175-இளைய
மகன் கல்யாணம்.
இளைய மகன்,திருநின்றவூரில்
அமைந்துள்ள ஜெயா கல்லூரியில் BSc(computer science) முடித்து
,சென்னை வைணவா கல்லூரியில் MCA “முடித்து
விட்டு திருவள்ளூரில் சுயமாக ஒரு broadband நிறுவனத்தை(Rmax broadband private limited) நடத்தி வருகின்றான்.இது ஒரு மத்திய அரசின் பதிவு பெற்ற
கார்பொரேட் கம்பெனி. அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக (managing director) இருந்து
வருகிறான்.
தமிழ் நாடு முழுவதும் இணையதள சேவை நடத்தும் “B”
உரிமம் பெற்றது.தற்போது இதன் கிளைகள் திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் வேலூர்
மாவட்டங்களில் பரவி உள்ளது.இனி இந்த நிறுவனம் மேலும் வளர வாய்ப்புள்ளது.
பெரியவனுக்கு திருமணம் ஆனவுடன்,
இவனுக்கு திருமணம் செய்ய,2010-லிருந்து முயன்றோம்.ஆனால் ஏதாவது தடை ஏற்படுத்தி
திருமணத்தை நிறுத்தி விடுவான்.
‘நான்
ஒரு நிலையான வேலை வாய்ப்பை பெற்றால்தான்,திருமணம்
செய்து கொள்வேன்’ என அடம் பிடித்தான்.
இவனுக்கு என்ன வேலை கிடைத்து
விடப்போகிறது, வேலை கிடைத்தால் என்ன கிடைக்கா விட்டால் என்ன,என்
கடமை பெற்ற பிள்ளைகளுக்கு காலாகாலத்தில் கல்யாணம் செய்து விடவேண்டும்.இது தான்
எங்கள் ஆசை.இதனால், நான் இரண்டு நாட்கள் தலை மறைவகிவிட்டேன். எப்படியோ
என்னை கண்டு பிடித்து,
‘நான்
கல்யாணம்,பண்ணிக்கிறேன்,வீட்டுக்கு
வாங்கப்பா’ என கேட்டுக் கொண்டதின் பேரில் நான் வீட்டுக்கு வந்தேன்.
2015-ல் கம்ப்பனி நல்ல நிலைக்கு வந்து விட்டது,திருமணம்
செய்தே ஆகவேண்டும் என நான் ஒற்றைகாலில் நின்றேன்.
இதற்காக, என்
மைத்துணர், மகளை (திருமதி.மோகனாரவி, இவள்
ஒரு அறிவியல் பட்டதாரி) துணைக்கு அழைத்துக் கொண்டேன். அவள் சில நாட்கள் என்
வீட்டில் தங்கி இவனிடம் பேச்சு வார்த்தை நடத்தி,திருமணத்திற்கு இசைவு வாங்கினாள்.
இவன் இசைவு தருவதற்கும்,இவன்
செயல்பாடுகளை கவனித்த இவனின் நண்பனின் பக்கத்து வீட்டுக்கார பெண்மணி, மகனின்
நண்பனின் அம்மாவிடம்,
‘இந்த புள்ள நல்ல
உழைப்பாளியா இருக்காரே,இவருக்கு தோதான என் அக்கா பெண் இருக்கின்றாள்,அவளும்
இவருக்கு இணையாக இருப்பாள்,அவளை இவருக்கு மண முடிக்க இவருடைய பெற்றோரிடம் சம்மதம்
வாங்குங்கள்,’ என்று சொல்லியிருக்கின்றார்.
நண்பனின் அம்மா அப்பா மூவருமே எங்கள் குடும்பத்து
நண்பர்கள் தான்.உடனே என் மனைவியிடம் தொடர்பு கொண்ட அந்த அம்மா,
‘உடனே
புறப்பட்டு வாருங்கள்,உங்கள் மகனின் திருமணத்தை பற்றி பேசுவோம்’ என்றார்.பெண்ணின்
படிப்பு,உயரம்,இருக்கும் இடம்
போன்ற தகவலை தெரிந்து கொண்டு என் மனைவி என்னிடம் வந்தாள்,அதே
நேரத்தில்,பெரிய மகனின் நண்பனும் இந்த பெண்ணின் சித்தி மகனும்
பள்ளிக்கால நண்பர்கள்.
இருவரும் கலந்து பேசி என்னிடம் போனில் தொடர்பு கொண்டு
பேசிய என் மகன்,
‘அப்பா!
வசந்துக்கு அம்மா,பொண்ணு பார்த்திருக்காங்க ,அவளை
நீங்களும் போய் விசாரித்து விட்டு வாருங்கள்’ என்றவன், மேலும்
தொடர்ந்தான், ‘மோகானா அக்காவை கூட கூட்டிக் கொண்டு போங்கப்பா’ என்றான்.
நானும் மோகனாவும் சேர்ந்து அந்த பெண்ணின் இருப்பிடம்
தேடிப் போனோம்.இடம் குரோம்பேட்டை, அடுக்கு மாடி
குடியிருப்பு,அப்பா ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர். பெண், BTech, படித்துவிட்டு,
Infosys, நிறுனத்தில்
மறைமலை நகரில் பணியாற்றுகின்றாள். மோகனா,அந்த
பெண்ணிடம் பேச்சு கொடுத்தாள்,தன் அத்தை மகனின்
தகுதிகளையும் கம்பனி நிர்வாகத்தை பற்றியும் எடுத்து சொல்லி பெண்ணிடம் சம்மதம் வாங்கினாள்.என்னிடம்
வந்த என் மைத்துனர் மகள்,
‘மாமா,….பையனைப்
பற்றி சொன்னேன்,அவளும் சம்மதம் தெரிவித்தாள்,மேற்கொண்டு
நீங்கதான் பேசணும் மாமா!,
பொண்ணு தெளிவாக இருக்கின்றாள்
மாமா!
பெண்ணின் அப்பாவிடம்,நான். ‘எனக்கு
படித்த மருமகள் தேவை,ஆனால் மருமகள் சம்பாதித்து குடும்பம் நடத்த வேண்டிய
அவசியமில்லை, என் மகன் நிறைய சம்பாதிக்கின்றான்,நீங்க
என்ன சொல்றீங்க?’
பெண் ,என்னைப் பார்த்து,“நான்
யோசிக்கனும்,இரண்டு நாள் time கொடுங்க uncle”
‘சரிம்மா,அப்பா,அம்மா
நீ,கலந்து பேசி முடிவெடுத்து விட்டு என்னிடம் பேசுங்கள், நாங்கள், கிளம்புகிறோம்’
இரண்டு நாள் கழித்து,எனக்கு
பெண்ணின் அப்பா தொடர்பு கொண்டு, ‘பெண்ணுக்கு
வேலையை விடும் எண்ணம் இல்லை,நீங்கள் வேறு இடம் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்றார்.
நானும், சரி வேறு இடம்
பார்க்கலாம் என்றிருந்த வேளையில்,ஒரு வாரம்
கழித்து எனக்கு அந்த பெண்ணின் சித்தி போன் செய்தார்கள்.
‘ஏங்க,அந்த
பெண்ணை போய் பார்தீங்களே,உங்களுக்கு பிடிக்கலையா?’என்றார்.‘அப்படி
எல்லாம் இல்லம்மா,
அந்த பெண்ணுக்கு
வேலையை விடும் எண்ணம் இல்லையாம்,அதான் அவங்க போன்
போட்டு சொல்லிட்டாங்க’
என்றேன்.சில மணி
நேரம் கழித்து மீண்டும் அந்த சித்தி, ‘நீங்க
சொல்ற மாதிரி அந்த பெண் வேலை விட தயாரா இருக்கா,தொடர்ந்து
நீங்க பேசுங்க,’ என்றார்.
‘சரிம்மா,அது
உண்மையானால், பெண்ணின் அப்பாவையும், பெண்ணையும்
ஒன்றாக என்னை போனில் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள், நான்
மேலும் தொடர்கிறேன்.’
என்றேன்.
அடுத்த நாள் பெண்ணின் அப்பாவும்,பெண்ணும்
ஒரு சேர பேசினார்கள்,அப்போது, பெண்ணின்
அப்பா, ‘சார் மன்னிக்கணும்,பொண்ணு
வேலையை விட்டுட்டு திருமணம் செய்யப் போகிறேன் என சொன்னவுடன் அந்த கம்பனி மேலாளர்,
‘உனக்கு
இந்த மாதத்திலிருந்து ரூ.10 ஆயிரம் அதிக சம்பளம் ஏற்றித் தருகின்றேன்’
என்றார்கள்,எனவே நான் வருவாய்தான் முக்கியம் என கணக்குப் போட்டு
உங்களுக்கு பெண் தர மறுத்து விட்டேன், இருப்பினும்
என் பெண் தங்கள் கொள்கைக்கு ஏற்றாற் போல் வேலையை விட்டுவிட நினைக்கின்றாள் இதோ
அவளிடம் பேசுங்கள்’
என்றார்.
நான் அவளிடம் பேசிய போது, ‘உனக்கு
வேலையை விட பூரண சம்மதமாமா?’
என்றேன்.அப்போது
அவள், ‘எனக்கு வேலை செய்ய பிடிக்க வில்லை அங்க்கிள்!,
உங்கள் கொள்கை எனக்கு பிடித்துள்ளது,உங்கள்
மகனையும் பிடித்துள்ளது,
அங்கிள், தொடர்ந்து
திருமணத்திற்கு உண்டான பணியை தொடருங்கள்’ என்றாள்.நான்
மீண்டும் குரோம்பேட்டைக்கு சென்றேன்.
பெண்ணின் அப்பா,ஒரு
கடவுள் மறுப்பு சிந்தனையாளர். இருப்பினும் வீட்டில் பெண்கள் செய்யும் சம்ப்ரதாயம், சடங்குகளில்
தலையிட தைரியமில்லாதவர். எல்லா கடவுள் மறுப்பு சிந்தனையாளர்களின் வீடுகளும் இதே
போல்தான் உள்ளது.
பிரபலமான கடவுள் மறுப்பு மேடை பேச்சாளர்
குடும்பங்களுக்கும் இதே நிலைதான்.காரணம் ‘உலகில்
எந்த ஒரு பெண்ணும், அது எந்த
மதமானாலும்,கடவுளை இல்லை என மறுத்து வாழ முடியாது! பெண்ணை சார்ந்தே ஆண் வாழ வேண்டியிருப்பதால், ஆணும்
சுய நினைவை இழந்து பெண்ணோடு ஒத்துப்போகிறான்’
நான் பெண்ணின் அப்பாவிடம் பேசும்போது, ‘பார்ப்பனர்
இல்லாமல் கல்யாணம் நடத்த உங்களுக்கு சம்மதமா?’ என்றேன்.
‘அப்படித்தான் செய்யணும்,அது
போல் நடந்தால்,எனக்கு மிக்க மகிழ்ச்சி’ என்றார்.
மேலும் தொடர்ந்தார், ‘சார்.எனக்கு
கொஞ்சம் கடன் உள்ளது,என் பொண்ணு 6 மாதங்கள் வேலை செய்தால் அந்த கடனை அடைத்து விடுவேன்,அதன்பிறகு
கல்யாணம் வைத்துக் கொள்ளலாம்’ என்றார். ‘அப்படியானால், நிச்சயம்
செய்து விடுங்கள், பிறகு உங்கள் வசதிக்கேற்ப கல்யாணம் நடத்தலாம்.’ என்றேன்.
அவரும் அதற்கு உடன் பட்டு நிச்சயம் நடந்த 6 மாதங்கள்
கழித்து திருமண தேதியை நான்தான் தீர்மானித்தேன்.
176-சம்பரதாயம்,சடங்கு இல்லா மணம்
முகூர்த்த தேதி இல்லாத தேதி,அனைவருக்கும்
விடுமுறை தினமான ஞாயிறு,திருமணம் முடிந்த உடன்,மதிய உணவு, (சைவ மற்றும் அசைவ உணவு) கல்யாணத்திற்கு முன்னாள் மாப்பிள்ளை அழைப்பு இரவு
மணமக்கள் வரவேற்பு, ஆட்டம்&பாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் இல்லை.
மூட நம்பிக்கைகளின் மூல வேர்களான, குங்குமம்,
மஞ்சள்,சந்தனம்,மாவிலைத் தோரணம், கற்பூரம்,
ஊதுபத்தி கொளுத்துதல் தேங்காய் உடைப்பு, பூசணிக்காய் உடைப்பு,கல்யாண
மேளம், நாதசுரம், போன்ற தேவையற்ற நிகழ்ச்சிகளை தவிர்த்தேன்.
மொத்தத்தில் கல்யாணம் என்றாலே,பெண்களின்
ஆதிக்கம்,பார்ப்பனர்களின் தலையீடு இருக்கும்.ஆனால்
நான், பெண்களின் நலங்கு விவகாரம்,பாப்ப்பனர்களின்
மந்திரம் தீமூட்டி நெய் வார்த்தல் போன்ற நிகழ்ச்சிகளை அடியோடு நீக்கினேன்.
பந்தக்கால்,கல்யாண மேளம்(தஞ்சாவூர் தவில்) இல்லை!.
பிரபலமான சமுகத் தலைவர்களை அழைத்து கல்யாணம் நடத்தலாமா?
என சம்பந்தியிடம் கேட்டேன்.அவர், ‘வேண்டாம் நீங்களே நடத்துங்கள்,நீங்களே ஒரு
இயக்கத்தின் தலைவர்தானே?’ என்றார்.என் மகன்களும் சம்பந்தி சொன்னது போல்
சொன்னார்கள்.
கல்யாணத்திற்கு நாள்,நேரம்
நான் தான் குறித்தேன், 2015,ஆகஸ்ட்,30 தேதி,காலை10-லிருந்து 12 மணி வரை,கல்யாணம்
முடிந்ததும் மதிய உணவு.மொத்தமே 3 மணி நேரத்தில் மணத்தை நடத்தி முடித்த திருப்தி.
சுமார் 2000 நண்பர்களும் சுற்றத்தார்களும் வந்து மண
மக்களை வாழ்த்தினர்.நெருங்கிய சொந்தங்களுக்கு புடவை வேட்டி போன்ற சீர்செய்வதை
கல்யாண மண்டபத்தில் வேண்டாம் என சொல்லி அழைப்பிதழை கொடுக்கும் போதே அவரவர்
வீட்டில் அழைப்பிதழோடு வைத்தேன்.
திறன் மிகு இரண்டு தமிழறிஞர்களான பெரும் புலவரும் ‘இளையபல்லவன்
கருணாகரத் தொண்டைமான்’
காப்பிய
ஆசிரியருமான செம்மங்குடி துரையரசன்,மற்றும்
உயிரிரக்க இயக்கத் தலைவருமான திரு எம்.என்.செலவராஜ் ஆகியோர் மணமக்களை
வாழ்த்தியதோடு மண விழா இனிதே முடிந்துவிட்டது.
இப்பொழுது எனக்கு என் மடியில் தவழும் இரண்டு பேரக் குழந்தைகள் உள்ளானர்.எனக்கு வேறென்ன
வேண்டும்?.
177-அகவை முதிர்ந்த தமிழறிஞர்.
2016- ஜனவரி 12 தேதியில் எனக்கு சென்னை எழும்பூரில்
அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித் துறையிலிருந்து ஒரு தொலை்ப்பேசி சேதி வந்தது.
‘அய்யா,படைவீடு
திருவேங்கடம் அவர்களே!,தங்களை தமிழக அரசின் தமிழறிஞர் விருதுக்கு தேர்வு
செய்யப்பட்டுள்ளீர்,தயவு செய்து,தாங்கள்
ஜனவரி 16ந் தேதி ,சென்னை பல்கலைகழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்
முலமைச்சர் தலைமையில் நடைபெறும்
விழாவிற்கு தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.’ என்றனர்.
எனக்கு இது ஒரு ஆச்சர்ய செய்திதான்.எத்தனையோ
தமிழறிஞர்கள் வாழும் தமிழ் நாட்டில் என்னை ‘தமிழறிஞர்’ என
ஒரு அரசு அங்கிகாரம் செய்துள்ளதே.நான் பணியாற்றிய துறை வேறு. ஆனால் என்
எண்ணங்களும்,சிந்தனைகளும் சமுகம் சார்ந்தே இருந்தற்கு மட்டுமல்ல
இப்பொழுதும் சமுக அக்கரை கொண்டு, பணி ஓய்வு பெற்ற
பின்,2008-ம் ஆண்டிலிருந்து,
‘ஏழாம்
அறிவு இயக்கம்’ எனும் பகுத்தறிவு இயக்கம்,www.thiru-rationalism.blogspot.in எனும் இணையதளத்தில் தினமும் இளைஞர்களின் சிந்தனைகளுக்கு
கட்டுரை எழுதி வருவது மட்டுமல்ல,முகநூலில்,ட்விட்டர்
மற்றும் வாட்சப் போன்றவற்றில் கட்டுரைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் எனக்கு இந்த
விருது பொறுத்தம் தான் என என் மனதை ஆற்றுப்படுத்திக் கொண்டேன்.
இந்த சேதி வந்த அடுத்த சில நிமிடங்களில் திருவள்ளூர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் ‘தமிழ்
வளர்ச்சித் துறை’ அலுவலரிடம் இருந்து மேற் சொன்ன எழும்பூர் தமிழ்
வளர்ச்சி துறையிடம் இருந்து வந்த தகவல் போல் வந்தது.
2016,ஜனவரி 16 ந் தேதி
என்பது, ஆண்டு தோறும் திருவள்ளுவர் தினத்தன்று தமிழ் நாட்டரசு
நிகழ்த்தும் அரசு விழாவில் தமிறிஞர்களை
தெரிவு செய்து பட்டங்களையும் பரிசுகளையும் வழங்கும் நாள்.அன்றைய தினம்
நானும் எனது இரண்டு சப்பந்திகளுடன் என் இளைய மகன் வசந்த்,மற்றும்
நண்பர்,ஒய்,ஆர். பன்னிர்
செல்வம் ஆகியோர் கலந்து கொண்டோம்.அன்றய தினம் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா
அவர்கள் உடல் நிலை நலிவடைந்ததை தொடர்ந்து,அன்றய
நிதி அமைச்சர்.திரு.ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் விழா நடந்தது.விருதைப்
பெற்றுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.
விருதின் சிறப்புகள்.மாதம் ரூ.2000.00 மற்றும் மருத்துவ
படி ரூ.100.00.வாழ்நாள் முழுவதும் பெற்றுக் கொள்ளலாம்.இப்பொழுது ரூ.4000.00 என
உயர்த்தி உள்ளனர்.
கிராமத்தில் ஒரு வெய்யிலாளியின் வயிற்றில் 8-ம் மகனாக
பிறந்து ,அந்த கிராமத்தின் முதல் அறிவியல் பட்டதாரி ஆகி,பொறுப்புள்ள
ஒரு அரசு ஊழியர் பதவி வகித்து,பணி ஓய்வு பெற்று,பின்
தமிழ் பணி ஆற்றியதற்கு என்னை,இவன்
சொல்வதெல்லம் உளரல் அல்ல,தமிழ் இனத்தை முன்னேற்ற வந்த ,ஒரு
அகவை முதிர்ந்த தமிழ் ‘அறிஞர்’
இவர்- என என்னை கவுவரப்படுத்திய தமிழ் நாட்டரசுக்கு நன்றி தெரிவித்துக்
கொள்கிறேன்.
178-அறம்காத்த வர்மாக்கள்
வெகு நாட்களாக எனக்கு ஒரு உறுத்தல் இருந்து கொண்டே
இருந்தது.அதாவது இன்றய மக்களின் மூட நம்பிக்கைகளின் ஊற்றுக்கண் எது என விவரித்து
ஒரு நூல் வெளியிட வேண்டும்,
என்று.
இந்திய கிராமங்களில் இன்றளவும் எல்லை அம்மன் கோயில்கள்
உண்டு.
அந்த கோயில்களில் ஆடு,
மாடு,கோழிகள் பலியிடப்படுவதையும்,தீ
மூட்டி அதன் மீது நடப்பதால் அம்மன் அருள் கிடைக்கும் என்பதற்காக விரதம்
இருப்பதையும்,குங்குமம்,மஞ்சள்
கலந்த வேப்பிலையை பூசிக் கொள்வதால் உடல்
நோய் தாக்குதலிருந்து தப்பிக்கலாம் எனும் எண்ணம் கொண்ட மக்களின் மூட
நம்பிக்கைகளின் மூல வேரே ‘மகாபாரதம்’
எனும் இதிகாசம் தான் காரணம் என்பதை என் ஆய்வில் உணர்ந்தேன்.
‘..பொய்
சொன்னாலும்,மெய் சொன்னாலும் வாயால் சொல்லி பலனில்லே,அதை
மய்யில நனைச்சி பேப்பரில் அடிச்சா மறுத்துப்பேச ஆளில்லை...!’
எனவே பேசிக் கொண்டிருப்பதை விட எண்ணங்களை எழுத்துக்களாக
பதியவிட்டால் எதிர்காலம் மறுத்துப்பேசாது. அப்படித்தானே இதிகாசங்களும், இலக்கியங்களும்,வரலாற்று
நூல்களும் விளங்குகின்றன?
2013-ல் ஒரு புத்தக கண்காட்சியில்,
முனைவர் க.த.திருநாவுக்கரசு,அவர்கள் எழுதிய, ‘தென்கிழக்கு
ஆசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு’ எனும் நூலை
படிக்க நேர்ந்தது.அதில், ருத்ரவர்மன் என்பவர்,ராமனுடைய
தாத்தா என்பதை குறிப்பிட்டு இருப்பார். அவருக்கு பிந்தைய காலமான தசரதன் காலத்தில்
ஆரியர்கள் ஆப்கான் வழியாக வந்ததையும் காந்தார மன்னன்,மகளான
காந்தாரியை திருதராஷ்ட்ரன் மணமுடித்த சத்ரிய வம்ச கதைகளை கோடிட்டு
காட்டியிருப்பார்.இவர்கள் அனைவருமே தமிழர்கள் தான்.பின்னாளில் வரலாற்று
ஆய்வாளர்கள் ‘திராவிடர்’
எனும் அடைமொழி கொடுத்து,தமிழர்களின்
அடையாளங்களை,
திரித்து
விட்டனர்.
பண்ட மாற்று(Barter system) முறையில் வாழ்ந்த தமிழர்களை (அனைவரும் உழைக்க வேண்டும்
என்பது) கெடுத்ததே,ஆரியர்கள் தான்.
ஆரியர்களின் பஞ்சாங்கம் பார்க்கும் பழக்கங்களுக்கு
தாமிழர்களை உட்படுத்துகின்றனர். காந்தாரிக்கு திருதராஷ்ட்டரனை மண முடிக்க
ஆரியர்களின் பஞ்சாங்கம் தான் கை கொடுத்துள்ளது.அது மட்டுமல்ல நிலத்தில் வாழும்
சத்ரியர்களையும்,நீரில் வாழும்(மீனவர்கள்)சத்ரியர்களையும் இணைத்து, ஆடுமாடுகளை
மேய்த்து விவசாயம் பார்த்த,ருத்ர சேனாதிகளை(யாதவர்கள்) இணைத்து ‘மகாபாரதம்’ எனும் மாபெரும் கதையை உருவாக்கினர்.,ருத்ர
சேனன் பெண் வயிற்றில் (கிருஷ்ணனே கடவுள் அவதாரம் எடுக்க போறான் எனும் கட்டுக்
கதைகளை மக்களிடையே பரப்பினர்.
இடையர்களான,யாதவர்களை(மிதவாத
சத்ரியர்கள்) இணைத்து குரு வம்சத்தை நிர்மானித்தனர்.(ருத்ர வர்மன்
வழித்தோன்றல்கள்-வன்னியர்கள்,ருத்ர சேனன்
வழித்தோன்றல்கள்-இடையர்கள்) ஒற்றுமையாக வாழ்ந்த தமிழர் குடும்பங்களில் ‘தலைக்கட்டு’களை
உருவாக்கி பங்காளிச் சண்டைகளை
உருவாக்கினர்.அண்ணன் பேசும் மொழி தம்பிக்கு தேவையில்லை என தனித்தனி மொழி,தனித்தனி
நாடு என வர்ணாசிரம தர்மத்தை ஆரியர்கள் தோற்றுவித்தனர்.
ராமாயணம் மற்றும் மகாபாரதம் தெரிந்த மக்களின் சிந்தனைகளை
மறு சிந்தனைக்கு உட்படுத்தினால் மூட நம்பிக்கைகளை ஒழிக்கலாமே? எனும்
எண்ணத்தில், ‘அறம் காத்த வர்மாக்கள்’ எனும் நூலை (648
பக்கங்கள்)2013லிருந்து ,தயாரித்து, 2016ல் எழுதி முடித்தேன்.
இதை விவரிக்கும் பொருட்டு நான். ‘அறம்
காத்த வர்மாக்கள்’
எனும் நூலை
வெளியிட வேண்டும் அதுவும் அதை பெரியார்த் திடலில் வெளியிட வேண்டும் என முயன்றேன்
நான்,என் பள்ளிக்கால
நண்பனான புலவர் திரு.கபிலனை(பூபதி) எனக்கு விருது வழங்கிய நாளில் அந்த விழாவில்
சந்திக்க நேர்ந்தது,அப்போது அவருக்கும் விருது வழங்க இருப்பதாக
தெரிவித்தார்.நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன், காரணம், என்
பள்ளிக்காலத்திலிருந்தே இலக்கிய ரசனையுடன் பாடல் எழுதும் திறன் பெற்றவர்,என்னைவிட
இந்த விருதுக்கு இவரே தகுதியானவர் என்பதை நான் அவருக்கு தெரிவித்தபோது,நண்பர்
பூரித்துப்போனார். நான் பள்ளிக்கூடம் படிக்கும் காலத்தில் என்னோடு அமர்ந்து கொண்டு,வெள்ளைத்தாளில்
‘இதோ என் கவிதை’
என எழுதி என்னிடம் காண்பிப்பார்.நான் ஒரு சராசரி மாணவன்,அவ்வளவே.
காலப்போக்கில் நான் ஒரு எழுத்தாளர் ஆகிவிட்டேன் என அவரிடம் அறிமுகமானேன்.
நான் எழுதி வெளியிட்ட. ‘அறவழி
சுய சிந்தனையுடன் மகிழ்ச்சியுடன் வாழும் வழிகள்.’ நூலை
அவரிடம் தந்தேன். அந்த நூலைப் படித்து விட்டு ஒரு வாரம் கழித்து என்னிடம் வந்தார்.
‘நான்
கூட பெரியார் கருத்துக்களை ஆதரிப்பவன் தான்.ஆனால் என்னால் முழுமையாக என் வீட்டில்
அந்த சிந்தனைகளை பிரயோகிக்க முடியவில்லை.கள்ளூர் எனும் சிற்றூரில் பிறந்து,ஆடு
மாடு மேய்க்கும் வெய்யிலாளி இனத்தில் தோன்றி இது போன்ற ஒரு சிந்தனையை தூண்டும்
நூல் எழுதியது,என் பள்ளிக்கால நண்பன்,என
நினைக்கும் போது எனக்கு அது பெருமகிழ்ச்சி அளிக்கிறது,நாண்பா!’ என்றார்.
‘சரி, நீ
இதுவரை எத்தனை கவிதை தொகுப்பு வெளியிட்டு இருக்கின்றாய்?’ என்றேன்.
‘ஒன்று
மில்லை’ இதோ இவ்வளவு தான்’ என
10 ,20 எழுதப்பட்ட காகிதங்களை என்னிடம் தந்தார்.மேலும் சொன்னார், ‘ஆனால்,எங்கெல்லாம்
தமிழ் அமைப்பு உள்ளதோ அங்கெல்லாம் தேடிப்போய் என் கவிதைகளை காகிதத்தில் எழுதி
கைத்தட்டல் வாங்கி வருவேன்,இது தான் நான் கண்டது’ என்றார்.நண்பர்
இன்னும் வறுமையில் இருக்கின்றார் என நினைத்து,
‘சரி
இதுவரை நீ எழுதிய அனைத்து கவிதைகளையும் என்னிடம் கொடு, நான் உனக்கு ஒரு கவிதை
தொகுப்பை உருவாக்கித் தருகின்றேன்’ என்றேன்.
‘சரி’ என்றவர் இது நாள்
வரை என்னிடம் தரவில்லை.
வாங்கிக் கொள்கிறேன், நான்
படித்து விட்டு முடிவு செய்யலாம்’ என்றார்.
ஒரு வாரம் கழித்து என்னை என் வீட்டில் சந்தித்த நண்பர், ‘நண்பரே,நூல்
மிக அருமையாக அமைந்துள்ளது,
இது போன்ற ஒரு
கருத்தாழமிக்க பெரிய நூலை உருவாக்கி உள்ளீர்கள்,பெரியருக்குப்
பிறகு நீங்கள் தான் ,சொன்னதை செய்துள்ளீர்கள்.உங்கள் மகன் திருமணத்தை
உண்மையான சுய மரியாதை திருமணமா செஞ்சி முடிச்சிருக்கீங்க,
இந்த நூலை வெளியிட சரியான இடம் பெரியார் திடல் தான்,
எனக்கு ஆசிரியர்,வீரமணி
தலைமையில் இந்நூலை வெளியிட வேண்டும்
என்பது என் ஆசை,நான் அதற்கான பணியில் இன்று முதல் இறங்குகின்றேன்.வெகு
விரைவில் நூலை வெளியிடலாம்’
என்று சொல்லி
விட்டுப்போனார்.
சில நாட்கள் கழித்து என்னை தொடர்பு கொண்ட நண்பர்,கபிலன், ‘எல்லாம்
மேடையில் ஒரு பேச்சு பேசறான்,நேரில் ஒரு
பேச்சு பேசறான்,எவனும் நிஜமாக இருப்பதில்லை’ எனும்
வேதனையோடும் விரக்தியோடும் பேச்சை ஆரம்பித்தார்.நான், ‘என்னாச்சு?’ என்றேன்.திரு
வீரமணிக்கு,கலி பூங்குன்றன் என ஒரு உதவியாளர் உள்ளார்.அவர்
இந்தூலைப்படித்து விட்டு,
‘இப்பொழுது திரு வீரமணியாரை பார்க்க முடியாது,அவருக்கு
உடல் நலம் சரியில்லை,நீங்கள் வேறு யாரையாவது வைத்து நூலை வெளியிட்டுக்
கொள்ளுங்கள், என்று சொல்லி விட்டார். இப்பொழுது என்ன செய்யலாம்?’என்று
சொல்லிவிட்டு என் முகத்தை பார்த்தார்.‘எனக்கு
பெரியார் திடலில் யாரையும் தெரியாது,நீ
தான் பல காலம் அங்கே பழகியதாக சொல்கின்றாய்,உனக்கே
இந்நிலமை என்றால் என்னால் என்ன செய்ய முடியும்?’
No comments:
Post a Comment