12.அரசியல் வாதி மற்றும் அதிகாரிகளின்
மறுமுகங்கள்
இன்றய
செய்தி தாளில் (15.10.2011) திரு எடியூரப்பா,முன்னாள் கர்நாடக முதலமைச்சர்
பெங்களூர் நீதி மன்றத்தில் சரண்டைந்தார் என காணப்படுகிறது. ஒரு மாநிலத்தின்
முதலமைச்சராக அதாவது மாநிலத்தின் மன்னராக திகழ்ந்தவர் இப்பொழுது சிறையில். இதுதான்
மக்களாட்சி தத்துவம். இதுபோன்று இந்தியாவின் பல மாநிலங்களில் கடந்த காலங்களில்
நிகழ்ந்துள்ளது.குறிப்பாக தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் திரு கருணாநிதியும்
,திருமதி செயலலிதாவும் அரசியல் பழிவாங்குதலால் மாறி மாறி சிறைக்கு
சென்றுள்ளனர்.இருவருக்கும் ஊழலும் ஒரு காரணம்.
இந்தியாவில்
இதற்கு முன் மகராஷ்ட்ர முன்னாள் முதல்வர் திரு அன்ட்டுலே, ஊழலில் மாட்டி பதவி
இழந்தார்.
ஆனால்
அதிகாரத்தில் இருந்து கொண்டு ஊழலில் மாட்டி இன்றுவரை பாதிப்பு இல்லாமல் காலத்தை
கழித்தவர்கள் ஒன்று முன்னாள் இந்திய பிரதமர் திருமதி இந்திரா காந்தி (நகர்வாலா பண
பரிமாற்றம் ).திருமதி இந்திரா காந்தியும் சிறைபடுத்தப்பட்டார் எதற்கு தெரியுமா?
எமர்ஜென்சி காலத்தில் பாதிப்படைந்த ஜனதா அரசாங்கத்தால் அரசியல் பழிவாங்ப்பட்டார்.
அடுத்து திரு ராசீவ் காந்தி, முன்னாள் இந்திய பிரதமர், போபரஸ் ராணுவ தளவாட பேர
ஊழலில் மாட்டி,எந்த பாதிப்பும் இன்றி தப்பினார்.ஆனால் வேறொரு காரணத்திற்காக
படுகொலை செய்யப்பட்டார்.
தற்போது
சுரேஷ் கல்மாடி,முன்னாள் விளையாட்டுத்துறை மத்தய அமைச்சர்,சிறையில் உள்ளார்.
அடுத்து தற்போது சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் திரு ராஜா,
நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி.
தற்போது
தமிழகத்தில் முன்னாள் அமைச்சர்கள் திரு நேரு,திரு பொன்முடி திரு கே.பி.பி சாமி
,திரு எம் ஆர் கே பன்னிர் செல்வம், திரு அன்பரசன் போன்ற பல முன்னாள் அமைச்சர்கள்
வருவாய்க்கும் அதிக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவாகி நீதி மன்றத்தின் நடவடிக்கைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில் ஒரு
வேடிக்கை என்னவெனில் திரு எடியூரப்பாவும் அவரோடு சிக்கியுள்ள இன்னொரு கர்நாடக
மாநில முன்னாள் அமைச்சர் திரு கிருஷ்னய்ய செட்டியும் நீதி மன்ற அழைப்பானை வந்தவுடன் பெங்களூரில்
உள்ள அனைத்து கோயில்களுக்கும் சென்று வழிபட்டனர்.உடல் வருத்தி மனம் உருகி ,கண்ணில்
நீர் மல்கி வேண்டிக்கொண்டனர். எதற்க்கு தெரியுமா?
இவர்கள்
சிறைக்கு செல்லாமல் இருக்க கடவுள் துணை புரிய வேண்டுமாம்.
கடவுள்
எதற்கு தான் துணை இருப்பார் ?யாருக்கு தான் துணை இருப்பார்?
வறுமை
கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கா ?
அல்லது
அதற்கு மேலே உள்ள வசதி படைத்த மக்களுக்கா?
அல்லது ஏமாற்று பேர் வழிகளுக்கா?
அல்லது
திருடர்களுக்கா?
அல்லது
உழைக்காமல் அடுத்தவர் உழைப்பை சுரண்டிவாழும் அய்யோக்கியர்களுக்கா?
அல்லது
உலகத்தின் முன்னணி பணக்காரர்களுக்கா?
அல்லது
உலகத்தின் பல நாட்டு தலைவர்களுக்கா?
அரசியலுக்கு
வருபவர்கள் மக்கள் சேவையே தலையாய குறிக்கோள் என ஊர் மக்களை நம்பவைத்து பின் படிப்படியாக
சட்ட மன்ற உறுப்பினர் ஆவது பின் அமைச்சரவையில் இடம் பெறுவது ,அமைச்சரானவுடன்
வியாபாரி மற்றும் தொழிலதிபர்களுடன் பழகும் வாய்ப்பைப் பெருகின்றனர். அரசு
அதிகாரத்தை தவறாக பயன் படுத்தி ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் துணையுடன்
வருவாய்க்கு அதிகமான சொத்தை மனைவிபெயரிலும் மகன் மற்றும் மகள் பெயரிலும் எழுதி
வைத்து சட்டப் பாதுகாப்புடன் தப்பிக்கின்றனர். பொது
மக்களை திருப்தி படுத்த ஊழல் புரிந்த அமைச்சர் என வழக்கு பதிவு செய்வது. இந்த
வழக்கு பல ஆண்டுகள் நடக்கும்.அதற்குள் மக்கள் அந்த ஊழலையே மறந்து விடுவார்கள்.
அதற்குள்
புதிய அமைச்சர் உருவாகி அவரும் மிக நுட்பமாக லஞ்சம் வாங்குவார்.கண்டு பிடிக்கவே
முடியத படி, முந்தய ஊழல் அமைச்சர் இவருக்கு வழிகாட்டுவார்.
இது ஒரு
புரம் நடக்க, அமைச்சருக்கு உதவிபுரிய ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள்
அமர்த்தப்படுகின்றனர். அரசியல் வாதிகள் அமைச்சர்களாக 5 ஆண்டுகள் பதவியிலிருப்பர்.
ஆனால் அவர்களை 30 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்வது இந்த அதிகாரிகள் தான்.
இந்த
அதிகாரிகளை தேர்வு செய்யும் நடைமுறை உள்ளதே, அது மிகஉயர்ந்த படிப்பாளிகளையும்
மிகச்சிறந்த அறிவாளிகளையும் நேர்மையான
அதிகாரிகளாக பணியில் அமர்த்தப்பட வழிகாட்டுகிறது.
சென்ற
ஆண்டு அகில இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் ஊழலில் மாட்டினார். லஞ்ச ஒழிப்புத்
துறையினர் கோடிக்கணக்கில் பணமும் டன் கணக்கில் தங்கமும் வைரமும் கைப்பற்றியதாக
செய்திகள் வெளியாயின.
இதுவெல்லாம்
எப்படி? மருத்துவர்களுக்கும் மருத்துவ கல்லூரி ஆரம்பிக்கவும் அனுமதி வழங்கியதில்
பெறப்பட்ட லஞ்சப்பணம்தானே?
இது
எத்தனையோ ஆண்டுகள் இந்த ஊழல் நடக்கிறது. ‘பல நாள் திருட்டுத்தனம் ஒருநாளைக்கு
மாட்டும்’ எனும் அறவழி சொல்லாக்கம் பலித்தது போலாகிவிட்டது.
பணியிலமர்ந்த பின் சில ஆண்டுகளில் நேர்மை தவறி
விடுகின்றனர்.
இதற்கு என்ன காரணம் ?
1- படிக்கும் போதே உயர் பதவி பெற உயர் படிப்பு படிக்க வேண்டும்
எனும் எண்ணத்தில் படிப்பது.
2- பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் குடும்ப பிள்ளைகள் தான் இந்த
உயர் பதவியை பெற முடியும்
3- பொதுவாக ஏழை மாணவர் மனதில் நேர்மை இருக்கும். அப்படி தப்பி
தவறி கடும் உழைப்பில் உயர் பதவி பெற்றாலும் ,சில ஆண்டுகள் தான் அப்பதவியில்
நேர்மையாக செயல்பட முடியும்.
4-
‘லஞ்சம் வாங்க மாட்டேன்’ என அடம்பிடித்து சில காலம் பணி
செய்யலாம்.
5-
அவனுக்கு பிழைக்கத்தெரியாதவன் ,பைத்தியக்காரன் போன்ற பட்டங்கள்
தான் மிஞ்சும்
6- அதையும் சகித்துக்கொண்டு பணிசெய்யலாம் ஆட்சி மாறும்
அமைச்சருக்கு ஒத்துவராதவர்களை பணியிடம் செய்யப்படுவர்.
7-
அடிக்கடி பணியிடம் மாறுதல் பெற்றால் குடும்ப பராமரிப்பு
பாதிப்படையும். மனைவியின் நச்சரிப்பு அதிகமாக இருக்கும்
8-
‘நாலுபேர போல நீங்களும் போங்க அப்பத்தான் நமக்கும் நம்
பிள்ளைகளுக்கும் நல்லது .பிள்ளைகளையும் ஒரே இடத்தில் படிக்க வைக்க முடியும்’
மனைவியின் அறிவுறைகள் தினமும் நடக்கும்.
9-
ஒரு 10 வருடங்கள் தான் அதிக பட்சம் நேர்மையாக செயல்படமுடியும்.
அதற்கு மேல் ‘பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று’ என ஆகிவிடவேண்டியதுதான்
அப்படி
ஆனவர்கள் தான் நேற்று (16.10.2011)லஞ்ச ஒழிப்புத் துறை யினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு பொது தேர்வு பணி
ஆணையம் (T.N.P.S.C) உயர்மட்ட அதிகாரிகள்.14 பேர்
கொண்ட உயர் மட்ட அதிகாரிகள் வீடுகளில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய்களும்.
உயர்வகை
மது புட்டிகளும் மற்றும் பணி நியமன ஆணைகளும் பறிமுதல் செய்யப்பட்டன–இவையெல்லாம் பத்திரிக்கை செய்திகள்.
தேர்வாணயம், இதுபோன்ற உயர் அதிகாரிகளை பணி நியமனம் செய்தால்,அப்படி பணிக்கு வந்த அந்த அதிகாரி பணிக்கு வந்த அன்றைக்கே, ‘நான்
கையெழுத்து போட்டால் எவ்வளவு கிடைக்கும்’
என சக ஊழியரையோ அல்லது ஏற்கனவே லஞ்சம் வாங்கி பழக்கப்பட்ட கடை நிலை
ஊழியரையோ கேட்பான்.
ஒட்டுமொத்த
சமுதாயமே லஞ்சத்துக்கு பழக்கப்பட்டு விட்டது. இதை எப்படி ஒழிப்பதாம்?
ஒழிக்கலாம்
,முதலில் வீட்டிலிருந்தே அந்த பழக்கம் வரவேண்டும்.
1-பள்ளிசெல்லும்
குழந்தைகளுக்கு கைச்செலவுக்கு (pocket money) பணம் தருவதை பெற்றோர்கள் நிறுத்த
வேண்டும்.குழந்தைகளின் தேவைகளை பெற்றோரே அறிந்து செயல்பட வேண்டும்
2-வீட்டில்
குழந்தைகள் முன்னிலையில் கடவுளுக்கு உணவுப் பலகாரங்களை படையல் போட்டு கடவுளிடம்
வரம் கேட்கும் பழக்கத்தை நிறுத்தவேண்டும்.
3-குழந்தைகள் முன்னிலையில் கோயிலுக்கு சென்று உண்டியலில் பணம் போடுவதை நிறுத்த
வேண்டும்.
4-வீட்டுக்கு வரும் விருந்தினர் குழந்தைகளுக்கு பணம் தருவதோ அல்லது கொடுப்பதோ
கூடாது.
5-குழந்தைகள்
தினமும் பள்ளிக்கூடம் சென்று வீடு வந்து சேரும்போது அதன் உடமைகளை சோதனை செய்யற
பேனா,பெனசில் போன்ற பொருள் உடன் அதிகப்படியான பொருட்கள் இருக்கின்றதா? அப்படி
இருந்தால் அப்படியெல்லாம் அடுத்தவர் பொருளை கொண்டுவரக்கூடாது,என அமைதியாக
குழந்தைகளிடம் சொல்ல வேண்டும். எந்த வித காரணத்துக்காகவும் குழந்தைகளை கடிந்து
கொள்ளக்கூடாது.
6-குழந்தைகளை வேலை வாங்கும் போது எளிதில் உடன் பட மாட்டார்கள்,அதற்காக சாக்லேட்
தருகிறேன், காசு தருகிறேன் என அவர்களை பணியவைக்க ஆசை காட்டக்கூடாது. அன்பா பேசி
வேலை வாங்க வேண்டும், இல்லையேல் நாமே அந்த வேலையை அவர்கள் முன்னிலையில், செய்ய
வேண்டும். பின்னாளில் எல்லாம்
சரியாகிவிடும்
7- தன்
நாட்டு மக்களுக்கு லஞ்சம் இல்லா விழிப்புணர்வை ஆட்சியாளர்கள், ஒரு இயக்கமாகவே இதை
நடத்த வேண்டும் .
8-அனைவரும்
உழைத்து வாழவேண்டும் எனும் தத்துவத்தை
குழந்தைகள் மனதில் பதியவைக்கவேண்டும்.
9-
ஒவ்வொரு அரசு அதிகாரிகளும், ஒவ்வொரு சட்ட மன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்களையும்,மாநில
மற்றும் நடுவணரசு அமைச்சர்களையும் வருவாய்க்கு ஏற்றாற் போல் சொத்து உள்ளதா என
வலிமைமிக்க அமைப்பின் மூலம் அவரவர்க்குடும்ப உறுப்பினர் சொத்துக்களையும்
சோதனைக்கு(scanning)உட்படுத்த வேண்டும். அளவுக்கு
அதிகமான சொத்தை பறிமுதல் செய்ய சட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படவேண்டும்.
அப்பொழுதுதான் லஞ்சமே இல்லாத உலகத்தை படைக்க முடியும்.
இதையெல்லாம்
மீறி விதி விலக்காக சில வேறுபாடான மனிதர்கள் உருவாகலாம். இதுதான் விதி
என்கின்றனர்,அனுபவ சாலிகள். உண்மைதான், விதி ஒன்று இருப்பதாகவே இருக்கட்டும், பின்
எதற்கு கடவுள் வழிபாடாம்? கடவுள் சர்வ வல்லமை படைத்தவர்தானே? அல்லது விதியா? எது
வலிமையானது?
முதலில்
மனிதர்களாகிய நாம் தெளிவாகட்டும்.
மனிதர்களுக்கு
தன்மானம், சுய மரியாதை,சுய சிந்தனை எல்லாமே இருக்கட்டும்.அதெல்லாம் ஏழைகளுக்காக.
ஏழைகளுக்காக
உழைக்கப்போகிறேன்,அரசாங்கத்தில் அரசுக்கு சேவை செய்கிறேன் என அறை கூவல்
விடும் நம் மனிதர்களின் திருமுகங்களின்
மறுமுகங்களை காண்க!
No comments:
Post a Comment