17- ஆன்மீக வாதிகளின் மறுமுகங்கள்
உலகத்தின் மாபெரும் அதிசயங்கள் என
கட்டிடங்களையும் இயற்கை அமைப்புகளையும் எடுத்துக்காட்டாக கூறுவர். எகிப்து பிரமிடுகளையும் கிரேக்க விளையாட்டு
அரங்கத்தையும் சீனாவின் 7000 கிலோ மீட்டர் சுற்றுச் சுவரையும் இந்தியாவின்
தாஜ்மகாலையும் என சொல்லிக்கொண்டு போகலாம் .
ஆனால் உலகின் மிகப்பெரிய அதிசயம் எது
தெரியுமா? மனிதன் தான்
உயிரினங்கள் இயங்குவதே அதிசயம்தான்.அதில்
மனிதன் தான் மிகப்பெரிய அதிசயம். அதிசயம் எனில் வியப்புக்குரிய அல்லது நம்ப
முடியாத எனும் பொருளாகும்.
பூமியைப் போன்ற மற்ற கிரகங்களை மனிதன்
ராக்கெட்டுகளை ஆனுப்பி ஆய்வு செய்தான். அங்கெல்லாம் உயிரினம் இருப்பதாக
தெரியவில்லை. வெறும் கல்லும் மண்ணும்தான் காணப்படுகிறது.இப்பிரபஞ்சத்தில் அரியவகை
உயிரினங்களாக மனிதர்கள் வலம்
வருகின்றார்கள்.பூமியைப்போன்றே பல கிரகங்கள் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை
வலம் வருகின்றன.
பூமிக்கு தன்னை தானே சுற்றிக்கொள்ள 24
மணிநேரமும்,சூரியனை சுற்றிவர 365 ¼ நாட்கள் ஆகின்றன. ஒவ்வொரு கிரகத்திற்கும் துணை
கோள்களுக்கும் கால வரை முறைகள் உள்ளன.
பூமியில் மட்டுமே உயிரினங்கள்
உள்ளன.உயிரினங்களில் தாவரம்,மிருகம் மற்றும் மனிதன் என வரிசைப் படுத்தலாம் .
இவைகள் தான் ஒன்றுக்கொன்று முரண் பட்டு
வாழ்கின்றன. தாவரங்களின் வளர்ச்சி மிருகவளர்ச்சிக்கும் மனித வளர்ச்சிக்கும் பேருதவியாக உள்ளன.
இந்த மூன்று இனங்களில் மனிதன் மட்டுமே
தன் இனத்துக்கு தீங்கு செய்வதும் தன்இனத்தை மட்டுமில்லாது மற்ற தாவர மற்றும்
விலங்கினங்களை அழிப்பதும் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றான்.
தன்னை தானே அழித்துக் கொள்வதும்(தற்கொலை
உணர்வு)பிற இனங்ளை அழிப்பதை பொழுது போக்கும் செயல்களாக இவனுக்கு உள்ளன. இந்த
உணர்வினை முறை ப்படுத்த அல்லது அவன் மனதிலிருந்து நீக்க புகுத்த பட்டது தான் கடவுள் கொள்கை.
இதில் முற்பிறவி வினை, அதனால் தற்போது
இவன் அனுபவிப்பது பாவம் புண்ணியம் ,மறுபிறவில் இவன் நிலை என்ன? போன்ற சாதாரண
மனிதனை குழப்பி-இன்றும் இது தொடர்கிறது-
தங்கள் சுய லாபத்திற்கு வைத்துக்கொண்டனர் மத குரு மார்கள்.எது பாவம் ?எது
புண்ணியம்?பாவ காரியங்கள் எது?புண்ணியகாரியங்கள் எது?அறிவுரை நூல்களான வேத
நூல்கள் எழுதப்பட்டன.
வேதங்கள்
என்றாலே பேதங்கள்தான்.மனிதரிடையே வேற்றுமையை வளர்ப்பதுதான் வேதங்கள்.ஒவ்வொரு
மதத்திற்கும் வேத நூல்கள் உள்ளன.இந்துக்களுக்கு பகவத் கீதை,உபநிடதங்கள்,கிறித்துவத்திற்கு பைபிள்,இஸ்லாமியருக்கு குரான் போன்ற வேத நூல்கள் உள்ளன. இவையனைத்து நூல்களும் சாதாரண மனிதர்களுக்கும் வேதங்களை
கற்றவருக்கும் அதனை மற்ற சாமானிய மக்களுக்கு போதிப்பவர்களுக்கும் வேற்றுமைகளை
உணர்த்துவது தான் வேதம்-பேதமாகிவிட்டது-வேற்றுமையாகிவிட்டது
உலகின் மாபெரும் அதிசயமான மனித உடல்
எப்படி இயங்குகிறது ,எந்த உணவு உட்கொண்டால் உடலின் எந்த உறுப்புகள் எப்படி
இயங்குகின்றன,என எந்த வேத நூல்களிலும் எழுதப்படவில்லை.
ஏனெனில் மனிதன் கடவுளால் படைக்கப்பட்டான்
என்பது வேத நூல்களில் எழுதப்பட்ட கோட்பாடு . இறைவனால் உருவாக்கப்பட்ட மனித உடல்
அழிவுக்கு உட்பட்டது. அந்த உடலை இயக்கும்
உயிர் இறைவனுக்கு சொந்தமானது. இதைத்தான் ஆன்மா-ஆத்மா என்று போதிக்கப்பட்டு
பாமரனை பாடாய் படுத்துகின்றனர் .பகவத்கீதையில் இப்படித்தான் எழுதப்பட்டுள்ளது.
இந்து மதத்தில் இறைவன் தாம்பத்திய
வாழ்க்கையே வாழ்ந்ததாக கூறப்படுகிறது பகவத் கீதையை போதித்த கிருஷ்னனுக்கு இரண்டு
மனைவிகள்.
இந்த இரண்டு மனைவிக்கொள்கையே பெண்ணடிமை
பற்றி இயம்புவதாக உள்ளது.இந்துக்கள் இந்த உண்மையை உணர்ந்ததாக தெரியவில்லை.
கடவுளுக்கு தாம்பத்தியம் கூடாது என
மனிதனே தீர்மானிக்கிறான். அப்படி உருவான மதங்கள் தான் புத்தம். கிறித்துவம் மற்றும்
இஸ்லாம். தாம்பத்தியம் வேண்டாம் என்றால்
உயிரினங்கள் எப்படி பெருகும்.
கடவுளுக்கு மனைவி கூடாது அவ்வாறே மதத்தை
பரப்பும் மத குருமார்களுக்கும் மனைவி அதாவது தாம்பத்தியம் கூடாது என
கிறித்துவத்தில் போதிக்கப்பட்டது.சன்யாசிகள் பிரச்சினைகள் வேறு இவர்கள்
தாம்பத்தியத்தில் உழலும் பிரச்சினைகளை எவ்வாறு களைய முடியும்?
நாளடைவில் அந்த மதத்தில் மதகுருமார்கள்
கன்யாஸ்ரிகளுடன் ரகசிய உறவு வைத்துக்கொண்டனர். இது அம்பலமானவுடன் வெகுண்டெழுந்த
மக்கள் முகமது நபிகள் தளைமையில் இஸ்லாம் மதத்தை உருவாக்கினர். ‘இறைவன் அல்லா
எனக்கு கனவில் வந்து போதித்தார் அதனை மக்களுக்கு குரானாக எழுதி கொடுத்தேன்’ என
முகமது நபி அவர்கள் உலகுக்கு தெரிவித்தார்.
பெண்களை ஆலயத்தில் நுழைய விட்டால்
அங்கிருக்கும் ஆண் பூசாரிகளுக்கு சபலம் ஏற்படும்.எனவே ஆலயத்தின் புனித தன்மை
கெட்டுவிடும் என குரானில் எழுதப்பட்டது.
இஸ்லாம் பெண்கள் யாவரும் வீட்டை விட்டு
வெளியே செல்லக்கூடாது.அப்படி செல்வதானால் முகம் உடல் அனைத்தையும் மூடிச்செல்ல
வேண்டும் ,தனியே செல்லக்கூடாது.இப்படித்தான்
அல்லாவினால் போதிக்கப்பட்டதாக
முகமது நபி அவர்கள் குரானில் தெரிவித்துள்ளார்.
அதுவும் வீட்டின் மற்ற ஆண் உறுப்பினருடன்
தான் செல்ல வேண்டும் அன்னியரோடு பேசக்கூடாது.முகத்தை அன்னியருக்கு காட்டகூடாது.
கிறித்தவர்களுக்கும் இந்துக்களுக்கும்
இது அநியாயமாக தோன்றியது. இது பெண்களின் சுதந்திரம் பாதிக்கப்படும் என
கூக்கிரலிட்டனர்.இன்றும் இது தொடர்கிறது . இருப்பினும் ஒரு மதக்கொள்கையை இன்னொரு
மதம் எப்படி ஏற்றுக்கொள்ளும்? இதுதானே, அதாவது, மதம் தானே, மதம் உருவாக்கிய வேதம் தானே, மனித இனம் பிளவு படுவதற்கான காரணம்.
இதனை மீறும் பெண்ணுக்கு, ஊருக்கு பொது
இடத்தில் நிற்க வைத்து கல்லால் அடித்து மரண தண்டனை வழங்கப்படும் என இஸ்லாத்தில் மக்களுக்கு உணர்த்தப்பட்டது. இதனை இன்றளவும் இஸ்லாம் மதத்தில் கடைபிடிக்கப்படுகிறது.குரான்
வழிகாட்டுதல் படி நடக்கும் இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்கு ஓட்டுரிமையே கிடையாது.
இன்றைக்கு
இருக்கும் மதங்களில் இஸ்லாம் மதம் மனித குல ஒழுக்கத்திற்கு சிறந்த வழிகாட்டியாக உள்ளது. ஆனல்
இந்த மதத்தில் சுய சிந்தனையற்ற சில மத வெறியர்களால் தூண்டப்பட்டு தீவிரவாதம்
அதிகமாகிவிட்டது.சகிப்பு தன்மை இல்லா மதமாகிவிட்டது. இதன் விளைவாக மற்ற மத மக்களுக்கு அச்சுறுத்தல் எற்படுகிறது.
மக்களிடையே அமைதியின்மை ஏற்படுகிறது.
உலகில் பல நாடுகளில் மற்ற மத பெண்களுக்கு
ஆண்களுக்கு நிகரான உரிமை வழங்கப்படுகிறது . மற்ற மதத்தினருடன் சேர்ந்து வாழும்
இஸ்லாமியருக்கு இது ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது.
அறிவியல் அடிப்படையில் ஆணின்
உடலமைப்புக்கும் பெண்ணின் உடலமைப்புக்கும் மிகப் பெரும் வேறுபாடு உள்ளது. பெண்ணின்
ஒவ்வொரு உடல் உருப்புகளும் ஆணின் உருப்புகளைவிட அளவிலும் எடையிலும் மிகப்பெரிய
வேறுபாடு காணலாம் .
உதாரணமாக ஆணின் மூளை எடை 1.400 கிராம்
பெண்ணுக்கு அது 1.100முதல் 1.150கிராம் வரை
ஆணுக்கு உடலில் 6 லிட்டர் ரத்தம்
ஒடுகிறது .ஆனால் பெண்ணுக்கு 5லிட்டர் ரத்தம்தான் சராசரியாக ஒடுகிறது.
ஆணுக்கு ஈரலீன் எடை 1800 கிராம்
பெண்ணுக்கு அது 1250முதல் 1300 கிராம் உள்ளது.
ஆணைவிட பெண்ணுக்கு ஒரு விலா எலும்பு
குறைவு.
இயற்கை படைப்பிலேயே ஆணுக்கும் பெண்ணுக்கும்
இவ்வளவு வேறுபாடுகள் உள்ளபோது எப்படி ஆணுக்குப் பெண் சமமாகும்?பல நாடுகளில் பெண்களின் ஆதரவை
பெறுவதற்காக அரசியல் வாதிகளின் கொள்கை பிதற்றல் இது.
குடும்பம் அமைப்பதிலும் குடும்ப
நிர்வாகத்தில் பெரும் பங்கு வகிப்பதும் பெரும்பாலான நாடுகளில் பெண்களே முக்கியத்துவம்
பெறுகின்றனர்.இதைத்தான் ஆங்கிலத்தில் ஒரு பழமொழியாக,`;ஒவ்வொரு வெற்றிபெற்ற
ஆணுக்கும் ஒரு பெண் உள்ளார்’’ என கூறப்படுகின்றது
அப்படி அமைந்த குடும்ப ஆண்கள் மட்டுமே
வெற்றிபெற்ற ஆண்களாக தோன்றுகின்றனர். வெறும் அரசியல் ஆதாயத்துக்காக ஆணுக்கு பெண்
சமம் எனும் போடப்படும் கோஷத்தால்,நினைப்புத்தான் பொழைப்பைக் கெடுக்கிறது.என்பது போல் உள்ளது, பள்ளிப் பருவத்திலேயே
பெண்களுக்கு, ஆணுகளைவிட நாமென்ன மட்டமா ?
எனும் உயர்வு (superiority
complex) மனப்பான்மையினால் ஆணுக்கு சமமாக நாமும் சம்பாதிக்க வேண்டும் ,ஆண்கள்
செய்யும் கடினமான வேலைகளையும் நாம் ஏற்று செய்ய வேண்டும் எனும் எண்ண சிதைவினால்
சீரழிகின்றனர் .
இதையெல்லாம் பார்க்கும் போது இஸ்லாமிய
நாடுகளில் வாழும் பெண்கள் நிலை உயர்வாகவே தெரிகிறது.
கல்யாணம் செய்து கொள்வதும் குழந்தையைப் பெற்றுக்கொள்வதும்
நமது தலையெழுத்தா என்ன?என நினைத்து இக்கால
பெண்கள் மன சிதைவு அடைகின்றனர்.அமைதியான ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கை அமையாத பெண் ஆசிரியர்களாலும்
பள்ளிப்பாட திட்டத்தாலும் மன சிதறல்
அடைந்த பெண்களால் 30 வயதாகியும் ஆணோடு ஒத்துப்போய் பெண் குடும்பம் அமைக்க
முடியாமல் சீரழிகின்றனர் .
சில பெண்கள் ‘கல்யாணமே வேண்டாம் என்னால்
வாழமுடியும்’ என சவால் விட்டு 40 வயதுக்கு மேல் நமக்கு ஒரு ஆண்துணை இருந்தால் நலம்
என எண்ணம் வருகிறது. காரணம் தன் பெற்றோர் போன்றவர்களை நம்பி வாழ்ந்து
முடித்துவிடலாம் என்று இருந்தபோது ஒன்று அவர்களுக்கு வயதாகிவிட்டுருக்கும் அல்லது
இறந்து போய் இருப்பார்கள்.ஒரு ஆணுக்கோ
அல்லது பெண்ணுக்கோ ஆதரவற்ற நிலை வரும்போது எண்ணங்களும் கொள்கைகளும் மாறும்.
இப்பொழுதெல்லாம் உலகில் பெண் 10லிருந்து
11 வயதிலேயே குழந்தை பெறும் வயதை எட்டிவிடுகிறாள்.அப்போதே ஆணை ஆளும் தகுதியும்
உலகத்தை புரிந்து கொள்ளும் பக்குவத்தையும்
எட்டிவிடுகிறாள். ஆணுக்கு 18- 20 வயதுக்குமேல்தான் உலகைப் புரிந்து
கொள்ளும் பக்குவம் எற்படுகிறது. இதுதான் உண்மை.
உலகில் பெரும்பாலான மதங்கள் இந்த உண்மையை
எற்றுக்கொண்டாலும் சட்டப்படி அனைத்து நாடுகளும் பதின்ம வயது திருமணங்களை தடை
செய்துள்ளன.
இஸ்லாமிய நாடுகளைத்தவிர பிற நாடுகள்
அதாவது உலக மக்கள் தொகையில் 6ல் 5 பகுதி நாடுகள்
பதின்ம வயது திருமணங்களை தடை செய்துள்ளன.
மனிதன் இன்னும் கூட முழு நாகரீகத்தை எட்ட
வில்லை ஆனால் நாகரீகம் அடைந்து விட்டதாக நடிக்க தெரிந்து வைத்துள்ளான் .
மனித நாகரீகத்தில் மாற்றங்கள் என்பது
உலகில் 500 ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரிய வேறுபாடுகள் காணப்படுகிறது. கடந்த கால
வரலாறு நமக்கு இதை உணர்த்துகிறது. உலகில் மனிதனை சண்டையிட்டு அதாவது போர் புரிந்து
வெல்லவேண்டும் என்பது திராவிட இனத்தவருக்கும் முஸ்லீம் இனத்தவருக்கும் உண்டு.
ஆனால் கிறித்தவர்கள்(ஆங்கிலேயர்) மற்ற
இனத்தவரிடையே வியாபாரம் செய்தும் மனிதனை மூளைச்சலவைசெய்தும் கிறித்துவ மதத்தை
பரவச்செய்து மக்களை தங்கள் ஆளுகைக்கு கொண்டுவரலாம் என பதிய சாகச நாகரீகங்களை உருவாக்கினர்.
அதன்விளைவுதான் 15ம் நூற்றாண்டின்
துவக்கத்தில் பிரிட்டனைச் சேர்ந்த கிழக்கு இந்திய கம்பனி வியாபார நோக்கமாக ஆரம்பித்து ஆசிய,ஆப்பரிக்கா,மற்றும்
ஆஸ்ட்ரேலியா கண்டங்கள் முழுவதையும் சுமார் 500 ஆண்டுகளுக்கு தங்கள் ராஜ தந்திர
சூழ்ச்சியால் ஒரே ஆட்சியின் கீழ்
பிரிட்டிஷார் கொண்டுவந்தனர்.பல நாடுகளில் முஸ்லீம் ஆடசியாளர்களை உள்ளூர் மக்களின்
ரசாபாசங்கள பயன்படுத்தி விரட்டிவிட்டனர்.
20 ம் நூற்றண்டின் துவக்கத்தில் மக்கள் விழிப்புணர்வு அதிகமாகிவிட்டது, உலகம்
முழுக்க சுதந்திர வேட்கை வளர
ஆரம்பித்ததின் விளைவாக ஒவ்வொரு நாடாக விடுவிக்கப்பட்டு தற்போது ஆங்கிலேயர்கள் ஆடி
அடங்கி உள்ளனர். இரண்டாம் உலகப் போர் முடிவுரும்போது இதற்கு வழி வகுத்தது.
இதன் விளைவாக ஆங்கிலேயரின் கலாச்சார
பாதிப்பு இன்று உலகம் முழுக்க பரவியுள்ளது.
1500 ஆண்டுகளுக்கு முன் இஸ்லாமிய மதம்
பரவ ஆரம்பித்தபோது நாடு பிடிக்கும் ஆர்வமும் வெறியும் இஸ்லாமியருக்கு இயற்கையாக
அமைந்து விட்டது. இதற்கு காரணம் கிறித்தவர்கள் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான்.
1000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் மீது
படையெடுத்த முஸ்லீம் மன்னர்கள் வன்முறை
மூலம் அதாவது அடக்குமுறை மூலம் இந்தியாவின் கலாச்சார செல்வங்களான கோயில்களை
இடித்து பொன்னையும் பொருளையும் வாரிச்சென்றனர்.வன்முறை மூலம் பிற மதத்தினரை மத
மாற்றம் செய்துள்ளனர்.
‘ஆடுற மாட்டை ஆடி கறக்கணம்,பாடுற மாட்டை
பாடிக்கறக்கணம்’இது கிராமத்து சொல் வழக்கு . இதை சரியாக தெரிந்துவைத்திருப்பவர்கள்
ஆங்கிலேயர்கள். (கிறித்தவர்கள்)
ஆனால் இதில்
பொறுமையும்,சகிப்புத்தன்மையும் இல்லாத இஸ்லாமியர் வன்முறையில் அதிகம் நம்பிக்கை
வைத்திருப்பவர்கள்.இதனாலேயே உலகில் அமைதியின்மை ஏற்படுகிறது.
இதனை கண்ணுற்ற ஆங்கிலேயர்கள் பிற
மதத்தினரை உணவு கொடுத்தும் ஒதுக்கப்பட்டவர்களை,ஒடுக்கப்பட்டவர்களை ‘யேசு உங்களை
அரவணைப்பார்’ என ஆறுதல் வார்த்தை கூறியும் வசியப்படுத்தினர்.இன்றும்
செய்கின்றனர். உலகில் இன்றளவும்
முஸ்லீம்களின் வன்முறை கலாச்சாரத்தை(violent attitude) ஆங்கிலேயர்கள் தந்திரமுறை
கலாச்சாரம்(diplomatic attitude)
அடக்கியாள்கிறது.
சுருக்கமாக சொன்னால் கிறித்தவர்கள் பொய்
பேசுவார்கள் ,இஸ்லாமியர் பொய் பேச மாட்டார்கள். இதுதான் இன்றய உலகின் பிரச்சினை.
கிறித்தவர்களின் கலாச்சாரம் உலகம்
முழுக்க பரவுவதை இஸ்லாமியர்களால் சகித்துக்க கொள்ள முடியவில்லை. இதன் விளைவாக
எதிர்மறை கலாச்சாரத்தை மக்களிடையே
பரப்பினர்.
எதிர்மறை என்பது உதாரணமாக; நாம்
கிழக்குநோக்கி சூரியனை வணங்கினால் இஸ்லாமியர் மேற்கு நோக்கி பிரை நிலவை வணங்குவர்.
அடுத்து நாம் எழுதும் முதல் எழுத்து இடப்புறம் இருந்து வலப்புறம் எழுதினால்,இஸ்லாமியர் வலப்பறம் ஆரம்பித்து இடது புறம் முடிப்பர்.
கிறித்தவரோ அல்லது இந்துவோ கிராப் வெட்டி
மீசைவைத்தால் ,இஸ்லாமியர் மீசை எடுத்துவிட்டு தாடி வளர்த்துக்கொள்வர்.மொட்டை
அடித்துக்கொள்வர்.
இஸ்லாமியர் பன்றி மாமிசம் உண்ண
மாட்டார்கள் மாறாக ஆங்கிலேயர் பன்றியை விரும்பி உண்பர்.
கிறித்தவர்கள் பெண்களை தேவாலயத்துக்கு
அழைத்துச் செல்வர். ஆனால் இஸ்லாமியத்தில் பெண்களை வீட்டை விட்டு வெளியே அனுப்ப
அனுமதி இல்லை.
இந்த எதிர்மறை கலாச்சாரத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள்
இந்தியர்கள்தான்.இந்தியாவை முஸ்லீம் மன்னர்கள் சுமார் 1000 ஆண்டுகள் ஆண்டுள்ளனர்
இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது வட இந்தியர்கள்.இதனால் வட இந்தியர்கள் பேசிவந்த
இந்துஸ்தானி மொழி வழக்கொழிந்து புதிய இந்தி
மொழி உருவாகிவிட்டது.
தென்னிந்தியாவின் முரட்டுத்தனமான திராவிடர்களை மூர்கத்தனமான
இஸ்லாமியர்களால் வெற்றி கொள்ளமுடியவில்லை.இதனால் தமிழ் மொழியும் தமிழ்
கலாச்சாரமும் ஓரளவுக்கு இன்றுள்ள நிலையை தக்கவைத்துள்ளது.
வட இந்தியாவில் முஸ்லீம்கள் கொடுத்த தொல்லையால் மதம் மாற மனம்
இல்லாத ஜாதி இந்துக்கள் முஸ்லீம்
ஆட்சியாளர்களை திருப்தி படுத்த இந்து பழமை வாதிகளிடமிருந்தும் தப்பிக்க 17ம்
நூற்றாண்டில் ஒரு புதியமதம் உருவாகியது. அதுதான் சீக்கிய மதம். அம்மக்களை சிங் என அழைக்கப்படுகின்றனர்.இவர்களின் மத
நூல் ஆதி கிரந்தம்
இந்த மதத்தை உருவாக்கியவர் குருநானக். இந்த மதத்தின்
முக்கிய குறிக்கோள்
1-தற்காப்பு
2-தன் இனத்தை பாதுகாக்க வீட்டுக்கு
ஒருவரை நாட்டுக்காக அற்பணித்தல்
(இதற்கா ஒவ்வொரு குடிமகனும் 5
ஒழுக்கங்களை கடைபிடிக்க வேண்டும்)
1தன்னை தூய்மை படுத்திக்கொள்ள ஒரு சீப்பு
இதன் மூலம் தலையை திருத்திக்கொள்ளவேண்டும்
2-முகம் பார்க்க ஒரு சிறிய கண்ணாடி
3-தலைப்பாகை
4-உடையையும் தலைப்பாகையையும்
திருத்திக்கொள்ள ஒரு ஊசி
5-தற்காப்புக்காக ஒரு குறுவாள்.வாழ்நாள்
முழுக்க ஒரு பஞ்சாபி இதை கடை பிடிக்க வேண்டும்
இதுதான் பஞ்சாபி.
பஞ்சாபி எனில் 5 ஒழுக்கங்களை
கடைபிடிப்பவர் என பொருள். அதுமட்டுமல்ல பஞ்சாப் எனில் 5 நதிகளை உள்ளடக்கிய மாநிலம்
எனவும் பெயர் பெற்றுள்ளது. உலகில் வளமான பூமியில் பஞ்சாப் மாநிலமும்
ஒன்று.இந்தியாவின் உணவு உற்பத்தியில் முதன்மை மாநிலமாக விளங்குகிறது.
இவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள்
என்பதெல்லாம் இக்காலத்தில் காணமுடியாது . காலம் மாறிவிட்டது.
இதுவரை உலக கலாச்சாரம் பற்றி நாம்
சுருக்கமாக பார்த்தோம். இதன் பாதிப்பு
நமது தமிழகத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என பார்ப்போம்.
ஆன்மீக கலாச்சாரம் உலகம் முழுக்க உள்ளது.
ஆன்மீகம் என்பது ஒருவகையான சுய இன்ப பழக்கம். எப்படி ஒரு மனிதன் மது மற்றும்
புகையிலை, கஞ்சா போன்ற போதை தரக்கூடிய சுய இன்பத்திற்கு அடிமை ஆகிறானோ அதைபோல
ஆன்மீக பழக்க வழக்கங்கள் யாவும் ஒரு மனிதனை சடங்கு,சாஸ்த்திரம்,பூஜை,போன்ற அருவ
வழிபாட்டின் மூலம், அடிமை படுத்துகிறது.
உழைக்க வேண்டிய வயதில் உடலை வருத்தி மனதை
வருத்தி வருடத்திற்கு ஒரு முறை ஊர்கூட்டி ஆயிரக்கணக்கில் சேர்த்த பணத்தை அல்லது
கடன் வாங்கியாவது படையல்போட்டு சபரி மலைக்கு சென்று வந்தவுடன் உடல் சோர்வடைவதும்
சக்கரை வியாதி உடலுக்கு வந்ததையும் உணர முடியாமல் மீண்டும் மீண்டும் 18 ஆண்டுகள்(18*5000=ரூ.90,000) தோறும்
குறைந்த பட்சம் ரூ.5000.00 நெலவழித்து 18 ஆண்டுகளில் அய்யப்ப மலைக்கு செலவழிப்பதை விட்டுவிட்டு சேமிப்பாக வங்கியில் போட்டால் அல்லது எ ல். ஐ. சி யில் முதலீடு செய்தால்
கூட 4அல்லது 5 லட்சமாவது பெறுவர்.
இதன்மூலம் தன் பெண்ணுக்கோ அல்லது மகனுக்கோ திருமணம் முடிக்கலாம்.
அதுவல்லாமல் 18 ஆண்டுகள் அய்யப்ப
மலைக்கு,செல்லவேண்டும் என அவனை உசுப்பேற்றி பணம் விரயம் ஆவதையும் உணரத்தெரியாமல்
உடல் நலம் பாதிக்கப்பட்டும் மன நலம் இன்றி இன்றும் தமிழக கிராமங்களில் ஏராளமான
இளம் வயது நோயாளிகளை காணலாம். உடலையும்
மனதையும் சீரழிக்கும் ஒரு உழைப்பாளிக்கு பக்தி மார்கம் தேவையா?
அதுமட்டுமல்ல தன் நெறுங்கிய உறவினர்
மரணம் அடைந்தால் கூட 'நான் மாலை போட்டுள்ளேன் அங்கே வரக்கூடாது’ என கூறுவான்.
மாலை போடும் அர்த்தம் என்ன? ‘விரத
காலத்தில் தனக்கோ அல்லது தன் சுற்றத்தாருக்கோ மரணம் நேரக்கூடாது’ என்பதுதானே அதன்
பொருள். இந்த சுயசிந்தனை அற்ற இளைஞனால் சமுகத்துக்கு என்ன நன்மை?
ஒரு மனிதன் தன் வாழ்க்கை வளம்பெற
வேண்டும் என்பதற்காகத்தானே விரதம் இருக்கின்றான்? அப்படி இருக்கும் போது நண்பர்
குழாமோடு அய்யப்ப மலைக்கு சென்று வீடு திரும்பும் வழியில் விபத்து ஏற்படுகிறதே,அது
ஏன்? இதில் மூடுந்தில் பயணம்
செய்கிறவர்கள் சிலபேர் பிணமாகத் தானே வீடு வந்து சேர்கின்றனர்?.இது ஆண்டு தோறும்
டிசம்பர் சனவரி மாதங்களில் நடப்பதை பல ஆண்டுகளாக பத்திரிக்கை வாயிலாக நாம் படிக்கிறோமே,அப்பொழுதும் மிச்சமிருக்கும்
மனிதர்களாவது சுய இன்ப ஆன்மீக பழக்கத்தை கைவிட மனம் வராத இந்த அய்யப்ப பக்தர்களின்
திருமுகங்களின் மறு முகங்களை காண்பீர்!
2 comments:
குர்ஆனில் உள்ளது.குர்ஆனில் உள்ளது. என்று நிறைய கப்ஸா விட்டுள்ளீர்கள்.
கீழ்காணும் இந்தவரியையை குர்ஆனில் இருந்து எடுத்துக்காட்டினால் உங்களுக்கு 1 கோடி பரிசு.
பெண்களை ஆலயத்தில் நுழைய விட்டால் அங்கிருக்கும் ஆண் பூசாரிகளுக்கு சபலம் ஏற்படும்.எனவே ஆலயத்தின் புனித தன்மை கெட்டுவிடும் என குரானில் எழுதப்பட்டது.
ஆன்மிக சிந்தனை என்பது மனிதனுக்கு மன ஒழுக்கம் தேவை என்கிற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது.உலகில் உள்ள அத்தனை மதங்களும் இதனை வலியுறுத்துகின்றன. இந்த சிந்தனை உருவாகி 6000-ம் ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இது ஒரு சுய இன்ப பழக்கம் போன்றது.ஆழ்ந்து சிந்தனை செய்தால் இதில் மத இடைத்தரகர்களின் ,பணம் பண்ணும் சுயநலம்,உழைப்பாளிகளின் பணத்தை சுரண்டும் அய்யோக்கியத்தனம் வெளிப்படும்.உழைப்பாளிகளுக்கு கடவுளால் ஒரு நன்மையும் இல்லை.இதில் கப்சாவிடுவதற்கு என்ன இருக்கிறது.ஏழாம் அறிவு இயக்கம் பணம் பண்ணும் இயக்கம் அல்ல.உழைப்பாளிகளை தன் நிலை உணர்ந்து பொருளாதார சேமிப்புக்கு வழிகாட்டும் இயக்கம்.
Post a Comment