தரமற்ற நெல்லை கொண்டுவரும் நேர்மையான விவசாயிகளிடம் அறிவுரை கூறி பெற்றுக் கொள்ளலாம், ஆனால் தரமற்ற அரிசி கொண்டுவரும் வியாபாரிகளை எதிர் கொள்வதில் சிக்கல்தான். உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் தலையீடு இருக்கும்,எனக்கு பின் பணியில் சேர்ந்தவர்கள்,1985க்குப்பின் லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள். இவர்கள் பணி நேர்மையாக இருக்காது. விவசாயிகளுக்கும் பிரச்சினை இருக்காது.
ஆனால் நேர்மையான அதிகாரிகளுக்கு அடிக்கடி மாற்றல் உத்தரவு வந்துவிடும்.இதனால் அவர்களின் குடும்பத்தை பராமரிப்பதில் சிக்கல் ஏற்படும். குழந்தைகளின் படிப்பு கெட்டுப்போய்விடும்.எனக்கு பணியில் சேர்ந்த 5 ஆண்டுகள் அடிக்கடி மாற்றல் வரும்.கல்யாணம் ஆகி 5 ஆண்டுகள் அதாவது குழந்தைகள் பள்ளி செல்லும் வயது வரை என்னால் நேர்மையாக இருக்க முடிந்தது,அதன் பின் நேர்மையற்ற ஊழியர்களின் நேர்மையற்ற செயல்பாடுகளை கண்டும் காணாமல் போய்விடுவது,இது ஒன்றே தீர்வானது.
அப்போதைய செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஒன்றிணைந்த மாவட்டமாக கஞ்சிபுரம் மாவட்டம் இருந்தது,இதற்கு மையப் பகுதியாக திருவள்ளூரில் குடும்பம் அமைப்பதில் எனக்கு ஒத்துப்போனது,
No comments:
Post a Comment