Monday, April 23, 2012

32-நித்தியானந்தாவின் மறுமுகம்


                           32-   நித்யானந்தாவின் மறுமுகம்  

மனித குலம் தோன்றிய நாள்முதல் மனிதர்களை மனிதர்களே ஏமாற்றி பிழைக்கும் பிழைப்பு தோன்றி விட்டது. மனித நேயம்,மனித பண்பாடு ,மனித கலாச்சாரம் இவையெல்லாம் இன்றய கால கட்டத்தில் பேசப்படும் பேச்சு. இருப்பினும் இன்றும் மனிதரையே மனிதர் ஏமாற்றிப்பிழைக்கும் மனித(மிருக) குணம் இன்றளவும் உலகில் உலா வருகின்றது. இதற்கு எல்லாம் காரணம் ஆன்மீக சிந்தைதானே? அதாவது கடவுள் சிந்தனைதானே?

இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பித்துக்கொண்டு உயிர் மேல் ஆசை வைப்பது. ஆண் பெண் உறவு முறைகளுக்கு பிறப்பினை தொடர்புபடுத்தி தெய்வ சங்கல்ப்பம் என சமய சடங்குகளுக்கு மக்களை ஈடுபடுத்துவது. இதற்கு புரியாத மொழிகளை மந்திரங்களாக பயன்படுத்தி பாமர மக்களிடம் பணம் பறிப்பது. இதுபோன்ற செயல்களை  உலகில் பெரும்பாலான நாடுகளில் அரசாங்கமே செய்கிறது என்பதுதான் வேதனை.    

மெய்ப்பொருளை காண அறிவு வேண்டும் .அதாவது சுய சிந்தனை வேண்டும். மனிதர்களுக்கு சிந்தனை என்பது பிறர் அறிவுரை கேட்டு வருவது. அல்லது சுய சிந்தனை என்பது எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

முறையாக அரசாங்கத்துக்கு வரவு செலவு கணக்கை காட்டாமல்- இதற்கு ஆன்மீக சிந்தனையுடைய அதிகாரிகளே உடந்தை-கோடிக்கணக்கில் பணம் சேர்ந்துவிடுகிறது . சமீபத்தில் நித்யானந்தா எனும் பொய் மனிதர்(சாமியார்?),அவரே தனக்கு ரூ. 100 கோடிக்கு சொத்து இருப்பதாக தெரிவிக்கின்றார்.

கோடிக்கணக்கில் பணம் சேர்த்தவர்களுக்கு குடும்பத்தில் நிம்மதி இருப்பதில்லை.இது போன்ற மனிதர்கள் கணக்கில் வரா சொத்துக்களை கோயிலுக்கு எழுதிவைத்துவிடுவார்கள் அல்லது கல்வி நிறுவனங்களுக்கு எழுதிவைத்து விடுவார்கள்.இன்னும் சிலர் தன்னிடமுள்ள அதிகப்படியான சொத்துக்களை சாமியார் மடங்களுக்கு எழுதிவைத்துவிட்டு அந்த மடத்தின் ஆட்சி மன்ற குழுவில் முக்கிய பொறுப்பில் இடம் பெற்றுவிடுவார்கள்.

இது போன்றவர்கள் ஏற்கனவே மடத்தில் நடந்து கொண்டிருக்கும் இலைமறைவு காயாக சில ஒழுக்க கேடான செயல்களை பார்த்து அதிர்ச்சி அடைந்து அதனை தலைமைப் பொறுப்பில் இருக்கும் சாமியாரின் கவனத்திற்கு கொண்டு செல்வர். சாமியார் அதனை கண்டுக்கவே மாட்டார். கடந்த காலத்தில் இந்தியாவின் பெரும்பாலான சாமியார் மடங்களில் இதுபோன்றதொரு சம்பவங்கள் நடந்துள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் தற்போது நடந்து கொண்டிருக்கும் காஞ்சி சங்கர மட கொலை வழக்கு.

சாமியார் எனில் துறவிதானே? துறவிக்கு ஏன் கோடிக்கணக்கில் சொத்து? கோயிலுக்கு ஏன் சொத்து? கோயிலில் ஏன் உண்டியல் வைக்க வேண்டும் ? கோயிலில் அர்ச்கர் ஏன் தட்டு ஏந்த வேண்டும்?. உண்மையில் மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசாங்கமானால் இதை எல்லாம் தடை செய்ய வேண்டும் அல்லவா?

ஆட்சியாளர்கள் இறை நம்பிக்கை அதாவது ஆன்மீக சிந்தனை உடையவர்களானால், இதுபோன்றதொரு அவலங்கள் உலகில் எல்லா நாடுகளிலும் நடக்கும். போலீஸ், சிறைச்சாலை இவையெல்லாம்  சாதாரண மக்களுக்குத்தான் பயன் படுகிறது.ஆன்மீக வாதிகளைப் பார்த்து போலீஸ் பயப்படுகிறது .

இறை நம்பிக்கை ,கடவுள் சிந்தனை, அருவ வழிபாடு இவையனைத்தும் குழந்தைகளை வழிநடத்த மட்டுமே பயன் பட அல்லது பயன் படுத்தப்படவேண்டும் . இறைவழிபாட்டில் பெரியவர்களும் குழந்தைகள் போல் நடந்துகொள்ள கூடாது.

இதற்கு ஆட்சியாளர்கள் மாணவர்களின் ஆரம்ப பள்ளிக் கல்வியை அதற்கு ஏற்றாற்போல் பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும். உழைப்பாளிகளின் பணம் அவர்கள் எதிர்கால அதாவது வயோதிக காலத்திற்கு பயன்பட வேண்டும். இளமையில் சேர்த்த அதிகப்படியான  பணத்தை அரசாங்கத்துக்கு வரிமூலம் செலுத்த சட்டத்தை மாற்ற வேண்டும் மாறாக அதிகமான பணத்தை கோயில் உண்டியலிலோ அல்லது ஆசிரமம் மற்றும் சாமியார் மடத்திற்கு எழுதி வைப்பதையோ  தடை செய்யப்பட வேண்டும்.அப்படி செய்திருந்தால் நித்தியானந்தா போல் கோடியில் புரளும் தலைகனம் பிடித்த போலி சாமியார் உருவாகியிருக்க மாட்டார் .

தனக்குள்ள பணத்தை தாராளமாக செலவிட்டு அமெரிக்க நிறுவனம் மூலம் உண்மை சம்பவத்தை பொய் என நிரூபிக்க படாத பாடு படுகின்றார். நமது நாட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஒருவர் குற்றவாளியா? அல்லது நிரபராதியா ? என நிரூபிக்க வேண்டும் .அதைவிடுத்து ஒரு குற்ற வாளி ஒரு ரவுடியை(போக்கிலி) கொண்டு தான் நிரபராதி என பாமர மக்களை  நம்ப வைப்பது போல் உள்ளது. இவருக்கு யார் கொடுத்த யோசனை என்று தெரியவில்லை.பிற நாட்டு சாட்சியங்களை கூட நம்நாட்டு நீதி மன்றம் ஏற்றுக்கொள்ளுமா ? என்ன?

நித்தியானந்தா போன்ற போலி மனிதர்களின் திருமுகங்களின் மறு முகங்களை மக்கள் காண ஆட்சியாளர்கள் ஆவன செய்ய வேண்டும் . செய்யுமா இந்த அரசு?




No comments: