22- தேசியவாதிகளின் மறுமுகங்கள்
மனிதனின் பண்பட்ட குணங்களை
வெளிப்படுத்துவதுதான் மனித நாகரீகம்.உயர் கல்வி அறிவும் தினமும் உலகின் அன்றாட
நிகழ்வுகளை செய்தி ஊடகங்கள் மூலமாக தெரிந்து கொள்வதின் மூலம் மனம் பக்குவப்படும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் பிற மனிதனுக்கு
உதவும் குணம் இயற்கையாகவே அமைந்துவிடும். இது தனிமனித குணம். ஆனால் இளமையில்
இன்னொரு மனிதனை அடக்கி அல்லது தாக்கி வெற்றிக்கொள்ள வேண்டும் எனும் உணர்வு பெரும்பாலும் மனிதமனங்களில் ஒளிந்திருக்கும்(inborn
quality) இது ஒரு மிருக உணர்வு.
நாலுபேர் ஒன்றுகூடும்போது மனித நேயம்
மறைந்து கும்பலாக இன்னொரு கும்பலை தாக்கும் எண்ணம் அதிகரிக்கும்.இதுதான் கும்பல் குணம்
உலகில் ஒரு இனம் இன்னொரு இனத்தை
தாக்குவதும் அழிப்பதும் இந்த கும்பல் குணத்தால்தான். இந்த குணத்தை உலகில் உள்ள
மதங்கள் தங்கள் மத வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொண்டுள்ளன.உலகில் எந்த மதமும் இன்னொரு
மதத்தை அங்கிகரிக்கவில்லை. இந்நிலையில் ஒட்டுமொத்த மனித நேயம் உலகில் எப்படி
உருவாகும்? இதனால் பல மதங்கள் மற்றும் பல
இனங்கள் வாழும் நாட்டில் எப்படி அமைதி ஏற்படும்? அவ்வப்போது இனப்பூசல்களும்
மதப்பூசல்களும் உருவாகின்றன.இங்கே தனி மனித நாகரீகமான மனிதனுக்கு மனிதன் உதவும்
நட்பு குணம் அழிந்து போகிறது.
ஒரு நாட்டின் உள்ளூர் காவல் துறைக்கும்
ராணுவத்திற்கும் பயந்தே இந்த கும்பல் குணம் படைத்த மனிதர்கள் அடங்கி வாழ்கின்றனர்.
மனித நேய மேம்பாட்டுக்காகதான் அய்.நா சபை
உருவாக்கப்பட்டது.
அய்.நா. சபை உருவாக்கியபோது அய்ந்து
வல்லரசுகளை அங்கீகரித்து அவைகளுக்கு ரத்து அதிகாரம்(veto power) வழங்கியது மிகப்
பெரும் தவறு.இதனால் சமத்துவம் இல்லாத அய்க்கிய நாடுகள் சபை ஆகிவிட்டது. அதாவது
அ.நா சபை ஆகிவிட்டது அதாவது அநியாய சபை ஆகிவிட்டது.
நல்ல மனம் படைத்த நாட்டு தலைவர்களாலே
மட்டும் தான் சமத்துவ அய்.நா சபையை
உருவாக்க முடியும். ஒரு பஞ்சாயத்து கூடும்
போது அதில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் சமமே. அங்கே ஏழை, பணக்காரன், பல சாலி
என்றெல்லாம் பாகுபாடு பார்க்க அனுமதி இல்லை.அதைபோலவே அய்.நா சபை உருவாக்கியிருக்க
வேண்டும்.ஆனால் ஏனோ ஒரு பொறுப்பற்ற முறையில் உருவான அய். நா அநியாய சபை போல்
இன்றளவும் செயல்பட்டிருக்கின்றது.
உலகில் இனபூசல்களும் மதப்பூசல்களும்
ஏற்பட்டு அவ்வப்போது ஆயிரக்கணக்கான உயிர்கள் மடிந்துள்ளன. அப்பொழுதெல்லாம் அய்.நா
சபையில் ரத்து அதிகாரம் படைத்த
வல்லரசுகளான அமெரிக்கா, ரஷ்யா,பிரான்சு,இங்கிலாந்து மற்றும் சீனா( எல்லாமே வெள்ளை
இன மக்கள் வாழும் நாடுகள் தான்.) போன்ற ஏதாவது ஒரு நாட்டை மற்ற
நாடுகள் நட்பு கொண்டு இனப்படுகொலைக்கு
ஆதரவு கேட்கும்.
அப்படித்தான் சமீபத்தில் இலங்கையில்
நடந்த தமிழின படுகொலைக்கு ரஷ்யா மற்றும் சீனா வல்லரசுகள், அய்.நா. சபையில் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்தன.
இங்கே தனிமனித நேயம், கும்பல் குணத்தால்
அழிந்தது. அய்.நா. சபை என்பது நம்ம ஊர் பஞ்சாயித்து கூட்டம் போலதான்.
பஞ்சாயித்தில் தலைவரை தவிர அனைவரும் சமமே. இதில் பணக்காரன்,பல சாலி உயர்ந்த சாதி
தாழ்ந்த சாதி என்றெல்லாம் பாகுபாடு கிடையாது.
ஆனால் என்ன காரணத்திற்காக அய்.நா. சபை
உருவாகும்போது வல்லரசுகள் என வகைப்படுத்தி அவர்களுக்கு பிரத்தியோக அதிகாரமான
‘ரத்து அதிகாரம்’ வழங்கப்பட்டது என தெரியவில்லை. இது ஒரு ஒருதலை ப்பட்சமான அய் .நா. சபை என இன்றளவும் உலக நாடுகளுக்கு ஏன்
புரியவில்லை? வெள்ளை இன மக்களுக்கு அடிவருடிகளான நமது கருப்பின நாடுகள் இதற்கு
ஒப்புதல் அளித்துவிட்டு இப்பொழுது அய்.நா.சபையில் மனித நேயங்களை தேடிக்கொண்டிருக்கின்றன.
உலக நாடுகள் இப்படி எனில் பல மொழி பல
இனம் வாழும் இந்திய நாட்டில் எல்லா இனங்களுக்கும் சமமான நீதி கிடைக்கும் என எப்படி
நம்ப முடியும்?
பெரியாரின் வழிகாட்டுதலில் அறிஞர்
அண்ணாவும் அவருக்குபின் கலைஞரும் திராவிடம் என்கிற மந்திர சொல்லால் கட்டுண்டு
தமிழக மக்களை மலயாளிகளிடமும் தெலுகு நாய்டுகளிடமும் அடகுவைத்துவிட்டனர் .இன்றளவும்
தமிழனுக்கு விடிவுகாலமே இல்லை. தமிழகத்தை சுற்றியுள்ள சகோதர திராவிட நாடுகளான கேரளா,கர்நாடகம்
மற்றும் ஆந்தரா எல்லாமே நீர் வளமிக்க நாடுகள் .
தென்னிந்தியாவின் கடைமடை பகுதியில்
இருக்கும் தமிழகத்துக்கு அண்டைமாநிலங்களில் தேக்கிவைக்கப்பட்ட நீரை தரமறுக்கும்
மாநிலங்களை பார்த்து மத்தியரசு உத்தரவிட முடியவில்லை.வளமான பூமி இருந்தும்
நீரின்மையால், தமிழகத்தில் பருவத்தே பயிர் செய்ய முடியவில்லை. இந்நிலை நீடித்தால்
தமிழகத்தில் அமைதி சீர்குலையும்.
உண்மையான
,வலுவான தேசியம் அமைய வேண்டுமாயின் நாட்டிலுள்ள அனைத்து நீர் தேக்கங்களையும்
நாட்டுடமை ஆக்கி மாநிலங்களுக்கு ‘நடுநிலை
நீர் பங்கீடு முறையை’ சட்டமாக்க வேண்டும்.இல்லையெனில் பின்னாளில் இந்தியா சிறு
சிறு மாநிலங்களாக சிதறுண்டு போகும்.
தாய் திராவிடம் என மார்தட்டிக்கொள்ளும்
தமிழகத்தை தாயகமாக கொண்டுள்ள பிற இன மக்கள் வாழும் தமிழ் மாநிலத்துக்கு குடிக்க
தண்ணீர் தர மறுக்கின்றனர்.. கும்பல் குணம் தானே இதற்கு காரணம். பகைவனுக்குகூட
குடிதண்ணீர் வழங்கும் இனம்தானே நம் இனம். உலகில் எத்தனையோ விதமான கும்பல் குணம்
இருக்கலாம். அவற்றை எல்லாம் வழி நடத்தும் பக்குவம் அந்தந்த நாடு அல்லது மாநிலத்து
அரசுகளுக்கே இருக்கவேண்டும்.
ஆனால் எல்லாம் தெரிந்தும் அண்டை மாநில
முதல்வர்கள், வந்தாரை வரவேற்று
வாழவைக்கும் தமிழகத்துக்கு தண்ணீர் விடமறுக்கும் தேசாபிமானம் அற்ற போலி
தேசியவாதிகளான மற்ற மாநில முதல்வர்களின் திருமுகங்களின் மறுமுகங்களை இங்குள்ள பிற
மொழி பேசும் மக்கள் தெரிந்து கொள்ளட்டும் .
No comments:
Post a Comment