183-எனக்கு நானே எழுப்பும் கல்லறை
அடுத்து எனக்காக எங்கள் ஊர் சுடு காட்டில் எனக்கு நானே சமாதி
கட்ட முயன்று வருகிறேன்.அதற்கு முன் நான் இறந்தால் எப்படி அடக்கம் செய்ய வேண்டும்
என்பதை இங்கே விவரிக்க விரும்புகிறேன்.
எனக்கு மரணம் என்பது இரண்டு வகையில் வரலாம்.1-ஹார்ட்
அட்டாக்,அல்லது
2- சாலை விபத்து,
3-தீரா வியாதி வந்தால் தற்கொலை-
இதில் எதாவது ஒன்றில் எனக்கு மரணம் நிகழும் என நினைக்கின்றேன்.
அப்படி எனக்கு
மரணம் நிகழ்ந்த உடன் என் உடலை ,
1-நான்
பிறந்து தவழ்ந்த,ஓடியாடி விளையாடிய கள்ளூர் கிராமத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
2-தாரை தப்பட்டைகள் கூடாது. வானவேடிக்கைகள் கூடாது.மலர்
மாலைகள் கூடாது.
3-வெறும் துணியில் சுற்றி பாடைகட்டி தூக்கி செல்ல
வேண்டும்.
4-நான் எடை கூடுதலாக இருப்பதால் காரிலோ அல்லது வண்டியிலோ
வைத்து இழுத்துச் செல்லலாம், முன்னமே தயார் நிலையில் உள்ள சாமாதியில் என் உடலை
வைத்து கீழ்கண்ட வாசகங்கள் தாங்கிய கிரானைட் ஸ்லாப் போட்டு மூட வேண்டும்.
5- 2 அடிக்கு 6 அடி என இரண்டு பாகங்களாக பிரிக்க
வேண்டும்.ஒன்று எனக்கு இன்னொன்று என் மனைவிக்கு.
1அடி உயரத்தில் கல்லறை நிலை நிறுத்த கான்க்ரீட் தரை தளம்
அமைக்க வேண்டும்.
கல்லறை பக்க வாட்டின் முன்புற மூன்றில் பக்க அளவுகளான
இரண்டு 6*2அளவில் கீழ்கண்ட வாசகங்களை பொருத்த வேண்டும்.
6-6*2 அளவில், ‘உலகைப்
படைத்தது கடவுளாகவே இருக்கட்டும் அதைப் பூட்டி வைத்து பூஜித்தாலோ அல்லது
பூஜைசெய்து பூட்டி வைத்தாலோ அது உன் பேச்சைக் கேட்குமா?’ எனும்
வாசகங்கள் பொருத்தியிருக்க வேண்டும்.
7-6*2 அளவில்-ஒன்றில்-பொது வழி பாட்டுத்தலமான கோயில்கள்
கூடாது.இருக்கும் கோயில்களை இழுத்து மூடி காட்சிக் கூடங்களாக மாற்ற
வேண்டும்.கடவுள் இருப்பது உண்மையானால் வீட்டில் வணங்கலாமே?
8-4*2 அளவான இன்னொன்றில்,
*மறுமையும் இம்மையும் மனிதர்க்கு இல்லை
மகிழ்வித்து மகிழ்வுடன் வாழ்வதே மாசற்றான் கோள்
*கல்லில் கருணையை தேடி அலையும் மனிதர்களே
மனிதர்களை தேடுங்கள் மகிழ்வுடன் வாழுங்கள்.
9-முன் பக்கத்தில் 4*2 அளவில்
திருவேங்கடம்
1-பிறந்த
தேதி.20.05.1951
2- மறைந்த தேதி-
அம்மா,அப்பா-
3- கண்ணம்மா
4-படைவீட்டு சத்ரியர்
5-படிப்பு-BSc Bed(1973)
6-பணி-தர ஆய்வாளர்(ஓய்வு)
பணி ஓய்வுக்குப்பின் ஆற்றிய பணிகள்.இணைய தள
முகவரிகள்.இவற்றின் மூலம் என் அறச்சிந்தனைகளும் பகுத்தறிவு பதிவுகளும் பதிவேற்றம் செய்துவந்தேன்.
நிறுவனர்:
ஏழாம் அறிவு இயக்கம்(visit:www.thiru-rationalism.blogspot.in.
இயற்றிய நூல்கள்-
1-அறவழி சுய சிந்தனையுடன் மகிழ்ச்சியுடன் வாழ-ஒரு வழி
காட்டி.(2012)
2-அறவழி சுய சிந்தனையுடன் மகிழ்ச்சியுடன் வாழும்
வழிகள்(2013)
3- அறம் காத்த வர்மாக்கள்-தமிழர் ஒருபன்னாட்டு தேசிய இனம்(2016)
4-பகுத்தறிவாளர் பார்வையில் திருக்குறள்(2018)
5-இறந்தேன்,பிறந்தேன்.(சுய
சரிதை) அச்சில்
6-ஏழாம் அறிவியல்
பெற்ற விருதுகள்-1-புது
முறைச் சிந்தனைச் சிற்பி(2012).
E2-பாரதி பணிச் செல்வன்(2014)
3-அகவை முதிர்ந்த
தமிழறிஞர்(2016) . (தமிழ்நாடு அரசு வழங்கிய விருது)
************
2019-ஏப்ரல் மாதத்தில் எனது சேமிப்பு பணம் ரூ.ஒரு லட்சம்
வந்தது,எனது நீண்ட நாள் சிந்தனையான எனக்கு நானே என் கிராமத்து
சுடுகாட்டில் கல்லறை அமைக்கலாம் எனும் கனவை நிறைவேற்ற தோன்றியது.
நண்பர் பன்னீர் செல்வத்துடன் சித்தூரில் இயங்கும் கல்
குவாரிகளை பார்வை இட சென்றோம்.இரண்டு அல்லது மூன்று கல் குவாரிகளை பார்வை இட்டு
இறுதியாக ஒரு கல்குவாரி தொழிற் சாலையில் இரண்டு கல்லறைக்கு தேவையான 7*2 அடிக்கு 6
ஸ்லாப்புகளும் மற்றும் 2*2 அடிக்கு 4 ஸ்லாப்புகளும் மொத்தம் 10 ஸ்லாப்புகள்
ஒவ்வொன்றும் 3 அங்குல கன முடையது ,தயார்
செய்ய சொல்லி முன்பணம் கொடுத்து விட்டு வந்தோம்,சில
நாட்கள் கழித்து திருவள்ளூரிலிருந்து ஒரு மினி லாரி எடுத்துக்கொண்டு வீடு வந்து
சேர்ந்தோம்...
அந்த கல்லில்
என் கருத்தோவியங்களை திரு சங்கர் பதிவிட்டுள்ளார்.இன்னும் சில மாதங்களில் கள்ளூர் சுடுகாட்டில்
கல்லறையை நிலை நிறுத்திவிடுவேன்.
No comments:
Post a Comment