Tuesday, December 15, 2020

ஏ.அ-56

 

குழந்தைகளுக்கு வயசு ஏற ஏற அறிவு மாற்றம் வரும்,18 வயசுக்கு பிறகு குழந்தைகள் மனதில் சுய சிந்தனை வளரும்,20 அல்லது 25 வயதில் கடவுள் இல்லை எனும் நிலையை பேரன் பேத்திகள் உணர்வார்கள்.நாகரிக சிந்தனைகள் வளரத் தொடங்கும்.

இந்நிலை தொடர்ந்தால் பொது உடைமை நாடுகள் போல் பொது வழிபாட்டுத் தலங்கள் இருக்காது, எல்லாரும் உழைத்து உண்ண வேண்டும் எனும் எண்ணம் வரும்,மாற்றம் வரும்.

இப்பொழுதே பேரன் பேத்திகளுக்கு பிறந்த நாள் விழாக்கள் நடத்தி அவ்விழாவில் பெரியவர்களின் காலில் விழுந்து வாழ்த்து பெறவேண்டும் என நான் சொல்லி அவ்வாறே குழந்தைகள் செய்வதை நான் கண்குளிரக் காண்கின்றேன். அதே போல் வீட்டில் இறந்தவர்களின் படங்களை வைத்து குழந்தைகளை வணங்கச் சொல்வேன். இந்த பயிற்சி குழந்தை பருவத்திலிருந்தே குழந்தைகளுக்கு பெரியவர்கள் மீது பற்று ஏற்பட்டு பாசம் வளரும்.

இப்படி ஒவ்வொருவர் வீட்டிலும் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தால் நல்ல ஒரு சமுதாய வளர்ச்சி ஏற்படும்.சமுதாயத்திலும் சமத்துவம் ஏற்படும்.

என்னுடைய கல்லூரி படிப்புக்குப்பின் எங்கே வேலை,என்ன செய்வது என யோசித்த காலத்தில் ஆசிரியர் பயிற்சி எடுத்தேன். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவிட்டு காத்துக் கொண்டிருந்த காலத்தில் தமிழ் நாடு நுகர் பொருள் வாணிபக்கழகத்தில் வேலை கிடைத்தது.நெல் அரிசி ஆகிய உணவுப்பொருளை பகுப்பாய்வு செய்து அதன் ஈரத்தன்மை மற்றும் கல் நொய் அளவீடுகளை ஆய்வு கூடத்தில் கண்டறியும் தரக்கட்டுப்பாடு ஆய்வக வேலை. இந்த பணியில்  நேர்மை வேண்டும் என்பது அரசு மற்றும் துறை அதிகாரிகளின் ஆணை. என்னைப் போன்று வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணியில் சேர்ந்த ஊழியருக்கு நேர்மையாக பணியாற்றுவதில் சில சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டும்.

No comments: