Sunday, April 22, 2012

5-ஆரியரின் மறு முகம்-1


                           5-ஆரியரின் மறுமுகம்-1                   
                               யூதரும் ஆரியரும்
இயேசுவும் ஒரு யூதரே

மனித குலத்தில் நான்கு நிறத்து இனங்கள் உண்டு.கருப்பு, சிவப்பு மஞ்சள் மற்றும் வெள்ளை.சிவப்பு இனம் அமெரிக்க கண்டத்தில் வாழ்கின்றனர்.அங்கு வெள்ளையரின் குடியேற்றத்தால் செவ்விந்தியர் அழியும் நிலையில் உள்ளனர்.மத்திய கிழக்கு ஆசிய மனிதர்கள் மஞ்சள் நிறமுடையவர்கள்
நிறம் மனிதர்களை வேறுபடுத்தினாலும்,சுய இன்ப பழக்கமான புகை பிடித்தல், மது அருந்துதல்,சூதாட்டம் மற்றும் அருவ வழிபாடு(SPRITUAL WORSHIP) போன்ற பழக்கங்கள் உலகம் முழுக்க பரவியுள்ளது.
அருவ வழிபாடு ஒரு சுய இன்ப பழக்கமா ?ஆம் .மனிதர்களின் மிருக குணங்களை மாற்றி அல்லது குறைத்து நாகரீகமான மனிதர்களை உருவாக்க பயன்படுத்தப்பட்ட ஒரு யுக்தி.
மனிதன் தன் உடலை மறைக்க ஆடைகள் அவசியமாகிறது.அதைபோல் அருவ வழிபாடும் அவசியம் என்கிற நிலைக்கு வந்துவிட்டான்.
அந்த யுக்தி தற்போது மூட நம்பிக்கைகள் நிறைந்து அதிலிருந்து மீள முடியாமல் அதுவே வாழ்க்கை என 99% மக்கள் தேனில் விழுந்த ஈக்களை போல் ஆகிவிட்டனர்.

உலகில் உயர்ந்த மனித இனம் வெள்ள இன மக்கள் .அதாவது வெய்யிலில் உடல் படாமல் பார்த்துக் கொள்பவர்கள்.
மனித குல வளர்ச்சிக்கு மூலமான
உணவு உற்பத்தி,
வீடு கட்டுதல்,
உடலை மூடும் துணி தயாரித்தல்.இதில் எதிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள மாட்டார்கள்
இந்த மூன்று தொழிலையும் செய்ய மனிதர்கள் வெய்யிலைதானே நம்ப வேண்டும் வெய்யிலில் தானே வேலை செய்ய வேண்டும்.
இந்த வேலையை முழுக்க முழுக்க செய்பவர்கள் கருப்பு மற்றும் கருப்பும் வெள்ளையும் கலந்த மாநிறத்தவர்கள்.
இவர்கள் வாழும் இடங்கள் பூமத்திய ரேகைக்கு கீழே அதாவது பூமியின் தென்புலம்.
2000 ம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் புலம் பெயர்ந்து வாணிபம் செய்தது வரலாற்று ஆராய்ச்சிமூலம் தெரியவருகிறது.
அமெரிக்கா,ஆஸ்ட்ரேலியா,மற்றும் ஆப்ரிக்கா, இந்த மூன்னு கண்டங்களிலும் 500 ஆண்டுகளுக்கு முன்னர்தான், அய்ரோப்பா மற்றும் ஆசிய கண்டங்களிருந்து மக்கள் குடியேறினர்.
முன்னிரண்டு கண்டங்களில் வாழ்ந்த பழங்குடிகள் அழியும் நிலையில் உள்ளன

ஆப்ரிக்க கண்டத்தில் வாழும் கருப்பின (நீக்ரோ)மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இவர்கள் வாழ்வாதாரம் தேடி அமெரிக்க மற்றும் அய்ரோப்பா கண்டங்களிலும் பரவியுள்ளனர்.                                   
தங்கள் உடல் பலத்தாலும் கல்வியறிவாலும் வெள்ளையர்களின் இனவெறியை எதிர்த்து தங்கள் இனத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.
                              
மனித இனங்களில் ஆசியாவின் மேற்குப்பகுதியில் வாழ்ந்த யூத(jews) இன மக்கள் மிகுந்த அறிவாற்றல் மிக்கவர்கள்.பெறும்பாலான அறிவியலாளர்கள் இந்த இனத்திலிருந்து தான் பிறக்கின்றனர்.
அப்பொழுது மத்திய ஆசிய கண்டத்தில் வாழ்ந்த ஆரிய வெள்ளையின மக்கள், சாதுர்யமும் தந்திரமும் மிக்கவர்கள்.
2000 ம் ஆண்டுகளுக்கு முன் யூத இனத்தில் புரட்சிகரமான கருத்துக்களை பரப்பிய இயேசு (JESUS)’யூத இன அரசனால் சிலுவையில் அடைக்கப்பட்டார்.யூத இன அரசனின் கொடுங்கோலாட்சியை தாங்க முடியாத மக்கள் புலம் பெயர ஆரம்பித்தனர்.

ஆசிய கண்டத்தின் மேற்கு பகுதியில் வாழ்ந்த யூதர்களின் மன மாற்றத்தால் யேசுவிற்குப் பின் கிறித்துவ மதம் பிறந்து,இனபெருக்கத்தால், இத்தாலி பிரானசு,பிரிட்டன் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு கிறித்துவ மதம் பரவியது.                                                                20ம்நூற்றூண்டின் ஆரிய வம்சத்து கடைசி  கொடுங்கோலன்,ஜெர்மனியை ஆண்ட இட்லர்.இவரிடம் சிக்கி யூத இனம் அழியும் நிலைக்கு வந்துவிட்டது.

21 ம் நூற்றாண்டில் நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஆரிய வம்சத்தின் புத்தமதத்தைச் சார்ந்த இலங்கையை ஆண்டு கொண்டிருக்கும் கொடுங்கோலன் ராஜபக்சே.இவனிடம் சிக்கி தமிழினம் அழியும் நிலைக்கு வந்துவிட்டது.
இயற்கையின் (கடவுளின்) வினோதங்களையும் அற்புதங்களையும் அசைத்துப்பாற்கும் அற்புத அறிவியல் மேதைகள் (உதாரணம் ஐன்ஸ்டீன்)  தோன்றியதும் யூத இனத்திலிருந்துதான்.
கடவுளால் உழைக்கும் மக்களுக்கு ஒரு நன்மையும் இல்லை என தன் மூலதனக் கொள்கையால்(TASS CAPITAL) உலகுக்கு உணர்த்திய மாமேதை காரல் மார்கசும் இதே இனத்தவர்தான்  

முகமது நபியும் ஒரு கிறித்துவரே

கிறித்துவம் தோன்றி 500 ஆண்டுகளுக்குபின் கிறித்துவ மதகுருமார்களின் போக்கால் சலிப்படைந்த  மக்களின் மத்தியில் புரட்சி வெடித்து.

இந்நிலையில்  முகமது நபியின் புரட்சிகரமான கருத்துக்கள் மக்களிடையே வேகமாக பரவியது .கிறித்துவத்தின் ஒருபகுதி மக்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறினர்.
சகாரா மற்றும் தார் பாலைவனத்தின் சுற்றியுள்ள நாடுகளில் முசுலீம்கள் குடியேறினர்.                           

ஆசியாவின் மத்திய பகுதியில் வாழ்ந்த ஆரிய இன மக்கள் மூன்றாக பிரிந்து ஒரு பகுதியினர் கிறித்துவராகவும் இன்னொரு பிரிவினர் 500 ஆண்டுகளுக்கு பின் முஸ்லீமாகவும் மாறினர் . அதற்கு முன்னரே இந்த பிரச்சினையிலிருந்து விடுபட்டு , அமைதி வாழ்க்கை வேண்டி மத்திய கிழக்கு மற்றும் தெற்கு ஆசிய பகுதிக்கு ஆரியர்கள் குடியேறினர்.
மத்திய கிழக்கு ஆசிய பகுதியில் வாழ்ந்த மங்கோலியரின் எதிர்ப்பால் ஆரியர்கள் இந்தியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கைபர் போலன் மலையிடை(கணவாய்)வழியே இந்தியாவிற்குள் நுழைந்தனர் .

                        புத்தரும் ஒரு ஆரியரே

அப்பொழுது இந்தியாவில் வாழ்ந்த இனம் (திராவிட)தமிழினம்  .இவர்கள் வழிபாடு சைவம் .அதாவது மனித இன விருத்தி உருவ வழிபாடு. (WORSHIP OF FALLACY, OR LINGA WORSHIP) இதிலிருந்து தான் மனித குலத்தின் சக்தி உருவாகிறது என சக்தி வழிபாடு, அதாவது அம்மன் வழிபாடு உருவாகியது ,இதுதான் தமிழர்களின் (திராவிடர்களின்) மதவழிபாடு.

ஆரியர்கள்,விஷ்னுவை கடவுளாக உருவம் கொடுத்து வட இந்தியாவில் வாழ்ந்த திராவிட இனத்தின் மீது திணித்தனர்.ஏமாற்று பேர்வழிகளான ஆரியரில் ஒரு பகுதியினர் மனசாட்சி உறுத்தவே புத்தரை தலைவராக கொண்டு புதிய புரட்சிகரமான மக்களின் சிந்தனை தூண்டும் விதமாக புத்த மதக்கொள்கையை உருவாக்கினர். புத்தரின் கொள்கைகள் பிராமணர் களிடையே பிளவை ஏற்படுத்தியது.
                           
புத்த மத ஆதரவாளர்கள் நாட்டை விட்டே விரட்டியடிக்கப்பட்டனர்.எனவே புத்தரும் ஒரு ஆரியரே                

ஆரியர்கள் தாய் மொழியான சமஸ்கிருதமும் வட இந்தியாவில் பேசிவந்த தமிழும் கலந்து தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,மற்றும் துளு போன்ற மொழி உருவானது.ஆரியர்களின் நெருக்கடியால் வட புலம் இருந்தவர்கள் தென்புலம் நோக்கி வந்தனர் . ஏற்கனவே தென்புலத்தில் வாழ்ந்துவந்த தமிழர்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல்,வட வேங்கடத்தின்  எல்லையோரப்பகுதியான மதனபள்ளி மற்றும் அகோபிலத்தில் ஆரியர்கள் குடியேறினர்.அங்கிருந்து வைணவத்தை பரப்பினர்.அய்யங்கார் என பட்டம் சூட்டிக்கொண்டனர்


மற்றொறு பிரிவினர் திராவிடர்களின் போக்கிலே சென்று சைவத்தை பரப்ப மேற்கு நோக்கி நகர்ந்து மங்களூர் வழியாக பாலக்காட்டில் குடியேறினர்.அய்யர்
என பட்டம் சூட்டிக்கொண்டனர்

ஆடுமாடுகளை பலிகொடுத்து அசைவ பிரியர்களான ஆரியர், தமிழர்களின் சைவ உணவை பின் பற்றலாயினர்.
                                     
இன்றும் வடஇந்திய ஆரியர் (பிராமணர்) அசைவ உணவு உண்பவர்கள்தான்.
அஞ்சா நெஞ்சம் படைத்த தமிழர்களின் எதிர்ப்பை சமாளிக்க தமிழர்களிடையே அருவ வழிபாட்டை (SPRITUAL WORSHIP) புகுத்தினர். இன்றளவும் இந்தியாவில் ஆரியர்கள்  உழைக்காமல் அடுத்தவர் உழைப்பை சுரண்டி வெற்றிகரமாக தங்கள் வாழ்க்கையை நடத்த இந்த அருவ வழிபாடுதான் உதவியளிக்கிறது
தமிழர்கள் தங்கள் மாநிலத்திலேயே இட ஒதுக்கீடு கேட்டு போராடிக் கொண்டிருக்கின்றனர்.
                              

உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி.பாதிக்கப்பட்ட இனத்தை சார்ந்தவர் உயர் சாதிகளில் ஏழைகளுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என பிதமருக்கு கடிதம்(19.09.2011 செய்தி தாள்)                                
எழுதும் அளவுக்கு, பிராமணர்கள் தங்கள் சாதுர்யம் மற்றும் தந்திர புத்தியால் சூத்ரர் களையும் பஞ்சமர்களையும் தங்கள் கண்களை தங்கள் கைகளாலேயே குத்திக்கொள்ள சூழ்ச்சிகளை திட்டம்போட்டு நிறைவேற்றுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே என்பதை நிருபித்து விட்டனர்.

பிராமணர்களின் வேஷங்களை மாயாவதி நம்பிவிட்டார். கனஷிராம் கொள்கையை காற்றில் பறக்கவிட்டார் . இட ஒதுக்கூட்டின் அடிப்படை தத்துவம் புரியாமல் பிராமணர்கள் விரித்த வலையில் விழுந்துவிட்டார் . பிராமணர்களின் அடிமை முதல்வர் என்பதை மாயாவதியை மெய்ப்பிக்க வைத்துவிட்ட ஆரியரின்
 திருமுகத்தின் மறுமுகம் இதுவே.   




.    
     
                

     

No comments: