7-கடவுளின்மறுமுகம்
பன்னெடுங்காலமாக உயிரினங்களின்
இயற்கையான உணர்வுகள்-Natural
instinct,(ஆண்-பெண் இனக்கவர்ச்சி)
மன உந்து தல்-Natural Urge,(இனப்பெருக்க
உணர்வு,உயிர்வாழும் உணர்வு,
தாந்தோணித்தனம்-Intuition,(ஆசை,களவு,கோவம்,காமம்,கொலை,அல்லது
தற்கொலை உணர்வு)
பரம்பரை குணம்-Inborn Qualities)
மூலமும்,பிற உயிரினம் மற்றும் சக மனிதர்களின் பண்புகளையும்,நடத்தைகளையும்
(Inherited qualities and Characters)
(கிரகித்து)பெற்று படிப்படியாக இன வளர்ச்சியடைந்து
இன்றய நாகரீக
மனிதன்,இங்கிதம்,சமயோசிதம்,இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படும்
தந்திரசாலியாகிவிட்டான்.
இந்த உயிரினங்களின் பரிணாம
வளர்ச்சியிலும் பூமியின் சுழல் மாற்றங்களால் பருவகாலங்களின் மாற்றத்தினாலும் ஒரு உயிரினம் அழிந்து மற்றொரு
உயிரினம் தோன்றியது.தோன்றுகிறது. ஒவ்வொரு யுகத்திலும் முன்னதை விட மாறுபட்ட அல்லது
மேன்மையான உயிரினம் தோன்றியது.தோன்றுகிறது
இந்த வளர்ச்சிதை மாற்றங்களில் கடவுளின்
பங்கு என்ன?
பேசத்தெரியாத மிருகமும் ,பேசத்தெரிந்த
மிருகமும்(மனிதன்) அவ்வப்போது பல இன்பங்களையும் இன்னல்களையும் அடைந்து இறுதியாக இறந்து விடுகின்றன.
இறப்பு மூன்றுவகையாக அமைந்து விடுகிறது
1- மூப்பினால்
2- பிணியினால்
3-விபத்தினால்
மனித குலத்தின் மாபாதக குணங்களான
1-பேராசை
2-களவு
3-கோபம்
4-காமம்
5-கொலை, இவை
ஐந்தும் மிருகத்தோடு இணைந்த குணங்கள்
பரந்து விரிந்து கிடக்கும் பூமியில் பல
தரப்பட்ட உயிரினங்கள். இவற்றின் குணங்களும் இடத்திற்று இடம் மாறுபடும்.
மேலே குறிப்பிடப்பட்ட ஐந்து குணங்களும்
அது மிருகமானாலும் சரி மனிதர்களானாலும் சரி அளவில் தான் சற்று கூடும் அல்லது
குறையுமே தவிர ,எல்லா உயிரினங்களுக்கும் ஒன்றுதான்.
ஒவ்வொரு இனத்திற்கும் மரணம் தவிர்க்க
முடியாதது.
அப்படி இருக்கும் போது இங்கே கடவுளுக்கு
என்ன வேலை? அதுவும் மனிதன் உருவாக்கிய கற்பனை கடவுளுக்கு இங்கு என்ன வேலை?
இப்பொழுதுள்ள நிலையில் பூமியும் அதை
சுற்றியுள்ள கிரகங்களும் பூமியின் மீது வாழும் உயிரினங்களுக்காக
நிலைப்படுத்தப்பட்டுள்ளன.
பூமியை சுற்றி பல லட்சம் கி.மி
இடைவெளியில் சுமார் 12கிரகங்களும் ஒன்றுக்கொன்று பல லட்சம் கி.மிஇடைவெளியில் ஒவ்வொரு கிரகங்களும்
தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை அத்தனை கிரகங்களும் சுற்றி வருகின்றன ,பூமிக்கு நிலவு உள்ளது போல,ஒவ்வொரு
கிரகத்திற்கும் துணை கோள்கள் உண்டு.
இந்த அமைப்பிற்கு சூரிய குடும்பம் என்று
பெயர். சரியாக கவனத்தில் கொள்ள வேண்டும் .கிரகங்கள் நிலை எப்படி உள்ளது என
மீண்டும் ஒரு முறை மேலே நான் எழுதிய வரிகளை படித்து பார்க்கவும்
இதுவரை சூரிய குடும்பத்தில், பூமியில்
மட்டுமே உயிரினங்கள் வாழ்வதாக அறிவியலாளர்களும் வானவியல் வல்லுநர்களும்
கூறுகின்றனர்.
ஒரு கிரகம் இன்னொரு கிரகத்துடன்
கண்ணுக்கு புலப்படாத ஈர்ப்பு விசையால் கிரகங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று
பிணைக்கப்பட்டுள்ளன இவையனைத்தும் ஒரு குடும்பமாகவே இயங்குகிறது.
ஒவ்வொரு பொருளுக்கும் இன்னொரு பொருள்மீது
ஈர்ப்பு சக்தி உண்டு ,அதேபோல் எதிர்ப்பு சக்தியும் உண்டு.
அப்படி அதிகம் நாம் கண்டுணர்ந்த இரண்டு
பொருட்கள் இரும்பும் காந்தமும்.
எல்லா பொருளுக்கும் அணுவின் கூட்டமைப்பு
உள்ளது. அணுக்கருவான நியூட்ரான் மற்றும் புரோட்டானை சுற்றி எலக்ட்ரான்கள்
சுற்றிவருகிறது.இதனால் ஒவ்வொரு பொருளுக்கும் ஈர்ப்பு மற்றும் எதிர்ப்பு விசை
உண்டாகிறது.பேரண்டமும் (பிரபஞ்சம்) இப்படித்தான் இயங்குகிறது
காலங்காலமாக சூரியன் எரிந்து கொண்டு
இருக்கின்றது. அதிலிருந்து வெளிப்படும் வாயுக்களின் வெளியீட்டால்
சூரியக்குடும்பத்தின் மற்ற கிரகங்களை தாக்குகிறது.
கிரகங்களின் பருவ காலம் இதனால்
மாறுகிறது. குறிப்பாக நாம் வாழும் பூமியின் பருவ கால மாற்றத்தினை அறுதியிட்டு
கூறுகிறோம்.
மனிதனை உட்பட அனைத்து தாவர மற்றும்
விலங்கினங்கள் பிறந்து வளர்ந்து இறந்து விடுகின்றன. பின் மீண்டும் பிறந்து வளர்ந்து
இறந்து விடுகின்றன.இது ஒரு சுழற்சி முறை
பூமியில் உயிரினம் தோன்றிய காலமுதல்
இன்றுவரை இதே நிலைதான் .
இதில் மூன்றாவது உயிரினமான மனிதன் தன் பகுத்தறிவு கொண்டு இயற்கை வினோதங்களை
ஆராய முற்பட்டான்.
பல தரப்பட்ட அறிவியல் ஆராய்ச்சியில்
உச்சத்தை எட்டினாலும் அணுவிஷயத்தில் உச்சத்தை எட்டும் போது, மனிதன் ஆட்டம்
கண்டுவிட்டான். அணுவை பிளந்தால் என்ன ஆகும் ? உயிரினங்களின் அழிவு நிலைக்கே
சென்றுவிடும் என உணர்ந்து கொண்டான்.ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள்
மீது போடப்பட்ட அணு குண்டுகளினால் எவ்வளவு பெரிய உயிரின இழப்பு ஏற்பட்டது என உலகம்
கண்டு வியந்தது.
அப்பொழுதிலிருந்து அணு சக்தியை
ஆக்கபூர்வமான சக்தியாக எப்படி மாற்றியமைப்பது என்கிற யோசனையில் தோன்றியதுதான் அணு
உலைகள். இதன் மூலம் குறைந்த செலவில் மின் சாரம் தயாரிக்கலாம் என உலக நாடுகள்
தீர்மானித்தன. ஆனால் அதுவும் மனித குலத்திற்கு அபாயம் என்பதை 1986 ல் ரஷ்யாவில்
செர்னோபில் அணுவுலை வெடிப்பினால் உலகம்
உணர்ந்தது.மேலும் சிமெண்ட்டையும் செங்கல்லையும் நம்பி நம்பித்தான் அணுஉலைகள்
உள்ளன. செர்னோபில் அணு உலையை தற்போது ஆயிரக்கணக்கான டன் சிமென்டயும் கருங்கல்
சல்லியையும் குழைத்து மூடிவிட்டனர்.
சிமென்ட் என்பது ஒரு வேதியல் கலவை. இதில்
அடங்கிய கனிம பொருட்களின் கூட்டுக்கு ஒருமூலக்கூறு பிணைப்பு (MOLECULAR BONDAGE)
உண்டு. இந்த பிணைப்புக்கு ஒரு குறிப்பிட்ட காலம் கெடு உண்டு. அதாவது அதிக பட்சம்
100 ஆண்டுகள் தாக்கு பிடிக்கும் என்பது அறிவியலாளரின் கருத்து.சிமென்ட்
கண்டுபிடித்து இன்னும் 100 ஆண்டுகள் ஆகவில்லை. எனவே அதன் பயன் பாட்டின் உறுதி
தன்மை தெரியவில்லை. அந்த கால கட்டத்திற்கு பின் செர்னோபில் அணுவுலையினுள்
நடைபெற்றுக் கொண்டிருக்கும் தொடர் அணு செயல்பாடுபாடுகளின்(ATOMIC CHAIN REACTION)
விளைவு என்னவாக இருக்கும்?
இங்கே தான் கடவுள் இருப்பதாக
யூகித்தான்.
இது இயற்கை என பகுத்தறிவாளர்
கூறுகின்றனர்.
ஆனால் ஆன்மீக வாதிகள்,இது கடவுளின் சர்வ
வல்லமையால் தான் நடக்கிறது . இதற்காக தினமும் நாம் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும், என பாமரனை நம்பவைத்தனர்.இன்றும் நம்ப
வைத்துக்கொண்டிறுக்கின்றனர்
இதன்மூலம் மனிதனுள் மண்டிகிடக்கும் மிருக
குணத்தை குறைத்து மனிதனை நாகரீக செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியும் என்கிற
கருத்தை பாமரமக்களிடையே பரப்பிவிட்டனர்.
ஆனால்,
மனிதநேயங்கள் எல்லாம் மறைந்து கடவுள்
நேயங்கள்தான் உலகில் அதிகரித்து விட்டது.அதாவது இல்லாத ஒன்றை இருப்பதாக
நினைத்துக்கொண்டு ,அதை அடையவேண்டும் என அலைபாயும் மனங்களிடைய மனிதர்கள் மன நிலை
பாதிப்புக்கு உள்ளாகிவிட்டனர்-உள்ளாக்கிவிட்டனர்.
மக்கள் அறியாமையை பயன்படுத்தி கடவுளுக்கும் பாமர மக்களுக்கும்
இடையில் இடைத்தரகர்களான(MIDDLE MEN) அர்ச்சகர்,பூசாரி,பாதிரியார்,பங்கு தந்தை ,ஹஸரத்
அல்லாது மவுலானா
போன்றவர்கள் உருவகிவிட்டனர்.
உலகெங்கும் இது ஒரு வியாபாரம் ஆகிவிட்டது.தினமும் நாம்
கடவுளுக்கு நன்றி சொல்லவில்லை என்றால் நாம் அழிந்து விடுவோமா? அல்லது உலகம்
அழிந்து விடுமா?
கடவுள் நம்பிக்கையினால் இன்றய மனிதனின் மனித நேயப் பண்பு எப்படி
மழுங்கிவிட்டது என்பதை பார்ப்போம்.
சாலையில் ஒருவன் விழுந்து கிடந்தாலோ அல்லது அடிபட்டு உயிருக்கு
போராடினாலோ அதை வேடிக்கை பார்த்துவிட்டு போகும் மனப்பான்மை உடைய மனிதர்களாக
மாறிவிட்டோம்.இதல்லாம் அவன் விதி என மனதை சமாதானம் செய்து கொள்கிறோம்.
விதி,பாவம்,புண்ணியம்,முன் ஜென்மம் பின் ஜென்மம்
இவையெல்லாம் மனித நேயமற்ற சொல்.கோழைகளின் புலம்பல்,தன்னம்பிக்கையற்றவனின்
தடுமாற்றம்.
இந்த உலகில் மனிதன் தோன்ற காரணமான தன் தாய் தந்தையர்க்கு நன்றி
சொல்ல வேண்டாமா? தனக்கு இந்த உலகை புரிந்து கொள்ள உதவிய ஆசிரியர்க்கு நன்றி
சொல்லவேண்டாமா? தன் வாழ்க்கை வளம்பெற உதவிய சக மனிதர்களுக்கு நன்றி சொல்லவேண்டாமா?
படித்து பட்டம் பெற்றவர்கள் கூட பாமரனைப்போல் நடந்து கொள்வதுதான் மன வேதனை
அளிக்கிறது.
இதை யெல்லாம் விடுத்து உலகை படைத்த கடவுளுக்கு உருவம் கொடுத்து
அதற்கு பல்வேறு ஊர்களில் கோயில் கட்டி வடக்கே இருக்கும் மனிதனை தெற்கு உள்ள கோயிலுக்கு அனுப்பி பரிகார பூசை
செய்ய சொல்வதும்,தெற்கே இருக்கும் மனிதனை வடக்கே இருக்கும் கோயிலுக்கு சென்று
பரிகார பூசை செய்ய சொல்வதும் எந்த வகையில் நியாயம்?
ஊரை சுற்றிப் பார்க்கவும் பல தரப்பட்ட மக்களை சந்திக்க வாய்ப்பு
என ஆனமீக வாதிகள் பாமரனை நம்ப வைக்கலாம். அதனால் அருகில் உள்ள கோயில்களுக்கு
வாராவாரம் சென்று பரிகாரபூசை செய்யசொல்வதும்,தூரமுள்ள கோயிலுகளுக்கு மாதம்
ஒருமுறையோ அல்லது வருடம் தவறாமல் குடும்பத்தோடு செல்லவேண்டும் என பக்தனுக்கு அறிவுரை சொல்வது என்பது
பக்தனுடைய வேண்டுதலுக்கு உத்தரவாதம் அளிக்க முடியுமா? இதனால் அவன் உழைப்பும்
பணமும் வீணாகிறதே அதை எவ்வாறு சரி செய்வதாம்?
அதுவும் இந்து கோயில்களில் நடக்கும் அநியாயம் கொஞ்ச நஞ்ச
மில்லை . கடவுளுக்கு சிலை வைத்துவிடுவார்களாம் ,அந்த சிலைக்கு தங்க மற்றும் வைர
நகைகளை மாட்டி , ஒரு கோட்டை கட்டி பூட்டி விடுவார்களாம்,
அந்த கடவுள் பக்தர்களுக்கு அருள் பாவிக்கிறாராம்,அதனால் மனிதன்
விரதம் இருக்கவேண்டுமாம்.
வெய்யிலில் கால்கடுக்க,ஒரு சில சமயம் நாள் முழுக்க அல்லது 2,3
நாட்கள் கூட காத்திருந்து ஒரு சில நொடிகள் அந்த சிலையை காணவைக்கின்றனர், மனிதனை
(பக்தனாம்)வரிசையில் நிற்க வைத்து,கடவுளின் தரிசனம் காட்டுகின்றனர். பக்தனும்
கன்னத்தில் போட்டுக்கொண்டு அடிதண்டம் போட்டுக்கொண்டு பிள்ளை குட்டிகளொடு
வீடு வருவான். மீண்டும் மீண்டும் இதையே தான் பன்னெடுங்காலமாக
செய்து கொண்டு இருக்கின்றான். எப்போ தெளிவடையப்போகிறான்?
இதனால் இவன் இன்னல்களெல்லாம் தீர்ந்து விட்டது என்கிற
ஒருதோற்றத்தை (மாயை) ஏற்படுத்தி (பாடாய் படுத்தி)வீட்டுக்கு அனுப்பிவிடுகின்றனர்.
அவனை கடவுள் சோதிக்கிறார் என மேலும் மேலும் கும்பிட்ட கடவுளையே கும்பிட
வைக்கின்றனர். அவனை மன நோயாளியாக்கி வேடிக்கைபார்க்கின்றனர். கடவுளின்
இடைத்தரகர்களுக்கு நெஞ்சில் ஈரமே இருக்காதா?
இந்து சமுதாயத்தில் இது ஒரு பெரிய வியாபாரமாகிவிட்டது.
அணு அறிவியலாளரில்(Atomic scientists) அணுவை பிளந்து அல்லது
அணுவை இணைத்து(Atomic Fission or Fusion) அதன்விளைவினால் ஏற்படபோகும் உயிரின
இழப்பை எண்ணி கலக்கமடைந்துள்ளனர்.
இன்னொறு உயிரின அறிவியலாளர்கள்(Biologists)உயிரின
மூலக்கூறுகளான செல் பகுப்பை (cell division)கண்டு பிடித்து இன்னொறு உயிரை(cloning)
உருவாக்கிவிட்டனர்
ஆனால் மனிதன் உட்பட உயிரினங்களுக்கு ஏற்படும் வயது முதிர்ச்சியையும்,மரணத்தையும்
தவிர்க்க முடியவில்லை.
மனிதனின் அறிவியல் கண்டு பிடிப்புகள் இறைவனின் படைப்புக்கு
எதிரானது என ஆன்மீக வாதிகள் கூக்குரல் எழுப்புகின்றனர்.
மனிதன்,
இயற்கையின் ரகசியங்களை கண்டுபிடுத்து விட்டாலும், இன்னொறு
பூமியை படைக்க முடியாது.அதாவது இன்னொறு சூரியக்குடும்பத்தை உருவாக்க முடியாது.
ஆனால் பூமியைப்போன்று ஒரு
கிரகத்தை கண்டு பிடித்து அதில் உயிரினங்களை குடியமர்த்தலாம். அந்த முயற்சி
நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.இன்னும் சில ஆண்டுகள் ஆகும்.
இவ்வளவு உண்மைகளையும் இங்கே ஏன் விவரிக்கப்படுகிறது
எனில்,இறைவனை தன்வயப்படுத்திடவேண்டும்,தான் சொல்லும்படி
இறைவனை,கடவுளை,கர்த்தரை,அல்லாவை மனமாற்ற செய்ய என்ன
மந்திரங்கள் ஓதவேண்டும்,என்ன விரதம் கடைபிடிக்க வேண்டும் என
பன்னெடுங்காலமாக இன்னும் முயன்று கொண்டே இருக்கின்றார்கள்.
மிருகங்கள் மனதைவிட, மனிதனின் மனம் விசாலமானது,வலிமை
வாய்ந்தது. காரணம் மனிதன் பேச்சாற்றலால் தன் எண்ணெங்களை வெளிபடுத்த முடியும்.
உலகில் எல்லா மதமும் கூறுவது போல்
ஒவ்வொரு மனிதனும் சடங்கு சம்ப்ரதாயமுறைபடி மந்திரங்கள் ஓதி,ஜபங்கள்
படித்து,நமோஸ்க்கள் செய்து, இறைவன்,யேசு மற்றும் அல்லாவை மனிதன் கண்முன்னே தோன்றினாலோ அல்லது பேசினாலோ
அந்த சர்வ வல்லமை படைத்தவனின் திருமுகத்தின் மறுமுகத்தை காண முயற்சி
மேற்கொள்வான்.
No comments:
Post a Comment