6- மறுமுகம் இல்லா திருமுகங்கள்
ஒரு பொருளை அடையும் வரை மனிதன் முயன்று
கொண்டேஇருப்பான்.அந்த பொருளை அடைந்துவிட்ட பின் அந்த பொருளின் மீதுள்ள ஈர்ப்பு
நாளாக நாளாக குறைந்துவிடும் .இது மனித இயல்பு .
ஆனால் இன்றளவும் இல்லாத ஒன்றை அடைய நீண்ட
நாட்களாகவே முயன்று கொண்டிருக்கின்றான். அதுதான் இந்து மதத்தில் கடவுள் இறைவன் ,ஆண்டவன், தனக்குவமை
இல்லாதான்,சக்தி மற்றும் அம்மன்.
கிறித்துவத்தில் கர்த்தர், அல்லது இறை தூதர், இஸ்லாத்தில்
முகமது நபியின் கண்டு பிடிப்பான அல்லா,மற்றும்
ஜைன மதத்தில் மகாவீர் ஜெயின்,புத்த மதத்தில் கவுதம புத்தர் .
தற்போது
உலகில் உள்ள 650 கோடி மக்களில் மேலே குறிப்பிடப்பட்ட ஏதாவது ஒரு மதத்தில்
உறுப்பினராக இருப்பர் .
இந்து மதத்தில் இறைவனை காணலாம் எனவும்
அவனை காண்பதற்கு என்னென்ன முறையில் எப்படியெல்லாம் மந்திரங்களை உச்சரிப்பது,
எப்படி விரதம் கடைபிடிப்பது,எப்படி பூஜைகள் செய்வது ,எப்படியெல்லாம் மிருக பலி
மற்றும் மனித உயிர்களை பழிவாங்கும் நரபலி எப்படி கொடுத்தால் இறைவன் காட்சி அளிப்பார்
என அவரவர் மனதுக்கு வந்தபடி மனநிலை பாதிக்கப்பட்ட,படித்த போலிச்சாமியார்
(சாமியாரில் எல்லாருமே போலிதான் ) உருவாக்கிய விதிமுறைகளை உண்மை என நம்பி
இன்றளவும் படித்த ,படிக்காத பாமர மக்கள் மன நிலை பாதிக்கப்பட்டு குடும்பத்தை
சீரழிக்கின்றனர்.
கிறித்துவத்தில் இறைவனை காண வழிமுறைகளை
வகுக்க வில்லை,மாறாக எப்படியெலெலாம் கர்த்தரிடம் வேண்டினால் ,எப்படியெல்லாம்
இசைபாடி கர்தரிடம் மண்டியிட்டு வேண்டினால் கர்த்தர் மீண்டும் தங்களை சந்திக்க
வருவார், ‘உன் பாவங்களை மன்னித்து உன்னை
ரட்சிப்பார்’ என வரையறுத்து கூறப்பட்டுள்ளது.
இஸ்லாத்தில், அல்லா(இறைவன்) உருவமற்றவர்
என குரான் கூறுகிறது. இருப்பினும் அல்லாவை வேண்டினால் ‘உன் பாவங்களை நீக்குவார்
உனக்கு சொர்கத்தை காட்டுவார்’ என உறுதியிட்டு கூறப்பட்டுள்ளது .
ஜைன மதம், இந்த மதம் இந்துக்களிடையே மன
மாற்றம் ஏற்பட்டு கடவுளை காண்பதெல்லாம் முடியாத காரியம் என உணர்ந்து அறவழி கோட்பாடுகளை மனிதர்களுக்கு
போதித்து,மனிதனை நிர்வாண நிலைக்கு மாற்றுகிறது. நிர்வாணம் எனில் மனிதருள் குடி
கொண்டிருக்கும் ஆசை,களவு, கோபம்,கொலை மற்றும் காமம்(அதாவது வன்முறையில் ஆண் பெண்ணை
புணர்வது). மனிதர்களிடம் மண்டி கிடக்கும் மிருக குணத்தை அகற்றி உணவு முறையில்
புலால் உணவை நீக்கி ,நடைமுறையில் மிருகங்களுக்கு தீங்கு விளைவிக்காத கோட்பாடுகளை
வகுத்தது.
ஆரம்பத்தில் அருவ வழிபாட்டை கடைபிடித்த
ஜைனர்கள் பின்னாளில் உருவ வழிபாட்டுக்கு மாறினர் .
அறவழி கோட்பாட்டை கடைபிடிப்பதின்
கடுமையினால் சலிப்படைந்த மக்கள் சற்றே
மாறுபட்ட கவுதம புத்தரை தலைவராகக்கொண்டு புத்த மத த்தை 2000 ம் ஆண்டுகளுக்கு
முன்னரே உருவாக்கினர்.
அதிக
ஆசை மனிதனுக்கு துன்பத்தை விளைவிக்கும் என்கிற உண்மையை முதன் முதலில்
உலகிற்க்கு உணர்த்தியவர். புரட்சிகரமான கடவுள் மறுப்புக்கொள்கையினால் தங்கள்
பிழைப்பே போய்விடும் என அஞ்சிய இந்திய ஆரியர்கள் ,ஜைன மற்றும் புத்த மத
பற்றாளர்களை நாட்டைவிட்டே துரத்திவிட்டனர்.
அண்டைநாடுகளான இலங்கை பர்மா.பிலிபைன்ஸ் போன்ற நாடுகளில் குடியேறினர் .
கிழக்காசிய நாடுகளில் முழுக்க புத்த மதம்
பரவியது .ஆரம்பத்தில் மானசீகமாக வணங்கப்பட்ட புத்தரை பின்னாளில் சிலைவடித்து மற்ற
மதத்தினரைபோல் உருவ வழிபாட்டுக்கு மாறினர்.
உலகில் எல்லா மனிதர்களுக்கும் ஒரே
மாதிரியான காலை கடனை முடிக்கும் பழக்கம் உள்ளது. அதாவது பல் துலக்குவது,குளிப்பது
தலையை அழகுபடுத்துவது,உடலை மறைக்க விதவிதமான ஆடை அணிவது ,எந்த மதத்தைச் சார்ந்தவர்
என நெற்றியிலோ,கழுத்திலோ அல்லது மார்பிலோ மத சின்னங்கள (symbols) அணிவித்து சக
மனிதர்களுக்கு காட்டுவது . இது ஒரு நாகரீக கலாச்சாரமாகிவிட்டது . உலகெங்கும் இந்த கோட்பாடு இன்றளவும் நடைமுறையில் உள்ளது .
உலகிலுள்ள மக்களுக்கு இரண்டு வகையான இறை
வழிபாடு உண்டு . . 1-கடவுளை பாதுகாத்து பூஜிப்பது ,
2-கடவுளிடம் வேண்டுவது
முதலாவது முறையை கடைபிடிப்பவர்கள்
பெரும்பாலும் இந்துக்களே.
இவர்களுக்கு தங்களைப்பற்றிய கவலையைவிட
கடவுளைப்பற்றிதான் கவலை. அவருக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது.கடவுளை
திருடர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும்,இயற்கை சீற்றங்களிலிருந்து (அதாவது
மழை,வெள்ளம்,புயல் நெருப்பு,கடல் சீற்றம் போன்ற பேரழிவிருந்து )கடவுளை
கப்பாற்ற-காப்பாற்றப்படவேண்டும் .இதற்காக எந்த தியாகத்தையும் செய்ய
தயாராகிவிடுவான்.
ஒரு மரத்தின் (பெரும்பாலும் வேப்ப மரம்)
கீழ் கல்லை வைத்துவிடுவார்.பக்கத்தில் அரசமரம் இருந்தால் இரண்டு மரத்துக்கும்
ஊர்கூட்டி கல்யாணம் செய்து வைத்துவிடுவர்.
அதற்கு
மஞ்சள் குங்குமம் வைத்துவிட்டு விழுந்து எழுந்து கல்லை (கடவுளாம்)சுற்றி
சுற்றி வருவார்.
அந்த கல்லுக்கு இட்ட குங்குமம் கரைந்து
விடக்கூடாது என்பதற்காக அதன் மீது ஒரு குடிசை போடுவார். தனக்கு தங்குவதற்கு ஒரு
குடிசை இருக்காது.
‘நான் போகிற காரியம் வெற்றி பெறவேண்டும்’
அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ,(அது தர்ம காரியமாகவும் இருக்கலாம் அல்லது
அதர்ம காரியமாகவும் இருக்கலாம்) அதர்ம காரியம் கூட இவனுக்கு நியாய காரியம் தான்,
காரியம் கைகூடினால் .அந்த வேண்டுதலுக்கு மொட்டை அடிப்பார்.
வேண்டுதல் நிறைவேறுகிறதோ இல்லையோ
கடவுளுக்கு நகைகளை மாட்டிவிட்டு அதற்கு கோட்டை கட்டி பாதுகாப்பாக பூட்டி
வைத்திவிடுவார். அந்த கடவுளைக் காண ரூ50,100,500,1000,மற்றும் அதன் மடங்காக
10,000,20,000என லட்சங்களாக கூட பணம் கட்டி அந்த கற் சிலையை(அதான் இவருக்கு
வாரிவழங்கும் கடவுள்)தரிசித்து கன்னத்தில் இட்டு புளங்காகிதம் அடைவர் .இது
இந்துக்களின் கடவுள் வழிபாட்டு முறை.
வரிசையில் நின்று கடவுளை தரிசிக்க
முடியாதவர்கள் காசுகொடுத்து சீட்டுவாங்கி கடவுளை தரிசித்தால் விரைவில்
வீடுபோய்சேரலாம்,நமக்கு கடவுள் அருளால்தானே பணம் வருகிறது, அவருடைய செல்வம் தானே
அவரை பார்ப்பதற்கு பணம் செலவழித்தால் என்ன? என தனக்கு தானே சமாதானம்
அடைந்துகொள்வார்.
வரிசையில்
நின்று தரிசித்தாலும் பணம் கொடுத்து கடவுளை தரிசித்தாலும் அனைவருக்கும் ஒரே
முடிவுதான்.
யாருக்குமே
கடவுள் அருள் கிடைக்கப்போவதில்லை. உலகில் பெரும்பாலானோர் இதை உணர்ந்ததாக
தெரியவில்லை.
கடவுள் இல்லாமையாலா இரவும் பகலும்
உருவாகிறது ? என அப்பாவிகளாக எதிர் கேள்வி கேட்கும் அளவுக்கு நமது கல்வியறிவு
உள்ளது.நமது நாட்டு கல்வி பாடத்திட்டம் மட்டுமல்ல, இந்தியா போன்ற முதலாளித்துவ
நாடுகளின் கல்வி பாடத்திட்டம் எல்லாமே கடவுள் வாழ்த்தில் தான் ஆரம்பிக்கும் .
குழந்தைகளை சிறு வயது முதல் இப்படித்தான்
வளர்க்க வேண்டும். இதில் எனக்குகூட உடன்பாடுதான். ஆனால் பதின்ம பருவ வயது(TEEN
AGE) வரைதான் இந்த பாடதிட்டம் வைத்திருக்க வேண்டும்.
கல்லுரி பாடதிட்டத்தை சுய சிந்தனை
பாடதிட்டமாக மாற்ற வேண்டும் .
கல்லுரியில் பாடதிட்டம் மாறாத-மாற்றாத
காரணத்தால் தான் நமது நாட்டு படிப்பாளிகளான டாக்டர்களும்,எஞ்னியர்களும்,
வக்கீல்களும் மற்றும் மாஸ்ட்டர் பட்டம் பெற்றவர்களும் மன வளர்ச்சி குன்றிய
குழந்தைகள் போல் வாழ்கின்றனர்.
உழைக்கும் சமுகத்திற்கும்
அரசாங்கத்திற்கும் நேரடி தொடர்பு இருக்கவேண்டும்.தரகு வர்த்தகம் கூடாது(NO MIDDLE
MAN). பொது உடமை கொள்கையுடைய (COMMUNISM) நாட்டில் மட்டுமே இது முடியும்.
பொது இடத்தில் கோயில்,சர்ச் மற்றும்
மசூதி கட்டுவதை தடை செய்ய வேண்டும்-தடை செய்யப்படவேண்டும்.
கோயிலில் விலை உயர்ந்த
பொருட்கள்,ஆபரணங்களை வைக்ககூடாது.அப்படி ஆலயங்கள் இருந்தாலும் பூட்டகூடாது.
ஆலயங்களில்
அர்ச்சகர்,பூசாரி,பாதிரியார்,இமாம் போன்ற இடைத் தரகர்கள் கூடாது. இதற்கு அரசாங்கம்
முழு பொறுப்பு ஏற்க வேண்டும்
இரண்டு வகையான இறைபாட்டில் இந்துக்கள்
கடவுளை பாதுகாத்து பூஜிப்பதை பார்த்தோம் .
அடுத்து கடவுளிடம் வேண்டுவது. உலகில்
பெரும்பாலான மதத்தவர் (அதாவது கிறித்துவர்,முஸ்லிம்,புத்தம் மற்றும் ஜைனர்)கடவுள்
உருவமற்றவர்,அவரிடம் வேண்டுகோளை மட்டுமே வைக்கவேண்டும்.கடவுளுக்கு உருவம் கொடுத்து
அரச்சனை செய்வது,பூஜிப்பது கூடாது என்பது இவர்கள் கருத்து.
கடவுள் இருப்பதாகவே இருக்கட்டும். மனிதனின் வேண்டுகோளால் இயற்கை நிகழ்வுகளை
மாற்றியமைக்க முடியாது. ஆனால் பரிகாரம்செய்தால் சரியாகிவிடும் என ஒரு கும்பல்
ஏமாற்றி பொழைப்பை நடத்துகிறது .இதனை அரசாங்கம் தடை செய்ய வேண்டும்
இதில்
‘உனக்கு மட்டும் ஏன் அக்கரை’ என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.
சாதிய சமுதாய கட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்ட
தனிமனிதனின்,ஒரு குடும்பம்,ஒரு கிராமம், ஒரு சாதி (அதான் இனம் ) ஒர் வட்டம்
,அல்லது மாவட்டம் ,ஒரு மாநிலம். ஒரு நாடு என படிப்படியாக உலகம் முழுக்க
ஒவ்வொரு
மனிதனுக்கும் இனொரு மனிதனைப்பற்றி
அக்கரை இருக்கத்தான் செய்யும். இருக்க வேண்டும்.இத்தான் சமுக சிந்தனை.
கடந்த கால வரலாற்றில் நாம் கண்ட
அறிவியலாளர்களின் கண்டுபிடிப்பால்,500 ஆண்டுகளில் உலக அறிவியல் வளரச்சியை நாம்
கண்கூடாக கண்டிருக்கிறோம்.
அப்படி சமூக சிந்தனையாளர்களில் முதலில்
நிற்பவர்
1-மகாவீர்ஜெயின்(சமுகசிந்தனையாளர்,பின்னாளில்,ஒருமதமாக …
உருவாகிவிட்டது)
2-கவுதம புத்தர்
(------------------do--------------------------)
3-யேசு (
-----------------do---------------------------)
4- முகமது நபி
(------------------do---------------------------)
5-காரல் மார்க்ஸ்
(சமுக சிந்தனையாளர்)
6-எங்கல்ஸ்
(------do----------)
7-ஆப்ரகாம் லிங்கன்(ஒடுக்கப்பட்ட
மக்களுக்காக சுதந்திரம் அளித்தவர்)
8-மகாத்மா காந்தி (மத ஒற்றுமைக்காக
போராடியவர்)
9-சேகுவாரா (ஒடுக்கப்பட்ட
மக்களுக்கா போராடியவர்)
10-மார்ட்டின் லூதர் கிங் (--------do------------------------}
11-பிடல் காஸ்ட்ரோ
(--------do------------------------)
12-லெனின்
(--------do------------------------)
13-மாசே துங்
(--------do------------------------}
14-ஈ.வே.ராமசாமிநாயக்கர்(மக்களின்மூடநம்பிக்கைஒழிப்புக்காக
-
போராடியவர்)
15-டாக்டர் அம்பேத்கர் (ஒடுக்கப்பட்ட தன்
இன மக்களுக்காக—do---- )
16-நெல்சன் மண்டேலா (ஒடுக்கப்பட்ட தன் இன
மக்களுக்காக –do----- )
அறிவியல் கண்டுபிடிப்பால் உலகம்
வளர்ந்தது-வளர்கிறது .இதன் பட்டியல் வெகு நீளம்.
சுருக்கமாக-உலகம் உருண்டை1-கலிலியோ
மின்சாரம் 2-
தாமஸ் ஆல்வா எடிசன்
ரயில்- 3-ஜேம்ஸ் வாட்
விமானம் 4-ரைட்ஸ் சகோதரர்கள்
அணு 5-டால்ட்டன்
நாம் காணும் இன்றய உலக வளர்ச்சி
இவர்களால் தான். இவர்களுக்கு பின் ஏராளமான அறிவியலாளர்கள் உள்ளனர். இன்றும்
உருவாகின்றனர்.
இவர்கள் யஅனைவரும் மறுமுகங்கள் இல்லா
திருமுகங்களே!
No comments:
Post a Comment