Saturday, December 21, 2019

இ.பி-34


     152-இடிக்கப்பட்டது பிள்ளையார் கோயில்,பிடி லட்டு

திருவள்ளூர் பெரிய குப்பம் லால்பகதூர் சாஸ்த்திரி சாலையில் தனியாருக்கு சொந்தமான,ஒரு பழைய கட்டிடத்தில் எங்கள் அலுவலகம் இயங்கி வந்தது.அந்த அலுவலகம் செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக ஒரு பிள்ளையார் கோயில் இருந்து வந்தது.
ஒருநாள் இந்த கோயில் நெடுஞ்சாலைத் துறையினரால் இடிக்கப்பட்டது. நான் இதை கண்டதும் மகிழ்ச்சி அதைந்தேன்.அப்பொழுதே அந்த தெரு முனையில் உள்ள ஒரு இனிப்புக் கடையில் இரண்டு கிலோ லட்டு வாங்கினேன்.அலுவலகம் சென்றேன்.
எனது அலுவலக உதவியாளரை அழைத்தேன். ‘அலுவலகத்தில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் இந்த லட்டுகளை கொடுத்துவிட்டு வா,யாராவது எதுக்கு இந்த லட்டு என கேட்டால்,சார் வந்து சொல்வார் என சொல்என சொன்னேன்.
அவ்வாறே லட்டுகள் விநியோகம் முடிந்ததும்,நான் இரண்டு மாடி முழுவதும் இருக்கையில் இருந்த அலுவலக நண்பர்களிடம் சென்று,

 எதற்கு இந்த லட்டு சார்?’ என கேட்டவர்களிடம்,
நாம் வரும் வழியில் ஒரு பிள்ளையார் கோயில் இருந்ததே, தெரியுமா?’,
அது இப்போ இல்ல சார்
அதுக்காகத்தான் இந்த லட்டு!’
ஒரு சிலர் மகிழ்ச்சியுடன், ‘சார்,உங்களுக்கு உள்ள துணிச்சல் யாருக்கும் வராது,சார்!’ என்றனர்.
ஒரு சிலர், ‘அய்யய்யோ,பெரிய பாவம் சார் இது! லட்டு என்றவுடன் ஏன்,எதற்கு என கேட்காமல் சாப்பிட்டு விட்டேன் சார்,பாவம் சார்.!
எது பாவம்?,ஏன் எதற்கு கடவுளை வணங்க வேண்டும்? என கேட்காமலேயே இல்லாத கடவுளை வணங்குவிங்க!ஆனா,சாப்பிட எதை கொடுத்தாலும் உங்களுக்கு ஏன்,எதற்கு? என கேள்வி கேட்க எப்படி மனம் வருகிறது?
 உண்ணுவதில் உள்ள விவேகம், சிந்தனை, இல்லாத கடவுளை எப்படி பூஜிக்க உங்களுக்கு மனம் வந்தது?
சார் எங்களை எப்படி,எப்படியோ மடக்கறீங்க,ஆனா எங்களுக்கு அந்த கடவுளை மறக்க முடியலை சார்!.
                       *****                                          ..                     153-சொந்தக்கார்                
நான் சொந்தமாக கார் வாங்க வேண்டும் எனும் எண்ணம் இருந்துகொண்டே இருந்தது.1992-93 வாக்கில் நான் திருவள்ளூரிலிருந்து சென்னை தண்டையார் பேட்டைக்கு தொடர் வண்டியில் பயணம் செய்வேன்.
அப்போது கூட்டுறவு துறை நண்பர்கள் என்னோடு பயணிப்பார்கள். என் எண்ணத்தை அவர்களோடு பகிர்ந்து கொள்வேன்.அந்த நண்பர்களில் ஒருவர் திரு கோதண்டராமன் என்பவர் 2002 ல் என்னை சந்தித்தார்.
அவர்,‘சார்,நீங்க கார் வாங்கவேண்டும் என்றீர்களே, வாங்கி விட்டீர்களா?’
இல்லை சார்
என்னிடம் ஒரு கார் உள்ளது,வாங்கிக் கொள்வீர்களா?’
என்ன விலை சார்?’
ஒரே விலை 30 ஆயிரம்
என்ன கார் சார்?
அம்பாசிடர்,டீசல்
எனக்கு கார் ஓட்டத் தெரியாதே!
வாக்கிவிட்டு கற்றுக் கொண்டால் போகுது
சரி
என் சேமிப்பிலிருந்து,ரூ 30 ஆயிரம் கொடுத்து விட்டேன்.கார் என் வீட்டுக்கு வந்து விட்டது.
காரை விட்ட நண்பர் , ‘சார் நான் அவசரத் தேவைக்கு இந்த காரை விற்கிறேன்,உங்களுக்கு வேண்டாம்,இதை விற்க வேண்டும் எனும் எண்ணம் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நான் திரும்ப வாங்கிக் கொள்கிறேன்.என்றார்.நான் சரி என சொல்லிவிட்டேன்.
உடனே என் மூத்த மகனின் நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டேன்.இவர் ஓரு “automobile engineer”.அவரிடம்,

காரை எப்படி ஓட்டுவது ?’ என வினவினேன்.
அவர் உடனே, ‘ரொம்ப சிம்ப்பிள் uncle’ என சொன்னவர், ‘abc நினைவில் கொள்ளுங்கள்,
அதை திருப்பி போடுங்கள்,cba வரும்,அதாவது clutch,brake &accelarater.அவ்வளவுதான் uncle’  மேலும் அவர், ‘அவைகளை உங்கள் இரண்டு கால்களால் மட்டுமே இயக்க வேண்டும்என்றார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டிய அனுபவம் இருப்பதால் நான் உடனே காரை start செய்து விட்டேன்.காரின் கிளட்ச் சை ஒரு காலில் மிதித்துக் கொண்டு மெதுவாக முதல் கியரைப்போட்டு  மறு காலில் ஆக்சிலேட்டரை அழுத்தினேன். கார் நகர துவங்கியது.வீட்டிலிருந்து காக்களூர் வரை (2+2=4 கிமி)10 கிமி வேகத்தில் ஓட்டினேன்.இரண்டாம் கியரிலேயே திரும்ப வீட்டுக்கு வந்து விட்டேன்.

கார் ஓட்டக் கற்றுக் கொண்டேன். இதற்கு ஓட்டுநர் உரிமம் எடுக்க வேண்டுமே?
காரை எடுத்துக் கொண்டு RTO அலுவலகம் சென்றேன்.அங்கே அதிகாரியை பார்த்தேன்,அவர், ‘முதலில் பழகு ஓட்டுநர் உரிமம் எடுக்க வேண்டும் என்றார். மேலும் அவர், ‘அதற்கு உரிய தொகை ரூ30 ஐ கட்டிவிட்டு பழகு உரிமம் மனுவை அலுவலகத்தில் அளியுங்கள்,ஒரு மாதம் கழித்து ஓட்டுநர் உரிமம் பெறலாம் என்றார். நானும் பழகு ஓட்டுநர் உரிமம் பெற்றுக் கொண்டு வந்து விட்டேன்.
பழகு ஓட்டுநர் உரிமம் வைத்துக் கொண்டு நான் மணலி அருகே நாப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் என் அக்கா விட்டிற்கு காரை எடுத்துகொண்டு கிளம்பினேன்.
கார் திருநின்றவூர் வழியே சென்றது.எதிரே ஒரு சிறுவன் சைக்கிள் ஓட்டி வந்தான்.என் இடது பக்கம் பார்வையின் தூரத்தை யூகிக்க தெரியவில்லை,அந்த பையனை இடித்து விட்டேன்.நான் நிற்க வில்லை.
அவன் இறந்தான் என நினைத்துக் கொண்டேன்.சில நொடிகளில் இரண்டு நபர் மோட்டார் சைக்கிளில் வந்து குறுக்கே நின்று விட்டார்கள்.நான் வெல வெலத்துப்போனேன்.
அதில் ஒருவன் என்னைப் பார்த்து

பையனை இடித்துவிட்டு நிற்காமல் வருவது நியாயமா?’.நான் மவுனமானேன். அடுத்தவன், ‘நல்ல காலம் பையனுக்கு ஒன்னும் ஆகல,கைதான் லேசா தேய்த்துக் கொண்டது.
எனக்கு நிம்மதி வந்தது! அந்த சைக்கிள் ஓட்டிய பையன் வந்தான்.அவனுக்கு நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவனோடு வந்தவர்களில் ஒருவன்,
அவனிடம் ஒரு 50 ரூபாய் கொடுங்கள்என்றான்.நான் உடனே 50 ரூபாயை கொடுத்து விட்டு,மன்னிப்பு கேட்டுவிட்டு காரை மிக எச்சரிக்கையாக ஓட்ட ஆரம்பித்தேன்.
அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரிபவர்கள் ரூ 5 ஆயிரத்துக்கு க்கு மேல் சொத்து வாங்க வேண்டுமானானல் அரசின் முன் அனுமதி வாங்க வேண்டும்.அதனால் காரை என் பேருக்கு மாற்றாமலே ஓட்டிவந்தோம்.அந்த காரை வைத்து என் மகன்கள் இருவரும் கார் ஓட்டுநர் உரிமம் பெற்றார்கள்.

2004லேயே அதிமுக தொழிற்சங்கத் தலைவரும் எனது நண்பருமான திரு அ .கு .ஏழுமலை அவர்கள் VRS  கொடுத்து விட்டு தனக்கு உள்ள கடனை அடைத்துவிட்டு மீதமுள்ள பணத்தில் திண்டிவனம் அருகே 5 ஏக்கர் நிலம் வாங்கினார்.அதில் மா செடிகளை வைத்தார்.அதற்கு இயற்கை உரம் வாங்க வேண்டி திரு .ஏழுமலை அவர்கள்,  காரை எடுத்துக் கொண்டு வாருங்கள் உரமூட்டை வாங்கி பேருந்தில் எற்ற வசதியாக இருக்கும்என்பார்.
நாங்கள் இருவரும் திருத்தணி அருகே மாத்தூர் எனும் கிராமத்தில் ஒரு தனியார் மண்புழு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு சென்றோம்.இரண்டு மூட்டைகளை காரில் ஏற்றி திருத்தணி பேருந்து நிலையத்தில் திண்டிவனம் செல்லும் பேருந்தில் எற்றிவிட்டு வருவேன். இது போன்று மூன்று முறை வாங்கினோம்.மாமரங்கள் நன்கு வளர்ந்த உடன் அதை பராமரிக்க முடியவில்லை என விற்று விட்டார்.
                                *****
                       154-மாருதி  கார்   
2006-ல் பணி ஒய்வு பெறும் ஒரு ஆண்டுக்கு முன்னர் எனக்கு ecpf கணக்கிலிருந்து 90% பணம் ரூ.6 லட்சம் வந்தது.இந்த அம்பாசடர் காரை விற்று விட்டு புதிய ரக மாருதி காரை வாங்க தீர்மானித்தோம்.
அதற்காக அந்த காரின் முதலாளியான எனது மணவாளநகர் நண்பரை தேடிப் போனேன்.அவர்தான், ‘காரை விற்கும் போது என்னிடம் சொல்லுங்கள் நான் வாங்கிக் கொள்கிறேன் என்றாரே.
நான் அவரை வீட்டில் சந்தித்தேன். அவர், ‘எனக்கு இப்போது கார் தேவை இல்லை, இருப்பினும் நான் சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும்என்றார்.
அதே விலைக்கே வாங்கிக் கொள்கிறேன் என சொல்லி,ரூ 28 ஆயிரம் தந்தார்,மீதி ரூ 2 ஆயிரத்தை இரண்டு மாதம் கழித்து தருகிறேன் என்றார்.இரண்டு மாதங்கள் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.நான் மறந்து விட்டேன்.சொன்னபடி அவர் ரூ 2 ஆயிரத்தை கொடுத்து விட்டு, ‘கால தாமதம் ஆகிவிட்டது என்னை மன்னியுங்கள் என்றார் அந்த மாமனிதர். நான் வாயடைந்துப் போனேன்.
அதற்குள் ஒரு பழைய wagonR  காரை வாங்கினோம்.
            
           155-பெங்களூரில் வீட்டு மனை

மீதம் 4 1/2 லட்சத்தில்,எதாவது வீட்டு மனை வாங்கலாம் என்றிருந்தேன். அப்படி வாங்கும் நிலையில், பெங்களூரிலிருந்து  பெரியமகன் தொலை பேசியில்,
 அப்பா!,பெங்களூர் அருகே ஒரு கிராமம் உள்ளது ,அங்கே புதிய லே அவட் போட்டுள்ளார்கள், அதில் ஒரு வீட்டுமனை வாங்கிப் போட்டால் நமக்கு இங்கே சொந்தமா ஒரு வீடு கட்ட வசதியாக இருக்கும். எனக்கும் பெங்களூரில் தான் வேலை என முடிவாகி விட்டது.
அடுத்த சில நாட்களில் நான் பெங்களூர் சென்றேன்.அந்த வீட்டு மனையை பார்த்தேன்,மகனுடைய நண்பர் ஒரு பாரப்பனர் ,அவர் தேர்வு செய்திருப்பதால் நாம் மேலும் துருவிப்பார்ப்பது கால விரயம் தான் எனவே அவர் வாங்கி பதிவு செய்துவிட்டார் எனில் நாமும் வாங்கிவிடுவோம், என தீர்மானித்து பதிவுக்கு ஏற்பாடு செய்ப்பட்டது.
அங்கே வீட்டு மனை என்பது 1200 சதுர அடி கொண்டது.மொத்தம் 3 லட்சம்   என நினைக்கின்றேன். இப்பொழுது இதன் மதிப்பு 10 லட்சத்திற்கு மேல்  போகும் என நினைக்கின்றேன்.
ஆனால் அதே நேரத்தில் திருவள்ளூரில் ஒரு வீட்டு மனை வாங்கியிருந்தால் அதன் மதிப்பு இப்போது 1 கோடி ரூபாய்.
                    **********

2006-ல் நான் சார்ந்த அஇஅதிமுக தொழிற் சங்கத்திற்கு பிரச்சினை வந்தது.சங்கத்தின் அதன் பொதுச் செயலாளர் அ.கு ஏழுமலை, சென்னை அண்ணா நகரில் சங்கத்திற்காக வீட்டு மனை வாங்கி இருந்தார்,அது மட்டமல்ல சங்க நிதியாக 2 லட்சம் வங்கியில் சேர்த்து வைத்திருந்தார்.ஒரு நாள் திரு அ.கு ஏழுமலை இல்லாத போது திரு மாறன் மற்றும் அவரது நண்பர்கள் சங்கத்தின் சொத்துக்களை பேரவையிடம் ஒப்படைக்க வேண்டும் என கலந்தாலோசனை செய்து கொண்டிருந்தனர்.
திரு அ.கு ஏழுமலை வந்தவுடன், ‘என்ன சார், சங்கத்தின் சொத்துக்களை பேரவைக்கு கொடுத்து விடப் போகின்றீர்களா?’ என்றேன்.
அப்படி எல்லாம் ஒன்று மில்லை,ஆனால் இந்த மாறன் தான் கொடுத்துவிடவேண்டும் என்கிறார்,சங்க நிதி மற்றும் சொத்துக்களை கொடுத்து விட்டால் சங்கத்தை நடத்த நிதிக்கு எங்கே போவது? இத்தனை ஆண்டுகள் நாம் கட்டிக்காத்த சொத்தை பேரவைக்கு கொடுத்துவிட்டால்,நாம் தனித்து இயங்க முடியாது. என்ன செய்ய?,இந்த மாறனும் சூரியாச்சாரியும் தினமும் நச்சரித்துக் கொண்டே இருக்கின்றனர்.என்றார்.
        
      156-உதயமானது பாட்டாளிதொழிற்சங்கம்

அதன் பிறகு ஒரு நாள் எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு,
நீங்கள்,உடனே என்னை சந்திக்க முடியுமா?’ என்றார்.நான் திரு.அகு.ஏழுமலை அவர்களை அவருடைய சங்க அலுவலகத்தில் சந்தித்தேன்.வெகு நேரம் மனம் விட்டு பேசினார்.அப்போது நான்,
அண்ணே,! உங்களுக்கு சங்கம் நடத்திய அனுபவம் நிறைய உண்டு. பல தரப்பட்ட நண்பர்களையும், துரோகிகளையும் பார்த்திருப்பீர்கள். தற்போது உங்களுக்கு துரோகிகளை சந்திக்கும் காலம். நீங்கள்,மற்றவர்கள் நினைப்பது போல் அஇஅதிமுக தொழிற்சங்கப் பேரவைக்கு சொத்துக்களை வழங்கி விட்டீர்கள்.தற்போது நீங்கள் அனாதைப்போல் உணரும் நிலைக்கு வந்து விட்டீர்கள்.சொல்லுங்கள் ஒரு புதிய சங்கத்தை உருவாக்கலாம், அதற்குண்டான நிதி ஆதாரங்களை நான் திரட்டித் தருகிறேன்.
எத்தனையோ ஊழியர்களின் இல்லங்களில் விளக்கேற்றி இருக்கின்றீர்கள், கட்சியைக் கடந்து நீங்கள் அந்த உள்ளங்களில் நிற்கின்றீர்.என்றேன்.மவுனமாக இருந்து விட்டு சில நொடிகளில்

நாம் பாட்டாளி தொழிற்சங்கம் ஆரம்பிக்கலாமா?’ என சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்தார்,
ஆனால் அந்த சங்கத்தை ஒரு இனம் சார்ந்தது என்பார்கள், நமது இனத்தவர்களே இதற்கு ஆதரவு தர மாட்டார்களே...?.என்றார்.
நான், ‘உண்மைதான் என சொல்லி விட்டு, ‘அப்படியெல்லாம் நினைத்தால்,உங்கள் அனுபவமும், சங்கம் நடத்தும் தகுதியும் யாருக்கு உள்ளது?’ என்றேன்.அவர் தொடர்ந்தார்,
‘இன்னும் ஒரு வாரம் போகட்டும்,இந்த தனிச் சங்கம் அமைத்தால் நமக்கு ஒரு 20 உறுப்பினர்களின் ஆதரவாவது வேண்டும்.நான் யோசிக்கிறேன்.’என்றார்
ஒரு வாரம் கழித்து என்னை அழைத்தார். ‘உங்களை சங்கத்தின் மாநில பொருளாளராக நியமித்துள்ளேன். அதற்கான தகுதி உங்களிடம் உள்ளது என நினைக்கிறேன்.’ என்றார்.
‘சரி.வாருங்கள்,நிதி திரட்ட போவோம்’எனக்கு தெரிந்த ஒரு 20 அரவை முகவர்களிடம் அழைத்துச் சென்றேன்.

ஒரு அரவை முகவரிடம் 1000 ரூபாய் வீதம் நிதி வசூல் செய்தோம்,அந்த பிரச்சினையான தண்டையார் பேட்டை அரவை முகவரிடம் சென்றேன் அவர், ‘சார்.இந்தாங்க இந்த ‘செக்’ புத்தகத்தில் ,நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள்’ என்றார்.
நான்,அவரிடம், ‘இரண்டாயிரம்,போதும்,நன்றி’ என ரூ.2000 எழுதிக்கொண்டு வந்தோம்.அன்றய தினம் ரூ.25 ஆயிரம் வசூல் செய்தோம்.அடுத்த சில நாட்களில் தமிழகத்தின் சுமார் 20 வட மாவட்டங்கள் சுற்றுப்பயணம் செய்தோம்.நல்ல வரவேற்பு.
சுமார் 300 உறுப்பினர்களை சேர்த்தோம்.நிர்வாகத்தை எதிர்த்து வாயிற்கூட்டம்,கோட்டையைய நோக்கி ஊர்வலம் என நடத்தி தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் வலிமை மிக்க ஊழியர் சங்கமாக மாற்றினோம்.மருத்துவர் அய்யாவின் ஆதரவு பெற்றோம்.
                  ************

No comments: