27- மருத்துவர்களின்
மறுமுகங்கள்
‘தனது ஆறுமாத கர்ப மனைவிக்கு தாங்க
முடியாத வயிற்று வலியால் மருத்துவ மனையில் சேர்த்த சில மணி நேரங்களில் இறந்து
போய்விட அங்கு மருத்துவம் பார்த்த ஒரு பெண் மருத்துவர், சரியாகவும் அக்கறையுடனும்
மருத்துவம் பார்க்க வில்லை என அதிர்ச்சிஅடைந்த கணவன் அதிலிருந்து மீள முடியாமல்
மருத்துவரை தாக்கி மரணமடையச் செய்துவிட்டான்.’ இது தாத்துக்குடியில் நடந்ததாக
ஊடகங்களில் வந்த செய்தி.
இதுபோன்று எத்தனையோ மருத்துவர்கள்
பொறுப்பில்லாமல் நடந்து கொண்டு கடந்த காலங்களில் எத்தனையோ நோயாளிகளை மரணமடையச்
செய்துவிட்டனர். இதற்கு ஆதாரங்கள் கேட்டால் கிடைக்காது. மருத்துவர்கள் செய்யும்
கொலைகளுக்கு தண்டனை கிடையாது.அவர்களுக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது.
இந்த சட்ட பாதுகாப்பு மேல் தட்டு வர்க்கமான
ஆளும் இனம் அல்லது வெள்ளை இனம் சார்ந்தவர்கள் மட்டுமே மருத்துவம் பயில வேண்டும்
அல்லது ஆட்சியாளர்களுக்கு துணை நிற்கும் பொறியியலாளர்கள் அவர்கள் மேற்பார்வையில்
கட்டப்படும் கட்டடமோ அல்லது மேம்பாலமோ இடிந்து விழுந்தால் கூட அவர்கள் மீது சட்டப்படி
நடவடிக்கை எடுக்க இயலாது. அதுபோலவே சட்டம்பயின்ற வழக்குறைஞர்கள் தவறு
இழைத்தவர்களுக்கு,அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சார்பாக நீதி மன்றத்தில் தெரிந்தோ அல்லது வேண்டுமென்றோ
வாதாடினால் கூட அவர்களுக்கு தண்டனை கிடையாது..
நோயாளிகளுக்கோ,பொய்குற்றம்
சாற்றப்பட்டவர்களுக்கோ,பொறியியலாளர் மேற்பார்வையில் கட்டப்படும் கட்டிடம் அல்லது
மேம்பாலங்கள் இடிந்தாலோ இந்த மூன்று இன மேதாவிகளுக்கு சட்டப்படி தண்டனை
இல்லை.இவர்களுக்கு சட்டப்பாதுகாப்பு உண்டு.
இது ஆளும் மற்றும் மேல்தட்டு வர்கம்
உருவாக்கிக்கொண்ட சட்டம். இதற்கெல்லாம்
தண்டிக்க சட்டத்தில் இடமில்லை. தவறிழைத்தால் அவர்கள் மனசாட்சிதான் அவர்களை கொல்லும். இந்த
மாதிரியான மக்களை ஏமாற்றும் முறைகளை மாற்றியமைக்கப்படவேண்டும்
மருத்துவர்களுக்கு மருத்துவ இனச் சங்கம் உள்ளது. இறந்துபோன மருத்துவருக்காக இந்த மருத்துவர்கள்
போரடவில்லை.எதிர்காலத்தில் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள (இவர்கள் மீதே
இவர்களுக்கு நம்பிக்கை இல்லை,நாமும் இதேபோல் செய்துவிடுவோமோ என்கிற பயம்)
போராடுகின்றனர்.
மருத்துவமனையில் நோயாளியை சேர்த்த உடன்
நோயாளியின் ரத்த தொடர்புடைய சொந்தங்களிடம், ‘மருத்துவர் மேற்கொள்ளும் அறுவை
மருத்துவ சிகிச்சையில் நோயாளியின் உயிருக்கு பாதகம் ஏற்பட்டால் மருத்துவர்
பொறுப்பல்ல’ என எழுதி வாங்கியபின்னரே மருத்துவர் நோயாளிக்கு மருத்துவம் பார்க்க
ஆரம்பிக்கின்றார்.
இந்த முறையை மாற்ற வேண்டும். இந்த முறை
அடிமைகள் வாழும் நாட்டில் இருக்கும் சட்டம போல் உள்ளது.மாறாக ‘மருத்துவர்
மேற்கொள்ளும் அறுவை சிகிச்சையில் நோயாளி இறந்தால் மருத்துவரே பொறுப்பு’ என சட்டம்
இயற்ற வேண்டும். அப்பொழுதுதான் பணக்காரர்கள்
அதிக லஞ்சம் அல்லது நன்கொடை கொடுத்து படிக்கவோ அல்லது பொறுப்பற்ற முறையில்
மருத்துவம் பயில மாணவர்கள் அல்லது மாணவர்களை பெற்றவர்கள் யோசிப்பார்கள்.
நோயாளிகளின் உயிர்கள் என்ன
கிள்ளுக்கீரையா? லட்சக்கணக்கில் செலவு செய்து படித்தால் அல்லது படிக்க வைத்தால்
நோயாளிகள் உயிரோடு விளையாடும் அதிகாரத்தை மருத்துவர்களுக்கு யார் கொடுத்தார்கள் ?
மருத்துவர்களுக்கு சங்கம் வைக்கும்
உரிமையை கொடுத்த அரசாங்கம் நோயாளிகளுக்கு சங்கம் வைக்கும் உரிமையை ஏன்
வழங்கவில்லை? அல்லது ஏன் வைத்துத்தரவில்லை ?
மருத்துவத்துறையில் தேர்ந்தெடுக்கப்படும்
மாணவர்கள் 100% புத்திசாலித்தனமான அல்லது அறிவாளியான மாணவர்கள் கிடையாது. காரணம்
இந்தியா போன்ற ஆன்மீக மற்றும் பூரண ஜனநாயக
நாட்டில் இந்த முறை சாத்தியமாகாது.
ஏற்றத்தாழ்வு சமுதாயம் உள்ள நாடுகளில் இட ஒதுக்கீடு மற்றும் சமுக
நீதிக்கொள்கைகளை அந்த நாடு நிறைவேற்ற கடமை பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட அல்லது
புறக்கணிக்கப்பட்ட சாதிகளிலிருந்து. சில சலுகைகளை வழங்கி சமுதாயத்தின் உயர் தன்மை
வாய்ந்த தொழில்களான மருத்துவம்,பொறியியல், மற்றும் வழக்குறைஞர்களை உருவாக்கும்
கடமை அந்த நாட்டு அரசுக்கு இருக்கவேண்டும் .
படிக்க வேண்டுமானால் பாதிக்கப்பட்ட சமுக
மாணவர்களை சலுகை காட்டி படிக்க வைக்கலாம். ஆனால் அவர்களுக்கு கல்லுரி காலத்தில்
தகுந்த பேராசிரியர்களை வைத்து சிறந்த பயிற்சி அளித்து, தகுதி அடிப்படையில்
மருத்துவர்களை அல்லது பொறியியலாளரை அல்லது வழக்குறைஞர்களை உருவாக்க அரசு கடமைப் பட்டிருக்க வேண்டும்.
ஆசிரியர்களையும் இதே முறையில் தேர்வு
செய்ய வேண்டும் .
அகில இந்திய அளவில் மேலே குறிப்பிடப்பட்ட
படிப்புகளுக்கு கல்லுரிகளை அனுமதிக்கவும் மணவர்கள் சேர்க்கைக்கு கட்டுப்பாடுகளை
விதிக்கவும் தன்னாட்சி பெற்ற கவுன்சில்கள் உள்ளன. இவைகளை கலைக்க சட்டமியற்ற வேண்டும்
.
இவைகள் அனைத்துமே ஊழல்கள் மலிந்த கவுன்சில்களாகிவிட்டன.
கல்வித்துறை தொடர்பான அனைத்துமே மாநில அரசின் கட்டுப்பாட்டுக்கு வர மத்தியரசு
சட்டமியற்ற வேண்டும். அப்பொழுதுதான் மாநில அரசுகள் தங்கள் மாநில மக்களின் சாதிய
அடிப்படையில் அல்லது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் பெற வசதியாக சட்டமியற்றி
மக்கள் சமுக நீதி பெறவும் தகுந்த தொழில் கல்வி வழங்கவும் ஏதுவாகும்.
ஆரம்ப கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி
முடிக்கும்போதே ஒரு மாணவன் உடல் பராமரிப்பு மற்றும் உணவு கட்டுப்பாடு மற்றும் பொது
நடைமுறைச்சட்ட விழிப்புணர்வு போன்ற தன்மைகளில் தேர்ச்சி பெற்றவனாக வெளிவரவேண்டும்.
இதற்கு ஏற்றாற்போல் இப்பொழுதுள்ள பாடதிட்டங்களை மாற்றியமைக்க வேண்டும். அப்பொழுதுதான்
மக்களுக்கு திருமணம் மற்றும் குழந்தை வளர்ப்பு ,கர்ப மனைவியை பராமரித்தல் போன்ற
சமுக விழிப்புணர்வு ஏற்படும்.
அப்பொழுதுதான் மருத்துவரை தாக்குதல்,
அல்லது வழக்குறைஞரை தாக்குதல் போன்ற வன்முறை கலாச்சாரத்தை நீக்கலாம். மக்களுக்கு
எது தேவையோ அதை பூர்த்தி ஆடையச்செய்வதுதான் அரசாங்கத்தின் கடமை.
தேவைகளை மறைப்பதோ அல்லது மறுப்பதோ
மக்களின் போராட்ட உணர்வுக்கு வித்திடும். அதிக மருத்துவக்கல்லுரி திறந்தால் அல்லது
திறக்க அனுமதித்தால் மருத்துவத் தொழிலுக்கு அல்லது மருத்துவருக்கு மதிப்பு அல்லது
மவுசு குறைந்துபோகும் ஆளுமை குணம் படைத்த சாதிகள் நினைக்கின்றன.
இந்த தொழிலை மேல்தட்டு மக்களுக்கே
உரியதாக செய்யவேண்டும் என மருத்துவ கவுன்சில் நினைக்கிறது. மருத்துவ கவுன்சிலின்
அதிகாரிகளின் திருமுகங்களின் மறுமுகங்களை மக்கள் அறியச்செய்ய வேண்டும். செய்யுமா
இந்த அரசு?
No comments:
Post a Comment