14- ராச பக்சேவின் மறுமுகம்
உயிரினங்களுக்கு ( நீர் ,நில வாழ்வன) ஒவ்வொன்றிற்கும்
ஒரு குறிப்பிட்ட வாழ்நாட்கள் உண்டு. அதிக நாட்கள் உயிர்வாழும் சக்தி சில தாவர
இனங்களுக்கு மட்டுமே உண்டு.அமேசான் காடுகளில் உள்ள சில மர வகைகள் 1000 அல்லது 2000
ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்களும் அவைகளெல்லாம் 1000 அடிகள் உயரத்துக்குமேல்
வளரக்கூடியவைளாக இருக்கின்றன..இந்த வயது கணக்கீடெல்லாம் கார்பன் டேட்டிங் (c14- activated carbon) மூலம் கண்டறியப்படுகிறது.
இந்த மரங்களெல்லாம் இயற்கை பேரழிவு
காரணிகளான புயல்,மழை,வெள்ளம்,இடி மின்னல் மற்றும் பூகம்பம்,சுநாமி போன்ற
சீற்றங்களையும் தாங்கி நிற்கின்றன.இந்த மரங்களெல்லாம் எந்த இறைவனிடமும் என்னை
காப்பாற்றுங்கள் என இறைஞ்சுவது இல்லை.அதேபோல் கடல் வாழ் உயிரினங்களான நீல
திமிங்கலம் (blue whale) சில கடல் ஆமைகள் 200 ஆண்டுகளுக்குமேல் உயிர் வாழ்கின்றன.
தாவரங்களை உண்டு விலங்கினங்கள்
வாழ்கின்றன.விலங்கினங்களை உண்டு மனிதன் மட்டும் நீண்ட நாட்கள் உயிர் வாழ கடவுளிடம்
வேண்டுகிறான், கெஞ்சுகிறான் .அவர் எதையும் காதில் வாங்குவது இல்லை ஒரு விபத்தில்
காப்பாற்றி அதில் உயிர் பிழைத்து கடவுள் அவனை காப்பாற்றினார் என சொல்லி முடித்த
உடன் அடுத்த விபத்தில் அவனை சாகடித்துவிடுகின்றார். இதை மனிதன் உணர்ந்து அறவழியில்
வாழ்க்கை நடத்த அவன் மனம் விரும்புவது இல்லை.
மிகக் குறைந்த வயதுடைய தாவர(15 நாட்கள்
முதல் 6 மாதம் வரையிலான தாவரங்கள்-சில கீரை வகைகள்,நெல்,கோதுமை,கேழ்வரகு,கம்பு,ஓட்சு
சோளம் மற்றும் பார்லி) வகைகளை உண்டு சில மிருகங்கள்(ஆடு,மாடு)20 அல்லது 30
ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன.யானைகள் 50 ஆண்டுகள் கூட வாழ்கின்றன.
இதேபோன்று உலகில்
தாவரங்களையும்,மிருகங்களையும் உண்டு வாழும்
மனிதனின் அதிகபட்ச சராசரி வயது70 முதல்
80 ஆண்டுகள் தான்.100 ஆண்டுகள் கடந்த வயதுடைய மனிதர்கள் ஜப்பான் அல்லது கொரிய நாடுகளில் சுமார்2000 க்கும்
அதிகமானோர் வாழ்கின்றனர்.மற்ற நாடுகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு 100
வயதை கடந்தவர்கள் வாழ்கின்றனர்.700 கோடி மக்கள் வாழும் உலகில் இது சொற்ப அளவே.
உலகில் பெரும்பாலான மனிதர்கள்
வாலிபத்தின் துவக்க வயதான இரண்டு எட்டு முடிந்த உடன் அதாவது 16 வயதில் துவங்கி
பின்னிரண்டு எட்டில் உச்சத்தை அடைந்து( அதாவது 32 வயதில்) அடுத்த பின்னிரண்டு
எட்டில் அதாவது 48 வயதில் வாழ்ந்தது போதும் என முடித்துக்கொள்கின்றனர்.
பெண்களுக்கும் இந்த
வயதிலிருந்துதான் வாழ்க்கையில் சலிப்பு
தட்டுகிறது.
இதற்கு காரணம் மக்கள் அறிவியல் பூர்வமான
உணவு வகைகளை தெரிவு செய்து உண்ணாததுதான் காரணம்.
அதிக நாட்கள் வாழ்வது ஒரு சாதனை தான்
ஆனால் அறிவு பூர்வமாக வாழ்வது அதை விட சாதனை.
இந்த இரண்டுக்குமே காரணம் நாம் தெரிவு
செய்யும் உணவு வகைகள்.
மேலை நாட்டு யூதர்(jews)களின் உணவு
இதுதான்.
கோதுமை
பார்லி
சோயா
ஆலிவ்
மாட்டிறைச்சி
வெங்காயம்
தக்காளி
மேலே குறிப்பிடப்பட்ட உணவு வகைகளை
தினமும் உண்டு வாழ்ந்தவர்கள் –வாழ்பவர்கள்
மத்தியில் அறிவியல் வல்லுநர்கள் தோன்றுகிற்றனர்,என்பது உலகம் கண்ட
உண்மையாகும்.இப்படிப்பட்ட மனித இனத்தில்தான்
அறிவியலாளர்கள் அதிகம் தோன்றுகின்றனர்.
எந்த நாட்டின் ஆட்சியாளர்கள் தம்
மக்களின் ஆரோக்ய வாழ்விலும் அறிவியல் சிந்தனை ஊட்டும் படிப்பினை வழங்குதிலும்
முன்னின்று விளங்குகிறதோ அந்த நாட்டின்
மக்கள் மகிழ்ச்சியானவர்கள்
மற்றவர்களெல்லாம் அவர்கள் கண்டுபிடிப்பை
அதாவது அறிவியல் வளர்ச்சியை அனுபவிக்கும் மக்களாகவே நாம் இருக்கின்றோம்.
கடவுளை நம்பும் அல்லது வழிபடும் மக்கள்
அதாவது மனிதர்கள் உணவு உண்பது வெறும் மூன்று வேளைதான்.
ஆனால் கடவுளை ஒரு நாளைக்கு முப்பொழுதும்
மட்டுமல்ல எப்பொழுதும் நினைக்க வேண்டும்
அல்லது ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்து
ஒலிபெருக்கி வைத்து அல்லாவை தொழுவதும்,
இசைக்கருவிகளை வைத்து கர்த்தரை
விசுவாசிப்பதும்,அல்லது
பஜனை பாடி கடவுளை வணங்குவதும்,மக்களை சுய
சிந்தனையற்ற ஜீவகாருண்யமற்ற,காட்டுமிராண்டித்தனமான ஒரு மன நோயாளிகளாக
மாற்றியமதவாதிகள் இன்று உலகம் முழுக்க உள்ளனர்.
கடவுளை கண்டு விட்டதாக மக்களிடையே
பிரச்சாரம் செய்த ராமகிருட்ன பரமஅம்சர் தன்னுடைய 50 வயதில் புற்று நோய்வந்து ஏன்
மரண மடையவேண்டும் புற்று நோய் போன்ற கொடியவியாதி தன்னுடைய எதிரிக்கு கூட
வரக்கூடாது என இறைவனை பிரார்த்தனை செய்பவர்களை இன்றளவும் நாம் கண்கூடாக
பார்கின்றோம்.
அப்படி இருக்கும்போது இவர் என்ன பாவம்
செய்தார் ;இவருக்கு தீரா வியாதி ஏன் வரவேண்டும் ,அதுவும் கடவுளை கண்டவருக்கு?
இதற்கு ஆன்மீக வாதிகள் அதாவது கடவுளின்
இடைத்தரகர்கள் ஏன் இதுவரை இதற்கு பதிலளிக்கவில்லை?
இவர் திருமணமானவர் ஆனால் துறவறம்
மேற்கொண்டார்; இவர் மண்ணுலகில் என்ன சுகம் கண்டார் அல்லது இறந்த பின் இவர் என்ன
ஆனார் என்று இதுநாள்வரை யாருக்கும் தெரியவில்லை
இவர் இறந்து சுமார் 150 ஆண்டுகளுக்கு
மேல் ஆகிவிட்டது.
இவருடைய பிரச்சாரத்தில் நம்பிக்கை வைத்து இவர் சொன்னது போல விரதம் இருந்து கடவுளை காணவேண்டும் என தவம் மேற் கொண்டார் சுவாமி என அழைக்கப்படும் விவேகானந்தர் .இவர் கடவுளை கண்டாரா அல்லது கடவுளிடம்
இவர் என்ன வேண்டினார் அது அவருக்கு தான் வெளிச்சம். தன்னுடைய 37 வது வயதில் தீரா
வியாதி வந்து சொல்லொணாத் துயரத்தில் இறந்தார்.
இவருடைய பிரச்சாரத்தில் நம்பிக்கை வைத்து இவர் சொன்னது போல விரதம் இருந்து கடவுளை காணவேண்டும் என தவம் மேற் கொண்டார் சுவாமி என அழைக்கப்படும் விவேகானந்தர்
எல்லா உயிரினங்களுக்கும் உயிர் மேல் ஆசை
உண்டு. இந்த ஆசை மனிதனுக்கு நிறையவே உண்டு . ராமகிருட்ன பரம அம்சரும்,
விவேகானந்தரும் இறைவனடி சேர இறக்க வேண்டினால் ‘நோயற்ற,வலியற்ற மரணத்தை கொடு’ என கடவுளிடம்
வேண்டிக்கொள்ள வேண்டியதுதானே?
இந்த இரண்டு துறவிகளின் மரணத்தின் மூலம்
மக்களுக்கு என்ன உண்மை புரிந்தது?
கடவுளை காணத்துடித்தவர்கள் கதி இதுவாக
இருக்கும் போது ஏன் மீண்டும் மீண்டும் கடவுளை தொழு, கடவுளை தொழு என பாமரனுக்கு ஏன்
போதிக்கப்படவேண்டும்?
அவன் உழைத்து சிறுக சிறுக சேர்த்த பணத்தை
கொள்ளை அடிக்கத்தானே?
கடவுளை காணத்துடித்த துறவிகள் யாரும் 100
ஆண்டுகள் வாழ்ந்த வரலாறு இதுவரை இல்லை . இதுதான் உண்மை.
துறவிகளின் பிரச்சினைகள் வேறு. குடும்பம்
நடத்தும் தம்பதியர்களின் பிரச்சினைகள்
வேறு . பிரம்மச்சாரி துறவறம் மேற்கொண்டால், அப்படிப்பட்ட அவருக்கு குடும்பஸ்த்தனை வழி நடத்தும்
பக்குவம் எப்படி கிடைக்கும்?
ஒரு பிரம்மச்சாரிய துறவி தம்பதியரின்
இடையே நடக்கும் பூசல்களை எப்படி தீர்ப்பார்?
குடும்பஸ்த்தன்,கிரகஸ்தன், சம்சாரி
எல்லாமே ஒன்றுதான்.
இவர்களெல்லாம் சந்தோஷங்களை
தொலைத்துவிட்டு சாமியாரை தேடிவந்தால் மீண்டும் அவர்கள் வாழ்வில் வசந்தம்
வீசுமா?அப்படி யாராவது இருந்தார்களா?
இருக்கிறார்களா? அல்லது இருப்பார்களா?
இந்தியாவின் பிரபலமான பிரம்மச்சாரிய
துறவிகளின் அரசியல்வாதிகள் மற்றும் பெரும்
பணக்காரர்களின் அந்தரங்க வாழ்க்கையில் எப்படி விளையாடினார்கள் என்பதை நாம் நிறைய
படித்திருக்கின்றோம்.
குறிப்பாக தீரேந்திர பிரம்மச்சாரி,சந்திரா
சாமி,பிரம்மானந்த சாமி,நித்தியானந்த சாமி
போன்றோர்.
இது மட்டுமன்றி
குடும்பம் நடத்திக்கொண்டு சாமியார்களாக
வாழ்பவர்கள் பங்காரு அடிகளார்,மற்றும் கல்கி பகவான் போன்றோர் .
கிறித்துவ மதத்தில் ஆரம்ப கால மத
போதகர்கள் (Roman catholic) பிரம்மச்சாரியம் கடைபிடிக்க வேண்டும் என்ற நிபந்தனை
விதிக்கப்பட்டது. இதில் ஒழுக்க கேடுகள் காணப்பட்டது. பின்னாளில் இதனை உணர்ந்த
புரடசிகர முன்னணி,புரட்டஸ்டன்ட் எனும் பிரிவை உண்டாக்கினர். இதில் தாம்பத்தியம்
நடத்திக்கொண்டே மக்களுக்கு வழிகாட்டலாம் என்று மத வழி பாட்டில் புரட்சி
ஏற்படுத்தினர்.
மொத்தத்தில்
சாமியார் என்றாலே போலி மனிதர்கள் தான்.
இப்படி
போலிச்சாமியார்களை உருவாக்கி இல்லாத கடவுளுக்கு (அப்படித்தான் இருக்கட்டுமே கடவுளை
வழிபடவில்லை என்றால் நம்மை சாகடித்து விடுவாரா?) இவர்களை முகவர்களாக்கி
குடும்பஸ்த்தனையும் அவன் உழைத்து சேர்த்த பணத்தை கொள்ளையடிக்கும் ஒரு நூதன
முறைதான் இறைவழிபாடு அல்லது சாமியார் வழிபாடு அல்லது இறைதூதரை போற்றும் அல்லது
வழிபடும் இயக்கமாகவே உலகம் முழுக்க இயங்கி வருகிறது.
‘நல்லமாட்டுக்கு ஒரு அடி நல்ல மனுஷனுக்கு
ஒரு சொல்’ இதையெல்லாம் மனிதருக்கு போதிக்கும் மகான்கள் கடவுளை மட்டும் எப்பொழுதும்
நினைக்க வேண்டும் அதுவும் உணவு பல காரங்கள் மற்றும் பூக்களை வைத்து பூஜிக்க வேண்டும் என பாமரனுக்கு உணர்த்த
பாடுபடுவதேன்.?
இது ஏன் ? கடவுளுக்கு சூடு சுரணை
கிடையாதா?ஒருமுறை பூஜித்தால் அல்லது வேண்டினால் கடவுளுக்கு புரியாதா?
ஆனால் மனிதனுக்கு மட்டும் ஒரு முறைதான்
அறிவுரை சொல்லவேண்டுமாம் அதை வாழ்நாள் முழுவதும் மனிதன் கடைபிடிக்க வேண்டுமாம் அது
என்ன கடவுளுக்கு ஒரு நியதி? மனிதனுக்கு ஒரு நியதி?
எப்பொழுதும் கடவுளை பூஜிக்கும் ஏழை,
ஏழையாகவே தான் பிறக்கின்றான் ஏழையாகவே தான்
சாகிறான் இது ஏன்?இப்படி ஏன் என்று யாரும் யோசித்த தாக தெரியவில்லை? ஏன்?
குடும்பம்
நடத்தி அனுபவ உண்மைகளை உலகுக்கு எடுத்துக்காட்டிய-வழி நடத்திய ஒரே மகாத்மா கவுதம
புத்தர்.
அதற்காக அவரை வழிபட நான் சொல்லவில்லை.
அவரது போதித்த ஒழுக்கநெறிமுறைகள் மனித குலத்திற்கு வழிகாட்டும்.
ஆனால் புத்தரை வழிபடுவதாக சொல்லிக்கொண்டு
புத்தமதக் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு, தமிழினத்தையே அழித்துக்கொண்டிருக்கும்
ஈவு இரக்கமற்ற கொடிய மிருகம் போல் செயல்படும் இலங்கை அதிப(ர்)ன் ராஜபக்சே.இவன்
திருமுகத்தின் மறுமுகத்தை உலகம் காணட்டும்.
No comments:
Post a Comment