Saturday, December 28, 2019

இ.பி-41


             183-எனக்கு நானே எழுப்பும் கல்லறை

அடுத்து எனக்காக எங்கள் ஊர் சுடு காட்டில் எனக்கு நானே சமாதி கட்ட முயன்று வருகிறேன்.அதற்கு முன் நான் இறந்தால் எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்பதை இங்கே விவரிக்க விரும்புகிறேன்.
எனக்கு மரணம் என்பது இரண்டு வகையில் வரலாம்.1-ஹார்ட் அட்டாக்,அல்லது 
2- சாலை விபத்து,
3-தீரா வியாதி வந்தால் தற்கொலை- இதில் எதாவது ஒன்றில் எனக்கு மரணம் நிகழும் என நினைக்கின்றேன். 

அப்படி எனக்கு மரணம் நிகழ்ந்த உடன் என் உடலை ,
1-நான் பிறந்து தவழ்ந்த,ஓடியாடி விளையாடிய  கள்ளூர் கிராமத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
2-தாரை தப்பட்டைகள் கூடாது. வானவேடிக்கைகள் கூடாது.மலர் மாலைகள் கூடாது.
3-வெறும் துணியில் சுற்றி பாடைகட்டி தூக்கி செல்ல வேண்டும்.
4-நான் எடை கூடுதலாக இருப்பதால் காரிலோ அல்லது வண்டியிலோ வைத்து இழுத்துச் செல்லலாம், முன்னமே தயார் நிலையில் உள்ள சாமாதியில் என் உடலை வைத்து கீழ்கண்ட வாசகங்கள் தாங்கிய கிரானைட் ஸ்லாப் போட்டு மூட வேண்டும்.

5- 2 அடிக்கு 6 அடி என இரண்டு பாகங்களாக பிரிக்க வேண்டும்.ஒன்று எனக்கு இன்னொன்று என் மனைவிக்கு.

1அடி உயரத்தில் கல்லறை நிலை நிறுத்த கான்க்ரீட் தரை தளம் அமைக்க வேண்டும்.
கல்லறை பக்க வாட்டின் முன்புற மூன்றில் பக்க அளவுகளான இரண்டு 6*2அளவில் கீழ்கண்ட வாசகங்களை பொருத்த வேண்டும்.

 6-6*2 அளவில், ‘உலகைப் படைத்தது கடவுளாகவே இருக்கட்டும் அதைப் பூட்டி வைத்து பூஜித்தாலோ அல்லது பூஜைசெய்து பூட்டி வைத்தாலோ அது உன் பேச்சைக் கேட்குமா?’ எனும் வாசகங்கள் பொருத்தியிருக்க வேண்டும்.

7-6*2 அளவில்-ஒன்றில்-பொது வழி பாட்டுத்தலமான கோயில்கள் கூடாது.இருக்கும் கோயில்களை இழுத்து மூடி காட்சிக் கூடங்களாக மாற்ற வேண்டும்.கடவுள் இருப்பது உண்மையானால் வீட்டில் வணங்கலாமே?                           

8-4*2 அளவான இன்னொன்றில்,
*மறுமையும் இம்மையும் மனிதர்க்கு இல்லை
மகிழ்வித்து மகிழ்வுடன் வாழ்வதே மாசற்றான் கோள்
*கல்லில் கருணையை தேடி அலையும் மனிதர்களே
மனிதர்களை தேடுங்கள் மகிழ்வுடன் வாழுங்கள்.

9-முன் பக்கத்தில் 4*2 அளவில்
 திருவேங்கடம்               
                1-பிறந்த தேதி.20.05.1951
                2- மறைந்த தேதி-
அம்மா,அப்பா-
                 3- கண்ணம்மா
                 4-படைவீட்டு சத்ரியர்
                 5-படிப்பு-BSc Bed(1973)
                 6-பணி-தர ஆய்வாளர்(ஓய்வு)
பணி ஓய்வுக்குப்பின் ஆற்றிய பணிகள்.இணைய தள முகவரிகள்.இவற்றின் மூலம் என் அறச்சிந்தனைகளும் பகுத்தறிவு பதிவுகளும் பதிவேற்றம் செய்துவந்தேன்.
நிறுவனர்: ஏழாம் அறிவு இயக்கம்(visit:www.thiru-rationalism.blogspot.in.

இயற்றிய நூல்கள்-
1-அறவழி சுய சிந்தனையுடன் மகிழ்ச்சியுடன் வாழ-ஒரு வழி காட்டி.(2012)
2-அறவழி சுய சிந்தனையுடன் மகிழ்ச்சியுடன் வாழும் வழிகள்(2013)
3- அறம் காத்த வர்மாக்கள்-தமிழர் ஒருபன்னாட்டு தேசிய இனம்(2016)
4-பகுத்தறிவாளர் பார்வையில் திருக்குறள்(2018)
5-இறந்தேன்,பிறந்தேன்.(சுய சரிதை) அச்சில்
6-ஏழாம் அறிவியல்

 பெற்ற விருதுகள்-1-புது முறைச் சிந்தனைச் சிற்பி(2012).
                             E2-பாரதி பணிச் செல்வன்(2014)
                                3-அகவை முதிர்ந்த தமிழறிஞர்(2016)                  .                 (தமிழ்நாடு அரசு வழங்கிய விருது)
************

2019-ஏப்ரல் மாதத்தில் எனது சேமிப்பு பணம் ரூ.ஒரு லட்சம் வந்தது,எனது நீண்ட நாள் சிந்தனையான எனக்கு நானே என் கிராமத்து சுடுகாட்டில் கல்லறை அமைக்கலாம் எனும் கனவை நிறைவேற்ற தோன்றியது.
நண்பர் பன்னீர் செல்வத்துடன் சித்தூரில் இயங்கும் கல் குவாரிகளை பார்வை இட சென்றோம்.இரண்டு அல்லது மூன்று கல் குவாரிகளை பார்வை இட்டு இறுதியாக ஒரு கல்குவாரி தொழிற் சாலையில் இரண்டு கல்லறைக்கு தேவையான 7*2 அடிக்கு 6 ஸ்லாப்புகளும் மற்றும் 2*2 அடிக்கு 4 ஸ்லாப்புகளும் மொத்தம் 10 ஸ்லாப்புகள் ஒவ்வொன்றும் 3 அங்குல கன முடையது ,தயார் செய்ய சொல்லி முன்பணம் கொடுத்து விட்டு வந்தோம்,சில நாட்கள் கழித்து திருவள்ளூரிலிருந்து ஒரு மினி லாரி எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்...
 அந்த கல்லில் என் கருத்தோவியங்களை திரு சங்கர் பதிவிட்டுள்ளார்.இன்னும் சில மாதங்களில் கள்ளூர் சுடுகாட்டில் கல்லறையை நிலை நிறுத்திவிடுவேன். 







Thursday, December 26, 2019

இ.பி-40


          179-பெரியார் திடலில் நூல் வெளியீடு

ஆனால் ,என் நண்பன் எழுதிய இந்நூலை பெரியார் திடலில் வெளியிடுவதுதான் சிறப்பு,எப்படியும் அதற்கான முயற்சியில் நான் வெற்றி பெறுவேன்,’ என்றார்.
ஒரு மாதம் கழித்து என்னிடம் நண்பர் கபிலன் பேசினார். சு.ப.வீரபாண்டியன் அவர்களிடம் உங்கள் நூலைக் கொடுத்து அவரிடம் தேதி கேட்போம் வாருங்கள்’,என்றார்.இருவரும் அவர் அலுவலகம் தேடிப்போனோம்.அவர் உடல்நிலை சரியல்லை என வீட்டுக்கு போய் விட்டதாக அலுவலகத்தில் கூறினார்கள்.
உடனே சுபவீ அவர்களை நண்பர் கபிலன் போனில் தொடர்பு கொண்டு  பேசினார்.அவர் எங்களை, மாலை வீட்டுக்கு வந்து என்னை பார்க்க முடியுமா? என்றார்.
மாலை 5 மணி அளவில் அவர் வீட்டுக்கு சென்றோம்.அவர் தொண்டை சளி இருமல் என நோய் தெற்றுக்கு ஆளாகி இருந்தார்.எங்களை கனிவுடன் வரவேற்ற அந்த மாபெரும் மனிதர்,எங்களை நலம் விசாரித்து பின் என் நூலை வாங்கிக் கொண்டார்.உடனே 2017 ஜனவரி 22 தேதி குறிப்பிட்டு,

உங்களுக்கு இந்த தேதி ஒத்து வருமா ?’ என்றார். உங்கள் வசதிக்கேற்ப தேதி குறியுங்கள் அய்யா,நாங்கள் அதற்கேற்றாற் போல் எங்களை தயார் செய்து கொள்கிறோம்என்றோம்.அவரும் உடனே பெரியார் திடலில் உள்ள பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர்,திரு.சத்யநாராயண சிங் அவர்களை தொடர்பு கொண்டு நூல் வெளியீட்டு விழா பற்றிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என  தெரிவித்தார்.அவரும் அதற்கு தகுந்தாற்போல் தேதியை ஒதுக்கி விட்டார்.
அதன் பின்,மைலாபூரில் உள்ள கவிஞரும் தி.மு.க இலக்கிய அணிச் செயலாளரும் ஆன திரு க.வேழவேந்தன் அவர்களை ,அவர் வீட்டில் சந்தித்தோம்.
அய்யா,நீங்கள் எங்கள் மண்ணின் மைந்தர்,அரசியலுக்கு வரும் முன்னே கவிதை பாடி பேரறிஞர் அண்ணாவின் பாரட்டுதலைப் பெற்றவர்.தாங்கள் இந்தூல் வெளியீட்டு விழாவிற்கு தலைமை ஏற்று நடத்தி தர வேண்டும்என சொல்லி ஒரு நூலை அவரிடம் கொடுத்தோம்.
நூலைப்புரட்டி பார்த்தவர், ‘இது போன்று ஒரு சிந்தனை ஊட்டும் மிகப் பெரிய நூலைப் படைப்பது உண்மையில் பெரிய சாதனைதான்.கிராமத்தில் பிறந்து விவசாய குடும்பத்தில் தோன்றி உங்களுக்கு இந்த பெரியார் சிந்தனை தோன்றியிருப்பது பாரட்டுக் குறியது.!
சொன்னவர் மேலும் தொடர்ந்தார், ‘நூல் வெளியீட்டு விழாவிற்கு அவசியம் வந்து விடுகிறேன்,விழா நடக்கும் முன்னள்,எனக்கு தயவு செய்து நினைவுப் படுத்துங்கள். நானும் என் நாள் காட்டியில் குறித்துக் கொள்கிறேன்.என்றார்.

பெரியார் திடலில் இயங்கிவரும் , ‘பெரியார் நூலக வாசகர் வட்டம்என்பது 40 ஆண்டுகளாக இயங்கி வரும் ஒரு தன்னாட்சி அமைப்பு.சுமார் 600 உறுப்பினர்களைக் கொண்டது.முது பெறும் தமிழறிஞர்கள் பங்கு கொள்ளும் வாரந்திர வாசகர்(வியாழன்) வட்டம். மாலை 6.30 க்கு துவங்கி இரவு 8 மணிக்கு முடித்து விடுவார்கள்.பெரியார் காலத்தில் பெரியாரோடு பழகியவர்கள்,கடவுள் மறுப்பு சிந்தனையாளர்கள்,சாதி மறுப்பாளர்கள், சுய சிந்தனையாளர்கள் மற்றும் மேடைப்பேச்சில் வல்லமை படைத்தவர்கள் என பல அறிஞர்கள் கலந்து சொற் பொழிவாற்றிய இடம் அது.

2017 ஜனவரி 22 ந்தேதி வாசகர் வட்டத்தில் என்  நூலும் அறிஞர்கள் தலைமையில் அலசப்பட்டது.
விழாவுக்கு தலைமை வகித்த கவிவேந்தர். திரு.க.வேழவேந்தன் அவர்கள்,தன் இளமைக்கால நினைவுகளை நினைவு கூர்ந்தார்.அவருடைய பாட்டியார் வீடான கும்மிடிப்பூண்டியை அடுத்த வைதிலம்பேடு எனும் கிராமத்திற்கு போக வேண்டுமானால்,கள்ளூரில் அமைந்திருக்கும் எங்கள் வீட்டு வழியே செல்லும் களவழி யாகத்தான் நடந்தே செல்ல வேண்டும்.
அப்போதெல்லாம் 1950-60 களில் பேருந்து வசதி கிடையாது.சென்னையிலிருந்து ஒன்றிரண்டு பேருந்துகள் முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று வரும்.அதை நம்பி மக்கள் இருக்க மாட்டார்கள்.நடந்தே பழகிய மக்கள் விடியற்காலை நடத்து அன்று மாலைக்குள் சேரவேண்டிய ஊருக்கு சென்று விடுவார்கள்.
காலை மற்றும் மதியம் கட்டுசோறு மூட்டை கட்டிக்கொண்டு குழந்தைகளை இடுப்பிலும்,தோளிலும் தூக்கிக் கொண்டு நடத்தியும் அழைத்து வருவார்கள்.தினமும் எங்கள் வீட்டு வழியே மக்கள் இடைவிடாது நடந்து கொண்டே இருப்பார்கள்.மக்கள் இளைப்பார எங்கள் வீட்டுத் திண்ணையில் சற்று ஓய்வு எடுத்து செல்வார்கள்,

ஒரு சிலர் வீட்டை சுற்றி இருக்கும் மரங்களின் நிழல்களில் ஓய்வு எடுப்பார்கள்.எங்கம்மா,அவர்களுக்கு புதுப்பானையில் குடிநீர் ஊற்றி குடிக்க குளிர்ந்த நீரைத் தருவார்கள்.ஒரு சிலர் குடிக்க கூழ் கேட்டு அருந்து வார்கள்.
அந்த கால கட்டத்தில் திரு வேழவேந்தன் அவர்கள் தன் தாயின் பாதங்களை பின்பற்றி பாட்டியார் வீடு  சென்ற போது இளைப்பாறிய சம்பவங்களை  விவரித்தார். பின்,நான் எழுதிய நூலில் வரும்  முக்கிய குறிப்புகளை விவரித்தார்.    
பின்னர் நூலை அவர் நூலை வெளியிட அதை திரு சு.ப.வீரபாண்டியன் அவர்கள் பெற்றுக் கொண்டு நீண்டதொரு உரையாற்றினார்.

திரு சு.ப.வீரபாண்டியன் அவர்கள் கருஞ்சட்டை அணியும் பெரியார் வழி பற்றாளர்.கருஞ்சட்டைத் தமிழர் எனும் தலைப்போடு மாதம் இருமுறை வெளிவரும்,
செய்தி தாளுக்கு ஆசிரியராக இருந்து வருகிறார்.சொல்ல வந்த கருத்துக்ளை நளினமாகவும் பிறர் மனம் புண்படாத வாறும் பேசக்கூடிய வல்லமை படைத்தவர்.கருத்து முரண் பாட்டால் சினம் கொண்டு பேச மாட்டார்.தலைவர் கலைஞரோடு நெருக்கம் கொண்டவர்.திராவிட-தமிழர் இயக்கம் எனும் இயக்கத்தை வழி நடத்தி வருகிறார்.
  
இவர் பேசும்போது, ‘திரு படைவீடு திருவேங்கடம் அவர்கள் எழுதிய, ‘அறம்காத்த வர்மாக்கள்எனும் நூலை நான் முழுவதும் படித்தேன்.....சொல்ல வந்த கருத்துக்ளை முரட்டுத்தனமாக சொல்கிறார்.இவர் கூறுகிறார், வெய்யிலாளி குழந்தைகளுக்கு விளையாட்டே கூடாது, அப்படி விளையாடினால் அது உடல் பயிற்சி எனும் பொருளிலே மட்டுமே இருக்க வேண்டும் விளையாட்டில் பரிசுகள் தரக்கூடாது.....இசையே வேண்டாம் என்கிறார்.எனக்கு இவர் கருத்தில் முரண்பாடு காண்கிறேன்....என சொல்லி விட்டு மேலும் கூறுகிறார், ‘ராமயணம் மகாபாரதம் இரண்டு நூலையும் படித்துள்ளார்.ராமயணத்தை விட மகாபாரத கதையில் வரும் கதாபாத்திரங்களை ஒன்று விடாமல் அலசுகிறார்....
மக்களின் இன்றய மூட நம்பிக்கைகளின் மூலமே மகாபாரதம் தான் என்கிறார்.பாஞ்சாலியின் பரத்தை குணத்தை விவரிக்கின்றார்,
குந்தியின்  பிள்ளைக்கொரு கணவனை மாற்றும் குணத்தை பெண்ணாதிக்க குணமாக பார்க்கின்றார்...  ...உண்மையிலேயே இந்நூலை தயாரிப்பதில் அதிக சிரமம் எடுத்துள்ளது தெரிகிறது....

...நான் பெரியாரை பின் பற்றுபவன் தான் ஆனால் பெரியார் கருத்துக்களை பின்பற்றுவதில், அண்ணா போன்று மிதவாதி,ஆனால் இவரோ பெரியாரைவிட தீவிவாதியாக உள்ளார்....என நீண்ட தொரு உரை நிகழ்த்தினார்.
முன்னதாக பெரும் புலவர்.திரு செம்மங்குடி துரையரசன் அவர்கள் என்னைப் பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் கிராமத்தில் ஆண்டு தோறும் தாய்த்தந்தையருக்கு நினை நாளில் ஏழை பெண்களுக்கு சேலை ரவிக்கை வழங்கி உணவு அளிப்பதையும் பெருமை படுத்தி பேசினார். அதன் பின்னர்,எனது பள்ளிக்கால நண்பரும் இந்த விழா பெரியார் திடலில் திரு சு.ப.வீரபாண்டியன் அவர்களைக் கொண்டு  நடத்த பெறு முயற்சி எடுத்தவரும்,அகவை முதிர்ந்த தமிழறிஞருமான.சிறுவாபுரி மரபுக் கவிஞர்.திரு கபிலன் அவர்கள் என் பள்ளிக்கால நினைவுகளை நினைவு கூர்ந்து எந்த  குடும்ப பொருளாதார நிலையில் எப்படி தன் படிப்பை முடித்து அரசு பணியில் சேர்ந்து பின் ஒய்வு பெற்று இப்பொழுது தமிழ்ப்பணி ஆற்றுகிறார் என்பதை சுட்டிக்காட்டி தனது நண்பனான என்னை பெருமை படுத்தி பேசினார்.
இறுதியாக நான் ஏற்புரை நிகழ்த்தினேன்.

‘..மக்களின் மூட நம்பிக்கைகள் பற்றி எனக்கு என்ன கவலை? நாலுபேர் போல் நானும் சாப்பிட்டோமா? படுத்தோமா? தூங்கினோமா? என போவதை விடுத்து எதுக்கு இவருக்கு வேண்டாத வேலை? அப்படி நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது....நான் வெய்யிலாளி சமுகத்தைச் சார்ந்தவன் வெய்யிலில் உழைக்க மட்டுமே தெரிந்த என் மக்கள் சாப்பிட ஒரு பிடி சோறு கிடைக்க வழி இல்லாமல் போவதற்கு காரணமே வெய்யிலாளி இனங்கள் பின் பற்றும் மூட நம்பிக்கைகள் தான் காரணம் என்பதை வெய்யிலாளி மகனான என்னால் மட்டுமே உணர முடிந்தது.
பஞ்ச காலத்தில் தம்பியின்  கல்லூரி படிப்பு, மதிய உணவான ஒரு பிடி சோறு கிடைக்காமல் பாதியில் நின்று விடக்கூடாது என அம்மாவிடம் கூறிவிட்டு வெய்யிலில் மிதி வண்டியில் சுற்றி கிழங்கு வித்து அரைபடி அரிசி வாங்கி வந்த காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்....அதற்கு மேல் எனக்கு பேச வரவில்லை..தொண்டை அடைக்கிறது... சில நொடிகள் கழித்தே மேலும் பேச முடிந்தது.
                ******

இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் திரவுபதி அம்மன் கோயிலில் தீமிதி விழா இல்லாத இடமே இல்லை.அதற்கு     விரதம் இருந்து தன் உடல் பலத்தை இழந்த வெய்யிலாளி இனம் ஒன்று மி்ல்லாத உணவுக்கு பயன் படாத குங்குமத்திலும், மஞ்சளிலும், சாம்பலிலும் (திருநீரு)கற்பூரத்திலும்,ஊதுவத்தி சாம்பிராணியிலும் அற்புதங்கள் உள்ளன என தன் வாழ்நாளை செலவிடுவது வெய்யிலாளி சமுகமே.
அவர்கள் உழைப்பில் கோயில் கட்டி அவர்களை வெளியில் நிற்க வைத்து நிழலில் கர்பகிரகத்தில் கடவுளை காட்டுகிறேன் என கற்பூரம் கொளுத்த வெய்யிலாளியிடமே காசு பிடுங்கி காலத்தை ஓட்டும் அர்ச்சகரை நம்பி கல்யாணம்,கருமாதி என பணத்தை விரயம் செய்து கடன்காரனாக மாறி வாழும் வெய்யிலாளி சமுகத்தை திருத்தவே உருவாக்கியது தான் இந்த, ‘ஏழாம் அறிவு இயக்கம்.....அதன் வெளியீடுகளில் ஒன்று தான் இந்த , ‘அறம்காத்த வர்மாக்கள்’..’...

என் அன்பு வேண்டுகோளை ஏற்று என் நூல் வெளியிடுவதற்கு இசைவு தந்த என் மண்ணைச் சார்ந்த திருவாளர் க.வேழவேந்தன் அய்யா(இவர் முன்னாள் தமிழ் நாடு தொழிலாளர் துறை அமைச்சார்),மற்றும் திருவாளர் சுப.வீரபாண்டியன் அய்யா அவர்களுக்கும்,
எனது நண்பர்களான திரு செம்மங்குடியார்,மற்றும் பூபதி எனும் எனது பள்ளிக்கால நண்பர் கபிலன் அவர்களுக்கும் மற்றும் என் அழைப்பை ஏற்று இந்த விழாவிற்கு வருகை புரிந்த சுற்றத்தாருக்கும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த விழா நடத்த அனுமதி அளித்தமைக்கு மட்டுமல்ல இந்த விழா நடக்க சிறப்பாக ஏற்பாடுகளை செய்து கொடுத்த பெரியார் நூலக  வாசகர் வட்ட செயலாளர்.திரு சத்யராயண சிங் அவர்களுக்கும் அவரோடு இணைந்து பணியாற்றும் அவர்  அலுவலக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். என என் ஏற்புறையை முடித்தேன்.
                       ********
      
           180- பள்ளி ஆசிரியர் எனக்கு பாராட்டினார்!

அடுத்து 2016 ஆம் ஆண்டு ஜனவரி 30-ம் நாள் நான் படித்த ஆரணி (திருவள்ளூர் மாவட்டம்) மேனிலைப்பள்ளியில் முன்னாள் ஆசிரியர் மற்றும் மாணவர் கூடு விழா நடைபெற்றது.அவ்வமயம் எனக்கு அழைப்பு வந்தது.நான் எத்தனையோ பழைய நினைவுகளோடு அந்த பள்ளி வளாகத்திற்குச் சென்றேன்.
பள்ளி வளாகத்தை பார்த்ததும் எனக்கு அதிரச்சி.!
பழைய கட்டிடங்கள் எல்லாம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் எழுப்பப் பட்டிருந்தன.இது எனக்கு பெறுத்த ஏமாற்றம்!
ஆனால் முன்னாள் ஆசிரியர்கள் நான்கு பேர் வந்திருந்தனர்.என்னை அவர்களுக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை, காரணம் என்னைப் போன்ற ஆயிரக் கணக்கான மாணவர்களை ஆண்டுதோறும் சந்தித்திருப்பர். இது ஒரு இயற்கை நிகழ்வு.
இருப்பினும் அந்த நான்கு ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியை மொத்தம் 5 ஆசிரியர்களை கண்டதில் எனக்கு பெறு மகிழ்ச்சி.1- திரு.ராமன்,.2- திரு.மணி ஆசிரியர்,3-திரு.கோபால் ஆசிரியர், 4- திருமதி.வனஜாமணி அம்மையார். இவர்கள் யாவரும் எனக்கு 6-8 வகுப்பு ஆசிரியர்கள்.அடுத்து 10&11 வகுப்பு ஆசிரியர் திரு.பி.ஏ. வீரராகவன்.இவர்கள் அனைவருமே பார்ப்பனர்கள்.70 வயதை கடந்தவர்கள்.
அந்த விழா நிகழ்ச்சியில் என்னையும் எனது சக வகுப்பு தோழருமாகிய மரபுக்கவி.திரு.கபிலன்  எனும் பூபதி ஆகிய இருவரும் இந்த பள்ளியின் பெருமை சேர்க்கும் அளவுக்கு நமது தமிழக அரசு இவர்களுக்கு, ‘அகவை முதிர்ந்த தமிழறிஞர்எனும் விருதினை வழங்கி கவுரத்திருப்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கின்றதுஎன பாராட்டினார்.
எனக்கு இதைவிட பெருமை வேறு என்ன வேண்டும்?’
                         *********

181-கடவுளைக் கண்டேன் என சொன்னவர்கள்  என்ன சாதித்தார்கள்?

இறைவனைக் கண்டேன் ,இறைவனிடம் பேசினேன் என்று இந்துக்களுக்கு எடுத்து இயம்பிய ராமகிருஷ்ண அடிகளாரும்,அவர் சீடர் விவேகாநந்தரும் என்ன சுகம் கண்டார்கள். சம்சார சாகரத்தில் இகலோக இன்ப  வாழ்கை வேண்டாம் என்றும்,அப்படி குடும்பஸ்த்தனாக வாழ்ந்து இறைவனடி சேர முடியாத தாம்பத்திய வாழ்க்கை வேண்டாம் என தன் 5 வயது மனைவி சாரதா அம்மயாரிடம் வாழாது போன வாழா வெட்டி ராமகிருஷ்ண பரம அம்சரின் போதனைகள் அனைத்துமே நிழலாளிகள், வெய்யிலாளிகளின் ஊதியத்தை சுரண்ட மட்டுமே பயன் படுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியுமா?அது மட்டுமா.!ராமகிருஷ்ணருக்கு தொண்டை புற்று நோய் வந்து சொல்லொணா துயரத்தில் ஆழ்ந்த போது கூட என்னை இறைவன் சோதிக்கின்றார் என்று கூட இருப்பவர்களை சுய சிந்தனை யற்றவர்களாக மாற்றினார்.இது தன் சீடர்களை முட்டாளாக்கும் பாவ செயல் என்பதை இன்றளவும் அவர் சீடர்கள் உணரவில்லையே! அல்லது உணர்ந்தும் உணராது போல் பாசாங்கு செய்கின்றார்களா?
18 வயது வரை கடவுள் மறுப்பு சிந்தனையில் இருந்த விவேகா நந்தர் ,அவருடைய அம்மா வற்புறுத்தலின் பேரில், ‘கடவுளைக் கண்டேன் என சொல்லித்திரியும் பகவான் ராமகிருஷண பரம அம்சரைப் பாரு,அவர் உனக்கு கடவுளைக் காட்டுவார்என தன் அம்மாவின்   சொல்பேச்சை தட்ட மனமில்லாமல் ராமகிருஷண மடத்தில் சேர்ந்தார்.
ராமகிருஷ்ணரோ, விவேகநந்தரிடம், ‘ஆமா,நான் கடவுளைக்கண்டேன், நீயும் காணலாம்,நான் சொல்லும் மந்திரங்களைக் கொண்டு கடவுளை பூஜித்தால் ..நிச்சயம் முடியும்எனும் வாய்ப் பேச்சை நம்பினார்.இறுதியில் மோசம் போனார்.எப்படி?
விவேகநந்தர்,தினமும் ஆறுகால பூஜை மட்டும் செய்ய வில்லை,தன் குரு ராமகிருஷ்ணரை விட ஒரு படி மேலே போய்விட்டார்.

நான் கடவுளிடம் பேசினேன் என்றார். மக்கள் இதை நம்பினர்.இவரைப் போன்று பூஜை செய்தால் நாம் கூட கடவுளை காணலாம் போலிருக்கே,என பைத்தியம் ஆனவர்கள் தான் இன்று ஏராளம்.இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் கடவுள் பக்தர்கள் இருந்தால் தான் நிழலாளிகள், தன் வாழ் வாதாரங்களை வளமாக்க முடியும்! அவரே தன் 35-ம் வயதில் அமெரிக்கா சென்று திரும்பிய பின்,தனக்கு தீரா வியாதி வந்ததை அந்த கடவுளாலும் தீர்க்க முடியவில்லை என்பதை உணர்ந்தார், இளவயதில், வாழவேண்டிய வயதில் மரணம் தழுவினார். இந்த உண்மையை ஆத்திரம் கொள்ளும், ஆத்திகம் பரப்பும் ஆன்மிக வாதிகள், பாமரனுக்கு பரப்பாமல், மறைத்துவிட்டனர் .
                       **********
           
              182-தாய் தந்தையருக்கு சிலை

2013-கிராமத்தில் என் தாய் தந்தையருக்கு கோயில் கட்ட ஆரம்பித்தேன்.இதற்காக என் சிந்தனைகளை கல்வெட்டில் செதுக்கி வீட்டின் முகப்பில் புதைத்தேன்.அந்த ஆண்டு என் தாய்தந்தையர் நினைவு தினமான கார்த்திகை 20ந்தேதி என் தாய்தந்தையரின் புடைப்புச்சித்திரத்தை , ‘இளையபல்லவன் கருணாகரத் தொண்டைமான்எனும் மிகப்பெரிய காப்பிய நூலாசிரியரும்,முப்பெரும் புலவருமான திரு செம்மங்குடி துரையரசனாரை கொண்டு கல்வெட்டை திறந்தேன்.
தாய்தந்தையர் கோயில் என சொல்கின்றீர் அப்படியானால் அங்கே சிலை வேண்டாமா? என சிலர் கேட்டனர்.

இந்த ஆண்டு(2017) அதற்கான வாய்ப்பு கனிந்து வந்தது.மருத்துவர் அய்யாவைக்கொண்டு சிலை திறக்க முயற்சித்தேன். முடியவில்லை. தாய் தந்தையர் சிலையை மகாபலிபுரம் தீபக் சிற்பியிடம் செய்து முடிக்கப்பட்டு, 09.11.17 அன்று நான் என் மனைவி மற்றும் இளைய மகனோடு மகாபலிபுரம் சென்று அன்றே அந்த
சிலைகளை கள்ளூர் கிராமத்தில் எனது இல்லத்தில் வைத்துவிட்டு,12.11.17 அன்று பீடம் அமைத்து சிலைகளை நிலை நிறுத்தப்பட்டது.
நவம்பர் 21 ந்தேதி பீடம் அமைத்து சிலைகளை நிறுவி,தாய் தந்தையரின் வயிற்றில் பிறந்த 9 மகன்/மகள்களின் பெயர்களை கல் வெட்டில் பதித்து விட்டு திருவள்ளூர் திரும்பும் வழியில் ஒதிக்காடு எனும் பேருந்து நிறுத்துமிடத்தில் என் முன்னே கார் ஒன்று திடீரென நின்றது.நான் எனது இரு சக்கர வாகனத்தை திடீரென பிரேக் போட்ட வேகத்தில் நான் நிலை தடுமாறி விழுந்த வேகத்தில் எனது வலது கால் முட்டி தேய்ந்து ரத்தம் பீரிட்டது,எனது முகமும் தரையில் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடல் முழுவதும் ரத்தம் தோய்ந்த நிலையில் அங்கே பெட்டிக்கடை வைத்திருந்த பெண்மணி மற்றும் அவரது கணவர் என் பாக்கெட்டில் இருந்த செல் போனில் என் மகன்களிடம் தொடர்பு கொண்டு விபத்து நிகழ்ச்சியை கூறியுள்ளனர்.உடனே எனது இளைய மகன் காரை எடுத்து வந்து போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையில் சேர்த்தனர்.3 நாட்கள் ஐ.சி.யு வில் வைத்து வைத்தியம் பார்த்து நான்காம் நாள் வீடு வந்தோம்.தற்போது குணமடைந்து வருகின்றேன்.
சிலர் கல்வெட்டு திறக்கும் நிகழ்ச்சியை ரத்து செய்துவிடலாம் என்றனர்.நான், ‘என் பிணமாவது அருகில் வைத்து சிலை நிகழ்ச்சியை நடத்தியே தீர வேண்டும் என உறுதிபட  கூறி விட்டேன்.

06.12.17 அன்று,திரு செம்மங்குடி துரையரசன் அவர்கள்,தாய் தந்தையர் சிலையை திறந்து வைத்தார் 108 பெண்களுக்கு உணவளித்து புடவை ரவிக்கை வழங்கப்பட்டது.எனது 10 மற்றும்11 வகுப்பு (1969) வகுப்பாசிரியர் திரு பி.ஏ. வீரராகவன் அவர்கள் விழாவுக்கு தலைமை ஏற்று சிறப்புரை ஆற்ற இசைவு தந்தார். தாய் தந்தையருக்கு என் மாணவன் சிலைவைத்தது மட்டுமல்லாமல் சிலை திறப்பு விழாவுக்கு என்னை தலைமை ஏற்க வேண்டும் என ஆசைப்பட்டது எனக்கு பெருமகிழ்ச்சியளிக்கின்றது, என என் மாணவனை நான் பாராட்ட வேண்டும் என்றார் என் ஆசிரியர்..எனக்கு இந்த புகழுரை பெரு மகிழ்ச்சியை தந்தது.
பெரிய மகன் திரு வினோத் நன்றியுறை வழங்கினார். நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
                         ******