Sunday, April 22, 2012

23-வியாபாரிகளின் மறுமுகங்கள்


                       23-வியாபாரிகளின் மறுமுகங்கள்
உலகத்தில் இடைத்தரகர்களும் வியாபாரிகளும் (இருவரும் ஒரே இனம் தான்)ஆட்சியாளர்களை பின் புலத்தில் இருந்து இயக்குகின்றனர். இவர்கள் தான் ஆட்சியாளர்களுக்கு பயன்பாட்டாளர்கள். ஆட்சியாளர்கள் கீழ்கண்ட முறையில் ஆட்சிக்கு வருகின்றனர்

1-தேர்தல் மூலம் நேரடியாக ஆட்சிக்கு வருபவர்கள்(அமெரிக்காவில் இது போல் உள்ளது)

2- தேர்தல்மூலம் மக்கள் உள்ளூர் பிரதி நிதிகளை தேர்ந்தெடுத்து அவர்கள்  மூலம் ஆட்சியாளரை தேர்வு செய்தல்(இந்தியாவிலும் இங்கிலாந்திலும் இதுபோன்று உள்ளது)

3-ஒரே கொள்கையுடைய(பொதுவுடமைகொள்கை)இரு கட்சி உறுப்பினர்களை தேர்தல் மூலம் போட்டியிடச்செய்து  ஆட்சியாளர்களை மக்களே தேர்வு செய்தல்(ரஷ்யாவிலும் ,சீனாவிலும் இது போன்று உள்ளது)

4-சில நாடுகளில் பாது காப்பு கடமையில் உள்ள ராணுவ தளபதிகள் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியாளர்களை தூக்கியெரிந்துவிட்டு ராணுவமே சர்வாதிகாரமாக ஆட்சிக்கு வருவது.(இது உள்நாட்டு விவகாரம் என பிற நாடுகள் தலையிடுவதில்லை-அப்கான்,பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் இது போன்று நடக்கின்றது)

5- இன்னும் சில நாடுகளில் பரம்பரை வழியாக மன்னர் ஆட்சி முறை உள்ளது (ஆப்ரிக்காவின் சில நாடுகளிலும்.ஒருசில இஸ்லாமிய நாடுகளிலும் உள்ளது)

எத்தகைய ஆட்சிமுறையாக இருந்தாலும்  ஆளப்படும் உழைப்பாளி மக்களுக்கும் ஆட்சியாளருக்கும் இடையில் இடைத்தரகர்கள் கூடாது என முதலில் முழங்கியவர் பொதுவுடமை கொள்கை உருவாக்கிய மாமேதை காரல் மார்க்சு மட்டுமே.
கல்வியறிவும் சுயசிந்தனையற்ற மக்கள் வாழும் இடங்களில் உழைப்பே இல்லாத இடைத்தரகர்கள் சுகவாசிகளாகவும் பெரும் பணக்காரர்களாகவும் வாழ்கின்றனர்.

உண்மையான மக்கள் நலனில் அக்கறை உள்ள ஆட்சியாளர்கள் உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் நியாய விலையை நிர்னயித்து  நியாய விலைபட்டியலை ஊடகங்களில் வெளிப்படுத்த வேண்டும்.

சுற்றுலாவாசிகளிடம் எப்படி கொள்ளையடிக்கப்படுகிறது என்பதை பார்ப்போம்.

சுற்றுலா வாசிகள் அல்லது நெடுந்தொலைவு பயணம் செய்பவர்களுக்கு வசதியாக மணி4 லிருந்து 7 மணிக்குள் சேருமிடத்திற்கு தொடர் வண்டியோ அல்லது பேருந்தோ சென்றுவிடும். அவர்கள் காலைக்கடனை முடிப்பதற்கு தங்கும் விடுதிகளை நாடுவர். இங்கேதான் சுற்றுலாவாசிகள் ஏமாற்றப்படுகின்றனர்.விடுதி அனுமதிக்கப்படும் நேரம் 12-12மணி, என மாற்றியமைத்துவிடுவர்.
                                        
6-6 மணி நேரம் எனில் விடுதி நடத்துபவர்களுக்கு அதிக லாபம் கிடைக்காது என திட்டமிடப்பட்ட கொள்ளைக்கு அரசாங்கம் தெரிந்தே செயல்படுவதுதை நினைத்தால்தான்  மனம் துன்பபடுகிறது .

ஒருநாள் சுற்றுலா செல்பவர்கள் இரண்டு நாளைக்கு அறை வாடகை தரும்படி ஆகிவிடுகிறது . இது ஒரு அநியாய செயல் என வியாபாரிகளுக்கு தெரிவதில்லை .இதை ஏன் ஆட்சியாளர்கள் கண்டுகொள்வதில்லை?

இதைப்போலவே நகரத்தில் திரையிடப்படும் திரைஅரங்குகளில் திரைப்படம் காட்டப்படும் நேரம் மதிய உணவு நேரமான 1-2மணியளவில்  மக்களுக்கு வசதிக்காக காட்சி நேரம் அமைக்கப்படுவதில்லை.மாறாக 11.45-2.45,அல்லது 12-3மணி நேரம் என அமைக்கப்படுகிறது.

காரணம் படம் பார்க்கும் ரசிகர்கள் திரையரங்குகளில்  விற்கப்படும் தின்பண்டங்களை பல மடங்கு விலைவைத்து விற்கின்றனர். பசி நேரத்தில் அதிக விலைகொடுத்து வாங்குகின்றனர். ‘பசி ருசி அறியாது’ என படம் பார்க்கும் ரசிகர்கள் சலிப்படைந்து ஒழிந்து போகட்டும் என செலவு செய்து விரக்தி அடைகின்றனர்.

அடுத்து ஆங்கில மருந்து கடைகளில் அடிக்கப்படும் கொள்ளைகள் கொஞ்சம் நஞ்சமில்லை.மருந்துகளின் விலை நிர்னயம் அரசாங்கமே பொதுமக்களுக்கு ஊடகங்கள் மூலம் தெரியபடுப்படுத்த வேண்டும்.இல்லையேல் அனைத்து மருந்துகடைகளையும் நாட்டுடமையாக்க ப்படவேண்டும்.

மளிகை கடைகளில் விற்கப்படும் துணை உணவுகளான ஹார்லிக்ஸ்,காம்ப்ளான் போன்ற டின் பொருட்கள்,மருந்து கடைகளில் விற்கப்படும் விலைகளில் மொத்த விலையிலிருந்து(MRP) 10%லிருந்து 20% குறைவாகவே மக்களுக்கு கிடைக்கின்றதே இது எப்படிகிடைக்கின்றது? அப்படியும் மளிகைகடைக்காரருக்கு லாபம் கிடைக்கின்றதே இது எப்படி?

ஆனால் மருந்து கடையில் விற்கப்படும்(MRP) மருந்து உட்பட எந்த பொருள் வாங்கினாலும் ஒரு பைசாகூட குறைப்பது இல்லை. ஏன் இந்த முறண்பாடு? எந்த அரசாங்கமும் இதை கண்டு கொள்வதே இல்லை.

ஒவ்வொரு ஆட்சியாளருக்கு ப்பின்னால் இடைத்தரகர்கள் இருப்பது  இதன்மூலம் நிருபணமாகிறது அல்லவா?.
                             
துணை உணவுப்பொருள் மட்டுமல்ல எல்லா பொருட்களும் நுகர்வோரை சென்றடைய விளம்பரம் செய்யவேண்டியுள்ளது.இதனால் பொது மக்கள் நுகரும் பொருளை அதிக விலைகொடுத்து வாங்கவேண்டியுள்ளது.

விளம்பரப்படுத்தப்படும் பொருளும் அதன் பயன்பாடும் எந்த அளவுக்கு மக்களுக்கு சென்றடைகின்றது ? என்பதுதான் கேள்விக்குறி.
மக்களின் மூட நம்பிக்கைகளை கூட விளம்பரப்படுத்தி பணம் குவிக்கின்றனர்.
உதாரணத்திற்கு
1-ராசி கல்
2-தாயத்து
3-பரிகாரம்
4-பேய் விரட்டல்
5-பில்லி
6-சூன்யம்
7-பேர் உச்சரிப்பு மாற்றம்
8- கட்டிய வீட்டுக்கு வாஸ்த்து பார்த்தல்
9- வியாபாரம் பெருக்க கஷ்ட்டங்கள் நீங்க செப்புத்தகட்டில் காப்பு கட்டுதல்
இதுமட்டுமல்ல
மக்களின் அன்றாட பயன்பாடுகளான உணவு,உடை,உறைவிடம் தொடர்புடைய அனைத்து வகையான பொருட்களும் தரம் உள்ளதோ இல்லையோ விளம்பரத்தின் மூலம் மக்கள் ஏமாற்றப்படுவதை அரசாங்கம் கண்காணிப்பு குழு அமைத்து கவனிக்க வேண்டும். இதற்காக ஒரு சட்டம் இயற்றப்படவேண்டும்.
மேலும் ‘தீராத வியாதிகளையும் தீர்த்துவைக்கிறேன்’ என விளம்ரப்படுத்துவது ,இதனை நம்பி ஏராளமான பொது மக்கள் நம்பி  பணம் விரயப்படுவதை தடுக்க சட்டம் வேண்டும்.

ஒரு தனிமனிதன் சொத்து வாங்குவதையோ,அல்லது  அதை பதிவு செய்யப்படும்போதோ நடுநிலை அமைப்பு (judicial forum) ஒன்று விசாரித்து அந்தசொத்தை அனுமதிப்பதா வேண்டாமா? என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும்.அப்பொழுதுதான்
உலகத்தின் திடீர் பணக்காரர்கள் எப்படி உருவாகின்றனர் என்பதை மக்கள் உணரமுடியும் . அரசியல்வாதி,அதிகாரி போன்ற அனைத்து தரப்பினர்க்கும் பொருந்தும் சட்டமாக இது இருக்க வேண்டும்.
அப்பொழுதுதான் பணம் பெரிதல்ல மனிதர்களிடையே குணம்பெரிது எனும் மனித நேயம் பெருகும்
குறுக்கு வழியில் மக்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு  வாங்கும் குணம் ஒழியும்.
இன்னொரு ஏமாற்றுதல் தொழிலும் நடக்கிறது .
திருமணப் பொருத்தம் பார்த்து ‘உங்கள் பெண்ணுக்கோ அல்லது பிள்ளைக்கோ திருமணம் செய்து வைக்கின்றேன்’ என சொல்லி மாதத்திற்கு ரூ.6000.00 கட்டுங்கள் என சொல்லி தினமும் பத்து முறையாவது தொலைபேசியில் தொடர்புகொண்டு பணத்தை வாங்கிக்கொள்கின்றனர்.

பின் வாரத்திற்கு 4அல்லது 5 வரன்களை வலைதளத்தில் வெளியிடுகின்றனர். அதை பார்த்து நாம் ஏதாவது ஒன்றை தேர்வு செய்தால், ‘அவர்களுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டுமாம் அல்லது ராசி பொருத்தம் இல்லையாம்’ என ஏதாவது காரணம் காட்டி (பெண் அல்லது பிள்ளை வீட்டாரையோ தொடர்பு கொள்ள முகவரியோ அல்லது தொலைபேசி எண்ணையோ தரமாட்டார்கள்) வேரொன்று பார்க்கலாம் என 30 நாட்களை கடத்தி விடுவார்கள்.

அதன் பிறகு ‘30 நாட்கள் கடந்து விட்டது, அடுத்து ஒரு ஆபர்(offer) உள்ளது . அந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளுங்கள். உடனே வரன் அமைத்து கொடுக்கின்றோம்’ என சொல்லி மேலும் பணம் பிடுங்குவதையே தொழிலாக கொண்டுள்ளனர்.இன்றளவும் வலைதள மோசடி நடந்து கொண்டிருக்கின்றது  (இதில் நானும் பாதிக்கப்பட்டேன்).(Barath Matrimonial or Tamil Matrimonial) இவர்கள் தான் இந்த மோசடி பேர்வழிகள்.

இந்த வலைதளம்மூலம் யாரோ ஒரு பெணுக்கோ அல்லது ஆணுக்கோ திருமணம் நிகழ்த்தியிருந்தால் அவர்கள் முகவரியோ அல்லது தொலைத்தொடர்பு எண்ணையோ எனக்கு அளிக்கும்படி கேட்டேன். ஆனால் அவர்கள் என்ன பதிலளித்தார்கள் தெரியுமா?, ‘உங்களுக்கு விருப்பம் இருந்தால் பணம் செலுத்துங்கள் ,இல்லையேல் விடுங்கள்’ என பதிலளித்து தொலைதொடர்பை துண்டித்தனர்.
இந்த வலைதள மோசடி பேர்வழிகளை கண்டு கொள்ள அல்லது தண்டிக்க  ஒரு சட்ட அமைப்போ அல்லது அரசாங்க வழி காட்டியோ இருப்பதாக தெரியவில்லை.

இதை எல்லாம் சமுதாயக்கேடாக நினைத்துப்பார்க்க அமைச்சர்களுக்கோ அல்லது அரசியல் வாதிகளுக்கோ நேரமில்லை. அனால் அவர்கள் வகிக்கும் பதவிக்கு ஆபத்து வரும்படி வலைதளத்தில் எதிராக எழுதப்படுவதை மத்திய அமைச்சர் கபில் சில் கவலை கொள்கிறார். அவரின் திருமுகத்தின் மறு முகத்தை காண்பீர்.                                                      


                 
                   

No comments: