Wednesday, December 25, 2019

இ.பி-38


                 169-முதல் நூல் வெளியீடு

சென்னை மற்றும் திருவள்ளூர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வரும்போது நான் மருத்துவர் அய்யாவைப் பார்த்து,
அய்யா,இந்நூலை வெளியிட ஒரு தேதி சொல்லுங்கள்? என நச்சரித்துக் கொண்டே இருப்பேன்.அவரும் சளைக்காமல், ‘இருய்யா, வெளியிடலாம்’,என என் தோள் மீது தட்டியவாறு சென்று விடுவார். ஒரு நாள்,மருத்துவர் அய்யா உதவியாளரிடம் இருந்து தகவல் வந்தது. சமுக முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர்,
திரு கோபால் அவர்களை சந்தியுங்கள் என அவருடைய தொலை பேசி எண்ணைத் தந்து பேசச் சொன்னார்.நான் உடனே திரு கோபால் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘அய்யா ,நான் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்றேன்.அதற்கு அவர் என்ன? ஏது? என  விசாரித்து விட்டு ,அவர்,அப்படியானால்,

நீங்கள் திருவள்ளூரில் இருக்கும் திரு துரையரசனை சந்தியுங்கள்என்றார்.
நான் பெரிய குப்பத்தில் இருக்கும் திரு துரையரசன் அய்யா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன்.முதல் சந்திப்பிலேயே என் மனதை கவர்ந்துவிட்டார்.
அலுலகத்தில் இருந்த அவரைப் பார்த்து, ‘அய்யா தாங்கள் தான் துரையராசனா?’ என்றேன்.ஆமாங்கைய்யா!என எழுந்து,பல நாட்கள் பழக்கமானவர் போல் என்னை உற்சாகமாக வரவேற்றார்.
இந்த உப சரிப்பு எனக்கு மிகவும் பிடித்து விட்டது.நான் மருத்துவர் அய்யாவையும்,திரு கோபால் அய்யா அவர்களை சந்தித்த விஷயத்தையும்,சொல்லி விட்டு நான் எழுதிய இந்த நூலை தாங்கள் வெளியிட ஆவன செய்ய வேண்டும் ,என்றேன்.
அதற்கென்ன வெளியிட்டு விடலாம்என்றார்.
சொன்னவர்,உடனே, ‘அய்யா,நாம் முதன் முதலில் சந்திக்கின்றோம்,நமது சந்திப்பு மறக்கமுடியமல் இருக்க வேண்டும்,அதற்கு நாம் இருவரும் சேர்ந்து தேநீர் அருந்துவோம்என்றார். நானும், ‘சரிங்கய்யா, அருந்துவோம்என்றேன். 

செம்மங்குடி துரையரசன், அவர்கள்ஆசிரியர்,புலவர் மற்றும் எழுத்தாளர் எனும் பன்முக தோற்றம் கொண்டவர்.பூர்வீகம் கும்பகோணம் அருகே உள்ள செம்மங்குடி எனும் கிராமம்.இந்த திருவள்ளூரில் உள்ள பெரிய குப்பத்தில் 40 ஆண்டுகளுக்குமேல் வாழ்ந்து பல தரப்பட்ட மிகப்பெரிய நட்பு வட்டாரங்களை கொண்டவர்.இவருடைய மனைவியும் ஆசிரியர் ஆக இருத்து ஓய்வு பெற்றவர்.
நான் சந்நித்த இரண்டு நாட்களுக்குள் நூலை யார் தலைமையில்?,எங்கு? எப்படி நடத்துவது? போன்ற தகவலை சேகரித்து விட்டார்.எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம்! என்ன இவ்வளவு அக்கரையோடு ஈடுபாட்டுடன் செயல்படுகின்றாரே!
அவர் சொன்னார்,

‘அய்யா,நீங்கள்,ஆசிரியருக்கு படித்திருந்தாலும்,அரசு பொது துறை நிறுவன ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர்,இந்த திருவள்ளூரில் எத்தனையோ ஆசிரியர்கள், பணி ஒய்வு பெற்றிருக்கலாம், அல்லது பணியில் இருக்கலாம். புத்தகங்கள் தொடர்புடைய ஆசிரியர்களே புத்தகங்கள் எழுதுவதில்லை. ஆனால் உங்களுக்கு புத்தகம் எழுதி அதை வெளியிட வேண்டும் எனும் வேட்கை உங்களுக்குள் எழுந்துள்ளதே, அது மிகப்பெரிய சிந்தனை அய்யா,இந்நூல் ஒரு அரிய படைப்பு,தங்கள் அனுபவங்களை திரட்டி மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் எனும் அக்கரை உங்களுக்குள் எழுந்துள்ளதே,அது உங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சமுக அக்கறையாக நான் கருதுகிறேன்.’ என்றார்.நான் பூரித்துப்போனேன்.நான் கேட்டேன்,

‘அய்யா,நான் பகுத்தறிவாளன் மட்டுமல்ல,கடவுள் மறுப்பாளன். உங்கள் நெற்றியில், குங்குமம், திருநீரு என பூசிக் கொண்டிருக்கின்றீர், என்னுடைய நூலை உங்களால் மனம் ஒப்புதலோடு எப்படி இந்த நிகழ்ச்சியை நடத்த முடியும்?அய்யா,நான் இளமையில் கடவுள் மறுப்பாளனாக இருந்துள்ளேன்.என் திருமணமும் சுயமரியாதை திருமணம்தான்.நான் படித்த சைவ-வைணவ இலக்கிய நூல்கள்,தமிழ் வித்தவான் எனும் பட்டம் பெற்றது எல்லாம், திருமணத்திற்குப் பின் என் மனநிலை மாற்றங்கள் என்னை இந்நிலைக்கு ஆளாக்கியது.
இனி நான் கடவுள் மறுப்பு சிந்தனைக்கு மாறி என்ன செய்யப் போறேன்? உங்களைப் போன்று சிந்தனையாளர்களின் தேவைகளை செய்து முடிப்பது என் கடமையாக கருதுகிறேன். நீங்கள் உங்கள் கொள்கையில் இந்த வயதிலும் பிடியாக இருக்கின்றீர், உங்கள் மனைவி,மக்கள் உங்களோடு ஒத்துப் போகிறார்கள். கடவுள் சிந்தனை இல்லாமல் மனிதன் மகிழ்சியாக வாழ இந்நூலில் வழி காட்டியிருக்கின்றீர். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.இனி நடக்கப்போவதை பார்ப்போம்.என சொல்லி முடித்தார்.
               
             170-புது முறை சிந்தனைச் சிற்பி

2012 பிப்ருவரியில் திருவள்ளூரில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில்,சமுக முன்னேற்ற சங்க மாநில தலைவர் திரு கோபால் அவர்கள் வெளியிட,
கவிஞர்.திரு ஜெயபாஸ்க்கர் அவர்கள் நூலை பெற்றுக்கொள்ளும் நூல் வெளியீட்டு விழாவில்,உள்ளூர் தமிழறிஞர்கள்,அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ள விழாவை முத்தமிழ் புலவர் செம்மங்குடி துரையரசன் அவர்கள் தலைமை ஏற்று சிறப்பாக நடத்தி முடித்தார்.அந்த விழாவில் எனக்கு, ‘புது முறைச் சிந்தனைச் சிற்பிஎனும் விருதை எனக்கு செம்மங்குடியார் வழங்கி என்னை கவுரவித்தார். அந்நூலை தமிழக அரசு தன் நூலகங்களுக்கு (600 புத்தகங்கள்) வாங்கிக் கொண்டது.
இதை என்  வாழ்க்கையில் நான் கண்ட பெரிய சாதனையாக கருதுகின்றேன். சாதாரண ஒரு மாடு மேய்க்கும் கூலி விவசாய குடும்பத்தில் பிறந்து சுயமாக படித்து,யாருக்கும் லஞ்சம் கொடுக்காமல் அரசு பணியில் சேர்ந்து ஓய்வு பெற்று,என் மனப் போராட்டங்களை ஒன்றிணைத்து, என் சுய முயற்சியில் ஒரு புத்தகத்தை உருவாக்கி அதை தமிழ் நாட்டரசு வாங்கிக் கொண்டது என்றால் என் வாழ்க்கையில் நடந்த ஒரு சாதனையல்லவா?
                     ********
            171-2013-ல் இரண்டாம் நூல் வெளியீடு

