Thursday, June 7, 2012

37-இந்திய அரசின் மறுமுகம்-


                     37-இந்திய அரசின் மறுமுகம்
 பலதரப்பட்ட குணங்களை உள்ளடக்கியவன் தான் மனிதன்.
1-ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொன்று வாழ்வது-இனத்துரோகம்
(கும்பல் குணம்)இதற்கு உலகில் பல புராண கால சர்வாதிகாரிகளை உதாரணமாக கூறலாம் , தற்கால இனத் துரோகிகளாக 1-மறைந்துபோன ஹிட்லர், 2-தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கை அதிபர் ராசபக்சே 

2-ஒருமனிதன் இன்னொரு மனிதனை அடக்கியாள நினைப்பது-மிருக குணம்-இதற்கு உதாரணமே தேவை இல்லை.உலகில் பெரும்பான்மையான மனிதர்கள்  இதில் அடக்கம்

3-முதிர்ச்சி அடைந்த மனிதன் கூட குழந்தை குணங்களை விட்டொழிக்க முடியாமல்-முயற்சிக்காமல் மடிந்துவிடுவது-குழந்தை குணம் .ஆன்மீக வாதிகளும் ,அருவ வழிபாட்டு மனிதர்களும் இதில் அடக்கம்

4-தன்னுள் உறங்கி கிடக்கும் திறமைகளை வெளிப்படுத்தி பெருமை கொள்வது-அறிவியலாளர்கள் மற்றும் பொருளியல் வாதிகள்(pragmatics) பகுத்தறிவாத குணம் உலக மக்கள் தொகையில் இவர்கள் எண்ணிக்கை சொற்ப அளவே.

உலக நாடுகள் ஒன்றுகூடி மனிதன் ஒரு நாகரிக விலங்கு இனத்தைச் சார்ந்தவனாக இருக்க அல்லது வாழ்ந்து காட்ட பல வழிகாட்டு நெறிகளை வகுத்துள்ளது.

அதேநேரத்தில் எந்த நாட்டு உள் விவகாரங்களிலும் தலையிடுவதில்லை என அடங்கிப்போகிறது.  வலுவிழந்த அதேநேரத்தில் அறவழி கோட்பாட்டை ஒவ்வொரு நாடும் பின் பற்ற வேண்டும் என்பதில் அக்கறை கொண்டுள்ளது.

பொது உடமைக் கொள்கையில் கவனம் செலுத்த மனமிருந்தாலும் அதை முதலாளித்துவ நாடுகள் தடுக்கின்றன. உலக வல்லரசுகளான 5-நாடுகளில் 3-நாடுகள் முதலாளித்துவ நாடுகள்.(அமெரிக்கா,பிரிட்டன்,பிரான்சு-முதலாளித்துவ வல்லரசுகள்,ரஷ்யா மற்றும் சீனா-சமத்துவ-பொதுவுடமை வல்லரசுகள்)  . முதலாளித்துவ நாடுகளில் ஆன்மீக சிந்தனையும் மனிதனை மனிதன் அடிமை படுத்தும் குணமும் மேலோங்கியிருக்கும் .

மனிதனின்   குழந்தை குணங்களில்
1- குரங்கை போன்று குடும்பம் நடத்தும் இயல்புடையவன்.
2-மனிதர்களை பார்த்து குழந்தைகள் அப்பா-அம்மா விளையாட்டும் நிலா சோறு ஆக்குவதும் கல்லை வைத்து பூஜீப்பதும், மணல்வீடு கட்டிவாழ்வதும்
ரத்தத்தில் ஊறிய குணங்கள்.
மரண பயமும்(மிருக உணர்வு),இசையை ரசிப்பதும் ,சுய இன்பமும்(இதுவும் மிருக குணமே)மனிதன் சாகும் வரை மறப்பதே இல்லை.மனிதன் முதிர்ச்சி அடையா குழந்தையாகவே வாழ்க்கையை முடித்துக் கொள்கிறான்.
                                                                          
உலக மக்களில் குழந்தை குணங்களும் அடிமை புத்தியும் மனித குலம் தோன்றிய நாளில் இருந்து இன்றுவரை மாறா குணங்கள் பெற்ற ஒரே இனம் தமிழர் இனம்.
இவர்களுடைய சுயசிந்தனையும் சுய மரியாதையும் 2000-ம் ஆண்டுகளுக்கு முன்னரே அழிய தொடங்கி இன்றயநாளில் அடிமை இனமாக திராவிட மாயையில் சிக்கி  சீரழிகிறது. தமிழ் இலக்கியங்களில் இருந்து இதனை நன்கு அறியலாம்.  

இவர்களை இவர்களே ஆள(அதாவது தமிழர்களை தமிழர்களே) தகுதி ஆக்க  பாடு பாடும் ஒரே இயக்கம் ஏழாம் அறிவு இயக்கம்.

மனித இனங்களில் பல மதங்கள்,பல சாதிகள் நிறம்பிவிட்டது. தற்கால சூழலில் இதனை தவிர்ப்பது இயலாத செயல்.உலகத்திலே கடைசியாக உருவான மதம் சீக்கிய மதம் . அது உருவாகி 300 ஆண்டுகளுக்குமேல்   ஆகிறது.இன்றய நிலவரப்படி சுமார் 3 கோடி மக்களுக்கு மேல் வாழ்கின்றனர்.இசுலாம் மதக்கோட்பாட்டையும் இந்து மத கோட்பாட்டையும் இணைத்து உருவாக்கப்பட்டதுதான் சீக்கியமதம். இவர்களின் தற்காப்புக்காக ஒவ்வொரு சீக்கியனும் ஒரு குறு வாள் வைத்துக்கொள்ளலாம் என விதி வகுக்கப்பட்டது.

இதனை எந்த அரசும்(அப்போதய முசுலிம் அரசும்,அதன்பின் வந்த ஆங்கில அரசும் தற்போது ஆளும் மதச்சார்பற்ற இந்திய அரசும்) கண்டுகொள்ளவில்லை.அதாவது ஒரு அரசின் கீழ்வரும் அனைத்து மக்களும் ஆயுதம் அற்றவர்களாக அதாவது நாகரிக மனிதர்களாக மாற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.அவர்களைப்பார்த்து மற்ற இன மக்களும் வீட்டுக்கு வீடு நீண்ட கத்தி மற்றும் நவீன ரக துப்பாக்கிகளும் வைத்துக்ககொண்டனர். இப்பொழுதும் இதனை அரசு கண்டுகொள்ளவில்லை.

ஆனால் தென்னிந்தியர்கள் மட்டும் ஆயுதங்களை வைத்துக்கொள்ளக் கூடாது என மக்களை நிராயுத பாணியாக மாற்றிவிட்டனர்.அதாவது அடிமையாக்கிவிட்டனர்.

சமீபத்தில் பஞ்சாபில் ஒரு சம்பவம் நடந்தது. சில ஆண்டுகளுக்குமுன் பஞ்சாப் முதல் அமைச்சராக இருந்தவரை,அவர் அந்த இனத்துக்கு ஆதரவாக செயல் படவில்லை என ஒரு இன வெறி பிடித்தவன் கொலை செய்துவிட்டான். அதற்கு நாட்டின் உச்ச நீதி மன்றம் கீழ் கோர்ட்டு தீர்ப்பளித்த மரண தண்டனையை உறுதி செய்தது.

இந்த தீர்ப்பை கேட்டு சீக்கிய இன மக்கள் ஒன்று திரண்டு அனைவரும் நீண்ட வாளுடன் தெருவிற்கு வந்து விட்டனர்.

இதனைப் பார்த்த மாநில அரசு உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யவேண்டும் என மனு செய்தது. உச்ச நீதி மன்றம் தீர்ப்பை மாற்றிக்கொண்டது.

ஆனால் ராசீவ் காந்தி கொலையில் (உண்மையான நேரடிக் குற்றவாளிகள் அப்போதே சாகடிக்கப்பட்டனர்)கொலைக்கு துணை புரிந்ததாக மூவருக்கு  தூக்குதண்டனை விதித்தது, இந்திய நீதி மன்றம்.

பஞ்சாபில் போராடியது போல் தமிழின விசுவாசிகள் போராட முடியவில்லை,காரணம் தமிழன் நிராயுத பாணியாகி பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. அவன் போர்குணம் இழந்துவிட்டான். 
இன்னமும் போர்குணம் இழக்காத  சீக்கியர்கள் அவர்கள் இன ஒற்றுமையை நிலைநாட்டி வருகின்றனர்.  

இதிலிருந்து என்ன தெரிகிறது. நமது இந்திய அரசு ஒரு போலியான மதச்சார்பற்ற நாடு என புலனாகிறது.வன்முறைக்கு பயந்து நீதி மன்றமும் தன் நிலையை மாற்றிக்கொள்கிறது.
வன்முறை கும்பல் குணத்தால் ஒரு இனம் வாழ்கிறது.இதே வன்முறை கும்பல் குணத்தால் இன்னொரு இனம் அழிந்து கொண்டிருக்கிறது.

தமிழர்களின் வீரத்தை பெருமையாக பேசி பேசி அந்த நினைப்பில் காலம் கடத்திவிட்டனர். வாளொடு தோன்றிய மறத்தமிழன் ஊருக்கெல்லாம் சோருபோட்டு வந்தாரை வரவேற்று வாழவைத்த தமிழன், இன்று ஒரு புடி சோற்றுக்கு நியாய விலைக் கடைகள் முன்னும், மதுக்கடைகள் முன்னும் மண்டியிட்டு ஈனப்பிழப்பை நடத்துகின்றன். அரசியல்(திராவிட) கட்சிகளும் அவனிடம் 100 ரூபாய் கரந்து அவன் குடும்பத்துக்கே விலையில்லா வீட்டு உபயோகப் பொருட்களை வழங்குகின்றன.திராவிட மாயையிலிருந்து விடுபட்டு என்று தமிழன் என்கிற நினைப்பு  வருமோ அந்த நாளே தமிழனுக்கு சுயமரியாதை நாள். 

 இலங்கையின் பூர்வ குடிமக்களான தமிழர்கள்  வாழ்வாதாரம் தேடி அகிம்சை முறையில் போராடினர். தோல்வி கண்டனர்.சலிப்புற்று ஆயுதம் தாங்கி அந்த அரசை எதிர்த்து போராடி அதிலும் தோல்வி கண்டனர்.அந்த அராஜக அரசுக்கு இந்தியா உட்பட பல உலகநாடுகள் துணைபுரிந்தன.இதனால் தமிழர்கள் வீரமரணத்தை தழுவ நேரிட்டது. 

எஞ்சியுள்ள மக்களை முள்வேலி அமைத்து மிருகங்களுக்கு உணவளிப்பது போல் அந்த அரசு தமிழர்களை சிறுகசிறுக சாகடித்துக் கொண்டிருக்கின்றது. இங்கே வாழும் தமிழின சொந்தங்களிடையே பதற்றம் நிலவுவதைப் பார்த்த இந்திய அரசு ஒரு தந்திரம் செய்தது.இலங்கை அரசும் இதற்கு ஒப்புக்கொண்டது.

இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளை ஒன்று சேர்த்து அதனதன் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரின் தலைமையில் இலங்கைக்கு அனுப்பிவைத்தது.

இலங்கையின் ராசபக்சே அரசும் சிறந்த நாடகத்தை அரங்கேற்றியது இதற்கு இந்திய அரசின் எதிர்கட்சி தலைவரை எப்படி வளையகட்டி பிரம்மாண்டமான குளு குளு விருந்து ஏற்பாடு செய்ய வேண்டும் என இரண்டு அரசும் நாடகம் போட்டது. நன்கு  உபசரித்தது என வெளி உலகம் உணராமல் இல்லை.
                                   
‘ராசபக்சே, தமிழர்களுக்கு நல்லது செய்ய உள்ளார்.அங்குள்ள தமிழர்கள் தனி நாடு கேட்கவில்லை. சிங்களவரோடு வாழ விரும்புகின்றனர்’ என இலங்கை சென்று பரிசு பொருட்களுடன் திரும்பிய இந்திய நாடளுமன்ற குழு உறுப்பினர்களை கூற வைத்தனர். முள் வேலியில் உள்ள தமிழர்களை துப்பாக்கி முனையில் பேச வைத்து படமெடுத்தவர்கள் துப்பாக்கி முனையை மறைத்து, வெளிஉலகுக்கு ராசபக்சே மனித நேயப்பற்றாளர் என இந்திய தமிழர்களை நம்ப வைத்து நாடகம் அரங்கேற்றினர்.இதற்கு இந்திய செய்தி ஊடகங்கள் துணை புரிந்தன. நாதியற்ற தமிழன் வாய்மூடி மவுனியாகிவிட்டான்.

எப்படி எதிரிகளிடம் தங்களைக்காப்பாற்ற பஞ்சாபிகள் ஆயுதம் ஏந்தி இருப்பதை இன்றளவும் நியாயப்படுத்தப்படுகிறதோ, எப்படி 1920-40 ஆம் ஆண்டுகளில் சப்பானிய துணையுடன் சீன அராஜக அரசை அகற்ற சாதாரண விவசாயிகளை ஆயுதம் ஏந்தி போராட மா.சே.துங் தயார் செய்தாரோ அதைப்போன்று தமிழீழ போராளிகள் போராட்ட யுக்தியை கையாள வில்லை.

இதன் காரணமாக இலங்கையில் தமிழின  வீழ்ச்சிக்கு காரணமாகிவிட்டது. தமிழர்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்ட இந்தியாவின் மறுமுகத்தை காண்க.           

                                             



           

No comments: