Sunday, December 15, 2019

இ.பி-28


        121-படிப்பறிவற்றவர்களுக்கு அரசு வேலை

ஒவ்வொரு தீபாளியின் போது எங்களுக்கு போனஸ்வழங்கப்படும்.அந்த உத்தரவில் ஒரு சரத்தை நான் படித்தேன்.அதாவது, ‘தினக்கூலி ஊழியருக்கும் போனஸ் வழங்கலாம்என்று இருந்தது.
திருவான்மியூர் கிடங்கில் என்னிடம் பணி புரியும் திரு மூர்த்தி என்பவரை அழைத்து,
நீ,எந்த சங்கத்தில்உள்ளாய்?’ என்றேன்.
 ஐ.என்.டி.யு.சி
அப்படியானால்,நீ போய் இளவரியிடம் இதுபோன்று ஒரு சரத்து உள்ளது.எனக்கு போனஸ் கிடைக்குமா? என கேள்.’ என்றேன்.
அவன் அதே போன்று கேட்டுள்ளான்,ஆனால் அந்த இளவரி, ‘இது வழக்கமான ஒரு சரத்துதான் ஆனால் யாரும் இதைக் கொண்டு கிடங்கு தினக்கூலி ஊழியருக்கு போனஸ் வழங்கப்படுவதில்லை. இருப்பினும் இதை ஒரு டிமாண்ட்ஆக நிர்வாகத்தை கேட்கலாம்.என்று உடனடியாக நிர்வாகத்தை அணுகியுள்ளார்.
அப்போது நிர்வாகத்தினர், ‘ஒரு ஆண்டுக்கு இவர் என்னிடம் தினக்கூலியாக பணி புரிந்தார் என தர ஆய்வாளரிடம் சான்றிதழ் வாங்க முடியுமா?அதற்கு வருகைப்பதிவேடு பராமரித்திருக்க வேண்டும்என்றனர்.
என்னிடம் வந்த அந்த தினக்கூலி, ‘சார் வருகைப் பதிவேட்டின் ஒளி நகலும்,தங்களின் சான்றிதழும் கேட்டார்கள்என்றான்.சரி அதற்கென்ன? வருகைப் பதிவேட்டை உருவாக்கி, சான்றிதழ் கொடுத்தாப் போச்சி,என இரண்டையும் அவனிடம் ஒப்படைத்தேன்.
அதை வைத்து சென்னை மண்டலத்தில் அனைத்து தினக்கூலிகளுக்கும் அந்த ஆண்டு போனஸ் வழங்கப்பட்டது.என்னோடு பணியாற்ற்றிய அந்த கிடங்கு கண்காணிப்பாளர், ‘சார்,யாரும் இதுபோன்று தைரியமா செய்ய மாட்டாங்க.உங்களுக்கு உண்மையிலேயே நல்ல மனசு தான் சார்.
 இது போன்ற காரியங்கள் செய்வதால் எனக்கு என்ன நஷ்ட்டம் சார்?’
அந்த தினக்கூலிகள் பத்தாண்டு பணி நிறைவு பெற்ற  அடிப்படையில் நிரந்தர அடிப்படை ஊதியம் பெற காரணமாகிவிட்டது.
               *************
சென்னை மண்டல அலுவலகத்தில் வாராவாரம் எங்களுக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெறும்.அப்போது பெண் அலுவலர்களுடன் பழக வாய்ப்பு கிடைத்தது.அதுவரை நான் காஞ்சிபுர அலுவலக பெண் ஊழியரிடமோ,பெண் அலுவலரிடமோ பேசியது இல்லை.பள்ளிக் கல்லூரி காலத்தில் இருந்தே பெண்கள் என்றால் அறிவாளிகள்,நன்றாக படிக்க கூடியவர்கள் எனும் நம்பிக்கைதான் இதற்கு காரணம்.
ஒருநாள் ஒரு சகப் பெண் அதிகாரி என்னிடம் வந்து, ‘சார் எனக்கு ஒரு உதவி....
என்னங்க செய்யணும்?’

நீங்க அதிகாரிகளிடம் பேசுவதை கவனித்தேன். தைரியமா பேசறீங்க..,உங்களுக்கு வழங்கப்படும் நமூனாக்களுக்கு நீங்கள் நன்றாக விளக்கம் அளிக்கின்றீர்கள் என என் தோழி சொன்னாள்.
சரி,அதுக்கு என்னங்க இப்போ?’
ஒன்னுமில்ல சார்,எனக்கு ஒரு charge memo கொடுத்துள்ளார்கள்,அதற்கு ஒரு explaination(விளக்கம்) எழுதி தரமுடியுமா?’
சரிங்க எழுதி தருகின்றேன்,அதுக்கென்ன.. கொடுங்க
எழுதி கொடுத்தேன்,விளக்கத்தை ஏற்று அந்த பெண் அதிகாரியை விடுவித்தார்கள்.அது மட்டுமல்ல எங்களுக்கெல்லாம் ஒரு பெண் மேலதிகாரி, அந்தம்மாவிற்கு மேலதிகாரி தரும் தொல்லைகளை மனம் விட்டு என்னிடம் பேசினார்கள்.
அந்தம்மாவின் கணவர் வேறு நிறுவனத்தில் அதிகாரி.அவர்களுக்கு வழங்கப்படும் நமூனாக்களுக்கு வீட்டில் உள்ள கணவரிடம் கேட்டுத்தான் விளக்கம் அளிப்பார்கள் என்பதை சொல்லுவார்கள் மேலும் அந்த பெண் அதிகாரி சொல்வார்,நாம தனியா எந்த முடிவும் எடுக்க முடியாது,சார்.இவனுங்களுக்கு எல்லாம் கெட்டுப்போன புத்திசார்.
                          *****  
ஒரு நாள் பஜாஜ் கப் ஸ்கூட்டரை அடையாறு பகுதியில் ஒட்டிக்கொண்டிருந்த போது எனக்கு முன்னே ஒரு மாருதி கார் சென்று கொண்டிருந்தது.சிக்னலுக்காக கார் நின்றது.நான் காரை பின் தொடர்ந்து செல்லும் போது,திடீர் பிரேக் போடும் சூழல் ஏற்ப்பட்டது.அந்நேரம் பிரேக் பிடிக்காமல் முன்னே சென்ற கார் மீது இடித்து விட்டது.சாமர்த்தியமாக கியரை மாற்றி வண்டியை நிறுத்தி விட்டேன்.வண்டியை நிறுத்தி பார்த்த போது பிரேக் ஒயர் துண்டிக்கப் பட்டிருந்தது.நான் வண்டியை பழுது பார்க்கும் மெக்கானிக்கிடம் கேட்டபோது, ‘ஸ்கூட்டருக்கு எல்லாம் ஒயர் பிரேக் தான் சார்,’ என்றார்.
அன்றைக்கே மனம் வைத்தேன்,இனி ஸ்கூட்டரையே வாங்குவதில்லை என்று.அந்த ஸ்கூட்டரை காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தில் பணி புரியும் திரு பாஷா எனும் உதவியாளருக்கு ரூ 10 ஆயிரத்திற்கு விற்று விட்டேன்.உடனே மேலும் 10 ஆயிரம் போட்டு சென்னையில் பணிபுரியும் அலுவலக நண்பர் கடன்
முறையில் வாங்கிய Honda cd 100 மோட்டார் சைக்கிளை வாங்கினேன்
               
                122-ஆந்திராவிற்கு பணி மாற்றம்

1992-டிசம்பரில் என்னை ஆந்திரா மாநிலத்தில் அரிசி வங்க அனுப்பினார்கள். விஜயவாடாவில் திரு ரங்கசாயி (மேலாளர்,த.க) தலைமையில் ஒரு லாட்ஜில் தங்கி அவர் சொல்வது போல் செயல் பட வேண்டும்.என்னையும் என்னோடு ஒரு தர ஆய்வாளரையும்  இணைத்து காகிநாடாவிற்குஅனுப்பினார்.அங்கே தங்கி அரிசியை தரம் பார்த்து ரயில் வேகனில் ஏற்ற வேண்டும்.அந்த வேலை முடிந்ததும்.திரும்பவும் விஜயவாடா வந்துவிட்டேன்.திரு ரங்கசாயியை அவருடைய அறையில் சந்தித்தேன். உடனே அவர், ‘ஏன் வந்து விட்டீர்கள், வேலை முடிந்தா வந்து விடுவதா? அடுத்து என்ன செய்ய வேண்டும் என தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கலாமே?’ என்றார்.

நான், ‘சார்,நான் என் அப்பா அம்மாவுக்கு நினைவு நாள் அனுசரிக்கு என் கிராமத்திற்கு செல்ல வேண்டும்,அதற்கு விடுமுறை வேண்டி தங்களின் அனுமதிக்காக வந்தேன்.’ என்றேன்.
உடனே அவர், ‘இங்கு வந்த பிறகு வேலை முடியாம எங்கும் போக முடியாது’ என்றார்.நான் அதற்கு மேல் அவரிடம் எதுவும் பேச வில்லை.எப்படியும் அடுத்த நாள் ரயில் ஏறிவிடுவது எனும் முடிவோடு நான் என் அறைக்கு திரும்பினேன்.அன்று இரவு 10 மணி இருக்கும், அவருடைய உதவியாளர் என் அறைக் கதவை தட்டினார்.கதவைத்திறந்த நான் அவரை என்ன ஏது என விசாரித்தேன்.அவர்,
‘நீங்க யாருக்கும் சொல்லாமல் ஊருக்கு சென்று காரியம் முடிந்ததும் திரும்ப வந்து விடுங்கள்,என அய்யா உங்களிடம் சொல்லச் சொன்னார்.’ என்றார்
அவர் சொன்னது போல் நான் எங்கள் கிராமத்திற்கு குடும்பத்துடன் சென்று  அப்பா அம்மாவின் நினைவு நாளை அனுசரித்துவிட்டு அடுத்த நாள் விஜயவாடா சென்று விட்டேன்.
        
          123-அரவை முகவரின் நட்டத்தை தவிர்த்தேன்

விஜயவாடா சென்றதும்,நான் திரு ரங்கசாயியை அவரது அறையில் சந்தித்தேன். அப்போது அவர், ‘சூரியாபேட்டையில் (ஆந்திர மாநிலம், நலகொண்டா மாவட்டம்) ஒரு முகவரிடம் சுமார் 5 ஆயிரம் அரிசி மூட்டைகள் உள்ளன ,அரியின் தரம் சரியல்லை என இதற்கு முன் சென்ற தர ஆய்வாளர்கள் reject செய்து விட்ட நிலையில் 4 மாதங்களாக நிலுவையில் உள்ளது என அந்த அரவை முகவர் மிகுந்த வேதனையுடன் என்னிடம் புகார் அளித்துள்ளார்.நீங்கள் அதன் உண்மை நிலை அறிந்து எனக்கு தகவல் தரவேண்டும்என்றார்.மேலும் அவர்,
உங்களை அழைத்துச் செல்ல அந்த முகவரின் கார் நாளை வரும்,இருப்பினும் நீங்கள் உங்கள் கடமை தவறமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும்என்றார்.
 சரிங்க சார்,நான் நாளை புறப்படுகிறேன்என சொல்லிவிட்டு நான் என் அறைக்கு சென்று விட்டேன்.

அடுத்த நாள் காலை கார் வந்தது.நான் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள சூரியா பேட்டைக்கு மாலை 4 மணிக்கெல்லாம் சென்று விட்டேன். எனக்கு முன் என் சக ஊழியர் இது தரமற்றது என ஒதுக்கிய அரிசி மூட்டைகளை மேலிருந்து கீழாகவும்,கீழிருந்து மேலாகவும் தரம் பார்த்தேன்.
உள்ளே உள்ள கீழ் மூட்டைகளை குத்திப்பார்க்க வசதியாக மேலிருக்கும் மூட்டைகளை அப்புறப் படுத்தச் சொன்னேன்.
அனைத்து அரிசி மூட்டைகளும் தரமானவை, இதை ஏன் வேண்டாமென்று ஒதுக்கினார்கள் என எனக்கு தெரியவில்லை.
தொலைபேசி மூலம்  தொடர்பு கொண்டேன்   ‘அரிசியின் தரம் நன்றாக உள்ளது’ என விஜயவாடாவில் தங்கியிருக்கும் திரு ரங்கசாமி,மேலாளர்(த.க) அவர்களுக்கு தகவல் தெரிவித்தேன். அவர் சந்தோஷப்பட்டார்.அவர் ஒரு நேர்மையான அதிகாரி.தன்னுடைய நேர்மைக்கு களங்கம் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.என் தொலைபேசி செய்தி அவருக்கு மகிழ்ச்சியை தந்தது.

உடனே அவர், ‘நீங்க உடனே ரயில் வேகன்களில் அத்தனை அரிசி மூட்டைகளையும் எற்றுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்என உத்தரவிட்டார்.அவர் சொன்னது போல் இரண்டு நாளில் அனுப்பி விட்டேன்.அந்த முகவர் என்னிடம் வந்து, ‘அய்யா,எனக்கு ஏற்படவுள்ள ஒரு மிகப் பெரிய நஷ்ட்டத்தை தவிர்த்தீர்கள்,உங்களுக்கு நான் நன்றி சொல்வதை தவிற வேறு ஒன்றும் இல்லை,இருப்பினும் நீங்கள் உங்கள் ஊரை விட்டு எங்கள் ஊருக்கு வந்துள்ளீர்கள்,உங்களை எங்கள் மாவட்ட்தில் இருக்கும் மிகப்பெரிய சுற்றுலாத்தலமான, ‘நாகர்ஜ்ஜுனா சாகர்ஐ நீங்கள் பார்த்துவிட்டு போகவேண்டும்,அதற்காக ஒரு காரை ஏற்பாடு செய்துள்ளேன்.என்றார்.
நான் தயங்கினேன்.அதற்கு அவர், ‘நான் உங்கள் அய்யாவிடம் அனுமதி வாங்கி விட்டேன்என்றார். சரி என சொல்லிவிட்டு நான் ,அந்த பிரம்மாண்டமான நீர் தேக்கத்தை கண்டுகளித்து விட்டு அன்று இரவே காரில்  விஜயவாடா திரும்பி விட்டேன். (விஜயவாடாவிற்கும் சூரியாபேட்டைக்கும் 600 கி.மீ. இருக்கும்) விஜயவாடா விற்கும் சூரியபேட்டைக்கும் இடையில் இருக்கும் இன்னொரு நகரம்

மிரியால் குடா’.
இது ஆசியாவின் மிகப்பெரிய அரிசி களஞ்சியம் என சொல்லலாம்..மிளகாய் பயிருக்கும் பெயர் பெற்றது. என்னை மிரியால்குடா அருகே உள்ள விஷ்ணு புரம் எனும் ஊரில் உள்ள கூட்ஸ் முனைக்கு அரிசி ஏற்றி தமிழ் நாட்டின் பல நகரங்களுக்கு அனுப்ப உத்தரவிட்டனர். விஷ்னுபுரத்தில் நிறைய சிமென்ட் கம்பனிகள் உள்ளன.அந்த அளவுக்கு காய்ந்து போன பூமி.
இந்த ஊரின் வெப்ப தாக்குதல் பற்றி சொல்ல வேண்டுமானால் ஒரே வரியில் சொல்லலாம் அதாவது, ‘இந்த ஊரில் சிந்திப்போன அரிசியை கொத்தி தின்ன காக்கைகள் கூட வராது.அந்த அளவுக்கு குடிக்க தண்ணிர் கிடையாது.நான் காலையிலிருந்து மாலை 5 மணி வரை விடாமல் வேலை செய்ய முடிந்தது. அரிசி ஏற்றிவரும் லாரிகளை இறக்கிய அரிசி மூட்டைகளை ,வேகனில்  ஏற்றி ஒப்புதல் சீட்டு (preparation of doccuments : acknoweledgements & invoice) வழங்க வேண்டியது என் வேலை.அதற்கு மேல் என்னால் ஒரு வரிகூட எழுத முடியாத நிலை.காரணம் உணவும் இல்லை,குடிக்க தண்ணியும் இல்லை.
இன்னும் ஏராளமான லாரி லோடுகளை clear செய்ய வேண்டும்.லாரி ஓட்டுநர்களிடம் சொன்னேன்

யாராவது குடிக்க தண்ணி ஏற்பாடு செய்யுங்கள்,அப்பதான் வேலை செய்ய முடியும்,இல்லை என்றால்,அவ்வளவு தான்,
நான் போகிறேன்.யாரும் தண்ணி கொண்டுவர போவதாக தெரியவில்லை. லாரி ஓட்டுநர்களின் கூச்சல் அதிகமாகிவிட்டது.6 மணிக்கு யாரோ ஒரு ஓட்டுநர் ஒரு  குடத்தில் தண்ணி கொண்டு வந்தார்.
கையில் ஊற்றுங்கள் குடிக்கின்றேன்என்றேன். அப்போதுதான் எனக்கு புத்துணர்ச்சி வந்தது.அந்த வேலை முடிய இரவு 10 மணி ஆகி விட்டது.
பணி முடித்த செய்தியை திரு ரங்கசாயிக்கு தெரிவித்தேன்,அப்போது அவர், ‘அந்த பணியை செய்ய உங்களைப் போன்ற நேர்மையான ஊழியரால் மட்டுமே முடிந்தது, நன்றி!என்றார்
      
       124-தண்டையார்பேட்டைக்கு பணி மாற்றம்

ஆந்திர அரிசி இயக்கம் முடிந்ததும்,சென்னை திரும்பினேன். என்னை தண்டையார் பேட்டை DLO (DOUBLE LOCK OFFICER) ஆக மாற்றினார்கள்.
( அரவை முகவரின் இரட்டை பூட்டு அலுவலர்.என் அலுவலக பூட்டு, அரவை முகவரின் பூட்டு என இரண்டையும் ஒன்றாக இணைத்து ஒரு தாழ்ப்பாளில் தொங்க வேண்டும்! என் மேல் அதிகாரிகள் இதை ஆய்வு செய்வார்கள்.)
நான் ஒரு அரவை முகவர் ஆலைக்கு சென்றேன்.அதன் உரிமையாளரை சந்தித்து,இனி நான் உங்கள் அரிசி ஆலையின் DLO என என்னை அறிமுகம் செய்து கொண்டேன். அவர் , ‘அப்படியா?’ என சொல்லிவிட்டு போய்விட்டார். நான் அந்த ஆலையின் கணக்குப் பிள்ளையிடம், ‘ஆலை தொடர்பான கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டும்,பதிவேடுகளில் உள்ளது போல் இருப்பு நிலவரத்தை சரி பார்க்க வேண்டும் என்றேன்.
மேலும் நான் அந்த கணக்கப்பிள்ளையிடம், ‘என்ன, ஒரு ஊழியர் வந்துள்ளேன்,உங்க முதலாளி,ஒரு அலட்சியமாக போகிறார்?’.
அதற்கு அவர்,அவருடைய முதலாளியை விட்டுக் கொடுக்க மனமில்லாமல்,

 சார்,எங்க முதலாளி நல்லவர் சார்,அவரை எல்லா அலுவலருக்கும் பிடிக்கும்.......!...?’
அவரும் அதற்கு உடன் பட்டு எல்லா இருப்பு நிலவரத்தையும் காண்பித்தார்.ஆய்வின் முடிவில் நான் அனைத்து நெல் மூட்டைகளையும் சரி பார்த்து கிடங்கை பூட்டி சாவியை நான் எடுத்துக் கொண்டு போய்விட்டேன்.
இதே போன்று எனக்கு 5 மில் ஒதுக்கப்பட்டது.எல்லா அரவை முகவர் கிடங்குகளையும் பூட்டி நிறுவனத்தின் இறுப்பை என் பாதுகாப்பில் வைத்துக் கொண்டேன். இப்படி செய்ய வேண்டும் என்பது நிறுவனத்தின் விதி.
இப்படியாக ஒரு மாதம் சென்றது.ஒரு நாள் அந்த அரவை முகவர்,என்னை பார்த்தார்.
சார் ,சென்னை மாநகரின் செல்வந்தர்களில் நானும் ஒருவன்.நமது நிறுவனத்தின் சொத்தை (நெல்&அரிசி இருப்பு) எப்போ வேண்டுமானாலும் நீங்கள் சோதனை செய்து கொள்ளலாம்.உங்களுக்கு எந்தவிதமான இழப்பும் ஏற்படுத்த மாட்டேன்.நீங்கள் கிடங்கை பூட்டிக்கொண்டு போவது எங்களுக்கு அவமானமாக உள்ளது,சார். இதுவரை யாரும் இதுபோன்று எங்களிடம் நடந்து கொண்டது  இல்லை.உங்களை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.என்றார், என்று சொன்னவர் என்னை, அவருடைய லாக்கர்’-ஐ பார்வையிடும் படி கூறினார்.ஏராளமான பணக்கட்டுகள் அடுக்கி வைக்கப் பட்டு,இருப்பில் இருந்தன.
எனக்கு எதற்கு இதெல்லாம் காட்டுகின்றீர்?’
சார்,உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் சார்,....சொல்லுங்க..?’
எனக்கு எதற்கு உங்கள் பணம்?’
அவர்  எதுவும் பேசாமல் என்னைப் பார்த்தார்.பின்பு நான் பேச ஆரம்பித்தேன்.

என்னுடைய கடமை என்ன என்பது உங்களுக்கும் தெரியும்.நீங்கள் எங்கள் நிறுவனத்துக்கு தரமான அரிசி தயாரிப்பதிலும்,உங்கள் வியாபாரத்தில் நட்டம் வராமல் பார்த்துக் கொள்வதும் எனது கடமை. எனக்கு நீங்கள் பணம் கொடுப்பதால் அந்த நட்டத்தை எப்படி சரி செய்வீர்கள்?’ அவர் சொன்னார், ‘சார்,எங்களுக்கு வழங்கும் அரவைக்கூலி போதுமான அளவுக்கு நிறுவனம் வழங்குகிறது.தவிடு,குருணை ,உமி,தவிடு,குருணை போன்ற துணைப் பொருட்களை வெளியில் விற்பதால் எங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. உங்களுக்கு எதாவது பண உதவி செய்வதால் எங்களுக்கு தொழிலில் நம்பிக்கை வரும்.இல்லை எனில் இந்த அதிகாரி நம்மை கெடுத்துவிடுவாரோ எனும் பயம் எங்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்.அதற்காக ,நாங்கள் உங்களுக்கு செய்யும் உதவியை ஏற்றுக்  கொள்ள வேண்டும்.

முதலில் நீங்கள் உங்கள் லாக்கரை மூடுங்கள்.எனக்கு எந்த பணமும் வேண்டாம்.உங்கள் தொழிலில் எந்த சுணக்கமும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது என் கடமை.மேலும் நான்,
உங்கள் மீது நம்பிக்கை உள்ளது.சாவியை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.எந்நேரம் கிடங்கை ஆய்வு செய்தாலும் இருப்பு நிலவரம் சரியாக இருந்தால் போதும்.
 என சொல்லி விட்டு சாவியை கொடுத்து விட்டு அடுத்த மில்லுக்கு சென்றேன்.
அந்த அரிசி ஆலையின் நண்பர் ஒருவர், மாதாந்திர ‘சீட்’ பிடிக்கும் தொழில் செய்து வந்தார்.நான் அப்போது அந்த ஆலை அதிபரிடம்,
‘எனக்கு 1 லட்ச ரூபாய் சீட்டுக்கு என்னை பரிந்துரையுங்கள், நான் மாதாமாதம் தவறாமல் தவணை கட்டி விடுகிறேன்.’ என்றேன் . ‘சரி,சார்.அதற்கென்ன கட்டுங்கள் நான் சொல்கிறேன்.’ என்றார்.மேலும் நான் முதல் ஒன்று அல்லது இரண்டாவது தவணையில் எனக்கு சீட்டு எடுத்துக் கொடுங்கள்’ என்றேன், ‘சரி.சார்’

எங்க மாமா,(கடைசீஅக்காவின் கணவர்) அடிக்கடி சொல்வார்,
இங்கு மெயின் ரோட் ஒட்டினாப்போல ஒரு இடம் வருது,வாங்கிப்போடு.’ என்பார்.அதற்கு ஏற்றற்போல்,அந்த சீட்டுத் தொகையில் தான்(ரூ.95 ஆயிரம் ) மணலி புது நகரில் பிரதான சாலை ஓரம் ஒரு கிரவுண்டு வீட்டு மனையை எங்க நாப்பாளைய மாமா வாங்கித்தந்தார்.என் வருங்கால சேமிப்பாகவே அதை கருதுகிறேன்.இன்று அதன் மதிப்பு ஒரு கோடியைத் தாண்டும்.

நான் சென்னையை விட்டு மாற்றலாகி திருவள்ளூருக்கு வந்துவிட்ட பிறகும் வெகு நாட்களாக என் வீட்டு முகவரிக்கு, அவர் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு  மறக்காமல் அழைப்பிதழ் அனுப்புவார். சங்க வளர்ச்சி நிதியாக நாங்கள் அவரை அணுகியபோது, ‘இந்தா சார்,செக் புக்,நீங்கள் உங்களுக்கு வேண்டிய நிதியை போட்டுக்கொள்ளுங்கள்என என்னிடம் செக் புத்தகம் கொடுத்தார், நான்
இரண்டாயிரம் போதும்,எல்லாரிடமும் அதைத்தான் கேட்கிறோம்என கூறிவிட்டு,அவர் பெரிய மனதுக்கு நன்றி சொல்லி நகர்ந்தோம்.  .
                         ****

No comments: