30-பெற்றோர்களின்
மறுமுகங்கள்
நாட்டின்
முன்னேற்றம் என்பது அந்த நாட்டு தலைவர்கள் வகுக்கும் தொலை நோக்கு திட்டத்தால் மட்டுமே
செயல்படுத்த முடியும். தொலை நோக்கு திட்டம் என்பது குழந்தைகளின் அறிவுபூர்வமான
வளர்ச்சியில் அக்கரை காட்டவேண்டும். உலகின் பெரும்பாலாலன நாடுகள் இதை உணர்ந்து
செயல்படுகின்றன. நம்நாட்டு தலைவர்கள் இன்றும் இதை உணர்ந்ததாக தெரியவில்லை.
இன்றய (26.01.12) செய்தி தாட்களில் நார்வே நாட்டு
குடியுரிமை பெற்ற இந்திய தம்பதியரின்(இணையரின்)இரண்டு குழந்தைகளை அந்த நாடு
கைப்பற்றியது. காரணம் கேட்டால் இந்திய மக்கள் வியப்பில் ஆழ்ந்து போவார்கள்.
1-குழந்தைகளுக்கு தங்கள் தாயின் கைகளால்
குழந்தைகளுக்கு சோரு ஊட்டப்பட்டது
2-குழந்தைகளை தங்கள் அருகிலேயே உறங்க
வைத்தது.
இந்த இரண்டு பழக்கமும் நார்வே நாட்டில்
தடை செய்யப்பட்டது. இதை உணராமல் பெற்றோர்கள் இந்திய கலாச்சாரப்படி அவர்கள்
குழந்தைகளை வளர்க்கப்படுவதை அந்த நாட்டு குழந்தை
வளர்ப்பு கண்காணிப்பு மையம் கவனித்து விட்டது.உடனே குழந்தைகளை கைப்பற்றி
தங்கள் பராமரிப்பில் வைத்துக்கொண்டது.குழந்தைகளை பிரிந்த பெற்றோர் இந்திய அரசின்
உதவியை நாடியது. இந்தய அரசின் வேண்டுதலுக்குப்பின் நார்வே நாட்டு அரசு, குழந்தைகளை
பெற்றோரின் வசம் ஒப்படைக்கப்பட்டது.அதுவும் குழந்தைகளின் சித்தப்பாவிடம்
ஒப்படைக்கப்பட்டது.குழந்தைகளின் சித்தப்பா அந்நாட்டு சட்ட திட்டங்களுக்கு
பழக்கப்பட்டுபோனவர். எனவே குழந்தைகளின் அப்பா அம்மாவும் அதற்கு உடன்பட்டனர். ஆமாம்
குழந்தைகளை பிறந்த உடன் எப்படி பராமரிக்க வேண்டும் என அந்த நாடு சாட்ட
மாக்கியுள்ளது.
ஏழாம் அறிவு இயக்கத்தின் கொள்கையும்
அதுவே.
1-குழந்தைகளை பிறந்த உடன் தாய்ப்பால்
கொடுத்து வளர்க்க வேண்டும்
2-ஆறுமாதம் ஆன குழந்தைகளை தாய்ப்பாலுடன்
ஸ்பூன் உதவியுடன் திடவுணவுகளை ஊட்ட வேண்டும்.
3-குழந்தைகளை தங்கள் அருகிலேயே அதாவது
தங்கள் பார்வையில் தனிஅறையில் படுக்கவைக்க வேண்டும்.
4. எந்த காரணத்தை கொண்டும் குழந்தைகளை
தங்கள் அருகில் உறங்க வைக்கக்கூடாது .
இது மிகச்சிறந்த கலாச்சார அமைப்பு.
இதுபோன்ற ஒரு கலாச்சாரம் உலகம் முழுக்க இருக்க வேண்டும்.
நார்வே நாடு உலகில் முன்னுதாரணமான நாடு.
ஆமாம் ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம்,அற்ற உயர்ந்த மற்றும் தாழ்ந்த சாதியற்ற சமத்துவமான
உலக மக்கள் அனைவரையும் நேசிக்கின்ற அந்த நாட்டு தலைவர்களின் தொலைநோக்கு பார்வை மற்ற
நாட்டுத் தலைவர்களுக்கும் இருக்கவேண்டும்.
நம்ம நாட்டு குழந்தைகளை பற்றி
பெத்தவர்களே கவலை படுவதில்லை.நம்ம நாட்டு அரசாங்கமும் குழந்தைகளை பற்றிய எதிர்கால
பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான சட்டங்களை எதுவும் உருவாக்கியதாக தெரியவில்லை.
நம்ம நாட்டு அரசியல் வாதியோ குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் குழந்தைகளை
பேணிப்பாதுகாக்க வேண்டியது அவரவர் கடமை என்று மேடை முழக்கமிடுகின்றனர்.
அதிகம் அறிவியல் வளர்ச்சியடையாத கடந்த
காலங்களில் இது போன்று பேசிய அரசியல் வாதிகள் இன்றும் மற்ற உலக நாடுகளில்
குழந்தைகளின் நலனில் அந்த நாடுகள் எந்த அளவுக்கு அக்கறை கொண்டுள்ளன என நம்நாட்டு
அரசியல் தலைவர்கள் புரிந்து கொண்டது போல் தெரியவில்லை.அதுபோன்று குழந்தைகளுக்கான
சட்டபாதுகாப்பு உருவாக்க நம் அரசியல்வாதிகள் இனியாவது நினைத்துப்பார்க்க வேண்டும்.
மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும்
சட்டப்பாதுகாப்பு வழங்கிய நமது அரசாங்கம். குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சி
தொடர்பான முயற்சியில் இறங்கவேண்டும்
1-பெற்றோர் நல வாரியம்.
2- குழந்தைகளின் உணவு மற்றும் உடல் நலம்
பாதுகாக்க போதுமான செவிலியர்களை உருவாக்குதல்.
3-ஒவ்வொரு கிராமத்திலும் நன்கு
பராமரிக்கப்பட்ட சுகாதார அமைப்புடன் கூடிய கட்டிடங்களை உருவாக்குதல்
4-வட்டிக்கடை நடத்தி அதிக வருமானத்தை
பெருக்க ஆசைபட்டு ஆசிரியர் வேலையை பயன்படுத்திக்கொள்ள விரும்பும் நபர்களை
அடையாளம்கண்டு அவர்களை நுழைய விடாமல், தகுதி வாயந்த, குழந்தை வளர்ப்பில் ஆர்வமுள்ள,
அக்கறை உள்ள ஆசிரியர்களை தேர்வு செய்ய, அதற்கான நேர்மையான பணியமர்த்தும் வாரியத்தை
உருவாக்க வேண்டும்.
5- ஒவ்வொரு கிராமத்திலும் பாதுகாப்பான
சுகாதார அமைப்புடன் கூடிய ஆசிரியர், மற்றும் செவிலியர் இல்லங்களை கட்ட வேண்டும்.
நமது அரசாங்கம் தனது வருவாயின் நான்கில்
ஒரு பகுதியை ராணுவத்திற்கு செலவிடுகிறது. அந்த ராணுவ செலவினங்களை நாட்டின்
வருவாயில் பத்தில் ஒரு பங்காக கூட வேண்டாம் நூறில் ஒரு பங்காக குறைத்துக்கொண்டு .
அந்த வருவாயை மேலே குறிப்பிடப்பட்ட அய்ந்து வகையான அமைப்புகளுக்கு செலவிட
வேண்டும்.
ராணுவத்தை பலப்படுத்த வேண்டும்
என்கிற காட்டு மிராண்டித்தனமான கொள்கையில்
மாற்றம் வேண்டும். அமைச்சர்கள் எளிமையான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு
அமைச்சருக்கும் பத்துக்கும் மேற்பட்ட பத்துவகையான கார்களை,ஆடம்பர பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். கடமையாற்ற தேவையான
ஒன்று அல்லது இரண்டு கார்கள் இருந்தாலே போதுமானது.சிக்கணம் அரசாங்கத்தை ஆளும்
அமைச்சர்களுக்கு இருக்க வேண்டும். அது போன்ற குணமுடைய அமைச்சர்களை தேர்வு செய்வது
ஓட்டு போடும் மக்களின் கடமையாக இருக்க வேண்டும்.
அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் ஓட்டுனர்களை
பணியமர்த்தம் செய்யப்படுவதை தடைசெய்யப்படவேண்டும்.அவர்களே சுயமாக கார்ஓட்டும்
பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் எடுபிடி
வேலைக்கு ஆட்கள் நியமிக்கப்படகூடாது. அலுவலகத்துக்குள் கோப்புகள் நகர்த்த மட்டுமே
அலுவலக ஊழியர்களை பயன்படுத்தவேண்டும்.இதனால் லஞ்சம் வெகுவாக குறைந்து விடும்.
லஞ்சமே இருக்காது.மக்கள் தங்கள் தேவைகளை அதிகாரிகளிடமோ அல்லது அமைச்சர்களிடமோ நேரிடையாக
கோரிக்கை வைத்து நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
இது போன்றதொரு அஅரசியலமைப்பு சட்டத்தை
ஒவ்வொரு நாடும் இயற்ற வேண்டும்.அதுதான் மிகச்சிறந்த மக்களாட்சி தத்துவம். காலங்கள்
மாறும். மாற்றங்கள் நிகழும். இது ஒரு தொடர் நிகழ்ச்சிதான். மன்னராட்சி, சரவாதிகார
ஆட்சி, பின் போலியான மக்களாட்சி ஒழிந்து , இனி நடக்கப்போவது உண்மையான மக்களாட்சி.
அதாவது மக்கள், மக்களுக்காக மக்களே ஆள
வழி வகுக்கும் லஞ்சமற்ற, ஊழலற்ற, நேர்மையான ஆட்சி உருவாகும் நாட்கள்
எண்ணப்படுகின்றன. அப்பொழுது குழந்தைகள் எதிர் காலம் பற்றிய கவலை பெற்றவர்களுக்கு
மட்டுமல்ல அரசுக்கும் வரவேண்டும். அப்பொழுதுதான் ஒவ்வொரு நாடும் தலைசிறந்த
மக்களாட்சி நாடாக மாறும்.
எந்த நாட்டு ஆட்சியாளராக இருக்கட்டும்(அவர்களும்
பெற்றோர்தானே?) அவர்களின் திருமுகங்களின் மறுமுகங்களை மக்கள் காணவேண்டும் .
No comments:
Post a Comment