11-ஆட்சியாளரின்
மறுமுகங்கள்
மனிதனின்
கண்டு பிடிப்புகள், அதன் பயன் பாடுகள், அதனால் ஏற்படும் பின் விளைவுகள்(Side
effects).இவைகள்தான் இன்றய அறிவியல் முன்னேற்றம் என நாம் பெருமை
பட்டுக்கொள்கின்றோம்.
ஆணு
குண்டுகளைசெய்தாலும் எந்த நாடும் பயன்படுத்தக்கூடாது எனஐ.நா. அவையில் தீர்மானம்
போடப்பட்டுள்ளன.அதை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டதாக ஐ.நா செய்திக்குறிப்பு
கூறுகின்றது.
இந்நிலையில்
ஹிட்லரைப் போல் கிறுக்கு பிடித்த-மன நிலை பாதிக்கப்பட்ட ஒரு நாட்டுக்குத் தலைவன்
உருவாகிவிட்டால் அணுகுண்டை அவன் பயன்படுத்த மாட்டான் என்பது உறுதியாக நம்ப
முடியாது.
அணுகுண்டை
சோதனை முறையில் செய்து பார்க்க ஆசைப்பட்ட ,கிறுக்கு பிடித்த அமெரிக்க, இரண்டாம்
உலகப்போரை முடிவுக்கு கொண்டுவர முதன் முதலில் அதை ஜப்பான் மேல் போட்டு அதன் மனித
குல அழிவை கண்கூடாக பார்த்தும் மீண்டும் 3 நாள் கழித்து அதே ஜப்பானின் வேறு
நகரத்தில் போட்டது. லட்சக்கணக்கான அப்பாவி உயிர்கள் மடிந்தன.இன்று மனிதாபிமானத்தை
பற்றி பேசும் அமெரிக்க அன்று அதற்கு அழிவு சிந்தனை ஏன் வந்தது என தெரியவில்லை.
அதன்பிறகு
அணுகுண்டின் ஆற்றலை அழிவுக்கு பயன்படுத்துவதை தவிர்த்து ஆக்க பூர்வமான பணிகளுக்கு
பயன்படுத்த உலகநாடுகள் கூடி முடிவு செய்தன. அதன் விளைவுதான் மின் சாரத்தை
உருவாக்கும் அணு உலைகள். பல நாடுகள் அணு உலைகளை உருவாக்கின.
1986 ல்
ரஷ்யாவின் செர்னோபில் அணு உலை வெடித்து சிதறி அதனால் ஆயிரக்கணக்கில் மக்கள்
மாண்டனர்.சென்ற ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியால் இரண்டு அணு உலைகள்
சீரழிந்தன.அதன் பாதிப்புகளை வெளியில் சொல்லாமல் திருடனுக்கு தேள் கொட்டியது போல்
மவுனமாகிப்போனது. இதன் பிறகும் அணு உலைகள் வேண்டும் என அடம்பிடிக்கும் நமது
பிரதமரின் பிடிவாதம் எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்?
பூமிக்கு
அடியிலும்,கடலுக்கு அடியிலும் அணு குண்டு சோதனை செய்து கொள்ளலாம் என உலக நாடுகள்
ஒன்று கூடி ஒரு காலத்தில் தீர்மானித்தன. அதன்பிறகு அது தேவையற்ற விளைவுகளை
ஏற்படுத்தும் என நினைத்து,அணு பரவல் தடைச்சட்டம் (NPT-NON PROLIFERATION TREATY)
போட்டுக்கொண்டனர் . அதையும் மீறி சில நாடுகள் அணு குண்டு சோதனையில்
இறங்கியது.அதனால் அணு தொடர் வினைகள்(Atomic Chain Reaction)பூமியில் தொடர்
நிகழ்ச்சியாகவே நிகழ்கிறது.
அதன்
விளைவுதான் இப்பொழுது பூமியில் அடிக்கடி பூகம்பம் நிகழ்வதும் கடல் கொந்தளிப்பு
(சுனாமி) ஏற்படுவதும் போன்ற இயற்கை பேரழிவுகள் நிகழ்கின்றன. பூமியின் வெப்பம் நாளுக்குநாள் அதிகரிப்பும்
இதனால்தான்.
அணு
உலைகளால் குறைந்த செலவில் மின்சாரம் கிடைக்கும் என்பது உண்மை.மனிதகுலத்தின் சுக
வாழ்க்கைக்கு மின்சாரம் அவசியம் தான் அதற்காக பின்னாளில் மனித குலத்திற்கு பேரழிவை
ஏற்படுத்தும் அணுவுலைகள் தேவைதானா?
தமிழ்
நாட்டில் கூடங்குளம் மட்டுமல்ல கல்பாக்கத்தையும் மூட வேண்டும் .
கூடங்குளம்
மக்களுக்கு இருக்கும் போராடும் மன உறுதி போல் கல்பாக்கம் மக்களுக்கு போராடும் மன
உறுதி ஏன் வரவில்லை என்பது ஆச்சரியம் அளிக்கின்றது.
ஆனால்
தொலை நோக்கு இல்லாத ,சுய சிந்தனையற்ற மத்திய அமைச்சர்களும் அவர்களுக்கு தலைமை
ஏற்றிருக்கும் திரு மன் மோகன் அவர்களும்,நமது நாட்டிற்கு அமைந்துவிட்ட சாபக்கேடு.
உலகில் பல
நாடுகளில் ஏற்கனவே அமைந்துவிட்ட,அல்லது அமைக்கப்பட்டுவிட்ட அணுவுலைகள் எப்படி
மூடுவது என்றே தெரியாமல் பல நாடுகள் திணறிக்கொண்டிருக்கின்றன.
இப்பொழுள்ள
கூடங்குளம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் உலக வல்லரசுகளாக செயல் பட்ட அமெரிக்க
மற்றும் சோவியத் (USSR)நாடுகளின் கூட்டமைப்புகளுடன் ஏற்பட்ட போட்டி பொறாமை
உணர்வில் இந்தியாவிற்கும் சோவியத் வல்லரசுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்த
அடிப்படையில் உருவானதாகும்.
இடையில்
சோவியத் வல்லரசு சிதருண்டு போனதால் அந்த பொருப்பை ரஷ்ய நாடு ஏற்று செயல் பட்டு
தற்பொழுது கூடங்குளம் முடியும் நிலைக்கு
வந்து விட்டது. அதாவது அணு உலையை இயக்கும் நிலைக்கு வந்துவிட்டது. அங்கே வாழும்
மக்களுக்கும் அணு உலைக்கு அழிவுநிலை வந்தால் என்ன ஆகும்? என இப்பொழுதுதான்
விழிப்புணர்வு வந்துள்ளது.அந்த உணர்வை அதிகாரத்தை கொண்டு அரசு அடக்கப்பார்கின்றது.
அணு உலையை
இயக்கியே தீரவேண்டும் என இரு நாடுகளும் கவுரவம் பார்க்கின்றது.எதிர் காலத்தில் அணு
உலை வெடித்தால் செர்னோபிலில் நடந்தது போல் சிமென்ட்டையும் கருங்கல் சல்லியையும்
குழைத்து ராணுவத்தை வைத்து மூடிவிடலாம் என கணக்கு போடுகிறது . செர்னோபிலில் அணு
உலையை மூடும்போது எத்தனை ராணுவ வீரர்கள் மடிந்தார்கள் எனும் கணக்கை வெளியிடாமல்
ரஷ்யா கவுரவம் பார்க்கின்றது.
அணுவுலைகள்
வெடித்து சிதறினால் என்ன ஆகும் என மறுசிந்தனை அற்ற காலங்களில் போடப்பட்டது தான்
கூடங்குளம் ஒப்பந்தமாகும்.
இந்தியாவில்
உள்ள அணு அறிவிலாளர்கள் அரசுக்கு மாற்றுக்கருத்தை சொல்ல உரிமை இல்லாத,
சம்பளத்துக்காக உழைக்கும் கூலிகளாகிவிட்டனர்.
மக்களுக்கு
என்ன தெரியும்? என அரசு நினைக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள், மக்கள்மீது
அதிகாரத்தை திணிக்க நினைப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. உலகில் உள்ள அதிகார
வர்க்கங்கள் எல்லாம் அப்படித்தான்.
அதைப்போல
மக்களை நல்வழிப்படுத்த, மக்களுக்கு கல்வியறிவு புகுத்த, கட்டாய சமச்சீர் கல்வி
புகுத்த, பொருளாதாரத்தை மேம்படுத்த,மூட நம்பிக்கையை விரட்ட அரசு தன் அதிகாரத்தை
மக்கள் மீது திணிக்க வேண்டியது தானே?
ஆட்சியாளர்களின்
திருமுகங்களின் மறுமுகங்கள் இவைதான்!
No comments:
Post a Comment