நாளடைவில் இந்த எந்திரத்தனமான செயல் பாடுகளிலிருந்து வேறுபட மனம் விரும்பியது. நான் நல்லா இருக்கணும்,நல்லா படிக்கணும்,என்று நினைக்கும் வேளையில் என் கடவுளிடம் விடுக்கும் விண்ணப்பங்களை மெய்மை படுத்த ஆசைப்பட்டது.
என் அம்மா உடல் நிலை திடீரென்று மோசமாகவில்லை,மூன்று வேளை சாப்பாட்டிற்கே உணவில்லை எனும் போது,சனிக்கிழமை தோறும் உண்ணா விரதம் வேறு,இதனால் வயிற்றுப்போக்கு வந்து நிரந்தரமாகிவிட்டது.உடனே சென்னைக்கு அழைத்து சென்று மருத்துவம் பார்த்திருந்தால் என் அம்மாவின் ஆயுள் நீடித்திருக்கும்,அந்த வசதி அப்போது இல்லை,எனவே கடவுளை நம்புவதை தவிர எனக்கு வேறு வழியில்லை.
‘எங்கள் அம்மாவை காப்பாற்று முருகா! நான் தான் தினமும் உன்னை பூஜிக்கின்றேனே......
கடவுள்-பூஜித்தால் உன்னை காப்பாற்றுவதா என் வேலை?
பின் வேறு எதற்கு கடவுள் வழிபாடு?
கடவுள்-உன்னை செய்யச்சொன்ன மனிதனைப் போய் கேள்.
என் சுய சிந்தனைகள் என் மண்டையில் உரைத்தது போல் இருந்தது.
வீட்டில் தானுண்டு தன் வேலை உண்டு என வாழ்ந்த மக்களை வீதியில் கோயில் கட்டவைத்து அதில் கற் சிலைகளை வடித்து ,பிரதிஷ்ட்டை என்கிற பெயரில் கும்பபிஷேகம் செய்ய வேண்டும் என ஊர் கூட்டி உண்டியலில் பணம் பார்க்கும் வேலையை பார்ப்பனர்கள் இது நாள் வரை செய்துவந்தனர், இனியும் செய்வார்கள்.,மக்கள் விழிப்படையவில்லை என்றால்.
1972,நவம்பர்16(கார்திகை1) முன்னிரவு நேரம் 1 மணியளவில் என் அம்மா இறந்து போன பிறகு கடவுள் வழிபாடு பூஜை அறை செல்வதை நிறுத்தி விட்டேன்.இன்றளவும் இதே நிலைதான்.
No comments:
Post a Comment