Sunday, April 22, 2012

15-மாமுனிவனின் மறுமுகம்


                            15-மாமுனிவனின் மறுமுகம்

சட்டங்கள் போடுவதும்  திட்டங்கள் தீட்டுவதும் மக்கள் மன்றங்களான நாடாளுமன்றமும், சட்ட மன்றமும் தான்.இன்று மன்ற உறுப்பினர்களே  சட்டத்தை மீறுவது சர்வ சாதாரணமாகிவிட்டது.
செய்வது தவறு என தெரிந்தே செய்கின்றனர்.இதற்கு காரணம் தவறு செய்பவர்கள் அனைவறும் சட்டம் போடும் தண்டனைகளுக்கு  உள்ளாவதில்லை என்கிற எண்ணம்தான்.
யார் நினைத்தாலும் அரசியலில் மின்னலாம் .இதற்கு மூலதனமே தனக்கிறுக்கும் பேச்சாற்றல் தான்.

பேச்சாற்றல் உள்ளவர்கள் தங்கள் வாதத் திறமையால் உண்மையை பொய் என நிருபிப்பதும்,பொய்யை உண்மை என நிருபிப்பதும் மக்கள் அவர்களை காலம் கடந்து தெரிந்து கொள்வார்கள் அல்லது புரிந்து கொள்வார்கள் .
ஆனால்  உண்மைக்கு என்றுமே அழிவே இல்லை.இது வரலாறு கண்ட உண்மையாகும்.இது ஆன்மீக வாதிகளுக்கும் பொருந்தும்,பகுத்தறிவாளர்களுக்கும் பொருந்தும். இந்த அறநெறிச்செயலை மீறுபவர்கள் மக்கள் நீதி மன்றத்தால் தண்டிக்கப்படுவர்.
இன்றய (03.11.2011)செய்திகளில் சென்னையில் விதி முறைகளை மீறி கட்டப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்களை இடிக்க வேண்டும் என நீதி மன்றம் உத்திரவிட்டுள்ளது.

அதாவது சட்டத்தை கண்காணிக்கும் காவலாளியாக நீதிமன்றம் உள்ளது.

இன்னொரு செய்தியாக 44 பல்கலை கழகங்கள் தங்களுடைய அரசாங்க அங்கீகாரத்தை இழக்கின்றன.ஒரு வழக்கில் உச்ச நீதி மன்றத்தில் அரசு தன் நிலைப்பாட்டை எடுத்து சொன்னபோது நீதி பதிகளின் தீர்ப்பு இது.

இதையெல்லாம் பத்திரிக்கையில் படிக்கும் போது மனம் வேதனைப்படுகிறது.பல்கலை கழகத்துக்கு ஒப்புதல் வழங்குவது அரசு அதிகாரிகள் தானே? அரசு போட்ட சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுதானே தனியார் நிறுவனங்களுக்கோ அல்லது தனியார் கல்வி நிறுவனங்களுக்கோ அதிகாரிகள் ஒப்புதல் அளிக்கின்றர் ? அப்படி வரம்பு மீறும் நிறுவனங்கள் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்திருக்கலாம்.
அப்படி நடவடிக்கை எடுக்க தவறிய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? தெரியவில்லை .அரசுக்கு ஊழலை ஒழிக்கும் எண்ணமிருந்தால்  அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.    

அமைச்சர்களும் அதிகாரிகளும் லஞ்சம் வாங்குவதை வெளியிட்டு பெருமை பட்டுக்கொள்ளும் பத்திரிக்கைகள் தங்கள் பத்திக்கையில் செய்திகளை வெளியிடுவதற்கும்,விளம்பரப்படுத்துவதற்கும் எவ்வளவு பணம்பெறப்படுகிறது ஊழியர்களுக்கு சம்பளம்,

பத்திரிக்கை காகித செலவு ,நிர்வாக செலவு போக எவ்வளவு பணம் மிச்சமாகிறது என ஒவ்வொருமாதமும் தங்கள் பத்திகிக்கையில் வெளியிட்டு மக்கள் மத்தியில் நாங்களும் நேர்மை யானவர்கள் தான் என நிருபிக்க வேண்டியதுதானே?  
                               
ஒரு கட்டிடம் கட்ட அனுமதிப்பதும் ஒரு பல் கலை கழகத்திற்கு அனுமதி வழங்குவதும் அரசு அதிகாரிகள் தான். சட்டம் என்ன சொல்கிறதோ அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது . அதை கண்காணிப்பதும் அதிகாரிகள் தான்.
அந்த அதிகாரிகளை வேலை வாங்குவது அரசியல் வாதிகள். இங்கேதான் ஊழல் உருவாகிறது.
                                       
மனோன்மணி காவியத்தில் கவி சுந்தரம் பிள்ளை அவர்கள் குடிலன் வாயிலாக ஒரு உண்மையை கூறுவர், ‘மா முனிவனும் மனிதனே’ அதாவது மனிதன் ஆசாபாசங்களுக்கு உட்பட்டவன். என்பதை உணர்த்தியிருப்பர்.
இதிலிருந்து என்ன தெரிகிறது எனில் முனிவர்கள் சாமியார்கள்,பூசாரிகள்,அர்ச்சகர்கள்,பாதிரியர்,பங்குதந்தை,ஹசரத்,மவுலா-னா,இமாம்,ஜனாப் போன்றோர் அனைவரும் ஒரே குணமுடையவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
இப்பொழுதெல்லாம் ஆசிரியர்களை கூட இப்பட்டியலில் சேர்த்துவிடலாம்.அவர்கள் பள்ளிச்சிறுமிகளை பாலியல் தொந்திரவு செய்வதும் அந்த செய்திகளை பத்திரிக்கையில் படிப்பதும்  நமக்கெல்லாம் வேதனை அளிக்கின்றது.

மேலே குறிப்பிடப்பட்ட அறிவு ஜீவிகளாக போற்றப்படும் மகான்களிடமிருந்தது உருவானவர்கள் தான் இந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் .
மக்கள் வரிப்பணத்தை மட்டுமல்ல மக்களிடமிருந்து பெறப்படும் லஞ்சம்,லஞ்சம் கொடுக்க முன்வரும் பொது மக்கள்  தங்கள் சுய நலனுக்கு பயன்படுத்தும் முறையை கண்டிக்க நீதி மன்றம் மட்டும் போதாது ,மக்கள் கண்காணிப்புக்குழு அமைத்து பெரியமனிதர் போர்வையில் உலாவரும் மனிதர்களின் திருமுகங்களின் மறுமுகங்களை மக்களுக்கு காட்டவேண்டும்.









                                    

No comments: