9- திருமுக மகனின் மறுமுகம்
மனிதனுக்கு பிறந்த நாள்முதல் இறக்கும் வரை பலவித அனுபவங்கள்.அனுபவங்கள மூலமே
அறிவை பெறமுடியும்.குழந்தை பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பும்,விதவிதமான வாய்க்கு
வயணமான உணவு வகைகள். இதுவே குழந்தைகளின் அவசியம்.பதின்ம வயதில் படிப்பும் பூகோள
மற்றும் வரலாற்று அறிவை தேடும் முயற்சி.
அடுத்த பருவ வயதான 20 க்குமேல் ஆணை பெண்ணோ ,பெண்ணை ஆணோ தேடும் ஆளுமை வயது.
படிப்பை முடித்து வேலை தேடும் வயசு.
இந்த வயதுவரை ஆணுக்கு பெண்ணும்
பெண்ணுக்கு ஆணும் சம அந்தஸ்த்து கிடைக்கின்றது.
திருமணத்திற்கு பின் ஆணைபுரிந்து பெண்ணோ
அல்லது பெண்ணை புரிந்து ஆணோ குடும்பம் நடத்த வேண்டும்.
இப்பொழுதெல்லாம் திருமணமான பெண்களும்
வேலைக்கு செல்லவேண்டும் என விரும்புகின்றனர்.
இருவருக்கும் இணைந்து குழந்தை
பிறந்தால்,பிறந்த குழந்தையை வீட்டில் உள்ள பெரியவர்களிடம் விட்டுச்செல்லலாம் என
முடிவெடுக்கின்றனர்.அல்லது
அந்த வாய்ப்பு இல்லாதவர்கள்,வீட்டில்
வேலைக்கார பெண்ணை அமர்த்தி குழந்தை வளர்க்கும் பொருப்பை அவளிடம் ஒப்படைக்கலாம் என
முடிவெடுக்கின்றனர்.பள்ளிக்கு செல்லும் வயதில் குழந்தைகளை,தங்கும் விடுதிகளில்
சேர்த்து விடுகின்றனர்.
இந்த இரண்டு முடிவுமே தவறானது.
குழந்தையை பெற்றவர்கள் யாராவது ஒருவர் 24
மணி நேரமும் குழந்தையை வளர்க்கும் பொருப்பை ஏற்க வேண்டும்.பெரும்பாலும் அந்த
பொருப்பு பெண்களையே சாருகிறது. அப்படி வளரும் குழந்தைகள் பின்னாளில் தாய்க்கு
ஆதரவாக இருக்கின்றனர்.
இதல்லாம் அனுபவத்தில் உணர்ந்தது.
குழந்தை பருவத்தில் தாய் தந்தையரிடம்
வளரா குழந்தைகள்,பின்னாளில் தன் பெற்றோரைப்பற்றி கவலை படுவதில்லை.
இதனால் வயதான காலத்தில் பெற்றோர்கள்
புலம்ப நேர்கிறது.இளவயதில் நிறைய வருமானத்தை அடையவேண்டும் என கணவன் மனைவி
விரும்புவதால், குழந்தைகள் பெற்றோரின் பராமரிப்பின்றி வளர்கின்றனர்.
மேலும், பெற்றோர்கள் வேலைக்கு செல்லும்
வீடுகளில்,பதின்ம வயதில் குழந்தைகள் பள்ளி முடித்து வீடு வந்து சேரும்போது அவர்கள்
தாய்த்தந்தையரின் அன்பும் அரவணைப்பும் கிடைக்காமல் மன சிதறல் நோய்க்கு
ஆளாகின்றனர். அப்படி வளர்க்கப்பட்ட குழந்தைகளால் வயதான காலத்தில் பெற்றோர்களுக்கு
நிறைய துன்பங்கள்தான் நேரும்
பதின்ம வயதினருக்கு ஏன் மனச்சிதறல்
ஏற்படுகிறது ,என்பதனை பார்ப்போம்.
பதின்ம வயதினர் எனில் பெண்களுக்கு 10
லிருந்து 19 வயது வரையிலும், ஆண்களுக்கு 13 வயதிலிருந்து 19 வயது வரைக்கும்,உள்ள
பருவ காலமாகும். மேலே குறிப்பிட்ட
இருபாலரின் பால்மனம் மாறும் வயது
முடிந்து வாலிப பருவம் மாறும் வயது. இந்த பருவத்தினரின் மனம் விசாலமாகிறது,
சலனமடைகிறது,
எளிதில் மனம், உணர்ச்சி வயப்படுகிறது.
அந்த நேரத்தில் தாயோ அல்லது தந்தையோ
வீட்டில் இருந்தால் குழந்தைகளின் மனமறிந்து அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்யலாம்.
இதனால் குழந்தைகளின் கூடா நட்பை
தடுக்கலாம் பிள்ளைகளுக்கு படிப்பதற்கு நேரம் ஒதுக்கித்தரலாம். எதிர்காலத்தில் ஒரு
நல்ல குடிமகனை உருவாக்கிய பெருமை பெற்றோரைச்சாரும்.
கல்லுரி பாடத்திட்டங்கள் எல்லாம்
பணம்திரட்டும் வேலைகளை எப்படி பெறுவது,சேர்த்த பணத்தை எப்படி பன்மடங்கு
பெருக்குவது போன்ற வழிகளை சொல்லித்தருகிறது.
ஆனால் பெற்றோரை பராமரிக்க
சொல்லித்தருவதில்லை.
சம்பாதிக்கும் பிள்ளைகளுக்கு திருமணம்
செய்ய ஆசைப்படுகின்றனர்.
நடுத்தர மற்றும் ஏழை இந்தியகுடும்பங்கள்,
ஆண்மகனை நம்பித்தான் வாழ்க்கை அமைத்துக்கொள்கின்றனர்.
பெறும்பாலானவர்களுக்கு, இளமையில் முதுமையின்
நினைப்பு வருவதில்லை.
ஒவ்வொரு பருவ வயதிலும் மனிதனுக்கு வெவ்வேறு விதமான அனுபவங்கள்.
பெற்றோரிடம் வளர்ந்த ஆண்மகனுக்கு
திருமணம் ஆகும் வரை பெற்றோர் தான் உலகமாகவே தெரியும்.இதற்குபேர்தான் அறியாதவயசு.அதாவது ஆணுக்கும்
பெண்ணுக்கும் திருமணத்திற்கு முந்தய பருவம்.
தன்மகனுக்கு திருமணம் ஆனவுடன் மருமகள்
வருகிறாள். இங்கேதான் பிரச்சினைகள் ஆரம்பமாகிறது.
இதுவரை பெற்றோரிடம் தாம் வாழ்ந்த
வாழ்க்கை ஆண்மகனுக்கு மறந்து போகிறது.
மனைவி வந்தவுடன் புது உலகை காணும்
ஆண்மகன்,தனக்கு மாமியார் வீட்டில் கிடைக்கும் உபசரிப்பு
புதுமையாகத் தெரிகிறது.மனைவியின் அரவணைப்பும் அன்பும் ஆண்மகனை புத்தி தடுமாற
வைக்கிறது.
ஒருஆண்மகன்,பெற்றோரிடம் 25 அல்லது 30
வயதுவரை வாழ்ந்த வாழ்க்கையின் விதம் பற்றி தன்மனைவியிடம் விவரிக்க முடியாமல்
தெளிவற்று போகிறது.
மனைவியாக வரும் பெண்ணுக்கோ தனக்கு வரும்
கணவர் தனக்கே உரிமையானவர் என எண்ணத் தோன்றுகிறது. கணவரின் அன்பு முழுமையாக தனக்கே
உரிமையானது என நினைக்கின்றாள், இதில் கணவரின் பெற்றோர் கணவரின் அன்பை பங்கு போடக்கூடாது
என எண்ணுகிறாள்.
தன் மகனைப்பற்றி மருமகள்முன் விமர்சனம்
செய்யவோ,ஆதங்கப்படவோ கூட பெற்றோருக்கு உரிமையில்லாமல் போகிறது.
காலையில் வேலைக்கு சென்று மாலை வீடு
திரும்பும் தனது கணவரிடம் புகார் தெரிவிக்கும் மனைவியின் எண்ண ஓட்டங்களை அலசி
பார்க்க ஆண் மகனின் மனம் தெளியவில்லை.
பெற்றோரின் தேவைகளை உணரத்தெரியவில்லை.
பெற்றோருக்கோ,மகனுக்கு திருமணம் ஆனவுடன்
அதாவது மருமகள் வந்தவுடன் மகனின் மனம்
மாறிவிட்டது,என எண்ணத்தோன்றுகிறது.
மாற்றுவீட்டுக்கு வாழப்போகும் அல்லது
வாழும் தன் மகளின் நிலைதான் தன்
வீட்டுக்கு வாழவந்த மருமகளின் நிலையும்
என்பதை மகனின் பெற்றோர் மனம் சிந்திக்க
மறுக்கின்றது.
மகள் முடியாமல் படுத்தால் மனம்
பதறுகிறது.
ஆனால்
மருமகளுக்கு அப்படி நேர்ந்தால் மகளைப்போல்
தான் மருமகளின் நிலையும் என
நினைத்துப்பார்க்க முடியவில்லை.
இது ஒரு நாகரீகமற்ற உணர்வு என எண்ணத்தோன்றவில்லையா? இது ஒரு
நாகரீகமற்ற செயல் என எண்ணத் தோன்றவில்லையா? மனிதனின் பகுத்தறிவாதம் எங்கே போனது?
அதே சமயத்தில் வீட்டுக்குவந்த
மருமகளும், தனது பெற்றோர் போலத்தான் தனது
கணவரின் பெற்றோரும்
சம அந்தஸ்த்து உடையவர்கள் என மருமகளுக்கு
ஏன் எண்ணத் தோன்றவில்லை ? இதுவும் ஒரு நாகரீக மற்ற செயல் என
எண்ணத்தோன்றவில்லையா? இதைப்போன்றதொரு
நாகரீகமற்ற கலாச்சாரம் உலகம் முழுக்க உள்ளது.
இந்தியா உட்பட தெற்கு மற்றும் தென்கிழக்கு
ஆசிய நாடுகளில் பல குடும்பங்கள், கூட்டுக்குடும்பங்களாக இயங்குகின்றன.
இந்தியாவில் இப்பொழுதெல்லாம் முதியோர்
இல்லம் மற்றும் ஆதரவற்றோர் முதியோர் இல்லம் நிறைய உருவாகிவிட்டன.
இதுஒரு நாகரீகமற்ற,மனிதாபிமானமற்ற மனித
கலாச்சாரமாகும்.
ஆண்மகனை பெற்றால் வயதான காலத்தில் நமக்கு
ஆதராவக இருக்கும் என ஆசைப்பட்ட பெற்றோர்களின் மனம் ஆற்றொணா
துன்பமடைகின்றது.ஒருவகையில் பெண் குழந்தைகளை மட்டுமே பெற்றெடுத்த பெற்றோர்களுக்கு
அந்த பெண்குழந்தைகளை படிக்க வைத்து ஆளாக்கி புகுந்த வீட்டுக்கு அனுப்பும் வரை 90%
சதவிகித பொறுப்பு முடிந்து போகிறது. கட்டிக்கொடுத்த பெண்வீட்டிற்கு அப்பப்ப சென்று
நலம் விசாரித்தால் போதுமானது;மீதமுள்ள 10%சதவிகிதம் பூர்த்தியாகிவிடுகிறது.பெண்களைப்
பெற்றவர்கள் வாழ்வின் கடைசீக்காலத்தை தன்னம்பிக்கையோடு கடத்துகின்றனர்.
ஆனால் ஆண்மகன் தான் தனக்கு வேண்டும்
அவன்தான் வயதான காலத்தில் சோறு போடுவான் என நம்பிய பெற்றோறுக்கு நிறைய ஏமாற்றமே
மிஞ்சுகிறது.
மகனின் திருமுகத்தின் மறுமுகம்
அப்பொழுதுதான் தெரிகிறது.
No comments:
Post a Comment