ஏற்புரை: 25.02.2012 அன்று அறவழி சுய சிந்தனையுடன் மகிழ்ச்சியுடன் வாழ-ஒரு வழிகாட்டி-நூல் வெளியீட்டு விழாவில் நூலாசிரியரின் உரை
திருவள்ளூர்த்
தமிழ்ச்சங்கமும் சமூக முன்னேற்றச் சங்கமும் இணைந்து நடத்திய படைவீடு திருவேங்கடம்
அவர்கள் எழுதிய ஏழாம் அறிவு இயக்கத்தின் வெளியீட்டு நூல் வெளியீட்டு விழா
முன்னதாக வரவேற்புரை வழங்கிய
புலவர் திரு நாகலிங்கம் மாநில
துணைத்தலைவர் ச.மு.ச
முதல் நூல் வெளிட்டமைக்கு
திரு கே,கோபால் ,மாநில தலைவர்,ச.மு.ச
முதல் நூலைப் பெற்றுக்கொண்டதற்கு
திரு ஜெயபாஸ்க்கர்,மாநில இலக்கிய
அணிச்செயலர்
வாழ்த்துரை
வழங்கிய
திரு. கோ.ரவிராஜ் மு.ச.ம.உ
திரு. வ.
பாலயோகி.மாநிலத்துணைச்செயலர்,பா.ம.க.
திரு. வெங்கடேசன்.மாவட்டத்தலைவர்.திருவள்ளூர்
பா.ம.க.
திரு.தனப்பால்,மாவட்டத்தலைவர்,திருவள்ளூர்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
திரு.டி.சேஷாத்ரி வருவாய் கோட்ட அலுவலர்
(ஓய்வு)
திரு.ஒய்.ஆர் பன்னீர் செல்வம்,
தரஆய்வாளர்
திரு.ஏ. கஜேந்திரன் தலைவர்,மாவட்ட
வழக்குரைஞர் பிரிவு, பா.ம.க
விழாத்தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றிய முத்தமிழ் புலவர் திரு.செம்மங்குடி
துரையரசன் அவர்கள்
ஆகிய
அனைவருக்கும் போர்வை அணிவித்து நினைவுப்பரிசுகள் வழங்கி பெருமைப்படுத்தப்பட்டனர்.
அனைவருக்கும் தலை வணங்கி நூலாசிரியரின்
ஏற்புரை கீழ் கண்டவாறு நிகழ்த்தப்பட்டது.
சிந்தனைக்கு தூண்டியவர் –இருவர்
இயக்கம் ஆரம்பிக்க –என் அனுபவம்
வலை தளம் ஆரம்பிக்க –மகன்கள்
நூல் எழுத –என் மனவி
நூல் உருவாக –இருவர் –அனைவரையும்
மேடைக்கு அழைத்து பெருமைப்படுத்தப்பட்டது.
நூல் சிறப்பாக வெளியிட காரணமான -திரு அ.கு
ஏழுமலை,தொழிற்சங்க மாமேதை,இவருடைய மரணம் எங்கள் குடும்பத்திற்கு
பேரிழப்பு.இத்தருணத்தில் இவரை நினைவு கூறுவது அவருக்கு செய்யும் நன்றிக்கடன் என
நினைக்கின்றோம்
அது என்ன ஏழாம் அறிவு? மனிதனுக்கு ஆறு
அறிவுதானே?
இவன் யார்? இவன் என்ன பெரிய ஞானியா?
கடவுளை கண்டவனா? மனிதர்கள் அவரவர் வழியில் போகட்டுமே,இவனுக்கு என்ன அதைப்பற்றிய
கவலை?என மற்றவர்கள் கேட்பது எனக்கு
கேட்கிறது.
இன்று நம் மக்கள் வாழ்க்கை 40 வயதிற்குள்
நீரிழிவு நோய்க்கும்,ரத்த அழுத்த வியாதிக்கும் பாழ்பட்டு போய்க் கொண்டிருக்கின்றது.
ஒவ்வொரு மனிதனும் தன்னிலை உணர்ந்து
சுயசிந்தனையுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைத்துக்கொள்ள உருவாக்கப்பட்டது தான் இந்த
ஏழாம் அறிவு இயக்கம் . இதன் வெளியீடான இந்நூல் அதற்கு வழி காட்டுகிறது.
முதலாளித்துவ கொள்கை என்பது ஆன்மீகத்தை
அடிப்படையாக கொண்டது.மக்களின் இன்ப துன்பத்திற்க்கு முற்பிறவியின் பயன் எனவும் பாவம்
புண்ணியம் எனும் புரையோடிப்போன கருத்துக்களான மூட நம்பிக்கையை பணமாக்கினர். இன்றுவரை இது நீடிப்பதுதான் வேதனை.
ஆனால் நான் எழுதிய இந்த நூல்மட்டும் நீங்கள் அறவழிசிந்தனையுடன்
மகிழ்ச்சியுடன்,வாழவழிகாட்டுகிறது.இதுபொருளியல்வாதம்,(pragmatism)
ஆன்மீகம் ஏன் உருவாயிற்று.?
உழைப்பாளி
மகிழ்ச்சியுடன் வாழ்ந்தால் உழைக்காமல் வாழும் ஒட்டுண்ணிகளுக்கு மகிழ்ச்சி
அளிக்காது. பொறாமை கொள்வர். அதில் உருவானது தான் ஆன்மீகம்.
ஆன்மீகத்தில்
பற்றுவைத்தால் உழைப்பாளிகூட சுகமாக வாழ முடியாது
நான் உழைப்பாளியின் மகன்.ஒரு விவசாய
கூலியின் மகன் .இளமையில் மூன்றுவேளை முழுசா சாப்பிட்டதில்லை,10கி.மி தூரத்தில்உள்ள
பள்ளிக்கூடம் சென்றபோது காலுக்கு செருப்பு போட்டதில்லை,முழுக்கால் சட்டை அணிந்ததில்லை.பள்ளி
இறுதி வகுப்பில்முதல்நிலை மாணவனாக தேர்வு பெற்றேன். கல்லூரி சென்றபோது காலுக்கு
பிளாஸ்ட்டிக் செருப்பு போட்டுக்கொண்டேன் அப்போது தானே 40 கி.மி சைக்கிளை மிதிக்க
முடியும்.
உணவு கிடைக்கவில்லை என அழுதவன். மதியஉணவு
இல்லாத நாட்களில் கல்லூரி செல்லமுடியாத நாட்கள் பல.எங்கள் சுற்றுவட்டார 10க்கும்
மேற்பட்டகிராமத்தில் நான்தான் முதல்நிலை அறிவியல் பட்டதாரி.
நான் வாழ்ந்த விதம் வளர்க்கப்பட்ட விதம்.வாழ்க்கையை
அமைத்துக்கொண்ட விதம்,இப்படி என்னை சிந்திக்க வைக்கிறது.
என்னுடைய அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து
கொள்வதன் மூலம்,உங்களையும் என்னைப்போல் மகிழ்ச்சியான மனிதர்களாக மாற்ற முடியும்
எனும் நம்பிக்கையில் உருவாக்கப்பட்டதுதான் இந்த
ஏழாம் அறிவு இயக்கம்.
கிராம
மக்களின் ஆன்மீக சிந்தனையால் அவர்களின் அறியாமையும் உழைப்பும் நகர மக்களின்
வாழ்வாதாரமக மாறிவிட்டது.
என்னைப் போன்று கிராமத்திலிருந்து
நகரத்தில் வாழ்க்கை அமைத்துக்கொண்டவர்கள் ஏராளம். இவர்கள் பெரும்பாலும் தாங்கள்
வாழ்ந்த விதத்தை தன் குழந்தைகளுக்கு தெரியப்படுத்துவதே இல்லை.
இதனால் கிராமத்து மக்களின் நிலைப்பற்றி
இக்கால இளைஞர்களுக்கு தெரியாமலே போய்விடுகிறது.
இன்றைக்கு நான் எனது உறவுகளில்
நான்மட்டுமே படித்தவன், என் பிள்ளைகளை தவிர என் சொந்தங்களில் யாருமே இன்றும் ஒரு அறிவியல் பட்டதாரிகூட
உருவாகவில்லை..
நான் மட்டுமே எனது நட்பு மற்றும்
சொந்தங்களின் வட்டத்திலிருந்து பிரிந்து வெளி உலகம் சென்று வந்தவன்.நகர வாழ்க்கையை
நுகர்ந்தவன்.
வட இந்தியாவில் நான் கவனித்த ஒரு
நிகழ்ச்சியை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
அரசு பணிக் காரணமாக நான் (1989)மும்பை
செல்ல வேண்டியிருந்தது.அங்கிருந்து 400 கி.மி தொலைவில் உள்ள ஜலகான் எனும் ஊரில் 15
நாட்கள் ஒரு பருப்பு ஆலை முதலாளியின் வீட்டில் தங்கி ரயில் வேகன் மூலம்
தமிழகத்திற்கு துவரம் பருப்பு அனுப்பும் வேலை,எனக்கு பணிக்கப்பட்டது.
அந்த வீட்டு உறுப்பினர்கள்
நடந்துகொள்ளும் விதம் என்னை வியப்பில் ஆழ்த்தியது.
அண்ணன், தம்பிக்கு ஒரு வேலை தொடர்பாக வெளியில்
செல்ல பணிக்கின்றார். தம்பி உடனே இரண்டு நிமிடங்களில் தன்னை தயார்படுத் திக்கொண்டு
அமர்ந்திருக்கும் அண்ணனின் காலை தொட்டு வணங்கி ஆசிர்வாதத்துடன் வெளியில்
செல்கிறார். மாலை அதே தம்பி வீடு வந்தவுடன் அங்கே இருக்கையில் அமர்ந்திருக்கும்
அண்ணனின் பாதங்களை தொட்டு வணங்கி, சென்று முடித்துவிட்டு வந்த பணியினை
விவரிக்கின்றார்
அதே வீட்டில்இன்னொரு சம்பவம், காலையில்
மாமியார் பஞ்சணையில் வந்து அமர்வார். சில நிமிடங்களில் அவருடைய மருமகள் ஒரு
வெண்கலத் தட்டில் தண்ணீர்க் கொண்டுவந்து மாமியாரின் காலுக்கு கீழே அமர்வார். சில
நிமிடங்களில் மாமியாரின் காலை சுத்தம் செய்து பின் மெல்லிய வெள்ளைத் துணியில்
பாதங்களை துடைத்து, பின் கால் மற்றும் பாதங்களை லேசாக அழுத்தி விடுவார். அந்த
மாமியார் தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பார்.
தமிழ் நாட்டில் ஒரு காலத்தில் இந்த
கலாச்சாரம் இருந்தது. ஆரியர்களின் வருகைக்குப்பின் அது அழிந்து போனது. காரணம் என்ன
தெரியுமா?
‘உங்கள் குடும்பத்தில் பெரியவர்களை
சிறியவர்கள் வணங்கினால் எங்களை யார் வணங்குவது. நீங்கள் சண்டைப்போட்டுக் கொண்டால்தானே
நாங்கள் பிழைக்கமுடியும்?’
‘உழைப்பாளியை
ஏமாற்றி அவன் உழைப்பை சுரண்டுவதற்காக
உருவாக்கப்பட்டது தான் பஞ்சாங்கம். தமிழன் உழைப்பதற்கு கூட அய்யரைக் கேட்டுதான்
ஆரம்பிக்க வேண்டும்.
சித்திரையில் மழை பொழியும் .அடுத்தநாள்
எங்கள் அப்பா அய்யரைத் தேடிபோவார்.எதற்கு
தெரியுமா? தான் பெற்ற 4 பிள்ளைகளில் எந்தப் பிள்ளை எந்த நாளில் பொன்னேர் பூட்டி ஓட்டினால்
அந்த ஆண்டு விளைச்சல் அமோகமாக இருக்கும் என தெரிந்து கொள்ள.
அவருடைய அறியாமையை அய்யர் பணமாக்கிவிடுவார்
,எங்கள் அப்பாவைப் போலத்தான் இன்றும் பலர் கிராமத்தில் வாழ்கின்றனர் .
மேலும் தமிழனின் குடும்பத்தில் தலைக்கட்டு முறையை
புகுத்தி மனித நேயத்தையும்,குடும்பஒற்றுமையும்,குலைத்துவிட்டனர்.உன் உடன்பிறப்பே
உனக்கு சனி எனச் சொல்லி குடும்பத்தில்
குழப்பம் உண்டாக்கி பிரிவினை உண்டாக்கிவிடுவர்.தமிழன் கூட்டுக்குடும்ப கலாச்சாரம் இப்படித்தான்
2000 ம் ஆண்டுகளுக்கு முன் சீரழிந்தது.
அப்பொழுதே தமிழன் பகுத்தறிவாதாம் அழிய தொடங்கி, இன்று மனிதன் காலில் மனிதன் விழக்கூடாது.
கல்லை வணங்கவேண்டும்.அதில் அற்புதங்கள் நிகழும் என நம்ப வைத்து,அதனை நம்மக்கள் நம்பி இன்றும் உடல் பலம் இழந்து மன நோயாளிகளாகிவிட்டனர்.
தமிழன் பகுத்தறிவாதியாக ஒருகாலத்தில் வாழ்ந்துள்ளான்
என்பதற்கு இப்பொழுது உலா வரும் பழமொழிகளே சான்று.
1-மந்திரத்தால் மாங்காய் விழாது
2-வித்தையில்
அடித்தானாம் விலாவில் வீங்கிவிட்டதாம்
1-
முயற்சி திருவினையாக்கும்
2-
உழைப்பினால் ஊழையும் உப்பக்கம்காண்பர்
3-
என்னதான் எண்ணைதேய்த்து புரண்டாலும் ஒட்டரதுதான் ஒட்டும்
4-
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலித்தரும்
.
5-
தடியால் அடிச்சி கனியாது.
6-
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
7-
தாயிற்சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
8-
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள்
காண்பதறிவு- தமிழன் பகுத்தறிவாதியாக இருந்தான்
என்பதை நிரூபிக்க இதைவிட வேரொரு குறள்பழமொழி உலகில் இருப்பதாக
தெரியவில்லை.-இதில் கூறப்பட்டுள்ள
மெய்ப்பொருள்தான் pragmatism-materialism
11-ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு
கொண்டாட்டம்.
12-உண்ணாமல் கெட்டது உறவு,பார்க்காமல் கெட்டது
பயிர்,கேட்காமல் கெட்டது கடன்
உழைக்கணும், பொழைக்கணும்,பெத்த புள்ளைகளை
கஞ்சோ கூழோ ஊற்றி வளக்கணும். இது
போன்ற மிருக உணர்வோடு வாழ்ந்த,இன்றும் வாழ நினைக்கும் என் இன மக்களுக்காக நான்
கவலைப் பட்டே ஆகவேண்டும்,யாரும் கவலைப்படவில்லை அதனால் நான் மட்டும் கவலைப்படுகின்றேன்.இதற்காக
உருவாக்கப்பட்டதுதான் ஏழாம் அறிவு
இயக்கம்.
உழைக்கும் வர்க்கமான என் முன்னோர்கள்
யாரும் படிக்கவில்லை, யாருமே சிந்தனையாளர் இல்லை.எனவே அவர்கள் வாழ்ந்தது போல் நான்
வாழ வேண்டியது இல்லை.
இப்படியே கூட நான் வாழ்ந்து மடியலாம்.
ஆனால் என் மனம் மறுக்கின்றது
அதன் விளைவாக உருவாக்கப்பட்டது தான் ஏழாம் அறிவு இயக்கம் .
உழைக்கும் மக்களைச்சுற்றி உழைக்காமல்
பிழைப்புநடத்தும் கும்பல் உருவாக்கிய கொள்கைதான் ஆன்மீகம்,அதாவது,
கடவுளுக்கு,(கர்த்தருக்கு,அல்லாவுக்கு)
வாழ்த்து சொல்லவேண்டும்
கடவுள், வாழவேண்டும்
கடவுள், காப்பாற்றப்படவேண்டும்
கடவுளுக்கு பாதுகாப்பு வேண்டும்
கடவுளுக்கு சொத்து வேண்டும்
கடவுளுக்கு,இருக்க இடம் வேண்டும்
கடவுளை,எப்பொழுதும்நினைத்துக்கொண்டிருக்க
வேண்டும்
கடவுளை,தொழுதுகொண்டும் பூஜித்துக்கொண்டும்
இருக்கவேண்டும்
ஆனால் இந்துக்கள் மட்டும் கடவுளை
பூட்டிவைத்து பூஜிக்க வேண்டும்
ஏன்இந்த முரண்பாடு ?இவனைப்பற்றி
கவலைப்படாமல் சூன்யத்தை ப்பற்றி கவலைப்பட்டுக் கொண்டு மன நோயளிகளாக வாழ்கின்ளனர்
உழைக்கும் மனிதனுக்கு வாழ்த்துச் சொல்ல ஆளில்லை
உழைக்கும் மனிதனுக்கு வாழவழியில்லை
உழைக்கும் மனிதனுக்கு பாதுகாப்பு இல்லை
உழைக்கும் மனிதனைப்பற்றி மனிதனே
நினைப்பதில்லை
உழைக்கும் மனிதனை மனிதனே தொழுவதில்லை
உழைக்கும் மனிதனைப் பற்றி கடவுள்,
நினைப்பதே இல்லை.
உழைக்கும் மனிதனுக்கு கடவுளால் ஒரு
நன்மையும் இல்லை.
உழைக்காத மனிதனை உழைக்கும் மனிதனே
தேடிப்போய் வணங்குகிறான்
இறந்தவர்களின் படங்களை வைத்து வீட்டில் வணங்ககூடாது.
வீட்டில் வைத்து வணங்கப்படும் கடவுள்
படங்களுக்கு மகிமை கிடையாது. பஞ்சாங்கத்தை சாமான்யன் பார்க்க கூடாது.(அதையார்ப் பார்த்தாலும் ஒன்றும்
புரியாது அதைவைத்து பொய்சொல்லி பிழப்பவனுக்கே வெளிச்சம்)
புரியாத வார்த்தைகள் தான் மந்திரம் என
ஆகிவிட்டது சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் மந்திரத்துக்கே மகிமையுண்டு என
நம் முன்னோர்களுக்கு போதிக்கப்பட்டது.மந்திரத்தில்
ஏதோ மகிமை உள்ளென்று உழைப்பாளியை நம்பவைத்துவிட்டால்அவன் மனம் நர பலி கொடுக்கும்
அளவுக்கு கொலைவெறியை தூண்டக்கூடியது ஆன்மீக சிந்தனை
புரிந்து
கொண்ட வார்த்தைக்கு மதிப்பே இருக்காது எனவே தமிழ் ஒதுங்கிக்கொண்டது. இன்றும்
இந்நிலை நீடிப்பது தான் வேதனை
எனக்காக,என் சிறு வயதில், படிக்காத
என்
அம்மா பூசை அறை அமைத்துக் கொடுத்தார்கள். தினமும் குளித்து பூசை செய்து உணவருந்தியப்
பின்தான் பள்ளிக்கூடம் செல்லவேண்டும். நான் செய்தேன். 21 வயது வரை செய்தேன்.
அப்பொழுது என் அம்மாவக்கு 60 வயது கூட ஆகவில்லை. சாகவேண்டிய வயசும் இல்லை. என்
தாய் நோய்வாய்பட்டார்.
கடவுளை வணங்கினால் தாயை காப்பாற்றிவிடலாம்
எனும் அசைக்கமுடியாத நம்பிக்கை,எனக்கு.அவ்வையார்,இராமலிங்கஅடிகளார் கடவுளை
வேண்டிவணங்கிய பாடல்களை நானும் வேண்டி தினமும் பூஜித்தேன். வேண்டினேன் ,கெஞ்சினேன்,எல்லாமே வீணாகிவிட்டது
உயிருள்ள மனிதனை வேண்டியிருந்தால் அல்லது
கெஞ்சியிருந்தால் கூட அந்த மாமனிதர் மனம் கனிந்து பண உதவி செய்திருப்பார். என்
தாய் காப்பற்றப்படிருப்பார். நான் கல்லை கற்பூரம்கொளுத்தி
வணங்கினேன் ஊதுவத்தி கொளுத்தி புகைப்படத்தை வணங்கினேன்.
அதற்கு உயிருள்ளதா என்ன? உதவி புரிய.
புரியாத வயசு. கயவர்களின் போதனையில் மதி
மயங்கி கடவுள் இருப்பதாக நம்பினேன்.
அப்படியே கடவுள் இருப்பதாக இருக்கட்டும் அவன்
உன்
அம்மாவை ஏன் காப்பற்ற வேண்டும்.
அம்மாவையோ அல்லது அப்பாவையோ அல்லது உன்னையோ கடவுள் ஏன் காப்பற்ற வேண்டும் ?
கடவுளை ப்பூட்டிவைத்து பூசை செய்தால் உன்
பேச்சை கேட்குமா?
அவன் என்ன உன் தாத்தாவா? பாட்டியா?
அப்பனா? அல்லது அம்மாவா?அல்லது உன் அண்ணனா? அல்லது உன் மாமனா? , மச்சானா?
என் அம்மா இறந்தபின் தான் தெரிந்தது.
இறைவன் இருக்கலாம்.உலகத்தை அவன் இயக்கலாம்.அவனால் பொழுது விடியலாம் இதனால் கடவுளுக்கு நன்றி சொல்லும் சம்ப்பிரதாயம்
சடங்கு எதற்கு?நீ ஒருவன் கடவுளுக்கு நன்றி சொல்ல வில்லை எனில் உலகம் இயங்காதா?
உனக்காக
உதவிய மனிதர்களை உதறிவிட்டு கல்லுக்கு காணிக்கை செலுத்த ஒடுகிறாய். ஏன் இந்த
அவலம்?
அந்த நேரத்தில் ‘இவன் செய்நன்றி கொன்றவன்’
–என மற்றவன் ஏசுவது உன் காதில்
விழவில்லையா?
கடவுள் அப்படி ஒரு சக்தி இயங்கினால் கூட
உன்னை ஏன் காப்பாற்ற வேண்டும். அதனால் கடவுளுக்கு என்ன லாபம் ?
கடவுளை வணங்கினால் கடவுளின் ஏஜன்டுகளுக்கு(முகவர்கள்
என்றால்?) தானே லாபம் ? நமக்கென்ன லாபம்?
நாம்
கடவுளை பூஜிக்கவில்லையெனில் கடவுள் இறந்துவிடுவானா என்ன?
இந்த சிந்தனையால் உருவாகியதுதான் ஏழாம் அறிவு இயக்கம்.
நல்ல மாட்டுக்கு ஒரு அடி,நல்லமனிதனுக்கு
ஒரு சொல்; ஆனால் கடவுளை மட்டும் மனிதன் எப்பபொழுதும் வேண்டிக்கொண்டே
இருக்கவேண்டுமாம் . ஏன் இந்த முரண்பாடு ?கடவுள் சூடு சுரணையற்றவரா?
மனிதன் தினமும் வேண்டினால்தான்
காப்பாற்றுவார் ,இல்லை எனில் நம்மை சாகடித்துவிடுவாரா?
மனிதநேயத்தை வலியுறுத்தவும்,
மனிதனின் சுய சிந்தனையை தூண்டவும் மனிதன்
மகிச்சியாக வாழ வழி காட்டவும்,மனிதனின் ஆறாம் அறிவை பயன் படுத்தப்படுவதில்லை.
இல்லாத ஒன்றில் ஏதோ ஒரு சக்தி
இயங்குவதாகவும் அந்த சக்திக்கு ஒரு உருவம் கொடுத்து அல்லது உருவமற்ற அருவ
வழிபாட்டிற்கு அக்கிரிணை மற்றும் இயற்கை நிகழ்வுகளை ஒப்புமை மற்றும் உவமேயங்களை
உருவகப்படுத்தி அந்த அளவிற்கு ஆறாம் அறிவை மழுங்கடித்து மூட
நம்பிக்கைகளை நிரூபிக்க அறிவியல் கோட்பாடுகளை மேற்கோள் காட்டி உழைக்கும் மக்களை
சுரண்டுவதற்கு படித்தவனே காரணமாகின்றான்.
அதே படித்தவன் தன்னை பகுத்தறிவாக நினைத்துக்கொண்டு மன
நோயாளிகளாகவும் நீரிழிவு நோயாளிகளாகவும் அல்லல் படுவதை தவிற்க ஏழாம் அறிவு இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.
கடவுள் ஜீவிதம் அற்றவர்,அவர் மனிதனின்
ஆத்மாவில் பிரசன்னமாக வாழ்கிறார் என மனிதனை மூளைச்சலவை செய்து மயக்கநிலைக்கு
தள்ளப்பட்டுவிட்டனர்.
ஆறாம்
அறிவை பயன் படுத்திய மனிதன் மற்ற மனிதனை ஆண்டு கொண்டிருக்கின்றான்,ஆளப்படும்
மனிதனின் ஆறாம் அறிவு மழுங்கிவிட்டதால் .
அவனை தட்டி எழுப்ப உருவாக்கப்பட்டது தான்
ஏழாம் அறிவு இயக்கம்
ஆத்மா,ஆன்மா,பாவம் ,புண்ணியம் மறுபிறவி
முற்பிறவி எல்லாம் பாமரனை சிந்திக்க விடாமல் செய்யும் மயக்கு வார்த்தைகள்.ஆளும் நோக்கமுடைய மனிதன் ஆளப்படவேண்டிய
மனிதனுக்கு போதிக்கப்பட்டவை
மனிதன் காட்டுவாசியாக இருந்தபோது அவனை
திருத்த பயன்பட்ட வார்த்தைகள்,இந்த வார்த்தை எல்லாம் இப்பொழுது எதற்க்கு.
சிற்றின்பம் எது? பேரின்பம் எது? என வகைப்படுத்தி
மனிதனின் இன்ப வாழ்க்கயை பாழ் படுத்திவிட்டனர்.
இறைவனை அடைய கடும் தவமிருப்பதுதான்
பேரின்பம் என வலியுருத்தப்பட்டது. விரதம் ,சைவ உணவு ,தியானம்
எனும் பழக்கத்திற்கு அடிமை படுத்தி
மனிதனின் உடல் மூல பலத்தை குறைத்து
நீரிழிவு நோயாளியாகவும் உழைக்க தகுதியற்ற, தாம்பத்தியத்தை அனுபவிக்கமுடியாத,மன
நோயாளிகளாக தன்னிலை உணரா மனிதனாக மாற்றப்பட்டனர்.
இன்றும் மாறிக் கொண்டிருக்கின்றனர்.இதை
முறியடிக்கவே ஏழாம் அறிவு இயக்கம்
உருவாக்கப்பட்டது.
உடலே
மூல தனம் என்பது ஏழாம் அறிவு இயக்கத்தின் மூல மந்திரம் .
அறிவார்ந்த குழந்தைகளை உருவாக்குவது ஏழாம்
அறிவு இயக்கத்தின் உயிர் மூச்சு.
உலகில் பொது இடத்தில் பொது
வழிபாட்டுத்தலம் எங்கும் இயங்க க்கூடாது.அவையாவும் நினைவு சின்னமாகவும்
சுற்றுலாத்தலமாக மாறவேண்டும் ,மாற்றவேண்டும் என்பதுதான் ஏழாம் அறிவு இயக்கத்தின் கருத்து
கடவுள்,கர்த்தர்,அல்லா எல்லாமே
இருக்கட்டும்.
கடவுள் தூணிலும் துரும்பிலும் இருப்பது
உண்மையானால்
என் சமூகம் உனக்கு முன்பே செல்லும்
என்பது உண்மையானால்,
அல்லா எங்கும் வியாபித்துள்ளார் என்பது
உண்மையானால் இவர்களையெல்லாம் வணங்கிக்கொண்டே இருக்கவேண்டுமானால், அவரவர் வீட்டிலே
வணங்கலாமே .
இப்படி பழக்கப்படுத்திக் கொண்டால் வழிபாட்டுத் தலங்களிலும்
குண்டு வெடிக்காது. உண்டியல் கொள்ளை போகாது.
மனிதனை மனிதன் நேசிக்கும் வகையில் மனித
நேயம் வளர வேண்டும் எனும் நோக்கில் ஆரம்ப பள்ளி பாடதிட்டங்களை மாற்ற வேண்டும். உலகெங்கும் உள்ள நாடுகள் இதற்கு ஒப்புதல்
அளிக்கவேண்டும் .
பயம் என்பது ஒருவகையான மிருக உணர்வு .
மனிதனின் ஆறாவது அறிவான பகுத்தறிவாதத்தை இங்கு
சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள்,ஆட்சியாளர்களாகி விட்டனர்.இது மனித குலம்
தோன்றிய நாள்முதல் இன்றுவரை உள்ளதஒரு மனிதனின் ஆறாவது அறிவை (மிருகங்களிடமிருந்து
வேறுபடும் பகுத்தறிவு) சக அல்லது மற்ற மனிதன் மழுங்கடிக்க முடியும்.
இதை நன்கு உணர்ந்தவன் ஆட்சியாளனாகிறான்.
உணராதவன்,புரியாதவன் ஆளப்பட்டுக் கொண்டிருக்கின்றான். இதுதான் உலகெங்கும் உள்ள
நாடுகளின் அரசமைப்பு.
தானா படிச்சவனுக்கே இவ்வளவு மூளை வேலை
செய்கிறது என்றால், கட்டாய கல்வி அதுவும், கட்டாய சமச்சீர்கல்வியை நாட்டில் அமுல்
படுத்தினால் நம்ம கதி என்னாவது?.எல்லாமே
பல்லக்கில் உட்கார்ந்தால் பல்லக்கு தூக்குவது யார் ? இதுதான் ஆட்சியாளரின் கவலை.
மனைவிக்கு பகுத்தறிவு ஊட்டுவது எப்படி?
முதலில் கணவனுக்கு பகுத்தறிவு இருந்தால் தானே மனைவிக்கு அறிவு சொல்ல முடியும்.
(பகுத்தறிவு என்பது மனித வரலாற்று
அறிவு,வானவியல் மற்றும் நிலவியல் அடங்கிய பூகோள அறிவு,மற்றும் உடற்கூறு அறிவியல்) கணவன்
எம் ஏ பிஎட் ஆக இருக்கலாம் பொறியிலாளராக இருக்கலாம் டாக்கடராக கூட இருக்கலாம் அவன்
படித்த படிப்பில் எது மூட நம்பிக்கை? அதை
எப்படி ஒழிப்பது என்று எங்கும் சொல்லித்தரவில்லையே. இதற்கு யாரை நொந்துக் கொள்வது
?
சைவ,வைணவமற்றும் சமண தமிழ் இலக்கியங்களை
படித்து பி.எச்.டி பட்டம் பெற்றவர்களை அழைத்து சிலபஸ் உருவாக்கி கொடு என்றால்
பஜனை பாடுவதும், தூங்கும் கடவுளுக்கு சுப்பரபாதம்
பாடுவதும்,உழைப்பாளி சேர்த்த பணம் சும்மா கிடப்பவன் கைக்கு போவதெப்படி என சிலபஸ் தீட்டிகொடுப்பான்.அதைபடித்தவனுக்கு
சுய சிந்தனை எப்படி தோன்றும்?
வழிபாட்டு தலங்களை மூட திராணி இல்லாத
அரசு ,குறைந்த பட்சம்
திருப்பதி உண்டியலை மூடவேண்டும் . எந்தக்
கோயில் உண்டியலில் பணம்ம்போட்டாலும் சட்டவிரோதம் என சட்டம் போடவேண்டும் .ஏன்
கோயிலில் உண்டியலேவைக்கதே. அப்பத்தான் நாட்டில்
லஞ்சம் இருக்காது.ஊழல் இருக்காது. கள்ளப்பணம் இருக்காது,கள்ள நோட்டு அடிக்க கடவுள்
ஒத்துழைப்பதால்தான் கோயில் உண்டியலில் கட்டுக்கட்டாகபணம் விழுகிறது. அர்ச்சகர் தட்டு ஏந்துவதை தடை செய். அப்பொழுதுதான்
அனைவரும் உழைத்து பொழைக்கவேண்டும் என்கிற எண்ணம் வரும். பாமரனை நல்வழிப்படுத்த
இதுதான் சிறந்த வழி.
சிந்திக்க வைக்கும் வழி.உழைக்காமல்
பிழைப்பை நடத்தும் இடைத்தரகர்களை ஒழிக்க இதுதான் சிறந்தவழி.
கடவுள் இருந்து விட்டு போகட்டும். அவரும்
ஒரு அதிகாரியை போல அல்லது அமைச்சரைபோல , லஞ்சம் கொடுத்து மயக்கலாம்.நீங்கள்
கடவுளுக்கு படையல்போடுவது அந்த எண்ணத்தில்தானே?
ஆனால்
கல்லை மயக்க முடியுமா? இதனால் இடைத்
தரகர்கள் பயனடைவதை உணர்ந்தேன்.நான் தனிமை யானேன். அறிவுத்தேடல் ஆரம்பித்தேன்.
உலகில் உள்ள முன்னணி வார மற்றும் மாத
பத்திரிக்கைகளை1970களில் ஆண்டு சந்தா கட்டி
வீட்டுக்கு வரவழைத்து படித்தேன். (அமெரிக்கன்ரிபோர்டர்,ஸ்பான்,சயின்ஸ்ரிப்போர்டர்,லைப்,டைம்,-இப்பொழுது
அந்த ஒவ்வொரு வாராந்திரிகளின் விலையும் ரூ150.-
அந்தநாளில் அது 10ரூ.
சோவியத்திலிருந்து ஸ்புட்னிக்,
சோவியத்நாடு.மும்பையிலிருந்து ரீடர்ஸ் டைஜஸ்ட்,இல்லஸ்ட்ரேட்ட்
வீக்லி,பிலிட்ஸ்.கல்கத்தாவிலிருந்து சன்டே,டெல்லியிலிருந்து இம்ப்பிரின்ட்,காரவான்,புரோப்,இந்தியா
டு டே
கோயம்புத்தூரிலிருந்து கலைக்கதிர் மற்றும்
தமிழகத்தின் முன்னணி வாரந்திரிகளான
துக்ளக்,ஆனந்த விகடன்,ஜூனியர் விகடன், குமுதம்,கல்கண்டு
தினசரிகளானஇந்து,எக்ஸ்பிரஸ்,டைம்ஸ் ஆப்
இந்திய,தினத்தந்தி,தினமணி போன்ற பத்திரிக்கைகளை இன்றும் படிப்பதுண்டு)
பஞ்சாங்க புத்தியை வளர்க்கும் பத்திரிக்கையான தின மலரை படிக்காதே.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான காலையில் ராசி,ராசிக்கல் மற்றும் நட்சத்திர பலனையும்
இரவில் 10 மணிக்குமேல் காட்டப்படும் நம்பினால் நம்புங்கள் எனும் நிகழ்ச்சியை பார்க்காதீர்கள்.
அது உங்கள் சிந்தனையை சிதறடிக்கும்.
21 வயதில் அறிவுத்தேடல் ஆரம்பித்து 24
வயதுவரை என் மனதில் தர்மயுத்தம் நட்டந்தது இறுதிப்போரில் என் மனதில் வாழ்ந்த
கடவுள் எனும் அரக்கனை கொன்றேன்.
25 வயதிலிருந்து சுதந்திரமானேன். 26
வயதில் வேலைகிடைத்தது.28வயதில் வீடு கடகால் போட்டேன்.30வயதில் வீடுகட்டிமுடித்து
திருமணம் செய்துகொண்டேன்.
இரண்டு பிள்ளைகளை நோயின்றி வளர்க்க
படிக்கவைக்க பருப்புவாங்கமுடியாமல் குடும்பம் நடத்தினோம். சிக்கணம் கடைபிடித்து 36
வயதில் திருவள்ளூரில் வீட்டுமனை வாங்கி வீடு கடகால் போட்டேன். 37வயதில் வீட்டை
கட்டிமுடித்தேன்.
கணபதி ஓமம் நடத்தவில்லை.புதுமனை புகுவிழா
நடத்தவில்லை,காதுகுத்தும் காட்டுமிராண்டி விழா இல்லை.மஞ்சள்நீராட்டு
இல்லை,சீமந்தம்இல்லை.இதில் எந்த வகையிலும் சோதிட மற்றும் அய்யரை
அணுகவில்லை பிறர் அறிவுறைகளையும் கேட்க
வில்லை.நேர்த்திக்கடன் இல்லை.பிறரை கடன்கேட்டு குடும்பம் நடத்தவில்லை. கோயிலுக்குப்
போகவேண்டுமா? போ .ஆனால் என்னை கூப்பிடாதே.கோயிலில் கற்பூரம் தேங்காய் உடைத்தல்
உண்டியலில்,அர்ச்சகர்தட்டில் காசு போட எதற்கும் பணம் தரமாட்டேன். நோன்பு
அனுசரிக்கவேண்டுமா? விநாயகரை வணங்க வேண்டுமா?
வணங்கிக்கொள். ஆனால் இது என் சமஸ்த்தானம்
அன்றயதினம் அசைவம் படைக்கவேண்டும். உலகில்
சைவவுணவு மட்டுமே உண்டு உயிர்வாழ முடியாது. இது நிரூபிக்கப்பட்டஉண்மை.தாய்ப்பாலேஒரு
அசைவம்தான்.
கடவுளை வணங்குவதற்கும் உணவுக்கும்
என்னதொடர்பு?இதற்கு உடன்பட்டால் என்னோடு இரு. இல்லையேல் வெளியேறு என என்
மனைவியிடம் ஆரம்பத்தில் விவாதம் செய்தேன்.
நான்உனக்கு உண்ண உணவும் உடுக்க உடையையும்
இருக்க இடமும் தரவேண்டும். கடவுள் தான் காரணமென்றால் கோயிலில் தங்கிக்கொள்’
.’நீங்கள் சொல்வதில் அர்த்தம் உள்ளது. உங்களோடு இணைந்து வாழ்வதில்
எனக்கு உடன்பாடுதான்’ என என் மனைவி உறுதி அளித்தாள்.
இன்றளவும் என்னோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றாள்.எங்கள்
இருவருக்கும் நீரிழிவு நோய் இல்லை கொலாஸ்ட்ரல்
இல்லை.பிபி
இல்லை மனைவிக்கு 57 வயதாகிறது.இன்று மகிழ்ச்சியான மனிதனாக உங்கள் முன் நிற்கின்றேன்.
மனிதன் சாகும் வரை தனக்கு வியாதிகள்
வராமல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக்கொண்டவன் தான் பகுத்தறிவாதி.என்
மரணத்தேதி எனக்கு தெரியும்.எனக்கு நானே சமாதி கட்டிக்கொண்டபிறகு எனக்கு மரணம்
வரும்.
அப்பொழுது உங்களுக்கும் தெரியும். இப்பொழுது சொல்லுங்கள் அடுத்தவனுக்கு அறிவுறை சொல்ல எனக்கு தகுதி உண்டா? இல்லையா?
ஏழாம்
அறிவு இயக்கம் நடத்த தகுதி உண்டா இல்லையா? சொல்லுங்கள்.
நான் தினமும் பத்திரிக்கை வாங்கும்
கடைக்காரர் கேட்கலாம், இவனுக்கு என்ன அறிவு வந்துவிட்டது பத்தகம் எழுதும்
அளவுக்கு?
நான் கீரை வாங்கும் கீரைகாரி கேட்கலம்,
இவருக்கு என்ன அறிவு வந்துவிட்டது புத்தகம் எழுதும் அளவுக்கு ?
என் அலுவலக நண்பர்கள் கேட்கலாம் நம்மோடு
தண்ணீஅடிப்பவனுக்கு என்ன அறிவு வந்துவிடப்போகிறது புத்தகம் எழுதும்அளவுக்கு?
அய்யா தண்ணி அடிப்பது பாவம் இல்லை. ஆனால்
பாவசெயலை செய்யத் தூண்டும் அளவுக்கு தண்ணிஅடிப்பது பாவம்தான். ஆனால் எந்தவயதில்
எவ்வளவு அளவோடு யாருடைய அனுமதி பெற்று எப்படி மது அருந்தலாம் என்பதை இந்த நூல் தெளிவாக விளக்குகிறது.
நான் 55 வயதிற்குமேல் இன்றளவும் அளவு மீறாமல்
மாலைநேரத்தில் மது அருந்துகிறேன்.நன்றாக நினைவிற் கொள்ளுங்கள் இளவயதில் அதாவது
55வயதிற்கு முன் எந்தவிதக் காரணம் கொண்டும்
மது அருந்தக்கூடாது.அது குடும்பத்தை சீரழிக்கும்.மதுவை மருந்தாக பயன்
படுத்தவேண்டும்
மதுவை
இளைஞர்கள் தவறாக பயன் படுத்துவதால்தான் மருத்துவர் அய்யா மது விலக்கு அமுல்
படுத்தப்படவேண்டும் என்கின்றார்
இவன் அப்படி என்ன படித்துவிட்டான்,நாம்
படித்த எம்ஏ எம்ஏ.பிஎட் என்ன? பிஎச்டி என்ன? எம்பில் என்ன? எம்பிபிஎஸ் என்ன?,பிஈ
என்ன? எம்ஏபிஎல் என்ன?
அய்யா அதுவெல்லாம் அரசாங்கம் தரும்
பட்டம்.சமுதாயத்தில் உயர்இனம் என அடையாளம் காட்டும் பட்டங்கள்.உங்களால் அல்லது
கடவுளால் உழைக்கும் மக்களுக்கு என்ன ஆதாயம்?
வெய்யிலிலும் நிழலிலும் உழைக்கும் உயர்
இன மக்களை இந்த சமுதாயம் பொருளாதாரத்திலும் கல்வியிலும் அடிமட்டத்தில்
தாழ்நிலையில் வைத்துள்ளது. அரசாங்கம் இவர்களை MBC ,SC ,ST
தாழ்த்தப்பட்டவர்கள
என மட்டம் தட்டுகிறது.
உழைக்காமல்
பிழைப்பு நடத்தும் சாதிகளை தாழ்த்தப்பட்டவர்கள் என அறிவிக்க சட்டத்தை மாற்ற
வேண்டும்
தங்கள் வாழ்நாளில் யாராவது ஒரு
நோய்வாய்பட்டிருக்கும் ஏழைக்கு இதுவரை ஒரு
டாக்டரால் இலவசமாக உதவமுடிந்ததா அல்லது இனி முடியுமா?
என்ஜினியரால்,குடிசைவாசிக்கு
நெருப்பினால் பாதிக்காத இலவசமாக வீடுகட்டித் தரமுடியுமா? வழக்குறைஞரால்,அறியாமையால்
அடித்துக்கொண்ட அண்ணன் தம்பிகளுக்கு இலவச சட்ட உதவி வழங்க முடியுமா?
இந்தப் பட்டங்கள் நீங்க வாங்க
உழைப்பாளியின் வரிப்பணம் பயன் படவில்லையா?
ஈஷா இயக்கம்,வாழ்க வளமுடன் இயக்கம் ,யோகா
பயிற்சி இதில் ஏதாவது ஒரு இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் என்னை
ப்போன்று நோய்இல்லாமல் இருக்கின்றார்களா?சொல்லுங்கள்.
இதுவெல்லாம் பணம்பிடுங்கும் இயக்கம்
என்று ஏன் இன்னமும் நீங்கள் உணரவில்லை?
நீங்கள் கேட்ப்பது எனக்கு
புரிகிறது.கடவுள் இல்லாமலேயா பொழுது போது பொழுதுவிடியுது?.
உழைப்பவனுக்கு அதைப்பற்றிய கவலை ஏன்?உழைக்காமல் பிழைப்பை நடத்த ஆசைபடும்
அற்பர்களின் குழப்பும் வார்த்தைகள் அவை.
நீங்களும் என்னைப்போன்று மாறலாம் அதற்கு நீங்கள்
நிறைய படிக்க வேண்டும்.நான் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ 25.00
தினசரி மற்றும் வாராந்திரிகளை படிக்க
செலவு செய்கிறேன். அதுபோல் நீங்கள் செலவு செய்யவேண்டாம்.அருகில்உள்ள நூலகத்துக்கு
செல்லுங்கள், படியுங்கள்
மனிதர்களை நம்புங்கள். உங்கள் மனதில்
வாழும் கடவுளோடு தர்ம யுத்தம் நடத்த மனதை பக்குவப்படுத்துங்கள்.கடவுள் எனும் இறக்க
மற்றவனை அழித்தொழிக்க தயராகுங்கள். இதற்கு அறவழி
சிந்தனையுடன் மகிழ்ச்சியுடன் வாழ -ஒரு
வழி காட்டி எனும் நூலை, ஆயுதமாக
பயன்படுத்தி உங்கள் மனிதில் வாழும்
இறைவன் எனும் இறக்கமற்றவனை வீழ்த்த
வேண்டும்.
அப்பொழுது நீங்களும் என்னைபோன்று
மகிழ்ச்சியான மனிதனாக வாழமுடியும்.கடவுளை ஏன் இறக்கமற்றவன் என கூறுகிறோம்.நம்
வாழ்நாளில் கும்பகோணத்தில் 90 குழந்தைகள் தீயில் கருகியதே அப்பொழுது கடவுள் எங்கே
போனான்?
இதுபோன்று சுனாமி மற்றும் பூகம்ப இயற்கை
பேரழிவுகளுக்கு யார் காரணம்?மனிதனா காரணம் ? அப்படியாயின் கடவுளின் கடமை என்ன?தனிமையில்
சிந்தியுங்கள்.
மனிதன்
விபத்தில் மரணமடைவற்கும்,நோய்வாய்பட்டு இறந்நுபோவற்கும் மனிதனே காரணம் . ஆனால் மனிதன்
வாழ்வதற்கு மட்டும் இறைவன் காரணம் என்பான் ஆன்மீக வாதி . அப்பொழுதுதானே
இருப்பவனை வைத்து அய்யோக்கியன் பிழைப்பை நடத்த முடியும் .
எல்லா மக்களும் எல்லாம் பெற்று சம
நிலையுடன் வாழ உலகுக்கு பொது உடமை கொள்ளகையை வகுத்துக் கொடுத்த மாமேதை காரல் மார்க்ஸ்,சாகும்போது காச நோய்
பிடித்து வறுமையில் மரணமடைந்தான்.
அவன் எழுதிவைத்து விட்டுப்போன (தாஸ்
கேபிடல்)மூலதனம் எனும் நூலை 50
ஆண்டுகளுக்கு பின் லெலினின் படிக்க நேர்ந்தது. சோவியத் வல்லரசு உருவாகியது.
அதன்பின் சீனாவின் மா சே துங்,லெனின் ஆட்சியை கவனித்தார்.
ஆட்சி முறைகளில் இது புதுமையான
ஆட்சிமுறையாக உள்ளதே! சோவியத்தைவிட சிறந்த முறையில் (மார்க்சு-லெனின் கலவைக்
கொள்கை) சீனாவை மாசேதுங் மாற்ற
நினைத்தார்.
பொது உடமை கொள்கையை பின்பற்றி 20 ம்
நூற்றாண்டில் உலகில் இரண்டு வல்லரசுகள் உருவாகின.அதனை தொடர்ந்து வட கொரிய மற்றும்
க்யூபா போன்ற நாடுகள் இன்றளவும் பொது உடமை கொள்கையில் சிறந்தோங்குகின்றன.
இன்று உலகில் இருபெரும் கொள்கைகளான 1-முதாளித்துவம் மற்றும் 2-பொதுவுடமை கொள்கைகள் கொண்ட அரசுகள்
நிலவுகின்றன.
காரல்மார்சு அரசாங்கம் எப்படி
இருக்கவேண்டும் என பொது உடமை க்கொள்கையை
உருவாக்கினான்.அதாவது பொருளியல்வாத
த்தின் மீது அரசாங்கம் அமைத்துக் கொடுத்தான். ஆனால் நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன்
குடும்பம் நடத்த சொல்லித் தரவில்லை.அவன்
குடும்பம் மகிழ்ச்சியற்ற குடும்பமாகவே வாழ்ந்து .வறுமையில் ஒழிந்தது.
ஆனால்
ஏழாம் அறிவு இயக்கம் மட்டுமே
அரசாங்கம்எப்படி இயங்க வேண்டும் குடிமக்கள் எவ்வாறு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என வழி வகுத்துத்
தருகிறது. நான் இறந்தபிறகு இந்த நூலும் மக்கள் சிந்தனைக்கு வரும்,என்கிற நம்பிக்கை
எனக்குண்டு
எல்லாம் சரி, குழந்தைகளை எப்படி
வளர்ப்பது என்பதை விவரிக்கவில்லையே? என கேட்பது எனக்கு புரிகிறது.
இதைப்பற்றியெல்லாம் நூலில் விவரிக்கப்பட்டுள்ளது .எனினும் சுருக்கமாக இங்கே
கூறுகிறேன்.
குழந்தைகள்
வளப்பிற்கு அருவ வழிபாடு தேவை.ஆனால் வளர்ந்த –அறிவில்
வளர்ந்த பெரியவர்களுக்கு தேவை இல்லை.அருவ வழிப்பாட்டைவிட பெரியவர்களையும்
வீட்டில் இறந்தவர்களையும் பூஜிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.குறிப்பாக பொங்கல்
திருநாளில் குழந்தைகள் முன்னிலையில் உங்கள் பெற்றோர் காலில் விழுந்து வணங்குங்கள் குழந்தைகள்
அதை பின் பற்றும்.குழந்தைகள் பிறந்த நாளை கொண்டாடுங்கள். பெரியவர்கள் காலில்
விழுந்து வாழ்த்தைப் பெறச்சொல்லுங்கள். குடும்பம் மகிழ்ச்சிப்பெறும் .என்
பிள்ளைகள் என் பேச்சைக் கேட்கவில்லை என புலம்பும் பெற்றோர்கள் இருக்கமாட்டார்கள் என்
வீட்டில் இப்படித்தான் நடக்கிறது.
இலவசமாக நீங்கள் மகிழ்ச்சியாக
வழிகாட்டும் ஏழாம் அறிவு இயக்கத்தில் ஏன் சேரக்கூடது ? எல்லாரும் விரும்புவது
மகிழ்ச்சியான வாழ்க்கைதானே? மறுமையும்
இம்மையும் மனிதற்க்கு இல்லையே!
இன்றே ஏழாம் அறிவு இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொள்ளுங்கள்
நன்றி
–வணக்கம்.
நன்றியுரை- திரு
வினோத் பி.ஈ(ஏரோநாட்டிகல்) அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
விழாவில் வந்தவர்கள் அனைவருக்கும் திரு
வசந்த் எம்.சிஏ அவர்களால் இலவசமாக நூல்
வழங்கப்பட்டது
விழா முடிவில் அணைவருக்கும் இனிப்புடன்
சிற்றுண்டி வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment