இவ்வுலகில் பெரியாருக்கு முன் தோன்றிய ஐரோப்பிய கண்டத்தின் காரல்மார்க்சு (1818,மே 5,மரணம் 1883,மார்ச் 14.) தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர பாடுபட்டார், ‘மூலதனம்’(das capital) எனும் தன் நூலில் பஞ்சாலைத் தொழிலாளர்களைப் பற்றி விவரிக்கின்றார். இந்த தொழிலில் தான் வயலில் (வெய்யிலில்) பஞ்சை விளைவித்து,அதை ஆலைக்கு எடுத்துச் சென்று(நிழலில்) ஆடையாக மாற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் ஆலை முதலாளிகளின் வாழ்க்கைத் தரத்தோடு ஒப்பிட்டு எவ்வளவு கீழ் நிலை வாழ்க்கை வாழ்கின்றனர் என்பதை விவரிக்கின்றார்.
மூலதனம் எனும் நூலை அவரது நண்பர் பிரட்ரிக் எங்கல் வெளியிடுகிறார்,அப்போது தான் காரல் மார்க்சு ஒரு தத்துவ ஞானி என உலகிற்கு தெரியவந்தது.மூலதனம் நூலை என் 60 வயதில்தான் படிக்க நேர்ந்தது. 5 தொகுப்புகளை (volume) க் கொண்டது. இவருடைய கருத்துகள் ‘ஏழாம் அறிவு இயக்க’த்தின் கருத்துகளோடு ஒத்துப்போகிறது.
இவ்வுலகில் காரல் மார்க்சின் கொள்கைகளை முழுமையாக உள் வாங்கி 25 ஆண்டுகளில் ஒரு வல்லரசை நிறுவியவர் சீனாவின் மாசே துங் மட்டுமே,அவரைத்தொடர்ந்து க்யூபா நாட்டின் பிடல் காஸ்ட்ரோ.
No comments:
Post a Comment