Saturday, April 21, 2012

2-எத்தனைகாலம் ஏமாற்றுவார்-கலைஞரின் மறுமுகம்

                                                             -3-
     2-  எத்தனைக்காலம் ஏமாற்றுவார் - கலைஞரின் மறுமுகம்
31.08.2011 அன்று தமிழக தொலைக்காட்சிகளில் செய்தி ஒளிபரப்பினர் .
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, ‘மாநில முதல்வருக்கு மரண தண்டணையை குறைக்கும் அதிகாரம் உள்ளது’என கூறினார்.
இதைகேட்டதும் சிரிப்பதா ? அழுவதா ? என தெரியவில்லை.
தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக பொறுப்பில் இருந்தவர்.
தமிழுக்காக ,தமிழ் வளர்ச்சிக்காக,தமிழன் எங்கெல்லாம் பாதிப்புக்கு உள்ளாகின்றானோ அங்கெல்லாம் குரல் கொடுத்தவர்.

கடந்த காலங்களில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து அதனால் இந்திய இறையாண்மைக்கு ஆபத்து வந்து விட்டதாகவும்,ஆட்சியை கூட இழந்தவர்.
இத்தகைய உணர்வினாலும்,தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ எத்தகய தியாகத்தையும் செய்ய துணிச்சல் மிக்கவர் எனகிற நம்பிக்கையில் தமிழக மக்கள் மீண்டும் மீண்டும் இவரை முதல்வராக்கினர்.
தன்னுடைய தன்னிகரற்ற பேச்சாற்றலாலும், எழுத்தாற்றலாலும் தமிழர்களை மயக்க நிலையில் வைத்திருந்தார்.
சமீபத்தில் நடந்த பொது தேர்தலில் இவர் சாயம் வெளுத்து போனது.
தமிழன் மானத்தோடு வாழ முடியாமல் இட ஒதுக்கீடு கேட்டு வாழவேண்டிய நிலைக்கு வந்து விட்டான்
இதே நிலை வேண்டி இலங்கையிலும் தமிழர்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வந்தனர் . இழிநிலைக்கு வந்ததால் ஈழ தமிழர்களானவர்.
மலயாள மொழியில்,ஈழவர் எனில் தாழ்த்தப்பட்டவர் என அர்த்தமாகிறது தமிழன் தன் மானத்தோடு வாழவேண்டும் , தன்னாட்சி பெறவேண்டும் எனகிற நோக்கத்துடன், பன்னாட்டு தமிழர்களின் ஆதரவுடன் விடுதலை புலிகள் என்கிற அமைப்பை ஏற்படுத்தி இலங்கை அரசை பணிய வைக்கும் அளவுக்கு தன் வல்லமை பொருந்திய ஆற்றலால் திரு பிரபாகரன் அவர்கள் பல உள் நாட்டு போரை நிகழ்தினார்.
ஒரு இன வளர்ச்சியில் ,இன்னொரு இனம் அழிந்து போகும் ,ஒருஇனம் அழிந்தால் இன்னொரு இனம் உருவாகும் . இதுதான்  வரலாற்று உண்மை.
ஆனால் இன்றளவும் தமிழினம் தாக்கு பிடித்து வாழ்கிறது.சுய சிந்தனை அற்று வாழ்கிறது ,வளர முடியவில்லை.

தன் மானமுள்ளவன்,
சுய சிந்தனையாளன் ,
இன உணர்வுள்ளவன்(தாய்மை உணர்வு)எனும் குணமுடைய தலைவன் இருந்தாலொழிய இனம் வளர்ச்சியடையா.
ஈழத்தமிழர்கள் விரும்பியதெல்லாம்
தன்னாட்சிபெற்ற அல்லது சட்டரீதியிலான இட ஒதுக்கீட்டு வாழ்க்கைமுறை.சொந்த மண்ணில் அவர்கள் இரண்டாந்தர குடி மக்களாக வாழவேண்டிய நிலை.
பொறுத்து,பொறுத்து பார்த்து ,வெகுண்டெழுந்து கையில் ஆயுதம் ஏந்தினர். போராட்டமே வாழ்க்கை முறையாகிவிட்டது.தலைமறைவு வாழ்க்கை பழக்கமாகிவிட்டது.தமிழகம் உட்பட உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள் ஆதரவு குரல் கொடுத்தனர், ஆதரவு கரம் நீட்டினர்.

போராடும் ஈழத்தமிழர்களுக்கு,தமிழக மக்கள் ஏதாவது ஒருவகையில் அதாவது பணமோ அல்லது உணவுபொருளோ கொடுத்துதவ முன்வந்தனர் , உதவியும் செய்தனர் .
இந்தியாவில் தமிழர்களின் ஒட்டுமொத்த எழுச்சியைக்கண்டு இந்திய தலைமை நிர்வாகம் ஒரு சூழ்ச்சியை செய்தது
இங்கையில் அமைதி ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இந்தியா இலங்கைக்கு அமைதி படை அனுப்பியது.அமைதி படை என்கிற பேரில் ஈழ தமிழர்களின் போராட்ட உணர்வுக்கு அணைபோட்டது.
ஒரு நாட்டு மக்களின் அமைதி வாழ்க்கைக்கு ராணுவம் எண்றுமே துணை நிற்காது. மூர்கதனத்தையும் அடக்கு முறையும் தான் வெளிப்படுத்தும்.இது புரியாத திரு ராசிவ்காந்தி தன் மரணத்தை தானே விதைதுக்கொண்டார்.

இந்தியா, இலங்கை போன்ற அண்டை நாட்டு தலைவர்களெல்லாம்  (சார்க்நாடுகளின் கூட்டமைப்பு)ஒரு தொழிற் சங்கம் (UNION OF NATIONAL HEADS) பல ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்படுத்திக்கொண்டனர்.
அதாவது அண்டை நாடுகளில் எந்த ஒரு இன பிரச்சினையோ ,அல்லது எந்தவிதமான மக்கள் போராட்டங்களிலோ ஒருநாடு இன்னொருநாட்டில் தலையிடக்கூடாது. 
ஏனெனில் அப்பொழுதுதானே அந்தந்த நாட்டு தலைவர்கள் சுகத்தை அனுபவிக்கமுடியும் .இது ஒருதனிமனிதனின் சுயநல எண்ணம்தான் .மக்கள் பொது நலனுக்காக போராடியது போல் நாடகமாடி தலைமை பதவிக்கு வந்தவுடன்,ஒரு தனி மனிதனின் சுயநல வெளிப்பாடு இப்படித்தான் வெளிப்படுகிறது. இது ஒரு வரலாற்று உண்மை.

நமது முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியும் இத்தகய தலைவரே என்பதை நிருபித்து விட்டார் .
5முறை முதல்வரானவர்,தற்போதய முதல்வருக்கு ஒரு புதிய கண்டு பிடிப்பாக,;முதல்வருக்கு மரணதண்டனையை குறைக்கும் அதிகாரம் உள்ளது’’ என்பது தான் அந்த உண்மை. இவர் ஆட்சியில் இருக்கும் போது ஏன் செய்யவில்லை?
எத்தனைகாலம்தான் ஏமாற்றுவார் இந்த  நாட்டிலே!
 திரு .கருணாநிதியின்
திருமுகத்தின் மறுமுகம் இதுதான்

     
                        
                                                         
           

                                                      
             
                                       

No comments: