இதிலிருந்து ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவன் நல்லவனாக இருப்பதற்கும், கெட்டவனாக இருப்பதற்கும் கடவுள் காரணமில்லை. அவன் பிறப்பு, வளர்ப்பு, பெற்றோர்கள்,சுற்றத்தார், கற்ற கல்வி, பழக்க வழக்கங்கள்,ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே.
எதற்குமே காரணமில்லா கடவுளுக்கு கோயில் எதற்கு? அதை ஏன் நாம் வணங்க வேண்டும்? அப்படி கடவளை வணங்க வேண்டும் எனும் கட்டாயத்தில் இருப்பவர்கள் வீட்டிலே வணங்கலாமே?
கடவுளை பொது வழி பாட்டுத்தலங்களில் வணங்குவதால் தான் சாதி மதங்கள் உருவாக காரணமாகிறது. ‘என் மத கடவுள் உயர்ந்தவர்,உன் மதக்கடவுள் தாழ்ந்தவர்’ எனும் சச்சரவுகள் தோன்றுகிறது. இவையெல்லாம் மனித நாகரிகம் வளர்ச்சியடையா காலத்தில் இருந்தது,இன்று மனித நாகரிகம் தோன்றி 100 ஆண்டுகளாகிறது,இன்னமும் பொது வழிபாட்டுத்தலங்கள் இருப்பது என்பது மேலும் சமுக ஒற்றுமையை குலைக்கும் செயலாகும்.
பொது வழிபாட்டுத்தலங்கள் வேண்டாமென்பதில் ஒரு சிக்கல் உள்ளதை நாம் நினைவு கொள்ள வேண்டும்.உலக மக்கள் தொகையில் 70 சதவிகித பேர்தான் கல்வி அறிவு பெற்றவர்கள் உள்ளனர். இவர்கள் வசிக்கும் வீடுகளில் கடவுளை பூஜிக்க அறைகள் இருக்கும். ஆனால் சிறு குடிசை வாசிகளுக்கு கடவுள் படங்களையோ சிலைகளையோ வைத்து வழிபட இடமிருக்காது, இவர்களுக்காகவே பொது வழிபாட்டுத்தலங்கள் உருவாக்கப்பட்டன, காலப் போக்கில் வசதி படைத்தவர்களும் பொது வழிபாட்டுத் தலங்களுக்கு வருவது ஒரு சடங்காகிப்போனது
No comments:
Post a Comment