Sunday, April 22, 2012

21-அரசியல்வாதிகளின் மறுமுகங்கள்


                           21-அரசியல்வாதிகளின் மறுமுகங்கள்  

‘சமூக வலைதளத்திலிருந்து நாட்டுக்கு எதிரான கருத்துள்ள வலைதள குறிப்புகளை நீக்கவேண்டும்’ நடுவண் அமைச்சர் திரு கபில் சிபில் தெரிவித்துள்ளார். இன்றய தொலைக்காட்சி (06.12.2011) செய்தி.
நாட்டுக்கு எதிரான அல்லது ஆதரவான கருத்துக்கள் எனில் என்ன?
இணைதளத்தில் வலை தளம் என்பது அதை பயன்படுத்துவோர் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்.   ஒரு குறிப்பிட்ட அல்லது தனிப்பட்ட நாட்டுக்கு எதிராக அந்த நாட்டுமக்களின் கருத்துக்களை அல்லது விமர்சனங்களை  தேசாபிமான கருத்துக்களாக அந்த நாட்டு அரசு எடுத்துக்கொள்ள வேண்டும். அதை தவிர்த்து அந்த கருத்து சொன்ன வலைதள உபயோகிப்பாளரை(நாட்டு மக்களை) நாட்டின் எதிரிகளாக சித்தரிக்க கூடாது.

நாட்டின் வளரச்சி திட்டங்களான
1-விவசாய பொருட்களின்(உணவு பொருட்கள் மற்றும் விவசாய உபகரணங்கள்) தரமான உற்பத்தி பெருக்கம்
2-தரமான வீட்டு உபயோக பொருட்கள்(quality assured consumable goods or house hold articles)  
3-தாராள மின் உற்பத்தி
4-தரமான நெடுந்தூர சாலை பராமரிப்பு
5-இரட்டை வழி பயணிகளின் இருப்பு பாதை
6- இரட்டை வழி பொருள் போக்குவரத்து இருப்பு பாதை
7- ஒரு மாநிலத்தின் உபரியான ஆற்று நீர் கடலில் கலப்பதை தடுத்து நீர் பற்றாக்குறை உள்ள மாநிலத்திற்கு திருப்பி விடுதல்
இதிலெல்லாம் கவனம் செலுத்தாமல் ஒரு நாட்டின் ராணுவ பலத்தையும் ராணுவ தளவாட உற்பத்தி பெருக்கத்தையும் கவனம் செலுத்தினாலே வல்லரசாகலாம் என கனவு காண்பது ஆட்சியாளர்களின் மற்றும் மக்களின் அறியாமையையும் பறைசாற்றும்.
நாம் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு பொருளும் தரமிக்கதாக உறுதி அளித்தால் சரவதேச சந்தையில் நமது பொருட்களின் தேவை அதிகரிக்கும், இதனால் உலக சந்தையில் நமது நாட்டு பணத்தின் மதிப்பு அதிகரிக்கும். ஊழலற்ற அரசால் மட்டுமே தரமான பொருளை உற்பத்தி செய்ய முடியும்.     

மேலே கூறப்பட்ட 1,2,6,7 திட்டங்களை பற்றி இதுவரை நமது ஆட்சியாளர்கள் நினைத்துகூட ப்பார்க்க வில்லை.பின் எப்படி நமது நாடு உலக வல்லரசாகும்?. தேச ஒற்றுமை எப்படி நிலைத்து நிற்கும்?
இந்நிலையில் ஆட்சியார்களை வலைதளத்தில் எப்படி பாரட்டிக்கொண்டிருக்க முடியும்?
வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் தலைவர்களின் சங்கங்கள்  (cadre based club,association or union ) உள்ளன. அவர்கள் அவ்வப்போது மது மயக்கத்தில் ஒன்று கூடி முடி வெடுப்பார்கள்.

இவர்களின் பின்னணியில் உலகத்தின் மிகப்பெரும் பணக்காரர்களும் மிகப்பெரிய வியாபாரிகளும் இருப்பார்கள்.
                                    
உற்பத்தி பெருக்கம் அதிகம் உள்ள நாடுகளின் வியாபாரிகள்,தங்கள் வியாபாரத்தை பெருக்க, மக்கள் பெருக்கம் அதிகம் உள்ள நாடுகளில்    வியாபார யுக்தியை விஸ்த்தரிப்பார்கள்.பெரும் வியாபரிகளின் நட்புடன் அந்தந்த நாடுகளின் தலைவர்கள் தங்கள் உள்நாட்டு எதிர்ப்புகளை ராணுவத்தை கொண்டு சமாளித்து விடலாம் எனும் எண்ணத்தில் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வந்து விடுவார்கள். இதுதான் காலம்காலமாக நடைபெறும் இரு நாடுகளுக்கிடையே போடப்படும் ஒப்பந்தமாக வழக்கத்தில்  உள்ளது. இது முதலாளித்துவ நாடுகளின் கூட்டமைப்பில் நடைபெறும் ஒரு ஒப்ந்த விழா.
                                         
19-ம் நூற்றாண்டின் இறுதியில் காரல் மார்க்சு தோன்றி அவர் எழுதிய ‘மூலதனம்’ எனும் நூல் முதலாளித்துவ நாடுகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது.அதன் விளைவாக லெனின் தலைமையில் சோவியத் கூட்டமைப்பு நாடுகள் (USSR)தோன்றி வல்லரசாக உருவெடுத்தது. அதை தொடர்ந்து மா சே துங், மார்க்சு+ லெனின்= கலப்பு கொள்கையை உருவாக்கி சீனாவில் கலாச்சார புரடசியை தோற்றுவித்தார்  . அதன் விளைவால் குறுகிய காலத்தில் சீனாவை வல்லரசாக உருவாக்கினார்.


மா சே துங் 20 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காலமானார். இருப்பினும் அவர் வகுத்த கொள்கைக்கு, உலகத்தின் 70% பகுதி மக்கள் ஏழைகளாக இருப்பதால்  மா சே துங்கின் கொள்கைக்கு ஆதரவளிக்கின்றனர்.இவர் வகுத்த கொள்கையால் சீனாவில் அனைத்து தரப்பு மக்களிடமும் சமத்துவம் நிலவுகிறது. இதுவே மக்கள் அமைதி வாழ்க்கைக்கு காரணம் . ஆனால் நல்வாய்ப்புக்கேடாக பிற நாட்டு  பகுதி மக்கள் முதலாளித்துவ நாடுகளின் பிடியில் உள்ளதால் இன்றளவும் 70% மக்கள் வறுமையில் வாடுகின்றனர்  

பொதுவுடமை கொள்கையை ஏற்றுக்கொண்ட மக்கள் அரசுகளான ரஷ்யா மற்றும் சீனா  போன்ற வல்லரசுகள்,உலகின் பிற பகுதி மக்களுக்கு வழிகாட்டிகளாக உள்ளன. இங்கேயும் மக்கள் அமைதி வாழ்க்கை கெடுவதற்கு வழிகோலும் வலைதள விமர்சனங்களை தடை செய்யப்படுகின்றன.

ஆனால் இந்தியா உள்ளது போன்ற மிகப்பெரிய பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை சரிசெய்ய கூறப்படும் வலைதள விமர்சனங்களை தடைசெய்ய வேண்டும் என்பது எப்படி நியாயமாகும் ? இதுதான் நமது அரசியல் வாதிகளின் திருமுகங்களின் மறுமுகங்கள்.


No comments: