Sunday, April 22, 2012

25-ஆறறிவு மனிதர்களின் மறுமுகங்கள்



                                 25-  ஆறறிவு மனிதர்களின் மறுமுகங்கள்  

‘முதுமலை சரணாலயத்தில், கோயில் யானைகளெல்லாம் குதுகலிக்கின்றன.’ என பத்திரிக்கைகள் (25.12.2011) செய்திகள் வெளியிட்டுள்ளன.
யானைகளுக்கு மதம் பிடித்தால் காடு கொள்ளாது. இந்த உண்மை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
மனிதன் நாகரீகம் அற்ற காலத்தில் விலங்குகளோடு பழகினான்.

என்ன பழகினாலும் சிங்கம்,சிறுத்தை,புலி போன்ற முரட்டு விலங்குகளோடு மனிதன் பழக முடியவில்லை.இவைகளை எதிரிகளாக நினைத்து அழித்து விட்டான். எவ்வளவு அன்பாக பழகினாலும்  மனிதனை அடித்தே தின்றுவிடுகிறது. இதனால் இது போன்ற விலங்குகளை தவிர்த்து யானை,குதிரை,கழுதை,நாய்,பூனை,மாடு,ஆடு,கோழி மற்றும் கிளி போன்ற விலங்குகளிடம்  அன்பு செலுத்தினான்.

இன்றளவும் இந்த மிருகங்கள் மனிதர்களோடு பழகுகின்றன. தான் பெற்று வளர்த்த மகன்,மகள் போன்றோரைவிட நாய் மிகச்சிறந்த விசுவாசத்தை தான் வளர்க்கும் முதலாளியிடம் காட்டுகிறது. மிகவும் பாதுகாவலானாக நடந்து கொள்கின்றது. நாயின் ஆயுட்காலம் சொற்ப அளவே என்பதால் பெரும்பாலும் மனிதர்கள் நாயை வளர்ப்பதில்லை. காரணம் இதன் பிரிவு மனிதனை மிகவும் வாட்டுகிறது.மற்றபடி ஆடு மாடு கோழி போன்ற மிருகங்களை வளர்த்து தின்று விடுகின்றான்.

யானையும் விசுவாசமுள்ளதுதான்.  ஆனல் இந்த மிருகத்தை மனிதன் வீடுகளில் வளர்க்க முடியாததற்கு காரணம் இதக்கு தீனி போட சாதாரண உழைப்பாளியால் முடியாது என்பதுதான் . அந்த அளவிற்கு யானைக்குத் தீனிக்காக செலவு செய்ய வேண்டியுள்ளது.மன்னர்கள் காலத்தில் யானைப்படை,குதிரைப்படை என அண்டை நாடுகளுடன் போர்புரிய வைத்திருந்தனர் .மக்கள் வரிப்பணத்தில் இவைகள் வளர்க்கப்பட்டன  

அதுமட்டுமல்ல யானைக்கு மதம்பிடித்தாலோ அல்லது முரண்டு பிடித்தாலோ சாதாரண மனிதன் கட்டுக்குள் கொண்டுவர முடியாது. காட்டு விலங்குகளில் மிக பிரம்மாண்டமானது யானைகள்தான்.அந்த அளவிற்கு உருவத்தில் மிகப்பெரியது. இதற்காகத்தான் கோயில்களில் கட்டிவைத்தார்கள்.இதனால் மக்கள் இதனை காணும்பொருட்டு கோயிலுக்கு வருவார்கள், அப்படியே கோயில் அர்ச்சகர் தட்டிலும் காசு போடுவார்கள் ,உண்டியலிலும் காசு பெருகும். இந்த எண்ணத்தில் தான் யானைகளை கோயிலுக்கு தானம் செய்தால் புண்ணியம் என பணக்காரர்களுக்கும் மன்னர்களுக்கும் அறிவுறுத்துப்பட்டது.

இப்படி கோயில்களில் கட்டிவைக்கப்பட்ட யானைகள் , இயற்கை சூழலான காட்டுப்பகுதியில்  இருந்து  மாறுபட்ட சூழலான மனித நடமாட்டம் உள்ள பகுதியில் இருப்பதால் இதன் குணம் சிதைவடைகிறது.

கோயிலுக்கு வரும் பக்தர்களின் உண்டியல் காணிக்கையின் ஒரு பகுதி யானை வளர்க்க ஒதுக்கப்படுகிறது. யானை கட்டி தீனி போடுவது என்பது சாதாரண விஷயமில்லை. எத்தனையோ கோயில் யானைகள் மதம் பிடித்து  யானைப்பாகனையும் யானையிடம் ஆசி வாங்க வருபவர்களையும் தூக்கிப்போட்டு மிதித்து கொன்றுள்ளது.

ஆறறிவு படைத்த மனிதனுக்கு அய்ந்தறிவு படைத்த யானையிடம் ஆசி வாங்க வேண்டும் என்பது ஆசை.அப்படி என்ன தான் இந்த மனிதன் நலத்துடன் வாழவேண்டும் என யானைக்கு விருப்பம் இருக்கும்.?

நான்கறிவு பாம்பிடம் ஆசி வாங்க வேண்டும் என கோயில் கட்டி அதற்கு கும்பாபிஷேகம் நடத்தும் ஆறறிவு படைத்த மனிதனின் சிந்தனை ஏன் இப்படி  சீரழிகிறது.? தன்னையே அடித்துக்கொல்லும் மனிதன், நலமுடன் வாழவேண்டும் என பாம்புக்கு என்ன அக்கறை வந்து விடப்போகிறது? இதுவெல்லாம் கற்கால காட்டுவாசிகளின் குணம். இன்றளவும் இந்த பழக்கம் தொடர்வதுதான் வேதனை அளிக்கிறது.

இது மனித ரத்தத்தில் ஊறிய குணம். எனவே இன்றளவும் மனிதர்கள், கொடிய மிருகங்களை மரண பயங்கொண்டு வணங்குகின்றனர்.

மனிதனை நேசிக்காத மனிதன் தன்னை விட அறிவு குறைந்த மிருகங்களை வணங்கட்டும்.ஆனால் ஓரறிவும் அற்ற திடப்பொருளை, அதான் கற்சிலையை வணங்குவதால் மனிதனுக்கு என்ன உதவி கிடைத்து விடப்போகிறது? அவனுடைய துன்பங்கள்  எப்படி நீங்கும்?

செய் நன்றியை மறக்காத மனோபாவம் உள்ள மனிதன் எங்கே? மனிதனோடு பழகி விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் காளைகள் மற்றும் எருமைகள் ஓய்வின்றி உழைத்து  கால் புண்ணாலும்,கழுத்து புண்ணாலும் துன்ப படுவதை ஆட்சியாளர் கண்களுக்கு ஏன் தெரிவதில்லை?

கோயில் யானைகளுக்கு புத்துணர்ச்சி வேண்டுமாம். யானைகள் புத்துணர்ச்சி அடைந்தால் யாருக்கு லாபம்?.யானைகள் புத்துணர்ச்சி அடைந்தால் மனிதகுலத்திற்கு என்ன நன்மை?

ஒரு ஏழை குடும்பத்து பிள்ளை உயர் கல்வி பெறமுடியவில்லை. இவர்களுக்கு உதவி செய்ய ஆட்சியாளருக்கு மனமில்லை.கட்டாய சமச்சீர் கல்வி அளிக்க மனமில்லை.


யானைகளுக்கு லட்ச கணக்கில் செய்து, அவைகள் புத்துணர்ச்சி அடையவேண்டுமாம்.எந்த ஜோசியனை திருப்தி செய்ய இப்படி நடக்கின்றது என தெரியவில்லை.

                                         
ஜனநாயக நாட்டில் ஒரு முதலமைச்சரோ அல்லது பிரதமரோ தன்னிச்சையாக முடிவெடுத்து இப்படி பொருளியல்வாதத்திற்கு புறம்பான (out of pragmatism or of theoritical) செயல்களில் ஈடுபடும் போக்கை கண்டிக்கவோ அல்லது தண்டிக்கவோ ஒரு சட்ட அமைப்பு இருப்பதாக தெரியவில்லை. அப்பொழுதுதானே ஆட்சியாளர்களின் திருமுகங்களின் மறுமுகங்களை மக்கள்  காண முடியும்.



No comments: