிருகசிருக சேர்த்த பணத்தை
பங்கு மார்கட்டில் முதலீடு செய்ய ஆசை வார்த்தைகளை ஊடகங்களில் விளம்பரப்படுத்தினார்.
இந்தியாவின்
கிராமத்து மக்களையெல்லாம் சுமார் 12 க்கும் மேற்பட்ட நிதிநிறுவணங்கள்
சுற்றிவளைத்தன .ரூ30 ஆயிரம் கட்டினால் மூன்றாண்டுகளில் ரூ60 ஆயிரம் திரும்ப
கிடைக்கும் என ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினர்.
நம்பிய
ஏழைமக்கள், தங்களின் சிறு சேமிப்புகளான தங்க நகைகளை அடகு வைத்தும்,ஆடு மாடுகளை
விற்றும் ரூ30 ஆயிரம் கட்டினர். 3 ஆண்டு கழிந்தது. எந்த நிதி நிறுவனமும் கட்டிய
பணத்தை கூட பாலிதாரர்களுக்கு வழங்க முடியவில்லை.
அனைத்து
நிதி நிறுவனங்களும் பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்தனர். ஏறு முகத்தில் இருந்த
பங்குமார்க்கெட் கடந்த 3 ஆண்டுகளில் இறங்குமுகமாகவே உள்ளது.
பொறுளாதார
மேதை போட்ட கணக்கு என்ன ஆனது ?
ஏழையாக பிறந்து ஏழைகளோடு பழகியவனுக்கு
மட்டுமே ஏழைகளின் வலி தெரியும். அப்படிபட்டவர்கள் ஆட்சிக்கு வரமுடிவதிவல்ல. அப்படி
வரமுடியாதவன் சொல்லையும் ஆட்சியாளர்கள் ஏற்க மனமிருப்பதில்லை.
ரூ30
ஆயிரம் எப்படி முதலீடு செய்யப்பட்டது தெரியுமா ?
ரூ 20
ஆயிரத்தை நிர்வாக செலவுக்காகவும் ஏஜண்ட் கமிஷனாகவும் பங்கு போட்டு சாப்பிட்டு
விட்டார்கள் .மீதி ரூ10 ஆயிரத்தை பாலிசிதாரர் பெயரில் முதலீடு செய்தார்கள்.
அந்த ரூ10
ஆயிரம் பணத்தை எந்த பங்கு மார்கெட் கம்பெனியில் முதலீடு செய்தால் லாபம் பெருகும்
என எந்த அதிகாரிக்கு அக்கரையோ அல்லது கவலையோ இருக்கும்?
அந்த
அதிகாரியின் செயலை கண்காணித்தது யார் ?
அந்த
அதிகாரி தனியார் கம்பெனியின் ஆசாபாசங்களுக்கு அடி பணிந்திருக்கமாட்டார் என்பது
எப்படி நம்புவது ?
சில
கம்ப்பெனிகள் திவாலாக வேண்டும் என்கிற நோக்கில் ஆரம்பிக்கபடுகிறது. நமது நாட்டு
சட்ட திட்டங்கள் அப்படி உள்ளது. பொதுமக்கள் பணத்தை அதிகாரிகளும் சில கள்ள மனம்
படைத்த அமைச்சர்களும் பங்கு போட்டுக்கொள்கின்றனர். கடந்த கால வரலாறு இதை நமக்கு
தெரிவிக்கிறது .
நிதி
அமைச்சகம் இதை ஏன் கண்காணிக்கவில்லை?
ஒவ்வொருமாதமும்
பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்த ஏழை பொது மக்கள் பணம் என்ன ஆனது? என அந்தந்த
அதிகாரிகளின் செயலை ஏன் மதிப்பீடு செய்யவில்லை ?
அப்படி
செய்திருந்தால் பொது மக்களுக்கு தெரிவிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம்?அந்த அதிகாரிகளின்(செல்வந்தர்களின்)திருமுகங்களின்
மறு முகங்களை மக்களுக்கு காட்டியிருக்கலாமே!
No comments:
Post a Comment