அதென்ன ஏழாம் அறிவு? மனிதர்களுக்கு ஆறு அறிவுதானே?
ஆறு அறிவு என்பது சுயமா சிந்தித்து செயல்படுவது.
காட்டு வாசி மனிதர்களை நாகரிகப்படுத்த அய்யோக்கியர்களால் உருவாக்கப்பட்டது தான் கடவுள் கொள்கை.இதைத்தான் ஒரு அறிஞர்,'god was created by rogue"என்றார் இந்த சிந்தனையை என் 22 வயது முதல் 25 வயது வரை, நான் ஆய்வு செய்த நூல்கள் மூலம் தெரிந்து கொண்டது.
அப்படி என்றால் கடவுள் இருந்தார்,இருக்கின்றார் இனி இருப்பார் என்பதெல்லாம் கற்பனையே, என்பது உண்மையாகிவிட்டது அல்லவா? இப்பொழுது நாம் தான் நாகரிகம் அடைந்து விட்டோமே இனி எதுக்கு கடவுள் வழிபாடு?
நாகரிகம் என்றால் என்ன? சக மனிதர்களை மதித்து வாழ்வது.சக மனிதர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொள்வது. இங்கே கடவுள் எங்கே வருகிறார்? இல்லாத கடவுளுக்கு இங்கே என்ன வேலை?
எனக்கு என்ன நடக்கின்றது? நாம் நினைப்பது ஏன் நடக்காமல் போகிறது? தானாக நடப்பதை கடவுளால் நடக்கின்றது என நான் ஏன் எண்ணிக்கொள்ள வேண்டும்?
நமக்கு மரணம் இல்லா வாழ்வு கிடையாது.ஆனால் மரணம் வரும்வரை நாம் வாழ வேண்டும். வாழுங்காலத்தில் நாம் வாழ்ந்த அடையாளமாக நம்முடைய பிள்ளைகளை இவ்வுலகில் விட்டுச் செல்ல வேண்டும்.
என் கிராமம் தான் எனக்கு தலை நகரம். என்னை சுற்றி உள்ள மக்கள் என்னிலும் வேறுபட்டவர்கள் என்பதை விட என் மக்களை விட நான் மாறு பட்டவன் என்பதே சரி.
நாம் உயிர் வாழ இல்லாத கடவுளை ஏன் முன் நிறுத்த வேண்டும்?
No comments:
Post a Comment