பகலும் இரவும்
கலந்த மாலை நேரம்.கீதா சொன்ன படியே,அவளுடைய அக்காவை மொட்டை மாடிக்கு அழைத்து வந்தாள்.
நானும் நண்பர் வேலுவும் அவர்களை நெருக்கமாக பார்க்க
பக்கத்து வீட்டு மொட்டை மாடிக்கு சென்றோம்.அன்று இரவு வெய்யில் புழுக்கம் அதிகமானதால்
அந்த மொட்டை மாடியில் படுத்து உறங்கி விட்டோம்.
நள்ளிரவில் அந்த வீட்டினுள் ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்கவே ,வேலு எட்டி பார்த்துள்ளார். அதிர்ச்சி அடைந்த வேலு என்னை எழுப்பி, ‘இங்க வந்து பாரப்பா,இந்த பொம்பளையை தூணில் கட்டிப்போட்டு அந்த ஆளு எப்படி அடிக்கிறான்’
நான் பார்த்தேன். அப்போது அந்த மனிதர், ‘யாரடி
அவன்? எதுக்காக மாடியில் தங்க வச்சிருக்கே? நீ
அவனை வச்சிருக்கியா?’
இப்படி ஒரு கொடூரமான மனிதரின் செயலைக் கண்டு நான்
அதிர்ச்சி அடைந்தேன்.பக்கத்து வீட்டில் குடியிருக்கும் அந்த பெண்ணுக்கு 50 வயதை கடந்து இருக்கும்,அவர் ஒரு ஆசிரியை.இரண்டு
ஆண் ஒரு பெண் என வளர்ந்த பிள்ளைகளுக்கு தாய்!நான் அவர்களிடம் பேசியது
இல்லை,பழகியது இல்லை.
இந்த சம்பவம் என் மனதில் பதிந்து விட்டது.பின்னாளில்
நான் ‘வரா’ விடம்
இச்சம்பவத்தை பற்றி அவளிடம் விவரித்து கேட்ட போது, அந்த
அம்மையார்,ஒரு டீச்சர் என்றும்,அவரை
கணவர் நம்ப மாட்டார் என்றும் தெரிவித்தாள்.மேலும் அந்த டீச்சரிடம் வாழ்த்துக்கள்
பெற வரா சென்ற போது,
‘ஏண்டி அந்த பையனை நீ,காதலிக்கிறதுக்கு
என் வீட்டு மாடியில் வரவழிச்சதை, என்
வீட்டுக்காரன் தப்பா புரிஞ்சிக்கிட்டு,நான் தான் அவனை தங்க வைத்தேன் என என் மீது
சந்தேகப்பட்டாண்டி, அந்த பாடலொப்பான்’ என
புலம்பி இருக்கின்றார்.
*********
84-என்ன சிரிக்கிற,? என்
பின்னாடி வா
அடுத்த நாள் நான் ,ஏனோ
மாலை ஏழுமணிக்கு அவள் வீட்டு வழியே கடைத்தெருவுக்கு சென்றேன்.அப்போது அவள்(வரா)
வாசலில் கட்டை சுவற்றை தொட்டு நின்று கொண்டிருந்தாள்.நான் எதேச்சையாக அவள்
இருக்கும் திசை நோக்கி என் கண்கள் சென்றன.என்னைப் பார்த்து சிரித்தாள்.நான். ‘எதுக்கு
சிரிக்கிற? என் கூட வா!’ என
விளையாட்டுத்தனமா சொன்னேன்,
அவள் எங்கே வரப்போகிறாள் என என் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.ஆனால்.....
ஆச்சரியம்!. எதேச்சையாக திரும்பி பார்த்தேன்....! பின் தொடர்கிறாள்!.எனக்கு
ஒன்றும் புரியவில்லை.
‘என்ன தைரியம்? எதை நம்பி இவள் என் பின்னே வருகிறாள்?என் மனதுக்குள் என்னை கேட்டவாறு நான் சென்று கொண்டிருந்தேன்.மீண்டும் நான் திரும்பி பார்த்தேன்.அவள் தொடர்கிறாள்.என்ன செய்வதென்றே தெரியவில்லை.நான் போக போக பின் தொடர்கிறாள்.......!
இவளை சந்திக்க தனி இடம் கிடைக்குமா? என
எண்ணியவாறு செல்கிறேன்.கடைத்தெருவை தாண்டி கோயில் குளத்துக்குள்
நடந்தேன்.அப்போதெல்லாம் குளத்தில் தண்ணிர் இருக்காது.மாலை நேரத்தில், திருவள்ளூர்
வயோதிகர்கள் பெரும்பாலும் கோயில் குளக்கரை சுவற்றின் மேல் அமர்ந்திருப்பார்கள்.
அவர்களையும் மீறி நாங்கள் யாரோ வழி போக்கர்கள் போல் குளத்தின்
உள்ளே படிக்கட்டுகள் வழியாக இறங்கி நடக்கின்றோம்.
நான் ஒரு வெளிச்சம் குறைவான இடத்தில் அமர்ந்தேன்.அவளும்
வந்து என் எதிரில் நின்றாள்.நான்,
‘நான் எதோ விளையாட்டுக்கு சொன்னேன்.நீ பாட்டுக்கு என் பின்னே வந்துட்டே.......என்ன தைரியம் உனக்கு?
‘நான் எதோ விளையாட்டுக்கு சொன்னேன்.நீ பாட்டுக்கு என் பின்னே வந்துட்டே.......என்ன தைரியம் உனக்கு?
அவள் ‘........’
‘வா, .....உட்கார்’
என் அருகே அமர்ந்தாள். ‘உன் பேரென்ன?’
‘வரலட்சுமி’ ‘லட்சுமி’ எனும் பெயருள்ளவர்கள் வாழ்க்கையே
சிறப்பாக இருக்காது,
(இது எனக்குள் உள்ள ஒரு மூட நம்பிக்கை) ஒன்று
சாப்பாட்டுக்கே கஷ்ட்டப்படுவார்கள்,அல்லது முண்டச்சியாக இருப்பார்கள்.என் வயதில்
நான் கண்ட உண்மை.
நான் அவள் தோள் மீது கை வைத்தேன்.உடனே அவள், ‘சார்,
நான் அந்த மாதிரி பெண் இல்லை,என் மீது கை
வைக்காதீங்க....!’ வார்த்தைகள் பட படத்தன.
‘பின்னே
எதுக்கு வந்த?’
‘சார்
எனக்கு ஒரு வேலை வாங்கித்தர முடியுமா?’
‘என்னால
முடியாது,என்ன படிச்சிருக்கே?’
“Sslc”
‘என்னால்
முடியாது,அதுக்காவா வந்த...?
சரி போகலாமா?’
‘சார், நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க!’...
‘என்ன?’
‘சார்.
நான் எங்க அத்தை வீட்டில் இருக்கின்றேன். எனக்கு சின்ன வயசுலேயே எங்க அப்பா,அம்மா
இறந்துட்டாங்க.நீங்க எனக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செஞ்சீங்கண்ண நல்லா இருக்கும்.’
‘அது முடியாது,நாம்
போகலாம்’
‘சரி
நாளைக்கு இதே நேரத்தில இங்கே சந்திக்கலாமா?’
‘ம்,சரி,
எதுக்கு?
‘சும்மாதான்’
நான் என் மனதுக்குள் தீர்மானித்தேன்,இவளை
எதுக்கு நான் நாளைக்கு சந்திக்கணும்?,நம்மால
இவளுக்கு வேலை வாங்கித்தர முடியாது,பொய்யான
தகவலைத் தந்து இந்த அநாதைப் பெண்ணை சீரழிப்பது,என்பது
என் எதிர்காலத்தையே பாதிக்கும்,என கணக்குப் போட்டு அடுத்தநாள் அந்த குளக்கரைக்கு
போவதை தவிர்த்தேன்.
மறுநாள் காலை என்னிடம் சிமென்ட் வேண்டும் என்று என்னிடம்
அவள் வந்தாள்.அப்போது,
‘ஏங்க...,நீங்க வருவீங்க என காத்திருந்து... வந்து விட்டேன்,ஏங்க அப்படி செஞ்சீங்க?’
‘ஏங்க...,நீங்க வருவீங்க என காத்திருந்து... வந்து விட்டேன்,ஏங்க அப்படி செஞ்சீங்க?’
‘அப்படியா? என்னால
உனக்கு வேலை வாங்கித்தர முடியாது,அதனால வரலை....’
‘சரி,சாயங்காலம்
வாங்க,சும்மா பேசுவோம்’
‘என்ன
இப்படி பேசறா..!?,சரி என் இளமைக்கு வடிகாலா வச்சிக்கிலாமா..?’
என எனக்குள் கணக்குப் போட்டு அன்று மாலை அந்த குளத்தினுள் உள்ள இருள் சூழ்ந்த
இடத்துக்கு சென்றேன்,அவளும் என் பின்னே வந்து விட்டள்.
‘சரி, என்ன
பேசப்போற? நாம் பேசறதுக்கு என்ன இருக்கு? பேசாம
செய்யறது என்றால் செய்லாம்.என சொல்லியவாறு நான் அவளை தொட்டேன்.
‘அப்படி எல்லாம் என்னை தொடக்கூடாது.
‘என்னை
கல்யாணம் செஞ்சிக்கிறீங்களா?’
‘இல்லை!
எனக்கு காதல் திருமணத்தில நம்பிக்கை இல்லை,இந்த ஊருக்கு வந்து எனக்கு அறிமுகமானவள் ‘கீதா’ மட்டுமே.உன்னை எனக்கு தெரியாது. ‘கீதா, என்ன படிச்சிருக்கா?
எனக்கு காதல் திருமணத்தில நம்பிக்கை இல்லை,இந்த ஊருக்கு வந்து எனக்கு அறிமுகமானவள் ‘கீதா’ மட்டுமே.உன்னை எனக்கு தெரியாது. ‘கீதா, என்ன படிச்சிருக்கா?
‘அவ
படிக்கல’
‘கையில
புத்தகம் வைத்துள்ளாளே?’
‘சும்மா
ஆக்ஷன்’
‘படிக்காத
பெண்ணை கல்யாணம் செய்ய மாட்டேன்.’ மேலும் நான்,‘நான்
என் வீட்டில் பார்க்கும் பெண்ணைதான் கல்யாணம் செய்வேன்.’
அவள், ‘.......’
‘அது
சரி,கீதா எனக்கு பேனா கொடுத்தாளே’
‘அது
நான் கொடுத்தது’
‘அதற்கு
முன் ‘அதிரசம்’ கொடுத்தாளே’
‘நான்
தான் கொடுத்தனுப்பினேன்’
‘அதற்கு
முன் ‘சோன் பப்டி’ கொடுத்தாளே’
‘அதுவும்
நான் வாங்கியனுப்பியது!’
‘இதை
எல்லாம் ஏன் அவள் என்னிடம் சொல்ல வில்லை?’
‘அது எனக்கு தெரியாது’
‘சரி,
போகலாம்’
‘நாளைக்கு
சந்திக்கலாமா?’
‘இவள்
என்னை விடமாட்டாள் போலிருக்கே....!?’
என்னையே நான் கேட்டுக் கொண்டேன்.சரி எனக்கும் பொழுது
போகணும், ‘சரி பார்க்கலாம்’
*****
85-என்னை மதியாதாரை கழட்டி விடுவேன்
1979-மார்ச் 31ந்தேதி, அப்போதெல்லாம் கிடங்கில் உள்ள
நெல்,அரிசி,மூட்டைகளை 100% எடைபோட்டு இடம் மாற்றி அடுக்கி தலைமை அலுவலகத்திற்கு
அறிக்கை தரவேண்டும்.
இதற்கு வருடாந்திர physical verification என்று பெயர்..
மண்டல அலுவலகத்திலிருந்து ஒரு அதிகாரியை இதற்காக அனுப்பி
வைப்பார்கள். திருவள்ளூருக்கு அப்படி அனுப்ப தேவையில்லை, அவனையே அந்த வேலையை செய்ய
சொல்வோம் என மண்டல மேலாளர் முடிவெடுத்தார்.
நானும் நெல் மற்றும் அரிசி மூட்டைகளை எடைபோட என்னோடு பணியாற்றும்
உதவியாளர், திரு. சுப்பிரமணியைச் செய்யச்
சொன்னேன். அவரோ அந்த பணியைச் செய்யமுடியாது என மறுத்துவிட்டார்.
‘ஏன் முடியாது என்கிறீர்?’
‘அந்த
எடைத் தராசில் முத்திரை இல்லை’
‘இல்லாவிட்டால்
என்ன?’ மேலும் நான்,‘இது
தோராயக் கணக்குத்தானே,மேலும் நாம் எடைபோட்டு யாருக்கும் விற்கப்போவது இல்லை,எனவே
நமக்கு நாமே தெரிந்து கொள்ள இந்த எடைத் தராசை பயன்படுத்துவதில் தவறில்லை’
‘அதெல்லாம்
முடியாது,லேபர் இன்ஸ்பெக்டர் வந்தா நான் மாட்டிப்பேன்’ லேபர்
இன்ஸ்பெக்டர் வந்தா கிடங்கு பொறுப்பாளரைத்தானே பிடிப்பார்,
உன்னை எப்படி பிடிப்பார்?
‘அதெல்லாம்
முடியாது,நான் மாட்டேன்’
‘அப்போ,நீங்க
போகலாம்,உங்களுக்கு இங்கே வேலை இல்லை’
‘நான்
போக மாட்டேன்’
‘நாளைக்கு
உனக்கு attendance கிடைக்காது.இங்கே இருப்பது வீண்,நீ
போகலாம்’
தலைமைக்கு கீழ் படியாதவரை நான் எப்படி கிடங்கில்
வைத்திருக்க முடியும்?
(அந்த உதவியாளர் எனக்குப் பின் பொன்னேரி கலைக் கல்லூரியில்
படித்தவர்.ஆங்கிலம் ஒரு subject
எழுத முடியாமல் ,எனக்கு
முன்பாகவே,அதாவது நான் நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் சேறும்
முன்னமே, எமது நிறுவனத்தில் உதவியாளராக பணி புரிகிறார்.)
போகும் போது அவர் சொல்லிவிட்டு போனதாக கிடங்கு ஊழியர்கள் கூறியது எனக்கு மகிழ்ச்சியளித்தது.அவர் கூறியதாவது, ‘அந்த ஒரு சப்ஜெக்ட்ட எழுதி BSc யை முடிச்சிட்டு நானும் ஒரு AQI ஆகி இந்த ஆளைப்போல இந்த நிறுவனத்தில் பணியில் சேர்ந்து காட்டுகிறேன்யா!’
அடுத்த நாள் காஞ்சிபுரம் சென்று மண்டல மேலாளரிடம்
முறையிட்டுள்ளார்.
மண்டல மேலாளரோ என்னை எதுவும் விசாரிக்காமல், அவரை,
‘சரி,நீங்க
வேறு எங்கேயாவது வேலைக்கு போங்க, நான் மாற்றல்
உத்தரவு வழங்குகிறேன்’
என சொல்லிவிட்டு
பொன்னேரி கிடங்கு உதவியாளராக நியமிக்கப்பட்டார். அந்த உதவியாளர் சபதமிட்டவாறு
அடுத்த சில ஆண்டுகளில் உதவி தர ஆய்வாளராக பணியில் சேர்ந்து விட்டார். எப்படியோ
அவருக்கு எதிரான என் நடவடிக்கை அவருக்கு நல்லதாகவே முடிந்து விட்டது கண்டு நான்
மகிழ்ச்சியடைந்தேன்.
********
அடுத்த நாள் பெரிய குப்பத்தில் உள்ள கிடங்கில் உள்ள நெல்
மற்றும் அரிசி மூட்டைகளை எடை போட வேண்டி என் அலுவலகத்தில் பணிபுரியும் இன்னொரு உதவியாளரான
திரு வேலு என்பவரை அழைத்து,
‘நாம்
பெரியகுப்பம் சென்று அங்குள்ள கிடங்கில் எடைபோடும் பணியினை துவங்கலாம் ,வா’
என சொல்லிவிட்டு நான் ஒரு குதிரை வண்டியில் சென்று விட்டேன். அப்போதெல்லாம்
திருவள்ளூர்-பெரியகுப்பம் இடையே குதிரை வண்டிகள் தான் பயணிகளை ஏற்றிச்
செல்லும்.பேருந்து என ஒன்றோ இரண்டோ இருக்கும்.
நான் கிடங்கை திறந்த பின் அந்த உதவியாளர் திரு.வேலு
வந்தார்.நான் அவரிடம்,
‘எங்கே நோட்,எடை எப்படி போடுவாய்?’ என்றேன்.
‘எங்கே நோட்,எடை எப்படி போடுவாய்?’ என்றேன்.
அவர். ‘நீங்க, நோட்
கொண்டு வரச் சொல்லலையே,வா என்றீர்கள் வந்தேன்’ என்றார்.
‘என்ன
இங்கே நாம் இருவரும் கோலியாடவா வரச் சொன்னேன்?’
‘எனக்கு
என்ன தெரியும்?’
‘எதுவுமே
தெரியாம,இங்கே எதுக்கு நீ,? நீ
எனக்கு தேவையில்லை இப்போதே உன்னை விடுவிக்கின்றேன், நீ மண்டல அலுவலகம் சென்று வேறு வேலை வாங்கிக்
கொள்.’ அடுத்து இன்னொரு உதவியாளரான,திரு
ஞானதாஸ் எனும் உதவியாளரை வைத்து எடை போடும் பணியை முடித்து அறிக்கையை
சமர்ப்பித்தேன்.
தனக்கு கீழ் படியாதவரை தலைமை அலுவலருக்கு அறிக்கை
தாக்கல் செய்ய வேண்டும்,இதுபோன்று தன்னிச்சையாக நான் செயல் படக்கூடாது,நமது
அலுவலக கட்டமைப்பு அப்படி.அலுவலக ஊழியர்கள் ஒத்துழைப்பு இல்லை என்றால் தலைமை
அலுவலரை சந்தித்து விடுமுறையில் சென்று விடவேண்டும்.
**********
No comments:
Post a Comment