பொது வழிபாட்டுத்தலங்களை உருவாக்கி கடவுளை வணங்கச்சொல்வது மனிதனுள் இருக்கும் கும்பல் (குழு) குணத்தை வளர்க்க உதவும்.ஒரு கும்பல் குணம் இன்னொரு கும்பல் குணத்தை ஏற்காது.இதனாலேயே உலகில் பல்வேறு குணம் கொண்ட மதங்கள் உருவாயின, சாதிகள் உருவாயின.
சாதிகளே கூடாது என சொல்லும் சாதிய தலைவர்கள், பொது வழி பாட்டுத்தலங்கள வேண்டாமென்று சொல்ல மாட்டார்கள்.கடவுள் மறுப்பு சிந்தனையாளர் என சொல்லிக்கொள்ளும் பெரியாரும் பொது வழி பாட்டுத்தலங்கள் வேண்டாமென்று சொன்னதே இல்லை.ஆனால் ஏழாம் அறிவு இயக்கம் சொல்கிறது. மக்கள் சுய சிந்தனையாளர்களாகி விட்டால் தலைவர்களுக்கு வேலையே இல்லையே. சுயமாக சிந்திக்காத தொண்டர்கள்தான் வேண்டுமென்பர் அரசியல் கட்சித்தலைவர்கள்.
பெரியார் அவர்காலத்தில்,கடவுள் இல்லை என்றுதான் சொல்ல முடிந்தது.கோயில்கள் வேண்டாமென்று சொன்னதே இல்லை.மாறாக பார்ப்பனர்கள் வெய்யிலாளி இனங்களில் விதம் பிரித்து, பறையர்களையும்,பஞ்சமர்களையும் கோயில்களுக்குள் வரக்கூடாது என சொல்லி வந்தனர், இதனை தலைமேல் ஏற்றுக்கொண்டு, வெய்யிலாளி இனங்களில் இன்னொரு பிரிவினரான வன்னியர்களை கோயில்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் காவல் போட்டனர்.
இதை உணர்ந்த பெரியார் கடவுள் முன் மனிதர்களை சமமாக பார்க்க வேண்டுமே தவிர உழைப்பாளி மட்டம் என்றும்,ஏமாற்றி பிழைக்கும் நிழலாளிகள் எப்படி உயர்ந்தவர்களாக இருக்க முடியும்? என வினவினார்.இதனை எதிர்க்க மக்களை ஒன்று திரட்டினார்.
No comments:
Post a Comment