10- அறிவியலாளரின்
மறுமுகங்கள்
மனிதன் தன் சுயஅறிவற்றலால் கண்டுபிடித்த
அணுப்பிளவு மற்றும் அணு இணைப்பு செயல்பாடுகளும் அதனால் ஏற்படப்போகும் அழிவுநிலைகண்டு அரண்டு
போயுள்ளான்.
அடுத்து உயிரினத்தின் இனொரு உருபடியை
(CLONING) உருவாக்கிவிட்டு அதைபோல மனிதனை உருவாக்கினால் நிலமை என்னாகும் என
இன்னும் ஒரு முடிவுக்கே வர முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றான்.
நமது
அறிவியாலளர்கள் துணைக் கோள்களை உருவாக்கி ராக்கெட்டுகளில் வைத்து வானுக்கு
அனுப்புவதற்கு திருப்பதி ஏழுமலை கடவுளிடம்
வேண்டிக் கொண்டிருக்கின்றனர்(தினத்தந்தி-12.10.11 தேதியிட்டசெய்தி)
மனிதனின்
கண்டுபிடிப்புகளுக்கு (Discoveries&Inventions ) எல்லாம் கடவுள்
காரணமாகவே இருக்கட்டும்,அல்லது பக்க பலமாகவே இருக்கட்டும் .இந்த ராக்கெட் பல
சாதனைகள் நிகழ்த்த கடவுள் எப்படி துணை புரிவார்? கடவுளின் அல்லது இயற்கையின்
ரகசியங்கள் தெரிந்து மனிதன் எப்படி செயல் படப்போகிறான். இதற்கு முந்தய முயற்சிகள்
திருப்பதி சென்று அங்கிருக்கும் கடவுளை வேண்டிக்கொண்டு அடுத்த நாள் பறக்கவிட்ட
ராக்கெட் எல்லாம் கடலில் விழுந்ததே இதற்கு மட்டும் மனிதன் பொறுப்பா? இதற்கு இந்திய
அரசாங்கத்தின் கோட்பாடென்ன? கொள்கையென்ன?அறிவியலாளரின் கோட்பாடுகள் என்ன ?கொள்கை
என்ன? என்று வரையறுத்து கொண்டதாக தெரியவில்லை.
திருடன்
கூட கடவுளை நம்பித்தான் அந்த செயலைச் செய்கின்றான். கடவுளை நம்பும் அறிவியலாளரின்
செயல்பாடுகளுக்கும் திருடனின் செயல்பாடுகளுக்கும் என்ன வேறுபாடு? மக்களின்
வரிப்பணத்தை வீண்டிப்பதற்கு இவர்களுக்கு
கடவுளின் ஆதரவு தேவையாகிவிட்டது.சாதாரண மக்களும் அரசாங்கத்தை கேள்வி கேட்க
முடியாதல்லவா? ராக்கெட் செயலற்று போனால் மனிதன் என்ன செய்ய முடியும் ? கடவுளின் துணையில்லாமல்
மனிதன் செயல்பட முடியுமா? என பாமரனை ஆன்மீக வழியில் பிடிப்பை ஏற்படுத்த அய்யோக்கியர்களின்
திட்டமிடப்பட்ட செயலல்லவா?
நமது
நாட்டு அறிவியலாளரின் திருமுகங்களின் மறுமுங்கள் இவைதான்!
No comments:
Post a Comment