Tuesday, December 8, 2020

ஏ.அ-51

 

ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சிகரமாக பொழுது கழிய வேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

உடல் ஆரோக்கியம் தான் மன ஆரோக்கியம்.உடல் பலம் கொண்டால் மட்டுமே உழைக்க முடியும். என் உடல் ஆரோக்கியம் கொண்டதாக இல்லை. குழந்தைப் பருவத்திலிருந்தே ஊட்டச் சத்து கிடைக்க வில்லை.

நான் சுயமா சம்பாதிக்க ஆரம்பித்த வயசலிருந்து (1976) நான் தினமும் அசைவ உணவை விரும்பி உண்பேன்.ஆனால் என் உடல் ஏற்றுக்கொள்ள வில்லை. காரணம் அறிய மருத்துவர்களை நாடினேன்.

1980 ஜனவரியில்  தான் எனக்கு TB தொற்று வந்துள்ளதை ஒரு மருத்துவர் கண்டறிந்தார்.மூன்று மாதங்கள் தினமும் ஊசி போட்டால் 6 மாதங்களில் குணமாகிவிடும் என கூறினார். மருத்துவர் சொன்னது போல் 6 மாதங்களில் குணமாகி விட்டதை உணர்ந்தேன்.என் உடலில் ஒரு புது ரத்தம் பாய்வதை உணர்ந்தேன்.

எனக்கு கல்யாணம் செய்து கொள்ள ஆசை வந்தது.1980 அக்டோபர் 13ம் நாள் கல்யாணம் நடந்தது. எனக்கு பெண் கொடுத்தவர்களுக்கும் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என தெரிந்தே பெண் கொடுத்தனர். மனைவிக்கும் மணமான அன்று மாலையே தெரிவித்து விட்டேன்.

என் மனைவி சொன்னாள், ‘கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் என்ன,எல்லாரும் உங்களை நல்லவர் என்று சொன்னார்கள்என்றாள்.

இதிலிருந்து ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவன் நல்லவனாக இருப்பதற்கும், கெட்டவனாக இருப்பதற்கும் கடவுள் காரணமில்லை. அவன் பிறப்பு, வளர்ப்பு, பெற்றோர்கள்,சுற்றத்தார், கற்ற கல்வி, பழக்க வழக்கங்கள்,ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே.

No comments: