Monday, April 23, 2012

-விளையாட்டு(அரசியல்?)வீரர்களின் மறுமுகங்ள்


                   28-விளையாட்டு(அரசியல்?)வீரர்களின் மறுமுகங்கள்
                                              
     அரசாங்கம் என்பது மக்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் முன் மாதிரியாகவும் அமையவேண்டும் . மாணவர்களின் அறிவுச் சிந்தனைக்கு அதுவும் சுயறிவு சிந்தனைக்கு வழிகோலும் முகத்தான் பாடதிட்டங்கள் அமைய அரசு கவனம் செலுத்த வேண்டும்.இதனை ஊக்குவிக்கும் பொருட்டு பரிசு பொருட்கள் மற்றும்  பாராட்டுகள் வழங்குவதை வழக்கத்தில் கொள்ளவேண்டும்.

விளையாட்டுகளில் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த விளையாட்டுகள்  கைப்பந்து மற்றும் கால்பந்து அடுத்து அறிவு பூர்வமான மற்றும் சிந்தனை தூண்டும் பொழுதுபோக்கு விளையாட்டு சதுரங்கம். இத்தகைய விளையாட்டுகளை அரசு ஊக்குவிக்கலாம்.
ஆனால் இப்பொழுதெல்லாம் விளயாட்டுகளில் மிக மட்டமான விளையாட்டு கிரிக்கெட். அதனை சில நாடுகள் ஊக்குவித்து பரிசுகள் வழங்குகின்றன.  வீணாபோன இந்தியா யாரோ ஒரு சில கிறுக்குபிடித்த பிரபல மனிதர்களின் பேச்சை கேட்டு ,இந்தியாவின் தலைசிறந்த விருது என வர்னிக்கப் படும் பாரத்ரத்னா விருதை கிரிக்கெட் பைத்தியர்களின் தலைவனான டெண்டுல்கருக்கு வழங்க வேண்டும் என அடம் பிடுக்கின்றனர். ஒரு நாட்டின் உயரிய விருது என்பது அந்த நாட்டின் வளர்ச்சிக்காகவும் மக்கள் அமைதி வாழ்க்கைக்கு வழி காட்டியாகவும் வாழ்ந்து காட்டியவருக்கு வழங்கப்பட வேண்டும். அதுதான் உலகின் தலைசிறந்த நாடு.

விளையாட்டுத்துறையையோ அல்லது விளையாட்டு வீரர்களை கவுரவப்படுத்தவோ அதுவும் சோம்பேரிகளின் விளையாட்டான கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் பொருட்டு நாட்டின் உயரிய விருதை வழங்குமானால் ஒரு ஊதாரித்தனமான அல்லது பொறுப்பற்ற நாடாகத்தான் இந்தியா விளங்கும்.

இதையெல்லாம் தூக்கிச்சாப்பிடும் அளவுக்கு சமீபத்தில் தமிழக அரசு சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பரிசாக ரூபாய் 2கோடி 1கோடி என அறிவித்துள்ளது. ஏன் இந்த சீர் கேடு. விளையாட்டு என்பது உடல் ஆரோக்கியம் தொடர்புடையதாக மட்டுமே இருக்க வேண்டும். அதைவிடுத்து அதில் போட்டிகள் வைத்து தங்கப் பரிசுகள் மற்றும் பதக்கங்கள்  வாரி வழங்கி மாணவர்களை படிப்பிலும் கவனம் செலுத்த முடியாமல் விளையாட்டிலும் கவனம் செலுத்தமுடியாமல் வீணாகப்போனவர் பாதிப்பேர் .மீதிப்பேர் விளையாட்டையே வாழ்க்கை முறை என நினைத்து வாழ்க்கையை வீணாக்கியவர்களை நாம் கண்கூடாகப்பார்க்கின்றோம்.

விளையாட்டிலும் ,படிப்பிலும் இரண்டு துறையிலும் சமமாக முதல் தகுதி அல்லது வல்லமை உடைய மாணவரோ அல்லது மாணவியோ இதுவரை உலகம் கண்டதில்லை. அப்படியிருக்க விளையாட்டுதுறைக்கு இந்த அளவுக்கு அரசு ஏன் ஊக்விக்கிறது என புலப்படவில்லை. இதில்  ஏதோ உள் நோக்கம் உள்ளது என தோன்றுகிறது.

அறிவியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் புதிய கொள்கையை உருவாக்குபவருக்கும் இத்தகைய விருதுகளையும் உயரிய பரிசுகளையும் மனித சமுதாயம் அமைதி மற்றும் சமத்துவத்திற்கு பாடுபடும் மக்களில் சிறந்தவரை தேர்ந்தெடுத்து மாநிலத்தின் அல்லது நாட்டின் உயரிய விருதை அல்லது பரிசு மற்றும் பதக்கங்களை ஆண்டுதோறும் வழங்கினால் நாடு சிறந்து விளங்கும். மக்களும் அமைதி பாதையை நாடுவர்.

நாட்டை ஆளுபவர் சாணக்கிய மற்றும் ஆளுமை திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பது பொதுவாக ஆளப்படும் மக்கள் வகுத்துகொண்ட விதி. இதில் நயவஞ்சகமும் சுயநலமும் கொண்ட ஆட்சியர் அமைந்துவிட்ட நாடுகளில் ஜன நாயகம் கேலிகூத்தாகிவிடுகிறது.

மனிதன் நாகரீகம் வளராத காலத்தில் , மிருகங்களை வேட்டை ஆடினான். தற்காப்புக்காகவும் உணவுக்காகவும் விலங்குகளை வேட்டையாடப்பட்டது. தமிழர்கள் காளைகளை விவசாயத்திற்கு பயன்படுதிக்கொண்டனர். காளைகளை கட்டுப்படுத்தும் உடல் வலிமை விவசாயம் செய்யும் ஆண்மக்களுக்கு தேவைபட்டது. இதனை ஊக்குவிக்கும் பொருட்டு பண்டை காலந்தொட்டு சல்லிக்கட்டு விளையாட்டுகள் தமிழகத்தில் நடத்தப்பட்டன.

பண்ணை வீடுகளில் வளர்க்கப்படும் காளைகளை ஆண்டுக்கொரு முறை(மாட்டுப்பொங்கல்) அழகுப்படுத்தி கொம்புகளை சீவி வண்ணமிட்டு பனை ஓலைகளை(சல்லி என்று பெயர்) முடைந்து கொம்புகளில் கட்டவேண்டும். முரட்டுத்னமாக இருக்கும் காளைகள் வீட்டுப்பெண்களின் செல்லமாக வளரும். அன்னியர் யாரும் நெருங்க முடியாது.அப்படி வளரும் காளைகளை முறைமாமன்கள் அடக்கி சல்லி கட்டினால், பண்ணை வீட்டுப்பெண்களை பொன்னும் பொருளும் கொடுத்து  திருமணம் செய்துவைப்பர்.இது தமிழர்களின் கலாச்சாரமாகவே உணரப்பட்டது.

இந்த காளைகளை அடக்கும் நிகழ்ச்சிகள் ஆங்கிலேயரின் வருகைக்குப்பின்,வியாபாரமாகிவிட்டது.பணத்துக்காகவும்,பாராட்டுக்காகவு காளைகளை அடக்குவதற்காக உடலை ஆண்டு முழுவதும் வளர்த்து காளையை அடக்க முடியாமல் மரணமடைந்தோர் கடந்த காலத்தில் ஏராளம்.இதற்காக தான் இந்த விளையாட்டு இது இந்த  காலத்திற்கு ஏற்றதல்ல. இது தேவையற்ற விளையாட்டு. விலைமதிப்பற்ற மனித உயிர்கள் மடிவதை மனித நேயமுற்ற மனிதர்கள் விரும்ப வில்லை.

மேலும் தமிழகத்தின் பெரும்பாலான இளைஞர்கள் மென்பொருள் தொழில் பொறியிலளாராக விரும்புகின்றனர். ஆனால் இந்த அரசு  காளை விளையாட்டுகளையும்  மற்றும்  மதுக்கடைகளையும் திறந்து இளைஞர்களை சிந்திக்க விடாமல் எப்பொழுதும் மயக்கத்தில் வைத்திருக்க விரும்புகிறது . அரசுக்கு ஏன் இந்த கொலைவெறி?  

முரட்டுத்தொழில் தொடர்புடையதான விவசாயத்திலிருந்து விலகி இருக்க விரும்பும்  இளைஞர்களை திசை திருப்பும் முயற்சியாக இருக்குமோ என எண்ணத்தோன்றுகிறது . எனவே இந்த விளயாட்டை ஒழிக்க வேண்டும் என சமுக சிந்தனையாளர்கள் விரும்புவதில் நியாயம் உள்ளது.
                                     
பாமரமக்களின் வீர விளையாட்டாக நினைத்து, அந்த மிருக விளையாட்டை ஒழித்து தற்கால இளைஞர்களை படித்தவர்களாகவும் பொறியியல் மற்றும் மருத்துவம் சார்ந்த பட்டதாரிகளாக வளரவும்   இந்த அரசு வழி வகை செய்ய வேண்டும். அதற்கு சட்ட மன்றத்தில் சட்டமியற்ற வேண்டும். சட்டத்தை இயம்புவதுதானே நீதி மன்றத்தின் கடமை..இத்தகைய அறிவியல் பூர்வமான முன்னேற்றங்களுக்கு அரசு ஊக்கமளிக்கும் விதத்தில் நாட்டின் உயரிய விருதுகளும் பரிசுகளும் வழங்கவேண்டும்  என சட்டமியற்ற வேண்டும் .   

நீதி மன்ற ஆணை ,நாங்கள் ஒன்றும் செயவதற்கு இல்லை என அரசு சொல்லுவது பாமரமக்களை  ஏமாற்ற உதவும். ஆனால் சமூக அக்கறை உள்ளவர்களை ஏமாற்ற முடியாது. பாமரமக்களை  விழிப்புணர்வு உள்ளவர்களாக மாற்ற நமது நாட்டு ஆட்சியாளர்களுக்கு  மனம் வரவேண்டும். அப்படி மனமில்லா உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் ஆட்சியாளரின் திருமுகங்களின் மறுமுகங்களை மக்கள் காண்பது எப்போது?.        











No comments: