Tuesday, December 24, 2019

இ.பி-37


                  166-பேத்தி உதயமானாள்

2009 ஜூன் மாதம் 13 தேதியில் மகன் வழியே ஒரு பேத்தி பிறந்தாள்.புதுமையான தமிழ் பேராக அமைய வேண்டும் என ஆய்வு செய்து அவனிக்காஎனும் தமிழ் பேர் வைத்தோம்.
                 
            167-மலேசியா-சிங்கப்பூர் பயணம்

மகன் வினோத்,தான், பணி புரியும் நிறுவனத்தில் பயண சலுகையை பயன் படுத்திக்கொள்ளலாம் என என்னிடம் தெரிவித்தான்.சரி என்றேன்.மலேசியா சிங்கப்பூர் செல்வது என முடிவு செய்யப்பட்டது.2011 மார்ச் மாதம் சென்னை மீனம்பாக்கம் வழியாக மலேசியா சென்று அங்கு பார்க்க வேண்டிய இடங்களை பாரத்துவிட்டு பின் தரைவழியாக சிங்கப்பூர் செல்வது என முடிவு செய்யப்பட்டது.சென்னை மீனம்பாக்கம் நான் செல்வது அதுதான் முதல் முறை,விமானத்தை பார்த்ததும் அப்போதான்.பள்ளி நாட்களில் என் வகுப்பு மாணவர்கள் விமானத்தை பார்வை இட சுற்றுலா சென்ற காலத்தில் என்னை என் பெற்றோர்கள் அனுப்பவில்லை,காரணம் 5 ரூபாய் இல்லை.
மொத்தம் 6 நாட்கள் சுற்றுப்பயணம்.இரண்டு மகன்கள், என் பெரிய மருமகள், இரண்டு வருட குழந்தை அவனிக்கா ஆகியோர் கண்டு களித்தோம்.

உலகில் தமிழர்கள் அதிகம் வாழும் இடங்களில் மலேசியா-சிங்கப்பூர் முதலிடம் வகிக்கின்றது.
தமிழர்கள்(வன்னியர்கள்) எங்கெல்லாம் வாழ்கின்றனரோ அங்கெல்லாம் பார்ப்பனர்கள் வாழ்வார்கள். பார்ப்பனர்களுக்கு கோயில் கட்டி அதில் அவர்களை அர்ச்சகர்களாக பணியிலமர்த்தி பார்ப்பனர்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தினர், வன்னியர்களுக்கும் அரக்கர்கள் எனும் பெயர் நீங்கி பார்ப்பனர்களை பாதுகாக்கும் சத்ரியர்கள்எனும் பட்டப் பெயர் விளங்கியது,இப்பொழுதும் விளங்குகிறது.
ராமனின் தாத்தா,சூரியவர்மன் வழித்தோன்றல் ஜெயவர்மன் .இவனுக்கும் இரண்டாம் ஜெயவர்மனுக்கும் ஆட்சியில் பங்கு வேண்டி பங்காளி சண்டை.இதில் பார்ப்பனர்கள் தலையிட்டு இரண்டாம் ஜெயவர்மனிடம், ‘நாங்கள் உனக்கு வழி காட்டுகிறோம் என சொல்லி தனி மொழி,தனி நாடு என அமைத்து தருகிறோம் என கிழக்கு நோக்கி பயணித்தனர்.அங்கு குடியேறிய நாடுகள் தான் மலேசியா சிங்கப்பூர்,தாய்லாந்து,கம்போடியா போன்ற நாடுகள்.!
                  **************
                 168-பெங்களூரில் சொந்த வீடு

2011-ல் பெங்களூர் கஸ்த்தூரி நகரில் எனது சம்பந்தி தன் மகளுக்கு ஒரு வீட்டுமனை வாங்க முயற்சித்தார்.மகன் இணைய தளத்தில் தேடினான். அந்த வீட்டு மனையை ரூ.40 லட்சத்தில் பதிவு செய்யப்பட்டு அந்த ஆண்டே வீடு கட்ட ஆரம்பித்தோம்.
வீடு கட்ட, திருவள்ளூரில் மகன் வினோத்தின் நண்பன் கட்டுமான நிறுவனம் நடத்தி வருவதால்,அவன் மூலமாக பெங்களூரில் அவனுடைய பொறியியல் பிரதிநிதியை அனுப்பி வீடு கட்ட ஏற்பாடு ஆனது.ஒப்பந்தம் போடப்பட்டது.ரூ1 லட்சம் முன் பணம் கொடுக்கப்பட்டது. பெங்களூரிலிருந்து மகன் பேசினான்,
‘அப்பா...,ஒப்பந்தம் போட்டு வீடு கட்டினாலும்,நீங்க வந்து கட்டிட வேலை எப்படி நடக்கின்றது என வந்து கவனிங்கப்பா’ என்றான்.நானும் சில நாள் கழித்து சென்றேன்.கடகால் போடப்பட்டு பாதியில் பணி நிற்கிறது,மேலும் ரூ 20 ஆயிரம் வேண்டும் என அந்த ஒப்பந்தகாரர் மகனிடம் வாங்கி விட்டான்.
 நான் அந்த ஒப்பந்த காரரை கேட்டேன்,
‘முன் பணம் ரூ.1 லட்சம் வாங்கி விட்டு மேலும் ரூ 20 ஆயிரம் ஏன் வாங்கினீர்கள்? நீங்கள் செய்த மொத்த செலவினமும் 20 ஆயிரம் கூட ஆகவில்லையே!’ என்றேன்.அவன், ‘இல்லை ,அந்தப் பணம் இருக்கட்டும்’ என்றான்.
‘எதற்கு உங்களிடம் வீணாக ரூ 1 லட்சம் இருக்க வேண்டும்?’ என்றேன்.
‘சிமென்ட் மூட்டைகள் தட்டு முட்டு சாமான்கள் வைக்க ‘டென்ட்’ போட்டேன். கட்டுமானப் பணிக்கு உண்டான பொருட்களை வாங்கினேன்.’ என்றான்.
நான் மகனிடம் இதை தெரிவித்தேன்,அவன், ‘அதற்கெல்லாம் நான் தான் காசு கொடுத்தேன்பா’ என்றான்.
மீண்டும் அவனை இதைப்பற்றி கேட்க நினைத்த போது அவன் காணவில்லை, சென்னைக்கே சென்று விட்டான்.நான் மகனிடம்.

‘அவன் நேர்மையற்றவனாக தெரிகிறான்.அவன் தேவை இல்லை என சொல்லி விடு,நாம் தினக்கூலி கொடுத்து வீடு கட்டிக் கொள்ளலாம்.’அவ்வாறே,மகன் திருவள்ளூரில் இருக்கும் கட்டுமான நண்பரிடம் தெரிவித்தான்.
வாங்கிய முன் பணத்தை திருப்பி கொடுக்கச் சொன்னால், ‘எல்லாம் செலவாகிவிட்டது’ என்றான். நான் திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கும் ‘குற்றப்பிரிவு’ அலுவலகத்தில் புகார் அளித்தேன்.அவன் என்மீதே புகார் அளித்தான்.
என்னை சாதிப்பேர் சொல்லி இழிவு படுத்தியதாக எழுதி கொடுத்தான்.நான் அந்த அதிகாரியிடம் , ‘அவன் என்ன சாதி யென்றே எனக்கு தெரியாதே,தெரிந்தால் தானே சாதி பேர் சொல்லி திட்ட!’
காவல் அதிகாரி, ‘...............’

‘நான் என்ன சொல்லி திட்டினேன் என எழுதிக் கொடுக்கச் சொல்லுங்கள்’ என்றேன்.
அந்த அதிகாரி, ‘அவன் கூலிக்காரன் சார் போனாபோகுது விட்டுத்தள்ளுங்கள் சார்’ என்றார்
‘நான் சொல்லாத வார்த்தைகளை சொன்னதாக பொய் சொல்கிறான்.அதெப்படி சார் விட முடியும்?’ மேலும் நான்,
‘வாங்கிய முன் பணத்தை தவணை முறையில் திருப்பி தந்து விடுகிறேன்’ என எழுதி கொடுக்கச் சொல்லுங்கள்’ என்றேன்.
அந்த அதிகாரியும் ,அவனை மிரட்டி அதே போன்று எழுதி வாங்கி அனுப்பினார்.போனவன் போனாவன் தான்!
நான்,வீட்டு மனையின் எதிரில் ஒரு கோயம்பத்தூர் வாசியின் வீட்டில் காவலராக பணி புரியும் திரு ராஜா என்பவரை அணுகினேன்.
அவர், ‘தினக்கூலிக்கு வீடு கட்ட ஆட்களை நான் ஏற்பாடு செய்கிறேன்,சார்என்றார்.
சொன்னபடியே ஒரு மலையாளியை ஏற்பாடு செய்தார்,தினமும் ஒரு உதவியாளரை வைத்து கட்டுமான வேலைகளை செய்து வந்தார்.நான்கு மாதங்களில் வீடு கட்டி முடிக்கப்பட்டது.
குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்பு தரும்போது,அந்த மலையாளி தனக்கு ரூ.1 ½ லட்சம் தர வேண்டும் என மகனை கேட்டுள்ளார்..
நான் அந்த மலையாளியை அழைத்து, ‘உனக்கு எதற்கு அவ்வளவு பணம் தர வேண்டும்?’. என்றேன்.தினமும் நீங்கள் செய்த வேலைக்கு சம்பளம் வாங்கிக் கொண்டாயே?’

அப்படித்தான்,சதுரத்திற்கு இவ்வளவு என்று கணக்கு இருக்கின்றது,அதன் படி நான் தினமும் கூலி வாங்கினாலும் ஒப்பந்த முறையில் எனக்கு 1 ½ லட்சம் தரவேண்டும் என்றார்.
அப்படி எந்த ஒப்பந்தமும் போடவில்லையேஎன்றேன்.
ஒப்பந்தம் போட வில்லை என்றாலும் நீங்கள் தந்து தான் ஆகவேண்டும்.நான் அந்த காவலரை அழைத்து, ‘இவர் என்னப்பா 1 ½ லட்சம் கேட்கிறார்,அப்படி எதுவும் பேசவில்லையே,நீ தானே தினக்கூலி என அழைத்து வந்தாய்.என்றேன்.
அந்த காவலரின் மனைவியும் இந்த மலையாளியும் ஒரு கூட்டணி அமைத்து என் மகனிடம் பணம் பறிக்க இருப்பதை உணர்ந்தேன்.இதற்கு அந்த கோயம்புத்தூர் காரரும் உடந்தை.என் மகன், ‘என்னப்பா, இதை எப்படியாவது செட்ல் செய்யுங்கப்பாஎன்றான்.நான் அந்த மலையாளியை அழைத்து ,
சும்மா,என் மகனை பணம் வேண்டும் என தொந்தரவு செய்தால், நான் போலீசுக்கு போக வேண்டி இருக்கும்.என்றேன்.
அவன், ‘நீங்க எங்க வேண்டுமானாலும் போங்க,எனக்கு உங்களிடம் எப்படி பணம் வாங்குவது என தெரியும்என்றான்.நான் ராம்மூர்த்தி நகர் காவல் நிலையத்தில் எழுத்து மூலமாக புகார் அளித்தேன்.அந்த காவல் அதிகாரி அவனை கூப்பிட்டு விசாரிக்காமல் என்னையும் அழைத்து அவனோடு விசாரித்தார்.அந்த மலையாளிக்கு உள்ளூர் பெரிய மனிதர்,அந்த கோயம்புத்தூர் காரர் சிபாரிசு செய்தார்கள்.

என்னை அழைத்த அந்த காவல் அதிகாரி,என்னிடம் (அவருக்கு தமிழ் தெரியாது),
‘what is the problem?,why you have not paid to him as you assured ?”
Sir,I have not made any writtern commitments,even I  have not assured him orally!
Poor fellow,as he was labourer,let him have some benefits,please pay him as he demanded.
Why sir?,as a right to him, he daily got wages after  finishing work.
Ok sir,make arrangements to pay him,as he demanded!
Sir, it is not your duty settle the dispute between us,you ought to take action on my pettion accordingly,
because I am the first petitioner,whether,he gave any pettion?
The inspector of police blinked and laughed
Sorry sir,(புன் முறுவலுடன் சொன்னார்)you may go,he will not come across in your way.
இருப்பினும் நான் எனது மகனிடம் கூறினேன், ‘பாவம், அவன் மீண்டும் வந்தால் ஒரு 50 ஆயிரம் கொடுத்துவிடு, சொன்னபடிவீடு கட்ட பாடு பட்டவன். என்றேன்.அடுத்த நாள் என் மகன் அவனை கூப்பிட்டு நான் சொன்னவாறு அந்த மலையாளிக்கு,ரூ.50 ஆயிரம் கொடுக்க முன் வந்தான்.ஆனால் அவன் வாங்க மறுத்து விட்டான்.நன்றாக பேசி பழகி வந்த காவலர் மனைவியும் என்னிடம் பேசுவதில்லை.நான் என் மகனிடம்,

அந்த காவலர்தான் அவனை ஏற்பாடு செய்தார்,அவரிடம் அந்த ரூ.50 ஆயிரத்தை கொடுத்து விடு,’ என்றேன்.அந்த வெய்யிலாளி
அப்படி வாங்குவது நால்லா இருக்காது,எனக்கு வேண்டிய அளவு செய்து விட்டீர்கள்,அது போதும்என்றார்பேசாத தொகையை அவன் கேட்பது போல்,அவனுக்கு கொடுப்பது அர்த்தமற்று போய்விடும்,நாம் ஏமாந்தது போல் ஆகிவிடும்,சரி விட்டு விடுஎன்றேன்.
அதன் பிறகு குடிநீர் இணைப்பை வேறு நபரை வைத்து முடித்துக் கொண்டோம்.
                        ***********

                168-முதல் நூல் உருவாக்கம்               
2010-ல் 2008லிருந்து என்  வலைதளத்தில் (blogger) வெளியிட்ட  எழுத்துக்ளை எல்லாம் புத்தக வடிவில் கொண்டுவர  நினைத்தேன். காரணம்,நமது மக்கள் இணையதள பயன்பாடு வெகு குறைவாகவே இருந்தது.
திருவள்ளூரில் உள்ள அச்சுக்கூடங்களை எல்லாம் சென்று, ‘நூல் வெளியிடுவீர்களா?’ எனக் கேட்டேன். நீங்கள் சென்னைக்குத்தான் போக வேண்டும்என கூறிவிட்டனர்.என் கையில் இருப்பது,120 பக்கங்கள் கொண்ட .அறவழி சுய சிந்தனையுடன் மகிழ்ச்சியுடன் வாழ-ஒரு வழிகாட்டிஎனும் dtp செய்யப்பட்ட ஒளி நகல்.இந்த நூலுக்கு புகழ் பெற்ற அறிஞர்கள் அல்லது தலைவர்களிடம் அணிந்துரை வாங்க வேண்டும் என்பது என் ஆசை.
இந்த நூலில் கூறப்பட்ட பல சேதிகள் புதுமையான சிந்தனைகளை தூண்டக்கூடியவை.ஆம்,‘உலகைப் படைத்தது கடவுளாகவே இருக்கட்டும்,அதைப்பூட்டி வைத்து பூஜை செய்தால் உன் பேச்சை கேட்குமா?’
*திராவிடம்-தேவை மறு சிந்தனை.*பஞ்சாங்கமும் பரிகாரமும்- போன்ற புதிய சிந்தனைகளை எழுதியிருந்தேன்.
இந்த கருத்துக்கள் மருத்துவர் ராமதாசு, திரு.திருமாளவன், மற்றும் திரு.சீமான் போன்றோர்களின்  கவனத்தை ஈர்த்தன. 2010-ல் திருவள்ளூருக்கு திரு சீமான் வருவதாக poster ஒட்டியிருந்தார்கள். திருவள்ளூரில் பொங்கல் திருவிழா கொண்டாட வந்தார்.
நான் அவரைச் சந்தித்து என் கையில் இருந்த அந்த dtp வடிவ நூலைத் தந்து என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.
அவர் என் கருத்துக்களை கூர்ந்து கவனித்தார்,மேலே குறிப்பிடப்பட்ட கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டார். 

 நான் இதை முழுவதும் படித்துவிட்டு அணிந்துரை எழுதி தருகிறேன்,ஒரு வாரம் நேரம் ஒதுக்குங்கள் என்றார்.நான் சரிங்க அய்யாஎன்றேன்.
ஒரு வாரம் அல்ல இரண்டு வாரம்,மூன்று வாரம் என அவருடைய இயக்கத்தைச் சார்ந்த மணவாளநகர் நண்பரை தொடர்ந்து சந்தித்தேன்.
ஒரு பதிலும் இல்லை.ஆனால் அதன் பிறகு மேடையில் பேசிய திரு.சீமானின் பேச்சில் மாற்றம் தெரிந்தது,அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சியே.
அதன் பிறகு,ஒரு நாள் என் வேளச்சேரி சம்பந்தி பேசினார்,அவர் முன்னாள் பாமக சட்டமன்ற உறுப்பினர் திரு மூர்த்திக்கு பழக்கம்,மருத்துவர் அய்யாவிடம் சந்திக்க நேரம் கேட்டு வாங்கித்தர சொல்லியிருந்தேன்.ஒரு நாள் எனக்கு தொலைபேசி மூலம் ஒரு அழைப்பு வந்தது, ‘நீங்கள் சென்னை தேவநேய பாவானர் அரங்கத்துக்கு வந்து விடுங்கள்,அங்கே மருத்துவர் அய்யா, மற்றும் திருமாவளவன் ஆகியோர் சங்கமிக்கின்றனர், என்று.அந்நேரம் தங்கள் நூலை அவர்களிடம் தந்துவிட்டு அணிந்துரை வழங்க வேண்டிக் கொள்ளலாம்என்றனர்.
மருத்துவர் அய்யா தன் உரையை முடித்துக் கொண்டு அவசர வேலை உள்ளதாக வெளியேறிவிட்டார்,
அடுத்து திருமாவளவனை சந்தித்தேன்,என்னிடம் உள்ள அந்த dtp வடிவ நூலைத் தந்து , ‘அய்யா,தங்கள் இந்த நூலுக்கு அணிந்துரை வழங்க வேண்டுகிறேன்.என்றேன்.அவர் அந்த நூலைப் பார்த்துவிட்டு,

ஏழாம் அறிவு இயக்கம் இதைப்பற்றி நான் கேள்வி பட்டிருக்கின்றேன்,இந்த நூலுக்கு நான் அணிந்துரை வழங்குகிறேன்,இரண்டு நாள் கழித்து என்னை செல்பேசி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.என்று சொல்லிவிட்டு ஒரு செல்பேசி எண்ணைத் தந்தார்.
இரண்டு நாள் அல்ல,மூன்று நாள் அல்ல பல நாட்கள் அந்த தொலைப்பேசியில் தொடர்பு கொள்ள முயன்றேன், முடியவில்லை.! போனே எடுப்பதில்லை.!. அடுத்த சில நாட்களில் மருத்துவர் அய்யா சென்னை வரும்போதெல்லாம் இந்த நூலுக்கு அணிந்துரை வழங்க அவரை சந்தித்து வேண்டினேன்.அவர் ஓரிரு பக்கங்கள் படித்து விட்டு, ‘நல்லா இருக்கே,இரண்டு நாள் கழித்து என்னை தொடர்பு கொள்ளுங்கள்.நான் ஏற்பாடு செய்கிறேன்.என்றார்.
சில நாட்கள் கழித்து,மருத்துவர் அய்யா தன் உதவியாளர் மூலம், ‘திருவான்மியூரில் உள்ள கவிஞர் ஜெயபாஸ்கரை சந்தியுங்கள்,அவரிடம் அய்யாவின் அணிந்துரையை பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்.
அய்யாவின் அணிந்துரையைப் பெற்றுக்கொண்டு,
திருவள்ளூரில் ஒரு அச்சக நண்பர் மூலம் சென்னையில் ஒரு திறனாளியைப் பார்த்து, ‘இந்த நூலை புத்தகமாக்கி தர வேண்டும்என்றேன்.அதற்கு அவர், ‘இதை ,இப்படியே புத்தகமாக வெளியிட முடியது சார்.!’
‘நான் என்ன செய்ய வேண்டும்?’
“Page maker” செய்ய வேண்டும்.
 ‘அப்படின்னா என்ன சார்?’

‘சார் ,இதற்கென்று முறையாக பயிற்சி எடுத்தவர்கள் உள்ளார்கள். அவர்களிடம் செல்லுங்கள்,அதன் பிறகு என்னிடம் வாருங்கள் நான்,நூலாக்கித் தருகின்றேன்.’ என்றார்.சொல்லிவிட்டு,அவரே ஒரு பயிற்சி பெற்ற பெண்ணை எனக்கு அறிமுகம் செய்தார்.(இவர் ஒரு பாப்பாத்தி)அவருடைய வீடு வியாசர்பாடியில் உள்ளது, முகவரி தேடி போய் அவரைப் பார்த்தேன்.page maker செய்து தர சம்மதித்தார்.ஒரு பக்கத்திற்கு ரூ.10’ என்றார்.நான், ‘சரி’என்றேன்.
இரண்டு வாரத்தில் page maker செய்து கொடுத்தார்.அதை எடுத்துக்கொண்டு ‘பிராட்வே’யில் இருக்கும்  அவருடைய அலுவலகம் சென்று கொடுத்தேன், அவர், ‘பக்கத்திற்கு ரூ 25’ கேட்டார்.  நான் ‘சரி’ என்றேன்.ஒரு வாரத்தில் 1000 புத்தகங்கள் தயார்.சரி இந்த புத்தகத்தை யார் தலைமையிலாவது வெளியிட வேண்டும்,என யோசித்த போது,மருத்துவர் அய்யாவே அதற்கு பொறுத்தமானவர்  என எனக்குத் தோன்றியது.
                        ******
      
             169-என் வலது கை உடைந்து விட்டது

இதற்கிடையே எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சித்தகவல் வந்தது.அது 2011,செப்டம்பர் இரவு 8 மணி இருக்கும்,
அ.கு.ஏழுமலை தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.என்று.இந்த சேதியை என்னால் நம்பவே முடியவில்லை.
அதன் பிறகு என்னிடம் பல நண்பர்கள் இந்த சேதி உண்மையா? என கேட்டார்கள்,காரணம்,எந்த முடிவாக இருந்தாலும், என்னை கலந்தாலோசித்து செய்வார்.அன்று இரவு முழுவதும் என் கண்களில் நீர்வடிவதை என் மனைவியாலும் தடுக்க முடியவில்லை,என் மனைவியும் என்னோடு அழுது கொண்டிருந்தாள்.என் வலது கரமே உடைந்து விட்டது போன்ற உணர்வு. ஒரு கடவுள் மறுப்பாளர்,கோழை போல் தற்கொலை செய்து கொள்வாரா?என்னால் இந்த சேதியை நம்பவே முடியவில்லை.இவருடைய தற்கொலைக்கு காரணம், ?
ஆசையாய் வளர்த்த இவருடைய மகன் இவரை எதிர்த்து பேசியதையும்,அதை அவர் மனைவி ஆமோதித்தின் விளைவாக மனம் உடைந்து தற்கொலை புரிந்து கொண்டார்- என்று பேசிக்கொண்டனர்.
தமிழ் நாடு நுகர் பொருள் வாணிபக்கழக ஊழியர்கள் மத்தியியல் 1980-ல் அரசியல் சார்புடைய சங்கங்கள் முளைத்தன.அப்போது நான் காஞ்சிபுரம் மாவட்ட திமுக சார்புடைய சங்கத்தில்(LPF-LABOOR PROGRESSIVE FRONT) மாவட்ட துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தேன்.
சென்னையில் அப்போது அதிமுக சார்புடைய சங்கத்தில் திரு அ.கு ஏழுமலை தனித்தன்மை கொண்ட பொறுப்பில் இருந்தார்.அந்நாளில் எனக்கு ஏனோ அதிமுக கொள்கை பிடிக்காது,அதனால் நான் திமுக அபிமானியாக இருந்தேன்.

1983-ல் என்னை திம்மாவரத்தில் சந்தித்த திரு அ.கு  ஏழுமலை அதிமுக சங்கத்தில் சேர சொன்னார்.தெளிவில்லாத நான் , ‘கட்சி மாறினா நல்லா இருக்காது சார்,எல்லாம் கேலி பேசுவாங்க...’என தெளிவில்லா பதிலை கூறி விட்டேன்.அப்போதே அவர் பேச்சை கேட்டிருந்தால்,என் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.காலம் கடந்து,நான் சார்ந்த சங்கமான திமுக 1985-ல் என்னை கைவிட்டது.
பின் நான் திரு ரகுநாதன் தலைமையில் கட்சி சார்பற்ற தரக்கட்டுபாடு ஊழியர் கூட்டமைப்பை காஞ்சிபுரத்தில்      உறுவாக்கி,அது என் தலைமையில் 1985-லிருந்து 1995 வரை சிறப்பாக இயங்கியது.

1995-ல் சென்னையில் உருவான சதி திட்டத்தில் திரு ரகுநாதனை விட்டு நான் பிரியும் நிலை ஏற்பட்டது.அப்போது எனக்கு ஆபத்பாந்தவனாக அமைந்து விட்டவர் திரு அ.கு ஏழுமலை.
எங்கள் துறை சார்ந்த எத்தனையோ சங்க உறுப்பினர்களுக்கு வாழ்வாதாராமாக விளங்கிய சிங்க
நிகர் சங்கத்தலைவன் மாண்டார் என்பது என்னைப்போன்ற விசுவாசிகளுக்கு பேரிழப்பு. ஆனால்,தன் குடும்பத்தை அவர் அரவணைத்து சென்றாலும்,ஓய்வு பெற்ற பின்னரும் வீடு தங்காமல் அவர் மாவட்டந்தோறும் பிறர் நலனில் கவனம் செலுத்துவதை அவர் மனைவியும்,ஒரே மகனும் விரும்ப வில்லை.ஆசையாய் வளர்த்து ஆளாக்கிய மகனே எதிர்க்கிறான் என்பதை அவர் மனம் ஏற்கவில்லை.
மனம் உடைந்து போனார்.எதற்காகபாட்டாளி தொழிற்சங்கம்ஆரம்பித்தாரோ அந்த நோக்கம் அடைய சில பின்னடைவுகளை சந்திக்க நேர்ந்துவிட்டது. சொன்னவாறு பென்சன் திட்டத்தை கொண்டு வர முடியாமல் போய்விடுமோ எனும் ஆதங்கம்.இதனால் தானே மரணத்தை தேடிக்கொண்டார்.
இந்த சம்பவத்திற்கு முந்தைய வாரம்,எனக்கு போன் மூலம், ‘ராமச்சந்திரனுக்கு குழந்தை பிறந்துள்ளது,நீங்கள் வாருங்கள்என்றார்..நான், ‘என்ன சொல்றீங்க,..?,எனக்கு பேரன் பிறந்துள்ளான்... என சொல்ல வேண்டியது தானே..? ஏன் சுற்றி வளைத்து பேசுகின்றீர்? என்றேன். அதற்கு அவர், ‘அந்த அளவுக்கு எனக்கு குடுப்பனை இல்லை!என்றார். அடுத்த நாள்,நானும் மனைவியும் சென்று குழந்தயை பார்த்துவிட்டு வந்தோம்.
திரு அகு.ஏழுமலை அவர்கள்,தன் மகனுக்கு மருத்துவர் அய்யாவின் தலைமையில் திருமணத்தை நடத்தி முடித்தவர்.,
இரண்டு மகள்கள். ஒரே மகன்,இவருக்கு தன் லட்சிய புருஷரான முன்னாள் முதல்வர்,திரு எம்.ஜி.ராமச்சந்திரன் பெயரை சூட்டி அழகு பார்த்தவர். படிப்பில் முன்னிலை வகித்த இவருடைய மகன், அண்ணா பல்கலை கழக வளாகத்தில் பொறியியல் பட்டப் படிப்பில் சேர்ந்து,
ஒரே நான்காண்டு கால கட்டத்தில் இரட்டை பட்டம் பெற்றவர்.(BE&IT)படிப்பில் புலியாக இருந்து என்ன பயன்?,திருமணம் ஆனவுடன்,பண்பாடு தெரியாத பிள்ளையாக மாறிவிட்டார்.
திரு அ.கு.ஏழுமலை அவர்கள்,தன் வீட்டை விட அவர் தான் சார்ந்த தொழிற் சங்க உறுப்பினர்களை அதிகம் நேசித்தார்.சளைக்காமல் ஒரு செட் உடுக்கும் உடை எடுத்து ஒரு பையில் போட்டுக்கொண்டு பேருந்து பிடித்து,சேலம், திருநெல்வேலி என சென்று விடுவார்.சங்க உறுப்பினர் நலமே தன் நலம் என காலமெல்லாம் உழைத்தவர்.
தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் எவ்வளவு பெரிய அதிகாரிகளாக இருந்தாலும் அவருக்கு எதிரிதான்.எடுத்த காரியத்தை முடிக்காமல் பின் வாங்க மாட்டார்.யாரிடமும் கையேந்த மாட்டார்.நிர்வாகத்தை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும்,தேவைக்கு ஏற்ப பணம் கேட்பார்(ரூ.10 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் கூட இருக்கும்) வட்டிக்காகவாது வாங்கிக் கொடுங்கள் என்பார்.

வட்டியும் வேண்டாம் கடனும் வேண்டாம், இருங்கள் ஏற்பாடு செய்கிறேன் என ஒரு நாலு நண்பர்களிடம் சொல்லி அவரிடம் கொடுக்கச் சொல்வேன்.
எந்நிலையிலும் குடும்பம் நடத்த கஷ்ட்டமா இருக்கின்றது என சொல்லியதே இல்லை. எளிமையான உணவு முறை பழக்க வழக்கங்கள்,உடலுக்கு  எப்பொழுதும் பயிற்சி கொடுத்துக் கொண்டே இருப்பார்.எந்த வியாதியும் தன்னை அண்டாமல் பார்த்துக்கொண்டார்.
அவரிடம் யார் பேசினாலும் (நேரிலோ அல்லது தொலைப் பேசியிலோ) இன்றைக்கு நடை பயிற்சி எடுத்தீர்களா? நடை போகும் முன் ஒரு லிட்டர் நீர் அருந்தினீர்களா, தினமும் மூச்சுபயிற்சி எடுத்தீர்களா? என்பார்.
முதுகுத்தண்டும் இடுப்பு எலும்பும் இணையும் பகுதியில் மட்டும் வலி இருந்தது.அதற்கு அவர் பெல்ட்அணிவார்.மற்றபடி அவருக்கு புகை,மற்றும் மது போன்ற  சுய இன்ப பழக்கங்கள் எதுவும் கிடையாது.எல்லா பெண்களிடமும் சகோதரி போல் பழகுவார்.
வெளி உலகம் அறியாத படிப்பறிவற்ற கிராமத்து மனைவி.வீட்டுக்கு வருபவர்களை அன்பாக உபசரிக்கும் பண்பு கொண்டவர்.இரண்டு பெண் பிள்ளைகள்,மூத்த பெண்,அதிகம் படிக்க வில்லை,
இளைய மகளை பல் மருத்துவம் படிக்க வைத்தார்,அதே துறையில் மாப்பிள்ளை பார்த்து,அவருக்கு சென்னை பல் மருத்துவ கல்லூரியில் ஆசிரியர் வேலை வாங்கித் தந்தார்.இருவரும் தனியாகவும் பல் மருத்துவ கிளினிக் வைத்துள்ளனர்.

தனக்கு இன்னும் நான்கு ஆண்டுகள் சர்வீஸ்இருந்தும் கடனை அடைக்கவும்,பின் தின்டிவனம் அருகே விலைக்கு நிலத்தை வாங்கி மாந்தோப்பு வைக்கவும் திட்டமிட்டார்.அவ்வாறே திண்டிவனம் அருகே 4 ஏக்கர் நிலத்தை வாங்கினார்.அங்கேயே தங்கி விட்டு வாரம் ஒரு முறை சென்னை வருவார்.
திண்டிவனம் அருகே இவருடைய மாமியார் வீடு.அங்கே இவருக்கு சொந்தமா நாலு ஏக்கர் நிலம் உள்ளது.அதில் மாந்தோப்பு வைத்துள்ளார் அதற்கு இயற்கை உரம் போட வேண்டும் என என்னை விசாரித்தார்.அவரே ஒரு நாள்,
திருத்தணி அருகே மாத்தூர் எனும் இடத்தில் அதற்கான
விற்பனை மையம் உள்ளதாமே,நான் வருகிறேன் போகலாமா?’ என்றார்.
வாருங்கள் போகலாம்
என்னிடம் அப்போது அம்பாசிடர் கார் இருந்தது.நானே அதை ஓட்ட பழகிக் கொண்டேன்.திருவள்ளூருக்கு வந்து விட்டால்,இருவரும் திருத்தணி அருகே உள்ள மாத்தூருக்கு காரில் சென்று ,அந்த உரத்தை வாங்கி திருத்தணியில் பேருந்தை பிடித்து திண்டிவனம் சென்று விடுவார்.இப்படியாக ஒரு நான்கு முறை உரம் வாங்கி இருப்போம்.
மா செடிகள் நல்ல வளர்ந்த நிலையில் அதை விற்று மகனின் திருமணத்தை 2009-ல் முடித்தார்.2011-ல் பேரன் பிறந்த ஒரு மாதத்தில் மரணத்தை தேடிக்கொண்டார்.
நான் எழுதிய நூலை மருத்துவர் அய்யா தலைமையில் வெளியிட வேண்டும் என  ஆசைப்பட்டார்.அதற்குள் இறந்து விட்டார்.

No comments: