35- வியாபாரி-பத்திரிக்கையாளரின் மறுமுகங்கள்
இந்திய பஞ்சாங்கத்திற்கும் மேலைநாட்டு
பஞ்சாங்கத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. எல்லாம் மக்களின் சுய சிந்தனையை மழுங்கடிக்கும் வழிகாட்டிகள். இதற்கு
அறிவியல் உண்மைகளை தொடர்புபடுத்தி உழைக்கும் மக்களின் பொருளாதாரத்தை சுரண்ட
திட்டமிட்டனர்
அதன் விளைவுதான் பரிகாரம் ,தோஷ
நிவர்த்தி,விரதம் தியானம்,படையல் உண்டியல் காணிக்கை.மொட்டை அடித்தல், வேப்பிலை
அணிதல் சூன்யம் வைத்தல், சூன்யம் எடுத்தல் போன்ற மன நிலை பாதிக்கும் மோசடி
சடங்குகள்.
உலகில் பெரும்பாலான நாடுகள் எப்படி மக்களை
கட்டுக்குள் வைத்துள்ளன என்பதனை பார்ப்போம்.
காட்டுக்குள் திரிந்து மர பொந்துகளில்
வாழ்ந்த மனிதர்கள் மரத்தடியில் கல்லை வைத்து வணங்கிய மனிதர்கள், பின்னாளில்
காடுகளை அழித்து கிராமங்களாகவும் பின்
நகரங்களாகவும் மனித குலம் பெருகியது.இடி மின்னல் போன்ற இயற்கை சீற்றங்களுக்கு
பயந்து வானத்தை நோக்கி மண்டியிடச் செய்தானர்.பயம்தான் பக்தியாக மாறியது.
குளிர்காலம் முடிந்து கோடை ஆரம்பத்தை
குதுகலமாக கொண்டாடச் செய்தானர். உலகில் எல்லா மனிதர்களுமே கோடை கால துவக்கத்தை மிக
விமரிசையாக கொண்டாடினர்.இதுதான் ஆண்டின் துவக்கம் என பஞ்சாங்கம் எழுதினர். பூமி
நிலையாக உள்ளதாகவும். சூரிய சந்திரன் பூமியை சுற்றிவருவதாகவும் பூமி தன் முழு பருவ
காலத்தை முடிக்க 365 நாட்கள் ஆகிறது என கணக்கிட்டனர். தற்கால அறிவியல் கூற்றுப்படி
சூரியனைச் சுற்றி அதன் கிரகங்களான 12 ம் தத்தமது துணைக் கோள்களுடன் தன்னைத் தானே
சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றுவதன் மூலம்
பூமியில் பருவ காலங்கள் உருவாகின்றன. இதற்கு சூரிய குடும்பம் என பெயர்.
தமிழர்கள் பஞ்சாங்கத்தை உருவாக்க வில்லை.
ஆரியர்களின் வருகைக்குப் பின்னரே பஞ்சாங்கம் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு
வழிகாட்டியாக அமைந்து விட்டது. பஞ்சாங்கம் பார்த்து பிறருக்கு வழிகாட்டி, அதன்மூலம் தன்
வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொண்டவர்கள் ஆரியர்கள். இன்றளவும் இதுதான் நடக்கின்றது.
சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி
பயணிக்கும் முதல்நாளை தமிழர் சரியாக கணக்கிட்டு கோடையின் ஆரம்ப நாளை(தை-1 அல்லது
ஜனவரி-14) பொங்கலிட்டு அருவடைத் திருநாளாக
கொண்டாடினர்.
சூரியன் வடதுருவம் நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு
நாடுகளில் அது ஆண்டின் துவக்கமாகவும் கணக்கிட்டு பஞ்சாங்கம் உருவாக்கப்பட்டது.வட
இந்தியாவில் அது ஹோலிப்பண்டிகையாக கொண்டாடப்படுகிறது(மார்ச்-முதல்வாரம்)
வடக்கிலிருந்து வந்த ஆரியர்கள் கண்டுபிடிப்பான(பஞ்சாங்கம் எழுதியவர்கள் இவர்கள்தான்) 27
நட்சத்திரங்களில் 12 நட்சத்திரங்களை மட்டும் 12 மாதங்களில் வரும் முழுநிலவுகளுக்கு
ஒதுக்கி அந்த மாதங்ளுக்கு பெயர் சூட்டினர்.
அதில் வடக்கில் தாமதமாக ஆரம்பிக்கும்
சித்திரை மாதத்தையே தமிழர்க்கு ஆண்டின் துவக்க நாளாக பஞ்சாங்கத்தில் கணித்தனர்.
அதுவரை தமிழர்க்கு தைமுதல்நாளே ஆண்டின் துவக்கமாக இருந்தது.
சூரியன் வடக்கு பயணத்தை முடித்து பின்
தெற்கு(ஜூன் முதல் வாரம்) நோக்கி பயணம்( 6+6=12 மாதங்கள்) இப்படி கணக்கிட்டு
பருவகாலங்கள் கணக்கிடப்பட்டன.
சம்பரதாயம் மற்றும் சடங்குகள்
நிறைந்ததுதான் வாழ்க்கை என பஞ்சாங்கவாதிகள் பாமரனுக்கு அறிவுறுத்தி அதன்மூலம் காசு
பார்க்க ஆரம்பித்தனர்.இன்றும் இது தொடர்கிறது.
சமீபத்தில் இரண்டு திராவிடத் தலைவர்கள்
(முன்னாள் முதல்வர் திரு கருணாநிதி-இன்னாள் முதல்வர் செல்வி செயலலிதா ) இருவரும்
தமிழ் பத்தாண்டு பற்றிய இருவேறு கருத்துக்களை இலக்கிய மற்றும் வரலாற்று ஆதாரங்களுடன் பத்திரிக்கைகள் மூலம்
வெளிப்படுத்தினர்.
செல்வி செயலலிதா அதுவும் பெண் இனத்தைச்
சார்ந்த அவரிடம் பகுத்தறிவாத கொள்கையை எதிர்பார்க்க முடியாது. இது தெரியாத போலி
பகுத்தறிவாதியான திரு கருணாநிதி ( ஆம் அவரை அப்படித்தானே அழைக்க முடியும்),தனக்குள்ள
அதிகார மற்றும் செல்வாக்கைப் பயன்படுத்தி தனது மனைவிகளை கூட மட்டுமல்ல குறைந்த
பட்சம் தனது குடும்ப உறுப்பினர்களான மகன் மற்றும் மகள் பேரன் பேத்திகளை ஒருவரைக்கூட பகுத்தறிவாத பாதைகளுக்கு
வழிகாட்டத்தெரியாத துப்புகெட்ட (பகுத்தறிவாதியாக?) மனிதராக வாழ்ந்து கொண்டு ஒரு
அரசியல் கட்சிக்கு தலைவராக இருந்து கொண்டிருக்கின்றார். இது ஒரு கேவலமான பிழைப்பாக
தெரியவில்லையா?
பஞ்சாங்கம் என்பது அறிவியல் பூர்வமான
நூல் இல்லை என்பது திரு கருணாநிதிக்கே தெரியும். அப்படி இருக்கும் போது
பஞ்சாங்கவாதியான இன்னாள் முதல்வருக்கு
இவர் பதில் அறிவியல் சார்ந்ததாக அமையவேண்டும் . அப்படி இல்லையே . வாரத்தின்
7 நாட்களுக்கு நட்சத்திரமான சூரியனை(ஞாயிறு) வாரத்தின் துவக்க நாளுக்கு
பெயர்வைத்து பின் வரும் 6 நாட்களுக்கு கிரகங்களின் பெயரை சூட்டினர்.
வாரத்திற்கு 7 நாட்கள்,மாதத்திற்கு 27
நாட்கள்(27 நட்சத்திரங்கள்) பெயரை சூட்டினர். வருடத்திற்குள் வரும் 12
மாதங்களுக்கு 12 நட்சத்திரங்கள் பெயரை
சூட்டினர்.12*27=324 நாட்கள். அறிவியல் கூற்றுப்படி வருடத்திற்கு 365நாட்களும் 6
மணி நேரமும் . எனவே பின் நாளில் நமது பஞ்சாங்க வாதிகள் (365-324=)41 நாட்களை
தங்கள் பிழைப்பான புரோகிதம் செய்யும் தொழிலுக்கு வசதியாக 12 மாதங்களுக்கு
பங்கிட்டுக்கொண்டனர்.
12 மாதங்களுக்கு 12 ராசிகளின் பெயர்களை
சூட்டி அதற்கு 27 நட்சத்திங்களை பங்கிட்டு கற்பனை கட்டங்களை வரைந்து படித்தவனையும்
பாமரனையும் நம்பவைத்தனர்.
அதற்கு சோதிடக்கலை என பெயரையும் வைத்து ,சோதிட
விற்பன்னர்கள் என தங்களை விளம்பரப்படுத்தி இன்றும் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு
தனிமனிதனுக்கு ஒரு சோதிடர் கணிக்கும் கணிப்பை போல இன்னொரு சோதிடர் கணிப்பும்
இருக்காது.இது தான் உண்மை. இதிலிருந்தே தெரியவில்லையா? இது ஒரு
ஏமாற்று வேலை என்று.
அப்படி இருக்கும் போது இந்த இரண்டு
முதல்வர்களுக்குமே ஆழ்ந்த அறிவியல் முதிர்ச்சி இல்லை என்பது தெரிகின்றது . இல்லை என
தெரிந்தும் மக்களை ஏமாற்றுகின்றனரா?
இந்த ஏமாற்று வேலைக்கு தினசரி பத்திரிக்கைகளும்
ஒரு சில வார மற்றும் மாதாந்திர
பத்திரிக்கைகளும் நட்சத்திர மற்றும் ராசி
பலனை புத்தகமா தயாரித்து ,விற்று பணத்தை குவிக்கின்றன.
இது ஒரு புறமிருக்க சில காலமாக
பத்திரிக்கைகளும் நகை வியாபாரிகளும் கூட்டணி அமைத்து அட்சய திருதியை எனும் மயக்கு
வார்தையை மக்களிடையே பரப்பினர். கற்பனை கதையை உண்மை என நம்ப வைத்தனர். அன்றயதினம் ஒரு குன்றிமணி
பொன்னாவது வாங்கி வீட்டில் வைத்தால் (கடன் வாங்கியாவது) வீட்டில் லட்சுமி கடாட்சம்
பெருகும் என கட்டுக்கதைகளை எழுதி அதனை மக்களை நம்பவைத்தனர்.
அது சரி போன ஆண்டும் ,அதற்கு
முந்தயாண்டுகளிலும் அட்சய திருதியை அன்று
வாங்கிய நகைகளினால் அந்த குடும்ப வளம் பெருகியதா? அதை கண்டுபிடித்து அந்த நகை வாங்கியவரின் தற்போதைய நிலை என்ன? என
எந்த பத்திரிக்கைகளும் ஏன் எழுதவில்லை? பத்திரிக்கைகள் சமூக அக்கறை உள்ளது போல்
நடிக்கின்றன .அவ்வளவே.
இதற்கு ஆங்கில பத்திரிக்கைகளும்
சளைக்கவில்லை. ‘இதுவெல்லாம் இல்லாமையா எழுதறான்’ என படித்தவனும் மதி மயங்கி
நகைக்கடைகள் முன் நாளெல்லாம் வரிசையில் நின்று நகையை வாங்கி குவிக்கின்றனர். இது
ஆண்டுதோறும் நடக்கும் மோசடி வியாபாரம்.இதில் ஆதாயம் நகை வியாபாரிக்கு மட்டுமே
அன்றி வாங்குவனுக்கு அல்ல என ஒரு பத்திரிக்கையும் ஏன் எழுத வில்லை?
நகையை
வாங்குவதும் முட்டாள்தனம் விற்பதுவும் முட்டாள்தனம் என ஏன் பத்திரிக்கைகள்
எழுதக்கூடாது?
ஊழலைப்பற்றி எழுதும்
பத்திரிக்கைகளுக்குகூட இதைபற்றி ஏன் எழுத மனம் இல்லை?
சமூக சிந்தனையாளர்கள் ஏன் கண்டு
கொள்ளவில்லை?
மூட நம்பிக்ககளை ஒழிக்கும் அமைப்புகளான
திராவிட கழகமும் பெரியார் பெயரில் நடத்தும் இயக்கமும் இதனை ஏன் கண்டு கொள்ளவில்லை?
வருடத்தில் வரும் ஏதாவது ஒரு நாளை
அறிவியல் நாளாக ஏன் அறிவிக்க கூடாது ?
அந்த நாளில் ஒரு புத்தகமாக வாங்கினால்
தான் உங்கள் சிந்தனை பெருகும், அறிவு பெருகும் என ஏன் பத்திரிக்கையாளர்கள் நூல்
ஆசிரியர்களோடு கூட்டணி அமைத்து மக்களுக்கு வழிகாட்டக்கூடாது ?
பத்திரிக்கைகள் ,வியாபாரிகள் மற்றும்
அரசியல்வாதிகள் –இந்த
முப்பெரும் கூட்டணிகளின் மறுமுகங்களை மக்கள் காண்பது எப்போது?
No comments:
Post a Comment