Friday, May 11, 2012

36-அரசாங்கத்தின் மறுமுகம்


                             36-அரசாங்த்தின் மறுமுகம்
இன்றய செய்தியில்(02.05.2012) திருவண்ணாமலை அருகே ஆரணியில் தேர்த்திருவிழாவில் தேரின் அச்சு முறிந்து 5பேர் நிகழ்விடத்தில் மரணம் மற்றும் 6 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அடுத்த பக்க செய்தி நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் சந்தன உரூஸ் திருவிழாவில் மின்சாரம் தாக்கி தேரில் இருந்த 2 நபர் இறந்தனர்.03.05.20122 அன்று பேரணாம்பட்டு அருகே தேர் திருவிழாவில் 5 பேர் தேரில் மின்சாரம் பாய்ந்து இறந்தனர்.(ஒரே வாரத்தில் தேர்த்திருவிழாக்களில் மட்டும் தேர் அச்சு முறிந்து மற்றும் தேரில் மின்சாரம் பாய்ந்து பல்வேறு இடங்களில் 16 நபர்களுக்கு மேல் இறந்துள்ளனர்)

முழு நிலா  நாளில் கேரளா திருச்சூரில் ஆண்டுதோறும்  நடக்கும்  பூரம் திருவிழாவில் நிறைய யானைகளை அலங்கரித்து மக்கள் யானைகளிடம் ஆசி பெறுவது வழக்கம். இந்த யானைகள் திருவிழாவில் மேள சத்தத்தில் மிரண்டு மக்களை காலில் போட்டு மிதிப்பது வழக்கமானது ஒன்றே. இருப்பினும் ஆண்டுதோறும் இதே யானைகளை மக்களிடையே விழா என நிலை நிறுத்துவது ஏன்?  யானைகள்  என்ன மனிதர்களைவிட அறிவில் சிறந்ததா?அல்லது கடவுளுக்கு நிகரான கருணை காட்டும் ஆற்றல் பெற்றதா? மனிதன் தன் ஆறாவது அறிவான பகுத்தறிவை இங்கு ஏன் பயன்படுத்தவில்லை?

பொது வழிபாட்டுத்தலங்களில் 1-உண்டியல் கூடாது,2- அர்ச்சகர் தட்டு ஏந்தக்கூடாது,3- யானைப்போன்ற காட்டு விலங்குகளை வளர்க்கக்கூடாது    

மக்கள் திருவிழாக்களுக்கு சென்று மரணமடைய வேண்டிய அவசியமென்ன?
அதுவும் கோயில்களுக்கு சென்று மரணமடையவேண்டிய அவசியமென்ன?
கடவுள் நம்மை அல்லது மக்களை காப்பாற்றுகின்றார் அல்லது கடவுள் நமக்கெல்லாம் படியளக்கின்றார் எனில் திருவிழாவிற்க்கு வரும் பக்தர்கள் ஏன் மரணமடைய வேண்டும். படித்தவர்கள் இதனை சிந்திக்க வேண்டாமா?   

கடவுளை உருவாக்கிய மனிதர்கள் அதற்கு பொது வழிபாட்டுத்தலங்கள் வேண்டும் என 1000,2000 ஆண்டுகளுக்கு முன்னரே மன்னர்களை வற்புறுத்தி மக்கள் வரிப்பணத்தில் உலக முழுக்க மக்கள் வாழும் இடங்களிலெல்லாம் கோயில்,சர்ச்,மசூதி என பிரம்மாண்ட முறையில் போட்டி போட்டுக்கொண்டு ஒன்று இன்னொன்றை மிஞ்ச வேண்டும் என்கிற எண்ணத்தில் கடவுளுக்கு வீடுகளை கட்டி விட்டனர். கடவுளுக்கு வீடு கட்டினால் தனக்கு வீடு (மோட்சம்?) கிடைக்கும் என்கிற நப்பாசையில் கட்டிய மனிதர்களுக்கு தங்களுக்கு ஒரு குடிசையை மட்டுமே கட்ட முடிந்தது. இன்றளவும் இதுதான் நிலமை.

உழைப்பாளியின் பணத்தை சுரண்டுவதற்கு கோயிலில் உண்டியல் வைக்கப் பட்டுள்ளது என்பதை அப்போதைய மனிதனுக்கு எண்ணத் தோன்றவில்லை. இப்ப மட்டும் என்ன வாழுதாம் ?

மனிதனுக்கு எப்பொழுதுமே இருக்கும் ஆசைகளில் ஒன்று மனித கூட்டங்களை வேடிக்கை பார்ப்பது.
                                     
அதைப்போன்றே நீர் நிலைகள் (ஏரி குளம்,கடல்,ஆறுகள்) மற்றும் மேடு பள்ளங்களை (குன்று ,மலை,பள்ளத்தாக்குகள்) வேடிக்கை பார்ப்பது அவர்களின்  பிறவிப்பயனாக கருதுகின்றனர். மனிதர்களுக்கும் குரங்கு கள் போன்ற குணங்கள்தான். 
                                     
மனிதர்கள் தங்கள் இனத்தை தங்களுக்குள் இருக்கும் உந்து சக்தியால் இனப்பெருக்கம் செய்யமட்டுமே முடியும். மனிதர்கள் தங்களுக்கு ஏற்படும் மரணத்தை தடுக்க முடியாது.
ஆனால் விபத்துகளினாலும் நோய்களினாலும்   ஏற்படும் மரணத்தை தங்களுக்குள் இருக்கும் பகுத்தறிவால் 99% தவிர்கலாம்.

விபத்துக்களை தவிர்ப்பது எப்படி?
1-மோட்டார் சைக்கிளில் முடிந்தவரை ஒருவர் மட்டுமே பயணிப்பது அதுவும் 40-50 கி.மி வேகமே செல்வது பாதுகாப்பானது  

2- வாகனத்தை முந்த வேண்டும் எனில் எதிரே கண்ணுக்கெட்டிய தூரம் வரை வாகனம் இல்லாத பட்சத்தில் முந்தலாம்

3-இரவுநேர பயணத்தை தவிர்ப்பது நல்லது .அல்லது இரவு 10 மணிக்குமேல் பயணத்தை தவிர்ப்பது நல்லது.

4-இதேபோன்று கார் பயணத்தையும் 10மணிக்குமேல் பயணிக்க கூடாது வழியில் தங்கிவிட்டு அடுத்த நாள் காலை 6 மணிக்குமேல் பயணத்தை தொடர வேண்டும். பெரும்பாலும் கோயிலுக்கு செல்பவர்கள் கடவுள் மீது இருக்கும் அதீத நம்பிக்கையால் இரவு முழுவதும் கண்விழித்து கார் ஓட்டுகின்றனர். மனிதனின் பகுத்தறிவை இங்கு சிறிதும் பயன் படுத்தப்படுவதில்லை  .அதுவும்  அதிகாலை தன்னையறியாமல் கண் மூடிவிடும். இதனால் விபத்து ஏற்பட்டு விடுகிறது.

5-பணம் சேர்க்கவேண்டும் எனும் அதிக ஆசையாலும் வியாபாரப் போட்டியாலும் இரவுமுழுக்க லாரிகளை ஓட்டுவதால் அதிகாலை கண்ணயர்ந்து விடுவதால் பெரும் உயிர்சேதம் ஏற்படுகின்றது.இரவு 10 மணிக்குமேல் லாரி ஓட்டுவதை தவிர்க்கலாம்.
அல்லது அரசாங்கம் இது குறித்து ஒரு சட்டமே போடலாம்.

6-மது அருந்திவிட்டு எந்த வாகனத்தையும் தொடக்கூடாது.

7- 50 வயதுக்கு உட்பட்டவர்கள் மது அருந்துவதை சட்டம்போட்டு தடுக்கலாம்.

பொது வழிபாட்டுத்தலமும் அங்கு உண்டியல் வைத்து பணம் திரட்டுவதும் அறவழி சிந்தனைக்கு புறம்பானதாகும்.ஏழாம் அறிவு இயக்கத்திற்கு எதிரானது. இருப்பினும் மக்களின் அறியாமையால் ஏற்படும் மரணத்தை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோயில்களிலும் அங்கு நடக்கும் தேர்த்திருவிழாக்களிலும் நடக்கும் விபத்துக்களினால் ஏற்படும் மரணத்தை  தவிர்பது எப்படி?
மனிதன் சக்கரம் கண்டுபிடித்து அதன் பயன்கள்  நாகரிக வளர்ச்சிக்கு வித்திட்டது.இன்று 2மற்றும் 4 சக்கர வாகனங்கள் பயன்பாடு சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

அதென்ன இன்றும் மரத்தாலான மக்கிப்போன சக்கரத்தை வைத்து சிலைகள் மட்டுமல்ல அதில் நாலைந்து பிராமணர்களை உட்காரவைத்து மற்ற மனிதர்கள் வடம்பிடித்து இழுப்பது?எல்லாம் தெரிந்த அல்லது உணர்ந்த கடவுளென்றால் தேர்  முறிந்து பக்தர்கள் ஏன் மரணமடையவேண்டும்? விதி முடிந்த தென்றால் மரணம்  வீட்டில் நிகழ வேண்டியதுதானே?  இந்த பழக்கம் தமிழகத்தில் தான் அதிகம்.பழய மன்னர்கால தேர்களையெல்லாம் கோயில்களில் காட்சிப்பொருளாக பராமரிக்கலாம். இதன் பயன்பாட்டை சட்டம் போட்டு தடுக்க வேண்டும்.

 தேரில் இரும்பு சக்கரம் பொருத்துவதுகூட ஆபத்து தான். மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது.
விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டர் கொண்டு சிலைகளை இழுக்கலாம். பழை முறையான மரச்சக்கரம் பயன்பாட்டை  தடை செய்யப்பட வேண்டும்.இன்னும் சில இடங்களில் 20 அல்லது 30 மனிதர்கள் தோளில் சிலைகளை தூக்க முடியாமல் தூக்கி  ஊர்வலம் வருவது, இதுஒரு மனித வதை. இதையும் தடை செய்யப்பட வேண்டும்.

கோயில்களுக்கு வரும் பக்தர்களின் உயிர்களுக்கு ஆன்மீக வாதிகள் பொறுப்பு ஏற்க வேண்டும்.உழைப்பாளிகளின் பணத்தை கோயிலில் உண்டியல் வைத்து சுரண்டும் ஆரசாங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் உயிருக்கு பாதிப்பு இல்லாமல். விழாவை எப்படி நடத்துவது என கோயில் நிர்வாகிகளுடன் கலந்து முடிவெடுக்க வேண்டும்.ஏதுமறியா அப்பாவிகளின் உயிர்கள் பலியான குடும்பத்திற்கு சொற்ப நிதி உதவி வழங்குதால் அரசாங்கம் தப்பிக்க பார்க்கிறது. அரசாங்கத்தின் மறுமுகத்தை மக்கள் காணட்டும்.     

No comments: