Sunday, April 22, 2012

13-பத்திரிக்கை முதலாளிகளின் மறுமுகங்கள்


                    13-   பத்திரிக்கை முதலாளிகளின் மறுமுகங்கள்
ஒரு அரசின் நடவடிக்கைகள், அதன் செயல்பாடுகள்,அதனால் மக்களுக்கு ஏற்படும் அல்லது ஏற்படப்போகும் நன்மை தீமைகள்- இதையெல்லாம் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டிய கடமை அந்த நாட்டின் எதிர்க்கட்சிகளுக்கு உண்டு.
படிக்க தெரியாதவர்ளுக்கு அரசியல் வாதிகள், படித்தவர்களுக்கு பத்திரிக்கைகள் .இதற்கு பேர்தான் ஜனநாயக நாடு.

கம்யூனிச நாடு என்பது அரசே மக்களை வழி நடத்தி செல்லும் ஆற்றல் படைத்தது.உலக வல்லரசுகளில் கம்யூனிச நாடாக  இப்பொழுது முன்னோடியக திகழ்வது சீனா.
சன நாயக நாட்டில், ‘தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’.
இங்கு தனிமனித சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

கம்யூனிச நாட்டில் மக்கள் அனைவரும் சமம். அதற்கு சட்டம் என்ன செய்யுமோ அதைச் செய்யும்.
சன நாயக நாட்டில் தனிமனிதன் தன் சுயலாபத்திற்கு சட்டத்தை வளைத்துக்கொள்ளலாம். இதை பயன்படுத்தி பெரும் பணக்காரனாக மாறலாம்.

பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் ஒரு மனிதனுக்கு அமைந்து விட்டால் அவன் பேசும் மொழி தெரிந்த மக்களை மயக்கிவிடலாம்.
பேசும் மனிதனின் மன சாட்சி பொருத்து தான் எல்லாமே.
சமுதாயத்தில் ஒரு மனிதன் எப்படி உருவாகிறானோ அல்லது உரு வாக்கப்படுகிறானோ அப்படித்தான் அவன் மன சாட்சி அமையும்.

இதற்கு உதாரணம் வேண்டுமாயின்  நல்லவராக வாழ்ந்து மனித குலத்திற்கு நன்மை பயத்திட வாழ்ந்த மனிதர்கள் ஏராளம்.
உதாரணமாக தமிழகத்தில்
தந்தை பெரியார்,காமராசர் போன்றோர் ,
இளமையில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்ந்து பசியின் கொடுமையை உணர்ந்து, பின்னாளில் திரைப் படத் தொழிலில் தன் நடிப்புத் திறமையாலும் பேச்சாற்றலாலும் மக்களை கவர்ந்து தமிழகத்தின் முதல்வரானவுடன், அரிசி சோற்றயே காணாத ஏழையின் குழந்தைக்கு சட்டம் போட்டு ஒருவேளை அரிசி சோற்றை ஊட்டிய பெருமை முன்னாள் முதல்வர் மறைந்த திரு எம் ஜி இராமச்சந்திரனையேச் சாரும்.அதாவது குழந்தைகளின் மதிய உணவு திட்டத்தை,தமிழகத்தில் சட்டம் போட்டு நடை முறைப்படுத்திய மனித நேய பண்பாளர்.இந்தியாவிலேயே ,தமிழகத்தில் தான் குழந்தைகள் மதிய உணவுதிட்டம் சிறப்பாக நடை பெறுகிறது.

                                         
இந்தியாவில்   ஒட்டும்மொத்த மக்களுக்காகவும் வாழ்ந்த ஒரே மனிதர்  மகாத்மா காந்தி மட்டுமே.
                                   
பணக்காரராக பிறந்தாலும் ஏழைகளுக்காக,                                      
பாடுபட்டு ஏழையாகவே வாழ்ந்து, உலகுக்கு அகிம்சை முறையில் எதையும் சாதிக்கலாம் என உலக மக்களுக்கு எடுத்து காட்டியவர் .

அடுத்து இந்தியா உணவில் தன்னிறைவு அடையவேண்டும் என  பசுமை புரட்சியை ஏற்படுத்தி பசி இல்லா இந்தியாவை உருவாக்கிய பெருமை முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியையே சாரும்.

அதேபோல் உலகத்தில்,பாதிக்கப்பட்ட மக்களுக்காக வாழ்ந்தவர்கள்-  ரூசோ,ஆப்ரகாம் லிங்கன்,காரல் மார்க்ஸ்,அன்னைதெரசா,லெனின்,மாசே துங்,,மார்டின் லூதர் கிங், சேகுவாரா, நெல்சன் மண்டேலா,பிடல் கேஸ்ட்ரோ, போன்றோர்.
இங்கே குறிப்பிடப்பட்ட கடைசி இரண்டு மகாத்மாக்கள் இன்றும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஒரு நாடு எப்படி அமையவேண்டும் என கொள்கையை உருவாக்கிய மாமேதை திரு காரல் மார்க்ஸ். அவருக்குப்பின் அவர்   எழுதிவைத்து (மூலதனம்-TASS CAPITAL) சென்றதை படித்த திரு லெனின் மாபெரும் சோவியத் வல்லரசை உருவாக்கினார்.
அவருக்கு பின் மார்க்ஸ்+லெனின் இருவர் கொள்கையை இணைத்து சீனாவில் மா சே துங் எனும் மாபெரும் மனிதர் கலாச்சார புரட்சியை ஏற்படுத்தி மாபெரும் வல்லரசை உருவாக்கினார்.
கொள்கையில்லாமல் ஆன்மீக அல்லது அருவ வழிபாட்டில் பிடிப்புடன் உள்ள  மக்கள் சுமார் 500 கோடி மக்கள்.

அருவவழி(spiritual worship or worship of god)வழிபாடு என்பது ஒரு மன வியாதி.இதில் ஊறிய மனிதர்களை எளிதில் குணப்படுத்த முடியாது.உலகில் பல குடும்பங்களில் பகுத்தறிவாளனுக்கும் குடும்ப உறுப்பினர்க்கும் விவாதங்கள் குறிப்பாக பெண்கள் பகுத்தறிவாத கருத்துக்கு ஒத்துவர மாட்டார்கள்-தொடர் நிகழ்ச்சியாகவே உள்ளது      

மீதமுள்ள 200 கோடி மக்கள் கம்யூனிச பகுத்தறிவாளிகள்(Materialists or Rationalists)
எனவே உலகில்  பெரும்பான்மை மக்கள் மூட நம்பிக்கையில் ஊறியவர்கள். அதாவது முதலாளித்துவ ஜனநாயகத்தில் ஊறியவர்கள்.எனவேதான்  உலகத்தில் ஆன்மீகம் தழைத்தோங்குகிறது. அது வளர்கிறது.இதற்கு பத்திரிக்கைகளும் ஒரு காரணம்.

ஜனநாயக நாட்டில் தான் பத்திரிக்கை சுதந்திரம் பற்றி பேசப்படுகிறது.

ஜனநாயக நாட்டில் படித்த மக்களுக்கு அரசின் செயல்பாடுகள்,அரசின் மக்கள் விரோதப்போக்குகள்,அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் லஞ்ச லாவண்யங்கள்,வியாபாரிகளின் கள்ள மார்கெட் அம்பல படுத்துதல்,உணவுபொருளை பதுக்கும் வியாபாரிகளின் அறவழி தவறிய செயல்பாடுகள் இதையெல்லாம் மக்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டுவது தான் பத்திரிக்கை தர்மம்.அல்லது தொலைக்காட்சி தர்மம்.
                             
ஆனால் சில பத்திரிக்கைகள் லஞ்சத்தை மக்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டுகிறேன் என சொல்லிக்கொண்டு லஞ்சம் பெற்றவர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு,அல்லது லஞ்சம் வாங்கியவர் பத்திரிக்கையாளரின் சாதியாக இருந்தால் அதை மறைத்து மக்களை திசை திருப்பும் பத்திரிக்கைகளை எந்த பத்திரிக்கை தர்மத்தில் சேர்ப்பது.?

பத்திரிக்கை அதிகமாக விற்கவேண்டும் என எண்ணத்தில் கொண்டு மக்கள் ஆவலை தூண்டும்விதத்தில் தலைப்புச் செய்திகளை பரபரப்பாக விளம்பர படுத்த வேண்டியது, ஆனால் காசு கொடுத்து வாங்கியவுடன் அதில் ஏதாவது ஒரு மாநிலத்தில் ஒரு சிறு நடிகரோ அல்லது வேற்று மாநிலத்து அமைச்சரோ சம்மந்தப்பட்ட நிகழ்சியாக இருக்கும்.

மேலும் மக்கள் எதை அதிகம் படிக்கின்றனர் அவர்கள் ஆர்வம் எதில் உள்ளது என பார்த்து வெளியிடுவது.இது ஒரு ஏமாற்று வேலை என்பது பத்திரிக்கை நடத்துபவர்களின் மன சாட்சிக்கே வெளிச்சம்.

கடவுளை அதிகம் நேசிக்கும் மக்கள் எல்லாம் அதிஷ்டத்தில் அதிகம் நம்பிக்கை வைத்திருப்பர்.
அடுத்தவர்கள் யோசனையை அதிகம் நம்புபவர்களாக இருப்பார்கள் (யோசனை சொல்பவர்கள் பெரும்பாலும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களாக இருப்பர்) 
ஜோசியம்
ஹேஷ்யம்
ஜாதகம்
சாதகம்
தோஷம்
தோஷ பரிகாரம்
பேய்,பிசாசு விரட்டுதல்
பில்லி,சூன்யம் வைத்திருப்பதாக நினைக்கவைத்து,அதை நீக்கியதாக நம்ப வைத்தல்,போன்ற,
உழைக்கும் மக்களிடையே இந்த நம்பிக்கையை ஊட்டி ஒரு கும்பலே பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றது.இன்றளவும் இது நடக்கின்றது.
இவையெல்லாம் பன்னெடுங்காலமாக தொன்று தொட்டு நடக்கும் மக்கள் கலாச்சாரமாகவே மாறிவிட்டது. இந்த கலாச்சாரத்திற்கு  பாதிப்பு வராத வகையில் இன்றளவும்  பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

பிறகு மக்களுக்கு எப்படி அறவழி சுய சிந்தனை உருவாகும்.?
பத்திரிக்கைகள் ஆகட்டும் அல்லது தொலைக்காட்சிகள்  ஆகட்டும் பெரும்பான்மை மக்கள் எதில் ஆர்வம் காட்டுகின்றனரோ அதை வெளியிட்டு பணம் பெருக்குவதைத்தான் பத்திரிக்கை தர்மம், தொலைக்காட்சி தர்மம் என மக்களை நம்ப வைக்கின்றனர்.                                  
இதற்கெல்லாம் முதலாளித்துவ ஜன நாயக நாடு இடமளிக்கின்றது.

அரசாங்கம் இதை கண்டு கொள்வதே இல்லை.,  மக்களை எப்படி நல்வழி படுத்த முடியும்? 

பத்திரிக்கைகள் நடத்துவதற்கு இப்பொழுதெல்லாம் பணம் அவசியம் இல்லை. காரணம் விளம்பரத்தில் ஏராளமாக பணம் கிடைக்கின்றது. ஆனால் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பிரபலமான தின செய்தி பத்திரிக்கைகள் தினமும் 10 லட்சம் ,14 லட்சம் விற்பனை ஆகின்றது என தங்கள் பத்திரிக்கைகளிலேயே விளம்பரப்படுத்துகின்றன.

தமிழகத்தில் பண்டிகை காலங்களில் அதாவது பொங்கல்,தீபாவளி,சுதந்திரதினம் மற்றும் ஆயுத பூஜை ஆகிய நாட்களில் அதிக பக்கங்கள் வெளியிடுவதாக 10 நாட்களுக்கு முன் விளம்பரப்படுத்தி                                  
வழக்கமாக ரூ.3 க்கு விற்கும் பத்திரிக்கையை அன்றயதினம் ரூ5.க்கும்10க்கும் விற்பனை செய்கிறது. அதுமட்டுமல்ல தனி சிறப்பு மலர் என விளம்பரப்படுத்தி பக்கங்ஙளை அதிகப்படுத்தி விளம்பர தாரர் மூலம் பணத்தை பெற்று ஒன்றுக்கும் உதவாத வெறும் சினிமா நிகழ்ச்சிகளை அறிவை வளர்க்கும் கட்டுரைகள் போல் வெளியிட்டு                பெருமை பட்டுக்ககொள்கின்றன.
    

பத்திரிக்கை வாசிப்பவர்களிடம் அதிகப்படியான பணத்தை லட்சக்கணக்கில் பெற்றுக்கொண்டு பின் விளம்பரம்செய்யும் நிறுவனங்களிடம் இருந்து ஆயிரக்கணக்கில் பணத்தை பெற்று கோடி கணக்கில் பணத்தை குவிக்கின்றனர்.
அரசுவும் இதை கண்டு கொள்வதில்லை. காரணம் அந்த பத்திரிக்கை ஆளும் கட்சிக்கு எதிராக செய்திகள் வெளியிட்டால் ஆளும் அரசு கவிழ்ந்துவிடுமோ என்கிற பயம் தான் . இதுதான் ஜன நாயக நாடு.

அமைச்சர்களும், அதிகாரிகளும் லஞ்சம் வாங்குகின்றனர் என அங்கலாயிக்கும் நாம் பத்திரிக்கைகளும் தொலை காட்சி நிறுவனமும்,தனியார் நிறுவனங்களும் அரசாங்கத்துக்கு வரவு செலவு கணக்கை காலம் தவறாமல் தெரிவிக்கப்படுகிறதா?அல்லது இதை யெல்லாம் கண்காணிக்க அரசிடம் (public accounts committee) அமைப்பு உள்ளதா ? என தெரியவில்லை. அப்படி இருந்தால் நுகர்வோர் அமைப்புகளுக்கு அதில் இடம்பெறச் செய்ய வேண்டும். அதை மக்களுக்கு பத்திரிக்கை மூலமும் தொலைக்காட்சி மூலமும் தெரிவிக்கலாமே. அப்படியெல்லாம் இருப்பதாக தெரியவில்லை.
சில பத்திரிக்கைகள் சிறப்பு மலர் வெளியிடுகிறேன் என சொல்லி, வெறும் விளம்பரங்களை வாங்கி பக்கங்களை அதிகப்படுத்தி,அதிக பக்கங்கள் என விளம்பரபடுத்தி, ஒரு பத்திரிக்கைக்கு ரூ1அல்லது ரூ2 அதிகம் விலை வைத்து அதை வாசகர் களிடமிருந்து பெறுகின்றனர்.
                              
ஒரு நாளைக்கு 10 லட்சம் 14 லட்சம் விற்பனை ஆகும் நிறுவனங்கள்  எவ்வளவு கொள்ளை அடிக்கிறது, அது மட்டுமல்ல விளம்பரம் செய்யும் நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு பணம் கொள்ளை அடிக்கப்படுகின்றன.?

அமைச்சர்கள் லஞ்சம் வாங்கிவிட்டனர்,அதிகாரிகள் லஞ்சம் பெற்றனர் என வாய் கிழிய பேசும் அல்லது எழுதும் பத்திரிக்கைகள் ,தங்களுடைய லஞ்ச லாவண்யங்களை வெளியிட அல்லது சுய பரிசோதனை செய்துகொள்ள முன்வருவதில்லையே, ஏன் ?

கிராமத்திலோ அல்லது நகரத்திலோ ஒரு அமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாகட்டும் அந்த நிகழ்ச்சி பத்திரிக்கைகளில் வர வேண்டும் என்பதற்காக , செய்தியாளர்களை எப்படி கவனிக்கப்படுகின்றனர் தெரியுமா ?

அவர்களுக்கு பரிசுப் பொருள் வழங்கப்படவேண்டும். அல்லது உறையில் இவ்வளவு பணம் போட்டுத்தரப்பட வேண்டும் என ஒரு கணக்கு இருக்கின்றது . இது பத்திரிக்கை நடத்தும் முதலாளிக்கு தெரியாமலா இருக்கும் ?   

இதனை கண்காணிக்க அல்லது வருவாயை அளவீடு செய்ய, அல்லது விளம்பரம் மூலம் இட அளவீடுகளுக்கு இவ்வளவு வருவாய் வந்திருக்கும் என தெரிந்து கொள்ள, அல்லது பத்திரிக்கை நிர்வாகம் நடத்த இவ்வளவு நிதி போதும்,ஊழியர் சம்பளம் போக மீதியை அரசுக்கு செலுத்த வேண்டும் என ஒரு சட்டம் இருப்பதாக தெரியவில்லை. அல்லது  மக்களிடமிருந்து அதிகப்படியான நிதியை பெறுவது தண்டனைக்குரிய குற்றம் என ஒரு சட்டம் இருப்பதாக தெரியவில்லை.
                                 
மேலும் மக்களிடம் இருக்கும் ‘எளிதில் நம்பும் குணத்தை’ அறிந்த சில வியாபார நிறுவனங்கள்,  ‘எங்கள் நிறுவனம் தயாரிக்கும் பொருளை பயன்படுத்தி பாருங்கள் 7 நாட்களில் அல்லது 15 நாட்களில் குணம் தெரியும்’ என விளம்பரபடுத்துகின்றனர். அதுமட்டுமல்ல ‘குணம் தெரியவில்லை எனில் பணம் வாபஸ்’ என விளம்பர படுத்துகின்றனர்.

அப்படி எத்தனை பேருக்கு பணம் திரும்ப கிடைத்தது.? அப்படி தராத நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? .இதை எல்லாம் கண்காணிக்க அரசிடம் ஒரு அமைப்பு இருப்பதாக தெரியவில்லை.

எனக்கு இப்பொழுது 61 வயதாகிறது. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, பழனி சித்த வைத்தியர் அல்லது சேலம் சித்த வைத்தியர் என சுமார் 50 ஆண்டு காலமாக வாரப் பத்திரிக்கைகளில் தவறாமல்
விளம்பரப்படுத்தப்படுவதை நாமல்லாம் அறிவோம்.இவர்களெல்லாம் சர்வரோக நிவாரண வைத்தியர்கள் என எல்லா வார மற்றும் இருவார பத்ரிக்கைளில் விளம்பரப்படுத்தப்படுகின்றன.
                                 
இதற்கெல்லாம் விளம்பர செலவு லட்சக்கணக்கில் செலவிடப்படுகின்றன.இவ்வளவும் நோயாளிகளிடமிருந்து பெறப்படும் பணம்தான்.அப்படி மருந்துண்ணவர்கள் நோய் குணமானதா?
இதே போன்று நவீன மருத்துவமனைகளும் விளம்பர படுத்துகின்றன. இதில் விளம்பரத்துக்கு ஆகும் செலவும் மறைமுகமாக நோயர்களின் மேல் சுமத்தப்படுகின்றன.
இவைகளை யெல்லாம் நுகர்வோர் கூட்டமைப்பின் கீழ் கொண்டுவர அரசாங்கம் சட்டம் இயற்றவேண்டும்.

பெரும்பாலும் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் கூட மக்களை பஞ்சாங்கம் காட்டும் நாட் குறிப்புகளை வெளியிடுகின்றன. படித்தவர்கள் கூட இன்றய செய்தி தாளில் தன்னுடைய ராசிக்கு என்ன பலன் என தெரிந்து கொண்டுதான் வீட்டை விட்டு வெளியில் செல்கின்றனர். ஆனால் பத்திரிக்கை தலையங்கத்தில் ஜோசியத்தை நம்பாதே பஞ்சாங்கத்தை நம்பாதே என அறிவுரை கூறுவர். பத்திரிக்கைகளின் திருமுகங்களின் மறுமுகங்கள் இவைதான்.




No comments: