97-
ஒரு மனைவி,ஒரு குடும்பம்
இந்த சேதியை வராவிடம் தெரிவித்தேன்.
அவள், ‘பெரியவர்கள்
சொன்னபடியே நீங்கள் உங்கள் மனைவியை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள், உங்கள்
குடும்ப வாழ்க்கை சீரழிய நான் காரணமாக இருக்க மாட்டேன். நீங்கள் அவளோடு இருங்கள், உங்களுக்கு
எப்பொழுது என்னிடம் வரவேண்டும் என தோன்றுகிறதோ அப்பொழுது வாருங்கள்.அது போதும், எத்தனை
நாட்கள் கழித்து வந்தாலும் நான் உங்களை மனம் குளிர வரவேற்பேன்.’ மேலும்
சொன்னாள்,
‘நாம்
இருவரும் சேர்ந்து ராஜாத்தியை ‘ராஜாத்தி’
போல் வாழ வைப்போம்.நான் தனியாக இருக்கிறேன் என நீங்கள் மன உளைச்சல் அடைய வேண்டாம்,எனக்கு
நானே ஏற்படுத்திக் கொண்ட வாழ்க்கை இது.உங்கள் கொள்கையைய மீறி தான்,
நான் உங்களை எனக்கு தாலி கட்டச் சொன்னேன்.எந்த வகையிலும் உங்கள் மனம் பாதிப்புக்கு
நான் காரணமாக இருக்க விரும்ப வில்லை.உங்களுக்கு ஒரு மனைவி,ஒரு
குடும்பம் எனும் நினைப்பில் வாழுங்கள்.அதுவே எனக்கு திருப்தி’
என்றாள். நான் மவுனமானேன்.
*****
98-என் தவறை நியாயப்படுத்துகிறேன்
என் அண்ணா சொன்னதை கேட்டும், நான்
மவுனமானேன்.திருடனக்கு தேள் கொட்டி விட்டால் சத்தம் போட முடியுமா? ‘ஒருவனுக்கு
ஒருத்தி, அல்ல,ஒருத்திக்கு ஒருவன்’ என்பது
மனித நாகரிகத்தின் உச்ச கட்டம்.
மகாபாரத காலத்தில் பெண்ணாதிக்கம் கொடிகட்டி பறந்தது.எடுத்துக்
காட்டாக ‘குந்தி’, பிள்ளைக்கொரு கணவனை மாற்றினாள்,அவளுக்கு மருமகளாக வந்த ‘பாஞ்சாலி’யும்
மாமியாரின் ஐந்து பிள்ளைகளையும் (குந்தி வயிற்றில் பிறந்தவர்கள் கர்ன்னனோடு
நால்வர்), தர்மன்,பீமன் மற்றும்
அர்ச்சுனன்.அவளுடைய சக்களத்தியான ‘மாத்ரி’ வயிற்றில் பிறந்தது இரண்டு பிள்ளைகள்
நகுலன் மற்றும் சகாதேவன்.
கர்னன்,கவுரவர்களோடு
கலந்து விட்டதால்,அந்த ஐந்து பேரும்,தனக்கே
கணவர்களாக இருக்க வேண்டும் என ஏற்றுக் கொண்டாள்.அது மட்டுமல்ல நாடு, வீடு விட்டு
காட்டில் பஞ்சப்பனாதிகளாக இருக்கும் தன் பிள்ளைகளுக்கு தனித்தனியாக மருமகளை
பார்த்து கட்ட குந்திக்கு வசதி இல்லை.
எதோ அரச்சுனன் திறமையால் ராஜபுத்திரர்களான தன்
பிள்ளைகளுக்கு ஒரு ராஜபுத்திரி
கிடைத்தாள், திவுபதியின் உடல் வாகுவை
பார்த்த குந்தி அய்ந்து பேரையும் இவள் கணவர்களாக ஏற்றுக்கொள்ள செய்தால்,நம்மீது
இருக்கும் அவப்பேரான,
‘பிள்ளைக்கு ஒரு கணவனை மாற்றினாள்’ எனும் பேரும்
சமமாகிவிடும் என கணக்கு போட்டாள்,கிருஷ்ணனும் இதற்கு ஒத்து ஊதுகிறான்.
(பாஞ்சாலி அந்த அளவுக்கு அவ்வளவு உடல் பலம் கொண்டவள்,ஒரே
நேரத்தில் 5 பேரோடு புணரும் ஆற்றல் பெற்றவள்)
இது அநாகரிகப் போக்கு,என பங்காளி ‘துரியோதனன்’
எதிர்த்ததால் வந்தது தான் 18-ம் போர்.
99-ஒருவனுக்கு ஒருத்தி அல்ல,ஒருத்திக்கு ஒருவன்
‘மனிதனின்
குடும்ப அமைப்பு என்பது,ஒருவனுக்கு ஒருத்தி என இருக்க வேண்டும் என்பது துரியோதனன்
வகுத்தது’.அந்த கொள்கையைத்தான் இன்று உலகம் முழுவதும் மக்கள்
பின்பற்றுகின்றனர்.
இதற்கு உடன் படாத பாண்டவர்களை எதிர்த்ததின் விளைவே 18-ம் போருக்கு
காரணமாகிவிட்டது.
இது போன்ற அறநெறி வகுத்தவனை அரக்கன் என நம் சமுகமே
தூற்றியது,இன்றும் தூற்றுகிறது!.இன்று நாம் வாழும் வாழ்க்கையும் ஒருவனுக்கு ஒருத்தி
எனும் துரியனின் கோட்பாடுதான்,என்பதை நாம்
நினைவில் கொள்ள வேண்டும்.
கிருஷ்ணனின் கோட்பாடு கொண்டவர்களை சமுகம் தூற்றுகிறது,ஆனால்
கிருஷ்னனை சமுகம், அவதாரமாக போற்றுகிறது.
இதிலிருந்து என்ன தெரிகிறது?
துரியனைப்போல் வாழ்க்கை அமைத்துக் கொண்டாலும்,ஆணும்
பெண்ணும் கணவன் மனைவிகளாக மாறினாலும், ‘மனித மனம் பல்லுடல் பரிமாற்றத்திற்கு உடன் பட்டதுதான்.’ இதை பராமரிக்க
நமக்கு நாமே குடும்ப பராமரிப்பு சட்டங்களை உருவாக்கிக் கொண்டோம்.
என்னைப் பொருத்தவரை இந்த சட்டங்களை நான்
மீறியவனாகிவிட்டேன்.இது போன்ற குணமுடைய மனிதர்களை, அவதாரங்களாக நாம் புராணங்களில்
படிக்கின்றோம். கிருஷ்ணவதாரத்திற்கு இரண்டு மனைவிகளும், ஈசுவரனுக்கு இரண்டு
மனைவிகளும், முருகனுக்கு இரண்டு மனைவிகளும்,அவன்
அப்பன் சிவனுக்கும் இரண்டு மனைவிகள்(பக்கத்தில் பார்வதி,தலையில்
கங்கா) இருக்க வேண்டும் என்பதே
இந்துக்களின் கலாச்சாரம்.
உலகில் விரதங்களை அனுசரிப்பதிலும்,இறை வழிபாட்டிலும்
பெண்களுக்கு நிகர் பெண்களே!
இன்னொருவர் வாழ்க்கையில் இப்படி ஏற்படுவதை ஏளனமாக எள்ளி
நகையாடும் நம் பெண்கள்,சினிமாவிலும்,தொலைக்காட்சி தொடர்களிலும் “பல்லுடல்
பரிமாற்ற” குடும்ப வாழ்க்கையை ரசனை மாறாமல் கண்டு களிக்கின்றனர்.ஆனால்
‘நிஜவாழ்க்கையில் குடும்ப பெண்கள் மிகச்சிறந்த நடிகைகள்’ என்பது கண்கூடு.
‘பிறழ் நடத்தை’ கொண்ட பெண்களைத்தான் ராமாயண மகாபாரத
காலத்திலிருந்து கோயில் கட்டி வணங்குகிறது! உதாரணமாக,சீதை ராவணனோடு இணைந்ததின்
விளைவே இரண்டு குழந்தைகள்,
காரணம் 12 ஆண்டுகள் ராமனோடு வாழ்ந்த காலத்தில் சீதை
வயிற்றில் குழந்தை உருவாகவில்லை! ஆனால் சீதை கற்புடையவள் என பார்பனர்களால் கதா
காலட்சேபம் செய்து தங்கள் பிழைப்பை புனிதமாக்கிக் கொண்டார்கள்.கதையில் வரும்
பெண்கள் கூட கற்போடு வாழ்ந்தாள் என்றால் தமிழர்கள் உட்கார்ந்து கதை கேட்பர்,ஓடுகாலி
கதை என்றால் எழுந்து போய்விடுவார்கள்.அதனால் தான் பாஞ்சாலியைக்கூட ‘ஐந்துபேருக்கும்
அழியாத பத்தினி’ என பொய்க்கதைகளை கூறி தமிழர்களை நம்ப வைத்தனர்.அடுத்து
ஒரு தாயின் பிள்ளைகளான ஐந்து பேரை தனக்கு மருமகளாக வரும் திரவுபதியை மணக்க
வைத்து,பாஞ்சாலியாக மாற்றியவள் மாமியார் குந்தி.இன்று பாஞ்சாலிக்கு கோயில் இல்லாத
கிரமங்களே இல்லை.
‘அவதாரங்கள்’ என வணங்கப்படும் தெய்வங்கள் யாவும் கற்பு நெறி
தவரியவர்களே!
இதை நான் சொல்ல வில்லை தந்தை பெரியார் தனது விடுதலை
பத்திரிக்கையில் 25-3-1960 –ல் எழுதிய கட்டுரை விளக்குகிறது.
மேலும் பெரியார் அந்த கட்டுரையில் கீழக்கண்டவாறு
எழுதுகிறார்.-ஆரியக் கதைப்படி ஜமதக்கினி முனிவரின் மனைவி ரேணுகா தேவி,மாரி
ஆகிவிட்டாள்.தமிழ் நாட்டில் மாரி இல்லாத கிராமமே இல்லை எனலாம்.
(வேலூர் அருகே ஆரணி படைவீடு ரேணுகாம்பாள், எங்கள் குல
தெய்வம் என எங்கள் அப்பா சொல்லுவார்,எனவே
அதைப்ப்ற்றி எழுதுவது நலம்)
ரேணுகா ,
அன்னிய புருஷன் மீது ஆசைப்பட்டாள்.அவள் நீராட கங்கை சென்ற போது எதிர்ப்ட்ட ‘சித்தர
சேன’னை கண்டு மதப்பட்டாள்.இதையறிந்த அவள் கணவன் ‘ஜமதக்கினி’,தன்
மகன் ‘பரசுராம’னை
அழைத்து, அவளை கொன்றுவிடும்படி கட்டளையிடுகிறான்.தந்தை சொல் மிக்க
மந்திரம் இல்லை! எனவே நொடியில் தன் தாயின் தலையை சீவுகிறான்.தாயைக் கொன்று விட்டு
வீட்டுக்கு வந்த மகனைப் பார்த்து, ‘ஏன் சோர்வாக
உள்ளாய்?’ என தந்தை கேட்கிறான்.அப்போ மகன், ‘எனக்கு
என் அம்மா வேண்டும் !’
என்கிறான். ‘சரி, இந்தா
இந்த மந்திரத் தண்ணியை கொண்டுபோ.
உன் தாயின் தலையை உடலோடு பொறுத்தி இந்த தண்ணியை தெளி,உன்
தாய் உயிர் பெறுவாள்.’
என்கிறான்.அவ்வாறே
மகன்,தண்ணியை எடுத்து செல்கிறான்.அங்கே பல முண்டங்களும்
தலைகளும் தனித்தனியே வெட்டப்பட்டுள்ளன.
தன் தாயின் முகம் மட்டுமே கண்டிருந்த மகனுக்கு எந்த
உடலோடு தலையை பொறுத்துவது என பரசுராமனுக்கு குழப்பம் ஏற்பட்டது. கடைசியாக தன் தாயின் தலையோடு எதோ ஒரு
முண்டத்தை பொறுத்தி தண்ணி தெளிக்கின்றான்.உயிர் பெறுகிறாள். உரு ‘மாரி’
இருந்தவளைப் பார்த்து,
தந்தை ஜமதக்கினி அவளை ஏற்க மறுக்கின்றான்.
‘நீ, இங்கு
இருக்க வேண்டாம்,ஊருக்கு வெளியை எல்லையில் இருந்துகொண்டு ‘மாரியம்ம’னாக
மக்களை காக்கும் பணியை செய்’என சாபமிடுகிறான்.
சிவ புராணத்தில் கார்த்தவீரியனை மோகித்து சாபமடைந்தாள்
என காணப்படுகிறது.
மற்றொரு புராணத்தில் கணவன் ஜமதக்கினி கொல்லப்பட்டதால்,ரேணுகா,
உடன்கட்டை ஏறுகிறாள். இதை ஏற்க மறுத்த இந்திரன் மழை பொழிய வைக்கின்றான், இதனால்
அவள் உடல் நிர்வாணப்படுகிறது, அப்போது அருகில்
இருந்த வேப்பிலையை எடுத்து தன் மானத்தை காக்கிறாள், வண்ணத்தி
சேலை கொடுத்து ஆதரிக்கின்றாள்.
பஞ்சமர்கள் திணைமாவும் பழமும்,இளநீரும்
கொடுத்து உபசரிக்கின்றனர். இந்த அய்தீகம் தான் மாரியம்மன் பூஜையாக
நடத்தப்படுகிறது.இந்த மாரியம்மன் மீது இரண்டு விபச்சார குற்றங்கள்
சுமத்தப்படுகின்றன,
1-சித்தரசேனனை
மோகித்து கற்பு இழந்தது.
2-கார்த்த வீரியனை இச்சித்து கற்பு இழந்தது.
இரண்டிலும் புருஷன் ஜமதக்கினியால் கண்டு பிடிக்கப்பட்டு
ரேணுகா தண்டிக்கப் பட்டிருக்கின்றாள்.இதற்கு புராண ஆதாரங்கள் உள்ளன. ‘எது
எப்படியோ நாம் வணங்கும் கடவுளர்களுக்கு ஒழுக்கமும் நேர்மையும் இருக்க வேண்டும் என
மக்கள் நினைக்க வேண்டாமா?’
சந்தர்ப்பமும் சூழ் நிலையும் சரியாக அமையவில்லை எனில்
எல்லாருமே கற்புக்கரசிகள்-கற்புக்கரசர்கள் தான்.
இந்தியா முழுவதும் வாழும் இந்துக் குடும்பங்களில் இதிகாச
கதாபாத்திரங்களின் பெயர்கள் இல்லாத குடும்பங்களை காண முடியாது.
வடமொழி அறியாத தமிழர்களுக்கு பார்ப்பனர்கள் தான் பேர்
சூட்டுவர்.ஆண்குழந்தைகளுக்கு ராமலிங்கம், சிவலிங்கம்,மகா
லிங்கம் என ஆண் இனப்பெருக்க உறுப்பை பெயராக சூட்டி மகிழ்வர்,மொழியின்
பொருள் தெரியாத தமிழர்கள் இன்றளவும் லிங்கம்( ஆணின் இனப்பெருக்க உறுப்பு) என பேர்
வைத்துக் கொள்கின்றனர்,
இது போன்ற
பெயர்களை இந்தியாவின் பிற மாநிலங்களில் காண முடியாது.....கேட்க முடியாது.
*********
100-மீண்டும் ஒரு கல்யாணம்!
நிச்சயம் நடக்கும் முன் ஒரு நாள் ஒரு வேனில்
பெண்ணின்,அப்பா,அண்ணன்கள் இருவர்,இரண்டு அண்ணிகள்,இரண்டு அக்கா மற்றும் அவர்களின்
கணவர்கள் ஆகியோர் நான் வேலை பார்க்கும் செங்குன்றம் அலுவலகம்
வந்தார்கள்.வந்தவர்கள், ‘நாங்கள் உங்க வீடு வாசலை பார்க்க வேண்டும், போகலாமா?’
என்றனர்.
‘போகலாம்,ஆனால் உங்களுக்கு காபி,டீ கொடுக்க அந்த ஊரில்
வசதி இருக்காது.’
‘பரவாயில்லை,உங்கள் நிலவரத்தை ,உண்மையா சொல்லிட்டீங்க!
நாங்க தண்ணி மட்டும் சாப்பிட்டு வந்துடறோம்’என்றனர்.நானும் அந்த வேனில் ஏறிக் கொண்டேன்.வீட்டை
அடைந்ததும்,
என் அண்ணா, ‘இருங்க,பக்கத்து ஊருக்குப்போய் சோடா எதாவது
இருக்கான்னு பார்த்துட்டு வர்ரேன்’
‘அதெல்லாம் வேண்டாங்க,மாப்பிள்ளை உண்மையை
சொல்லிட்டாரு,பரவாயில்லை,நீங்க அலைய வேண்டாம்’
‘இவ்வளவு தூரம் நீங்கள் வந்த பிறகு எங்களுக்கு எதாவது
கையில கிடைக்கிறதை செய்யறதுத்தான் முறை,ஒரு பத்து நிமிஷம் இருங்க,இதோ வந்துடறேன்’ என அண்ணன் புறப்பட்டார்.
பத்து நிமிடத்தில் பத்து சாதாரண கோலி சோடா வாங்கி
வந்தார், ‘டீக்கடையே, மூடிட்டான், சோடாதான் கிடைச்சுது’ என சோடாவை உடைத்து
கொடுத்தார். சோடாவை குடித்தவர்கள், ‘எங்களுக்கு வீடு வாசல் பிடிச்சிருக்குங்க,இனிமே
நடக்கிறதை பார்க்கலாம்’ என சொல்லிவிட்டு புறப்பட்டனர்.
1980 அக்டோபர் 13-ம் நாள் திருவெற்றியூர் அதே வடிவுடையம்மன்
கோயிலில் பெண்ணழைப்பு நடந்தது.பக்கத்து தெரு சத்திரத்தில் எனக்கு மீண்டும் ஒருமுறை
கல்யாணம்!. அன்று இரவு நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்றனர்.என்னிடம்
எங்கள் அப்பா 50 ரூபாய் கொடுத்து
‘போய்
ஒரு அய்யரை அழைத்துவா’
என்றார்.நான்
போய் மாடிமேலே படுத்து உறங்கி விட்டேன்.என் அப்பாவும் பெண்ணின் அப்பாவும் அய்யரை
தேடுகின்றனர்.எங்கள் அப்பா,
‘பையனிடம்
அய்யரை அழைத்துவரச் சொன்னேன்,அவன் எங்கே என
தேடுங்கள்’ என்றார்.நள்ளிரவு
நேரம் என்னை தேடுகின்றனர்.என்னை எழுப்பி, ‘அய்யர்
எங்கே?’ என்றனர்.
‘எதற்கு?’
‘நிச்சயதார்த்தம்
நடத்த வேண்டும்’
‘நிச்சயதார்த்தம்
நமது தேவைதானே,அய்யர் இல்லமல் நம்மால் செய்ய முடியாதா?
இதைக்கேட்ட உடனே எனக்கு மாமானாராக வரப்போகிறவர்,
‘வாங்க,
அய்யர் வேண்டாம்,நாமளே செஞ்சிக்கிலாம்’ என்றார்.
எங்கள் அப்பாவும் அதற்கு உடன் பட்டார்.காலையில்
மணவரையில்,அய்யர் தீ மூட்டி அதில் நெய் ஊற்று என ஒரு இலைக் கரண்டியை
என்னிடம் தந்தார்.நான்,
‘ஏன் நெய்யை தீயில்
ஊற்ற வேண்டும்.?நீங்கள் தாலியை என் அப்பாவிடம் கொடுங்கள் அவர் என்னிடம்
கொடுப்பார்,நான் தாலி கட்டிக்கொள்கிறேன்’ என்றேன்.
அவ்வாறே என் அப்பாவிடமும் பெண்ணின் அப்பாவிடமும் தாலி
கொடுக்கப்பட்து.நான் அதை வாங்கி பெண்ணின் கழுத்தில் அணிந்தேன்.இதற்கு மேல் திருமணத்தில்
என்னால் புரட்சி செய்ய முடியவில்லை!
No comments:
Post a Comment