2013-ல், ‘அறவழி  சுய சிந்தனையுடன் மகிழ்ச்சியுடன் வாழும் வழிகள்’ (320 பக்கங்கள்) எனும் என் இரண்டாம் நூலாக முதல் நூலோடு, ‘திருமுகத்தின் மறுமுகம்எனும் தலைப்பில் 40 பிரபலங்களின் மறுமுகங்களை இணைத்து வெளியிட்டேன்.அதையும் தமிழக அரசு தன் நூலகங்களுக்கு(600 புத்தகங்கள்) வாங்கிக்கொண்டது.
                
           172-தாய்தந்தையருக்கு கோயில்

இதற்கிடையே எனக்கு ஒரு நீண்ட நாள் ஆசை ஒன்று இருந்தது.அதாவது எங்கள் கிராமத்தில் எங்கள் பெற்றோருக்கு,
தாய்தந்தையர் கோயில்அமைக்க வேண்டும் என்பது தான் அது.என் சேமிப்பில் வாங்கிய அந்த பெங்களூர் வீட்டு மனையை விற்று என் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று என் மூத்த மகனிடம் என் விருப்பத்தை தெரிவித்தேன்.அதற்கு அவன், ‘இப்ப ஏம்பா வீட்டு மனையை விற்கப்போறீங்க,நான் வேண்டுமானால் சுதா(மருமகள்) நகையை தருகின்றேன், அடகு வைத்து கோயில் கட்டுங்கள்.என்றான்.
சரி என என்னிடம் இருந்த சேமிப்புத் தொகையான ஒரு லட்சம் மற்றும் நகையை நான்கு லட்சத்திற்கு அடகு வைத்து கிராமத்தில் இருக்கும் பழை வீட்டின் ஒரு பகுதியை இடித்து விட்டு அதோடு 1 ½ சதுர கட்டிடத்தை இணைத்து   வெளிப்புற தோற்றத்தை உருவாக்கினேன். சென்னைக்கு சென்று கிரானைட் பலகையில் என் சிந்தனைகளை செதுக்கி மற்றோரு பலகையில் என் தாய் தந்தையரின் உருவங்களின் சித்திரம் வரைந்து கட்டிடத்தின் முகப்பில் பதியவைத்தேன்.
கல்வெட்டை திறக்க ,’இளைய பல்லவன் கருணாகரத் தொண்டைமான்எனும் மாபெரும் காப்பியத்தை வடித்த புலவர்.செம்மங்குடி துரையரசன் அவர்கள் இதற்கு பொருத்தமானவர் என தீர்மானித்தேன்.அவ்வாறே 2013-ம் ஆண்டு கார்த்திகை 20 தேதியில் ஊர் மக்களை கூட்டி தாய்தந்தையர் கோயிலை என் கிராமத்தில் திறந்தேன்.
                 ************

2014-ல் தமிழ் நாட்டரசு அகவை முதிர்ந்த தமிழறிஞர்விருதுக்கு தினசரியில் விளம்பரம் செய்திருந்தனர்.நான் இந்த சேதியை புலவர் செம்மங்குடி அய்யாவிடம் தெரிவித்தேன்.இந்த விருதுக்கு நீங்கள் பொருத்தமானவர் அய்யா, மனு போடுங்கள் என்றேன்.
நீங்க வேண்டுமானால் போடுங்கள்,எனக்கு தர மாட்டாங்கஎன்றார்.மேலும் அவர்,
எனக்கு எப்படி அய்யா குடுப்பாங்க?
ஆண்டு வருமானம் 24 ஆயிரத்துக்கு உட்பட்டு இருந்தால்தான் இந்த விருது கிடைக்கும் அய்யா.நான் ஏற்கனவே முயன்றேன் கிடைக்க வில்லை அய்யா. என்றார்.அப்படியானால் எனக்கு சட்டப்படி வருமானம் ஆண்டுக்கு ரூ. 18  ஆயிரங்கள் தான் அய்யா,
அதாவது மாத ஒய்வூதியம் ரூ.1518. மட்டுமே. என்றேன். அப்படியானல் நீங்கள் முயன்று பாருங்கள். என்றார். இருவரும் எழும்பூரில் உள்ள தமிழ் வளர்ச்சித் துறைக்கு சென்றோம்.
செம்மங்குடியார் நீண்ட தமிழ்த் தொண்டாற்றியவர். அவருக்கு தமிழ்த் துறையில் பெரிய அறிஞர்களின் பழக்கம் உண்டு.

தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் முனைவர் திரு கா.மு. சேகர் அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.செம்மங்குடியார். என்னைப்  பற்றி சொல்லும் போது நான் எழுதிய நூல்களையும் சமுக நலன் சார்ந்த நூல்களை  எழுதி இருப்பதையும், ‘ஏழாம் அறிவு இயக்கம்நடத்தி பகுத்தறிவு சார்ந்த கட்டுரைகளையும் இணையதளத்தில் எழுதி வருகின்றார், என்றும்  சொன்னார்..
மிகுந்த மகிழ்ச்சி அடைந்த இயக்குநர், என் நூலான, ‘அறவழி சுய சிந்தனையுடன் மகிழ்ச்சியுடன் வாழும் வழிகள்நூலை புரட்டி பார்த்தார்.
அவர் சொன்னார், ‘அய்யா,நூல் நல்லாத்தான் இருக்கு, சமுக அக்கரையுடன் நூலைப் படைத்துள்ளீர்,ஆனால் உங்களுக்குத்தான் தெரியுமே இப்பொழுது இருக்கும் ஆட்சியாளர்ளுக்கும் பகுத்தறிவிற்கும் தொடர்பில்லை என்று,இருப்பினும் முயன்று பாருங்கள்,விருதுக்கு மனு போடுங்கள் பார்ப்போம்என்றார்.  முறையாக இரண்டு தமிழ் புலவர்களிடம் பரிந்துரைப் பெற்று, வட்டாட்சியரிடம் வருமான சான்றிதழ் வாங்கி, மற்றும் தமிழ் சிறுகதை எழுத்தாளரும், ஆனந்த விகடன் பத்திரிக்கையில் பணியாற்றுபவரும், எனது உறவினருமான திரு.தமி்ழ்மகன் அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டி திருவள்ளூரில் நடந்த விழா தொகுப்பினை இணைத்து, ‘அகவை முதிர்ந்த தமிழறிஞர் விருதுக்கு மனு போட்டேன்.
மனு போட்டதோடு சரி, அதை மறந்தேன்.
               
            173-பாரதி பணிச்செல்வன்

2014 ல் நான், ‘அகில இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம்அமைப்பில் உறுப்பினர் ஆனேன்.அந்த ஆண்டு பாரதியார் பிறந்த நாள் விழா அவர் பிறந்த ஊரான எட்டையபுரத்தில் திரு.நடராசன்(சசிகலா) தலைமையில்  நடந்தது.நானும் செம்மங்குடியாரும் நண்பர்களோடு கலந்து கொண்டோம்.
அந்த ஆண்டு எனக்கு, ‘பாரதி பணிச் செல்வன்எனும் விருது வழங்கி கவுரவித்தனர்.
திரு.மா.நடராசன்,அவர்கள் விருந்தினர் மாளிகை குற்றாலத்தில் அமைந்துள்ளது.அங்கே இரண்டு நாள் தங்கி குற்றாலத்தில் குளித்து மகிழ்ந்தது மட்டுமல்ல அருமையான விருந்து படைத்து எங்களை அசத்திவிட்டார்.
                       *******
                174-Rmax BroadBand Private Ltd

என் இளைய மகன்,தனியாக ஒரு 80 அடி கோபுரத்தை வீட்டின் மாடியில் நிறுவினான்.அதன் உபகரணங்களை தைவானிலிருந்து தறுவித்தான்.Rmax broad band எனும் அகண்ட அலைவரிசை கொண்ட மென்பொருள் நிறுவனத்தை  உருவாக்கினான்.இந்த மென் பொருளை இயக்க மத்திய தொலைத் தகவல் நிறுவனத்திடம் அனுமதி பெற வேண்டும்.அதற்கு உரிமம் பெற டெல்லிக்கு செல்ல வேண்டும்.  ஏற்கனவே கோயம்பத்தூரில் ஒருவர் வாங்கி வைத்துள்ள உரிமத்தை பெற  கோயம்பத்தூர் சென்றான்.அவன் அதற்கு 35 லட்சம் ஆகும் என்றான்.இவ்வளவு பெரிய தொகையை திரட்டுவது அவ்வளவு எளிதான காரியமல்ல.
இருப்பினும் நேரடியாக டெல்லி சென்று உரிமம் வழங்க தகுதி படைத்த அரசு அதிகாரிகளை அணுக திட்டமிட்டான். ஒரு நாள் டெல்லிக்கு சென்றான். அதிகாரிகளை பார்த்தான்.அதற்கு 1 ½லட்சம்  ஆகும் என்றான். நான் ஒதுங்கிக் கொண்டேன்.அவன் பெங்களூரில் இருக்கும் தன் அண்ணனை தொடர்பு கொண்டான்.பெரிய மகன் என்னை தொடர்பு கொண்டு, ‘தம்பி எதோ முயற்சிக்கிறான்பா,நாம் எதாவது பண உதவி செய்யலாம்ப்பா.என்றான்.
நான். 

எனக்கு தெரியலை, இதுவரை நான் பண்ண செலவுக்கு ஒரு வட்டி அளவுக்கு கூட நான் கண்டதில்லை,இனிமேல் என்னால் முடியாது,நீ வேண்டுமானால் செலவு செய்,பார்க்கலாம்.டெல்லிக்கு பணம் கட்டியாச்சு .Rmax broad band private limited எனும் பெயரில் நடத்த ஒப்புதல் கிடைத்து விட்டது.
ஆனால்.ரூ 10 லட்சம் bank guaranty   கட்ட வேண்டும். கார்பொரேட் கம்பனி போல் நடத்த வேண்டும் என்பது உத்தரவு.அதாவது மேலாண்மை இயக்குநர் மற்றும் இயக்குநர் கொண்ட board நிறுவவேண்டும்.
வசந்த்தை managing director ஆகவும் என்னை director ஆகவும் போட தீர்மானித்து அதன் நகலை டெல்லிக்கு அனுப்ப பட்டது.பேங்க் கேரண்டிக்கு என்ன செய்வது.எதையாவது விற்கலாம் என்றால் அவசரத்திற்கு எதுவும் விலை போகவில்லை. இதற்கிடையே கம்பனி நல்ல நம்பிக்கையுடன் செயல்பட்டது.மகனின் நண்பர்களுக்கும் நம்பிக்கை வந்தது.
வசந்தின் நண்பர்களில் திரு கவுதம், கம்பனியின் ஜெனரல் மேனாஜராகவும்,
அவருடைய நண்பர் திரு சாய் என்பவரை கம்பனியின் அரக்கோணம் கிளைக்கு franchaise ஆக நியமிக்கப்பட்டார்.திரு சாய் அவர்களின் அப்பா ஒரு செல்வந்தர்.வசந்தின் மீது நன்னம்பிக்கை கொண்ட 

திரு சாயின் அப்பா என்னையும் வசந்தையும் அழைத்தார்.
தனக்கு ரூ.15 லட்சம் தேவை என்பதை உணர்ந்து உடனே எடுத்து கொடுத்தார்.எத்தகைய ஸ்யூரிட்டியும் இல்லாமல்,பாண்டு பத்திரம் எதுவுமே பதிவு செய்யாமலே கொடுத்தார்.நான் அசந்து விட்டேன்.இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதரா! ..?
15 லட்சத்தில் 10 லட்சத்தை ஒரு ஆண்டுக்குள் திருப்பி கொடுத்து விட்டான்.அதற்குண்டான மாதாந்திர வட்டியையும் மாதாமாதம் திருப்பி செலுத்தி விட்டான். கம்பனி தொடர்ந்து நடக்கிறது,கடனும் வட்டியும் கட்டிக்கொண்டுதான் நடக்கிறது.இருப்பினும் நல்ல எதிர்காலம் இருக்கும் என நம்பிக்கை உள்ளது.
                           ****

No comments: