Sunday, April 22, 2012

20-சூதாட்ட வியாபாரியின் மறுமுகம்


                        20- சூதாட்ட வியாபாரியின் மறுமுகம்

‘ரம்மி சூதாட்டமல்ல’ பணம் வைத்து ஆடினாலும் சூதாட்டமல்ல என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.(பார்க்க-27.11.2011 தேதியிட்ட செய்தி நாளேடுகள் )
ஒருநாட்டின் குடிமக்களின் பாதுகாப்பிற்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும், நல்ல பழக்கவழக்கத்தை ஏற்படுத்தி பள்ளிப்பருவ மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும்  நாட்டின் அரசாங்கம் இருக்க வேண்டும்.
நாட்டின் உற்பத்தி பெருக்கம் அல்லது ஒட்டுமொத்த வளர்ச்சி என்பது ஒரு தனிமனித வருவாய் பெருக்கம் அல்லது குடும்ப பொருளாதார மேம்பாடு அடைவதில்தான் உள்ளது. அதற்கு நாட்டு மக்களை பழக்கப்படுத்தவேண்டும் ,இதற்கெல்லாம் அடக்கு முறை சட்டத்தை பயன் படுத்த அரசு முன்வர வேண்டும்.அதைவிடுத்து வீணாபோகும் அணு உலை இயக்கியே தீருவேன் என அக்கரையுடன் அடக்கு முறை கையாள நினைக்கும் அரசு தடம் மாறி போகும் கோக்கை நினைக்கும் போது மனம் வேதனை படுகிறது.  

எந்த கட்சி அரசு மாறிவந்தாலும் இந்த அடிப்படை உரிமைகளை மக்களிடமிருந்து மாற்றவே கூடாது.
உலக மக்களிடையே பரவலாக வெட்டியாக பொழுதை கழிக்கும் பழக்கங்களும் இதற்கு சேர்த்த பணத்தை பந்தயம் கட்டி விரயமாக்கும் குணங்களும் ஒரு வியாதியாகளாகவே உள்ளது.
இவற்றில் முக்கியமனவை சூதாட்டம் .

மகாபாரத காலத்திலிருந்தே சூதாட்டம் உள்ளதை நாம் அறிவோம்.
இந்த சூதாட்டத்தால் அரசர்கள் தோற்றுப்போய் ஆளும் நாட்டையே விட்டு வெளியேறும் அவல நிலையை அன்றய சமுதாயம் நியாயப்படுத்தியது. அதாவது ஒருநாட்டை இன்னொரு நாடு பிடிக்க வேண்டுமானால் எத்தனையோ உயிர்கள் பலியாகும். கத்தியின்றி ரத்தமின்றி ஒரு நாட்டின் தலைவன் தன்னிச்சையாக தான் ஆளும் நாட்டையே சூதாட்டத்தில் அடகுவைத்ததை அன்றய அந்த கால மக்கள்,  சூதாட்டத்தில் நாட்டையே ஈடுகட்டி  (அடகுவைத்து)  தோற்றுப்போனதற்கு மன்னனை, மக்கள் எதிர்த்ததாக எந்த குறிப்பும் காணப்படவில்லை.

சூதாட்டத்தில் தோற்கதோற்க ஒருவனுடைய அறிவாற்றல் செயலிழந்து போகும்.எதை வைத்து சூதாடுவது என மனம் பேதலிக்கும், மானமிழக்கச்செய்யும்,மனைவியைகூட ஈடுகட்டி சூதாடத்தோன்றும்,  பாஞ்சாலியை அப்படித்தான் அடகுவைத்தனர் பாண்டவர்கள். சமீபத்தில் கூட வட இந்தியாவில் ஒருவர்,  தன் மனைவியை சூதாட்டத்தில் அடகுவைத்து தோற்றுபோனதை பத்திரிக்கை வாயிலாக படித்தோம்.

அப்படிபட்ட சூதாட்டத்தை சட்டமியற்றி தடைசெய்ய மத்திய அரசு முன்வரவேண்டும் சூதாட்டம் என்பது மக்களின் கலாச்சார சீரழிவு.
                                  
மக்கள் அறியாமையால் சூதாட்டம் மக்களின் கலாச்சாரமாகவே மாறியது.

இது எப்படியுள்ளது எனில் ,எல்லாரும்தான் குடிக்கிறான் , எல்லாரும்தான் பொய் சொல்கிறான், எல்லாரும்தான் பொழுதை கழிக்கவேண்டும் என்பதற்கு எதை எதையோ செய்றான் நான் செய்தால் என்ன? அதை எல்லாம் நியாயபடுத்தவேண்டும் என்பதற்கு  ஒரு அரசாங்கம் தேவையில்லை.இதுவெல்லாம் நாகரீக சிந்தனையேஇல்லை
                                 
சூதாட்டத்தில்
1-சோழிவைத்து ஆடுவது
2-ஆடுபுலி ஆட்டம்
3-தாயம்
4-சீட்டு வைத்து ஆடுதல்(3, சீட்டு மங்காத்தா ஆட்டம்,10 சீட்டு,அல்லது 13,சீட்டு ரம்மி ஆட்டம் போன்றவை)
5-விலங்குகளை ஓடவிட்டு அல்லது மோதவிட்டு  பந்தயம் கட்டுவது அதில்1- நாய்,2-குதிரை,3-மாடு4-சேவல் மற்றும் 5-யானை போன்ற உயிரினங்களை பயன்படுத்துவது.                                
அடுத்து
மரணவிளையாட்டில் சேவல் சண்டை,ஆட்டுகடா சண்டை,மாடுமுட்டி அடக்க முடியாமல் மனிதன்  மரணமடைவது மற்றும் மனிதனை மனிதன் மோதி சக மனிதனை சாகடித்து வெற்றிபெறும் விளையாட்டு.இதில் யார் வெற்றிபெறுவார்கள் என பந்தயம் கட்டுவதும் சூதாட்டம் தான்  
                                 
அதில்                          
மனிதனை மனிதன் மோதிக்கொள்ளும் மல்யுத்தம் ,குத்துச்சண்டை, வாள்வீச்சு ஆகியவை முக்கியமானது. 
தற்போது மோட்டார் சைக்கிள் மற்றும் கார் பந்தயங்கள் சூதாட்டத்தில் உள்ளன. அதுமட்டுமல்ல கிரிகெட் மற்றும் கால்பந்து விளையாட்டுகளும் சூதாட்டத்தில் இறங்கியுள்ளன.
லாட்டரியும் ஒரு சூதாட்டம்தான். ஒரு சில அரசாங்கமே இதை செய்கிறது

இப்பொழுதெல்லாம் வலையதளம் மூலம் (on line lottery)சூதாட்டம் உலகமுழுக்க பரவிவிட்டது.
இவையெல்லாம் சோம்பிக்கிடக்கும் மனிதனின் மூளையில் உதிக்கும் பேயாட்டம் போடும்  குணம்.
மனிதனை பிடித்துஆட்டும் மன வியாதிகளில் சூதாட்டமும் ஒன்று.
அதாவது அறவழி சிந்தனையில் வாழ்க்கையை நடத்த விரும்பும் மனிதனுக்கு இது தேவையற்றது. சூதாட்டம் அமைதியான குடும்பத்தை பொருளாதார ரீதியாக சீரழிக்க வல்லது . சுய சிந்தனையற்ற மனிதர்களை சட்டத்தின் மூலம்தான் திருத்த வேண்டும் .எனவேதான் சமூக சிந்தனையாளர்களும் மனித சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்களும் சூதாட்டத்தை ஒழிக்கவேண்டும் என போராடுகின்றனர்

குதிரை பந்தயம் ஆங்கிலேயர்களின் கலாச்சார விளையாட்டு. நம் நாட்டை ஆண்ட ஆங்கிலேயரின் மூலம் குதிரை பந்தயம் இந்தியர்களை தொற்றிக்கொண்டது.
                                         
குதிரைப்பந்தயம் கட்டுபவர்கள் சாதாரண நடுத்தர மற்றும் ஏழ்மை நிலையில் வாழும் மக்களே. ஆனால் பந்தய குதிரைகளை வைத்திருப்பவர்கள் உலகத்தின் மிகப்பெறும் பணக்காரர்களான நம்ம ஊர் செட்டிநாட்டு அரசர்கள்,பிரபல ஆங்கில நாளேடான இந்து பத்திரிக்கை முதலாளிகள்,தினத்தந்தி,தினமலர் முதலாளிகள்
                                          
மற்றும் கர்நாடகத்தைச் சார்ந்த சாராய உலகின் முடிசூடா மன்னன் திரு விஜய் மல்லையா போன்றோர்.
                              
பத்திரிக்கை தொழில் என்பது ஆசிரியர் தொழிலைப்போல அறவழி மார்கம் கொண்டது.ஆனால் எந்த பத்ரிக்கையும் அறவழி சிந்தனையை மக்களுக்கு போதிப்பதில்லை . நீதி மன்றம் மக்களுக்கு அறிவுரை கூறாது, மாறாக அரசு போடும் சட்டங்களை மக்களுக்கு எடுத்து இயம்பும். அவ்வாறு சட்டத்தை போட வேண்டிய அரசாங்கம்,பணக்காரர்கள் மற்றும் வியாபாரிகள் பின்னால் நிற்கிறது .சூதாட்டமும் ஒரு வியாபாரம் என்றாகிவிட்டது.சூது வாது களவு காமம் போன்ற அறவழி தவறிய செயல்களுக்கு மக்களை உட்படுத்தி பணம் கொள்ளையடிக்கும் பத்திரிக்கை முதலாளிகளின் திருமுகங்களின் மறுமுகங்களை மக்கள் காணச்செய்யலாம்.செய்யுமா இந்த அரசு?






No comments: