Thursday, December 17, 2020

ஏ.அ-58

 

1986-87ல் காஞ்சிபுரம் கிடங்கிலிருந்து நசரத் பேட்டை கிடங்கிற்கு பணி மாற்றம் செய்தார்கள்,இதனால் ஏற்கனவே திருவள்ளூரில் கட்டி முடிக்கப்பட்ட வீட்டில்  குடும்பத்தை வைத்துவிட்டு குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டு நான் தினமும் நசரத்பேட்டை கிடங்கிற்கு சென்று வந்தேன்,ஒரு வருடம் அங்கே பணி முடித்து பின் என்னை பொன்னேரிக்கு மாற்றினார்கள்,பொன்னேரி பின் திம்மாவரம் என 1996 வரை திருவள்ளூரிலிருந்து பேருந்து மற்றும் தொடர்வண்டி என பயணித்து பணி புரிந்தேன்.

சொந்த வீடு என்பதால் குடும்பத்தை நடத்த மாத ஊதியம் ஓரளவுக்கு போதுமானதாக இருந்தது. இந்த  கால கட்டத்தில் நான் தமிழ் நாடு அரசு சார்பாக அரிசி மற்றும் பருப்பு கொள்முதல் செய்ய மும்பாய்,ஜலகோவன்,கான்பூர்,கல்கட்டா மற்றும் ஆந்திர பகுதிகளான விஜயவாடா, ராஜ மந்திரி, மிரியால்குடா, நலகொண்டா,சூரியாபேட்  போன்ற பகுதிகளில் பணி புரிந்துள்ளேன். இதனால் பல தரப்பட்ட மக்களோடு பழக நேர்ந்தது.

ஜலகோவன் நகரத்தில் ஒரு வீட்டில் எனக்கு ஏற்பட்ட  அல்லது நான் கண்ட காட்சி என் பகுத்தறிவு சிந்தனையை மேலும் வளரத்தது. ஒரு பெரும் பருப்பு முதலாளி விட்டில் (1989) நான் தங்க வைக்கப்பட்டேன். அப்பொழுது பக்கத்தில் குடியிருக்கும் ஒரு துணி உற்பத்தி ஆலை முதலாளியும் பெரும் பருப்பு கொள்முதல் வியாபாரியின் வீட்டுக்கு தமிழ் நாட்டுக்கு ரயில் வேகன் மூலம் பருப்பு அனுப்புவதின் தொடர்பாக கலந்துரையாட சென்றேன்.அப்பொழுது நான் கண்ட காட்சி என் மனதையே உலுக்கியது

No comments: