31- இதிகாச தேசியவாதிகளின் மறுமுகங்கள்
இன்றயச் செய்தித் தாளில்,(ஏப்ரல்2012) ‘இந்திய
நதிகளை ஒன்றாக ஏன் இணைக்க க்கூடாது’ என உச்ச நீதி மன்றம் மத்திய அரசைப் பார்த்து
வினா எழுப்பியுள்ளது,
இன்றய நாளில் இந்திய ஆட்சியாளர்கள் யாவருமே
இந்திய மக்களுக்காக கவலைப்படுவதாக நடிக்கின்றனர்,நாடகம்நடத்துகின்றனர்.ஆட்சியாளர்ளை
வழிநடத்தவோ அல்லது அறிவுரை கூறவோ இந்திய பத்திரிக்கைகளோ தொலைக்காட்சி ஊடகமோ எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
எதிர்கால இந்தியாவுக்கு நெஞ்சுரம் மிக்க
பகுத்தறிவாத இளைஞன் தேவை. இந்திய மக்களின் இதிகாச மனப்பான்மையை உடைத்தெரியும்
பள்ளிப் பாடத் திட்டங்களை மாற்ற வேண்டும்.
ஆரியர்களின் வருகையால் ஒட்டுமொத்த இந்திய
மக்களையும் வைணவ மதக் கொள்கையான-ராமாயண கதாபாத்திரங்களான- தசரதன்,கோசலை ராமன்
சீதை,லட்சுமணன் மற்றும் அனுமன் போன்ற அவதாரங்களும் மற்றும்,மகாபாரத,கதாபாத்திரங்களான,தர்மன்,பீமன்,அர்ச்சுனன்,நகுலன்,தி-ரவுபதி
மற்றும் கிருஷ்னன் போன்ற அவதாரங்கள் மக்கள் மனதில் ஆட்கொண்டுள்ளன.இவையாவும் 2000
ம் ஆண்டுகளுக்கு மேலான பழக்கமானதால் ரத்தத்தில் ஊரிய, எளிதில் மாற்றமுடியாத
குணமாகிவிட்டது.இந்த குணத்தை மக்கள் மனதிலிருந்து மாற்றுவது அவ்வளவு எளிதான
காரியமல்ல.
ஒவ்வொரு கிராமத்திலும் கிராம எல்லை
காக்கும் தெய்வமாக திரவுபதி அம்மன்(அங்காளம்மன்,செல்லியம்மன்,எல்லையம்மன்,பாஞ்சாலிஅம்மன்,தீப்பாய்ந்தஅம்மன்,காளியம்மன்,கங்கையம்மன்,மாரியம்மன்,பாளயத்தம்மன்,செ-ங்காளம்மன்
போன்ற பெயர்களும் உண்டு) வழி பாடு
இன்றளவும் நடத்தப்படுகிறது
ஆரியர்கள் நடிப்பில் கைதேர்ந்தவர்கள்
என்பதற்கு இன்றும் கிராமங்களில் மேற்சொன்ன கதாபாத்திங்களை கொண்டு நடத்தப்படும்
நாடகங்களே சாட்சி.
நடிப்பு
மூலமே மக்கள் மனதை மாற்றமுடியும் எனும் அசைக்கமுடியாத கொள்கையை கொண்டவர்கள்
ஆரியர்கள் .
அதே தந்திர முறைதான் சினிமா எனும்
ஊடகத்தின் மூலம் மக்களை இன்றளவும் மாய வலையில் சிக்கவைத்துள்ளனர்.
இதனை
விடுவிக்க நெஞ்சுரமிக்க துடிப்பான பகுத்தறிவாத இளைஞன் தேவை.
இனிவரும் தலைமுறையில் இந்த மாற்றத்தை
எதிர்பார்க்கலாம்.
அப்பொழுதுதான் இந்திய நதிகளை இணைக்கும்
சட்டம் உருவாகும்
வேலைக்கு உணவு திட்டத்தின் மூலமாகவும் ,100
நாள் வேலை மூலமாகவும் இத்திட்டத்தினை எளிதாக செய்து முடிக்கலாம்.
ஆனால் இந்திய ஆட்சியாளர்கள் இதை செய்ய
முன்வரமாட்டார்கள். இந்திய ஆட்சியாளர்கள் பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்த மக்கள்
வாழும் நிலப்பகுதியில்தான் வற்றா ஜீவ நதிகளான கங்கை,சிந்து மற்றும் மகாநதிகள்
ஓடுகின்றன.கடலில் வீணாக கலக்கும் இந்த நதிகளை, “தென்னிந்தியாவுக்கு திருப்பினால்
தமிழகம் வளம்பெரும். தமிழர்கள் வடக்கே வாழும் மக்களைவிட செல்வத்தில் வளர்ந்து
விடுவார்கள். இதனால் நமக்கு இழுக்கு’ என வட இந்தியர்கள் நினைப்பது மனித இயல்பு. இது ஒரு கும்பல் குணம் .மனிதர்களில் கும்பல்
குணம் என்பது கொடூரமானது. தனிமனித குணம் உன்னதமானது .கும்பல் குணம் சுய நல மிக்கது .தனிமனித குணம் பொது நல மிக்கது.
உலகத்தில் கும்பல் குணத்தால்
உருவானதுதான் மதவழி கோட்பாடான கிறித்துவம் ,இஸ்லாம் மதங்கள். இதற்கு முன் உருவான
இந்து மற்றும் புத்தம் மதக் கோட்பாடுகளும் கும்பல் குணம் கொண்டது.
பகுத்தறிவாதத்தில் உருவான புத்தமதம் பின்னாளில் கும்பல் குணத்தால் சடங்குகள்
நிறைந்த இந்து மதம் போல் மாறிவிட்டது.
இந்த கும்பல் குணத்தை அறவழிக்கு மாற்ற
அரசாங்கம் தேவை.அரசின் தலைவனாக வருபவன் மக்களை வழிநடத்தும் சத்ய சீலனாக இருக்க
வேண்டும். கடந்த கால உலக வரலாற்றை நோக்கும் போது அப்படி ஒரு சத்திய சீலன் அல்லது
மக்களின் மூட நம்பிக்கையை உடைத்தெரிந்து நாட்டின் வளர்ச்சிப்பாதையில் ஆக்கபூர்வமாக
மக்களை அழைத்துச்சென்ற ஒரே தலைவன் சென்ற நூற்றாண்டில் சீனாவில் தோன்றிய மா சே துங் மட்டுமே. அடுத்து க்யூபாவின்
பிடல் கேஸ்ட்ரோவை சொல்லலாம்.இவர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
பொதுவுடமைக்
கொள்கையை வலியுருத்தி நமது நாட்டு மணவர்களுக்கு பாடத்திட்டங்கள்
உருவாக்கப்படவில்லை. இதனாலே அரசியலுக்கு வரும் இளைஞர்களுக்கு அந்த எண்ணம்
இருப்பதில்லை.
வட இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள் மத
உணர்வுகளையும் சாதிய உணர்வுகளையும் தூண்டி
பணத்தை செலவு செய்து எளிதில் தேர்தலில் வெற்றி பெற்று விடுகின்றனர்.ஒட்டுமொத்த
இந்தியாவில் இதிகாச உணர்வுகள் இருந்தாலும் வர்ணாசிரமத்தால் உருவான சாதிய
உணர்வுகளால் தென்னிந்திய -குறிப்பாக தமிழக மக்கள் ஏற்றம் பெற்று விடக்கூடாது
என்பதுதான் வடவர்களின் எண்ணம். ஆரியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியில்
உருவானது.ராமாயண காலத்திலிருந்து உருவானதுதான் இந்த எண்ணம். இன்றளவும் இந்த
நிலைதான் நீடிக்கிறது.பல மொழி பல இனம் கொண்ட இந்து மதத்தை பின் பற்றும் சுமார் 80
கோடி மக்கள் சம பொருளாதார வளர்ச்சி சமமான கல்வியறிவு பெற்றிடவேண்டுமாயின் தேசிய
நதி நீர் கொள்கையை வகுக்க வேண்டும்.
நீர்த்தேக்கங்களின் கட்டுமான பணி மத்திய
அரசின் கீழ் வரவேண்டும்.நீர்த்தேக்கங்களை இயக்கும் அதிகாரம் (பூட்டு,சாவி) மத்தியரசின்
கீழ் வரவேண்டும். எப்படி காற்று,வானம் நிலவு சூரியன் உலகில் அனைத்து மக்களுக்கும்
பொதுவானதோ நதிகளும் அனைத்து மக்களுக்கும் பொது எனும் உண்மையை மாநில அரசுகளுக்கு
மத்திய அரசு புரிய வைக்க வேண்டும்.நதிகள் எங்கு தோன்றி எங்கு கடலில் கலக்கிறதோ
அதன் இரு கரை மக்களும் பயன் படும் வகையில் நதி நீர் பங்கீட்டு கொள்கயை வகுக்க
வேண்டும். இதற்கு நடுநிலை தவரா வலிமையான
ஆட்சியாளன் தேவை.
வலிமையான ராணுவ பலத்தையும் அடக்குமுறை
கொள்கைகளும் கொண்ட இந்தியாவின் ஆட்சியாளர்கள் எத்தனை காலம் தான் மறைமுகமான
ஒருதலைப்பட்ச கொள்கைகளை கையாள்வர் என்பது போகப்போக புரியும். அவர்களின்
திருமுகங்களின் மறுமுகங்களை மக்கள் காணும் நிலை வெகுதூரத்தில் இல்லை.
No comments:
Post a Comment